கூடங்குளம் அணுஉலை இயங்கவிடாமல் தடுத்தால் மட்டுமே
தமிழ் இனம் தப்பிக்க முடியும்!
வைகோவின் போர் முழக்கம்ஓர் அணுஉலை அது இயங்கும் காலத்திலேயே அணுசக்தித் துறை, அதில் இருந்து ட்ரீட்டியம், அர்கான் 41,அயோடின் 131, சீசியம் 137,ஸ்ட்ரோண்டியம் 90 என 200க்கு மேற்பட்ட கதிர் இயக்கத் துகள்கள் மற்றும் வாயுக்களை ஒரு புகை போக்கி வழியாக வெளியேற்றுகிறது.
இதுதவிர, சில மிதமான கதிர் இயக்கக் கழிவுகள் கடலில் கலக்கப்படுகின்றன.
இதன் மூலம் ஓர் அணுஉலையைச் சுற்றியுள்ள பகுதியில் வசிப்பவர்களுக்கு
ஏராளமான பாதிப்புகள் உண்டாகிறது என்பதனை உலக அளவில் உடல் நல
ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தி உள்ளனர்.
தமிழகத்தில் 70 விழுக்காடு மீன் பிடித்தல் தொழிலை கன்னியாகுமரி,நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள மீனவர் பெருமக்கள் காலங்காலமாய்ச் செய்து வருகின்றனர்.அணுக்கதிர் இயக்கம் மனிதர்கள் உண்ணும் உணவுத் தொடரில் உள்ள அனைத்துப் பொருள்களிலும் மிக எளிதாக நுழைந்துவிடும் தன்மை உள்ளது. இதில் ப்ளூட்டோனியம் 239 இன் ஆயுள்காலம் 50,000 ஆண்டு
களாகும். யுரேனியம் 235 இன் அரை ஆயுள் காலம் மட்டுமே 70 கோடி ஆண்டு கள் என்பது விஞ்ஞானிகளின் கணக்காகும்.
யுரேனியம் வெட்டி எடுத்தல், அதைத் துகள்களாக அரைத்தல், பின்பு அதனைக்
கம்பிகளாக மாற்றி அணுஉலைகளுக்கு அனுப்புவது, அணு உலை களில்
அதனைப் பயன்படுத்திய பின்னர் அவை கழிவாக வெளியேற்றப்படுகிறது. இந்தச் சுழற்சி முழுவதும் அணுக்கதிர் இயக்கம் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும்.இந்த அணுஉலைக் கழிவுகள்தான், பயன்படுத்திய யுரேனியக்கம்பி களைவிட அதிக கதிர்வீச்சு உள்ளவை. இந்தக் கழிவுகளை எல்லாம் கதிர்வீச் சில்லாமல், அழிக்கும் முறைகளைக் கண்டறிய முடியாமல்,உலக விஞ்ஞானி கள் தலைகுனிந்து நிற்கின்றார்கள்.
இந்த நிலையில் கூடங்குளம் அணுமின் உலைக் கழிவுகளை என்ன செய்யப்
போகின்றார்கள் என்பதனை இதுவரை அறிவிக்கவே இல்லை.எதிலும் போட்டி
போட்டுக்கொண்டு அறிக்கை விடுகின்ற அம்மா, அய்யாவைக் கேட்டுப்பாருங் கள். அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கலாம்.
அமெரிக்கா, ருஷ்யா, பிரான்சு,ஜெர்மனி,ஜப்பான்,சீனா போன்ற நாடுகளில் எல் லாம் இந்த அணுக்கழிவுப் பிரச்சினை தான் பூதாகரமாக எழுந்துள்ளது. அணு
வல்லரசு என்று மார்தட்டிக் கொள்பவர்கள் கடந்த காலத்தில் ஒரு மாபாதகத் தைச் செய்தார்கள். அந்த அநியாயத்தை வரலாறுதான் சொல்லி அழுகிறது.
மேலை நாடுகள் தங்களின் அணுக் கழிவுகளைச் சட்ட விரோதமாக சோமாலி யா கடல் பகுதிகளில் கொட்டியதும், அது 2004 சுனாமியின் போது பேரலை களாக உருவெடுத்து இலட்சோப இலட்சம் சோமாலிய மக்களைக் கொன்று விழுங்கியதும் உலகறிந்த உண்மையாகும்.
மேற்கத்திய நாடுகளுக்கு தங்களின் அணுஉலைக் கழிவுகளைக் கொட்டுவதற் கு சோமாலியா போன்ற காலனிகள் தேவைப்பட்டன.
இந்தியா-தமிழ்நாட்டை ஒரு காலனியாகத்தான் கருதுகிறது. அதனால் தான் கூடங்குளம் அணுஉலை யை தமிழினத்தின் தலைமீது கட்டியுள்ளது. சோமா லிய மக்களுக்கு நேர்ந்த கதி தமிழர்களுக்கு -தென்தமிழக மீனவர் களுக்கு வராது என்று எவராலும் சொல்ல முடியுமா?
காலம் தந்த கருணைத் தலைவன் வைகோ ஒருவர்தான் இந்தக் கேள்விக்
கணையைத் தொடுத்த வண்ணம் களத்தில் நின்று போராடிக் கொண்டு இருக் கிறார்.
அணுக்கழிவில் இருந்து பிரித்து எடுக்கப்படும் ப்ளூட்டோனியத்தை வைத்துத் தான் அணுகுண்டை உருவாக்குகிறார்கள். அதற்கு இந்த அணு உலைக்கழிவை மறு சுத்திகரிப்புச் செய்ய வேண்டும். இந்த re-processing தான் இருப்பதிலேயே ஆபத்தானது. இது இன்னும் ஏராளமான நச்சு வாயுக் களையும், திடக் கழிவு களையும், நீர்மக் கழிவுகளையும் வெளிப்படுத்தும் தன்மையுள்ளது.
அணுஉலைகளில் எரிபொருளாகப் பயன்படுவதுதான் யுரேனியம். இது பூமி யில் இருந்து தோண்டி எடுக்கப் படுகிறது.மிக அதிகமான அளவில் யுரேனியம் ஆஸ்திரேலியா கண்டத்தில் கிடைக்கப்பெறுகிறது. உலக நாடுகளுக்குத் தேவையான அளவு இங்கிருந்துதான் விற்கப்படுகிறது.யுரேனியம் அதிகமாகக் கிடைக்கப் பெறுகின்ற ஆஸ்திரேலியாவில் ஒரு அணுஉலை கூடக்

கிடை யாது.
அணுஉலைகள் அமைக்கப்படுவது முற்றிலும் மின்சாரம் உருவாக்கப் படுவ தற்காக மட்டும் அல்ல, அதற்குள் ஒரு இரகசியம் அடங்கியுள்ளது. அது என்ன இரகசியம்?

அணுக்கழிவுகளின் மூலப்பொருளான புளூட்டோனியத்தை உருவாக்கத்தான்
அணுஉலைகள் கட்டப்படுகின்றன. இந்த உண்மையை மூடி மறைத்துவிடு
கிறார்கள்.
இந்தியாவில் மொத்தம் 21 அணு உலைகள், பல்லாயிரம் கோடி பணத்தில் கட் டப் பட்டுள்ளன. அவற்றில் இருந்து உருவாக்கப்படும் மின்சாரம் வெறும் 2.7
சதவிகிதம்தான். இந்த உண்மையை கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர் கள் தமது அறிக்கையில் தெளிவு படுத்தியிருக்கின்றார்கள்.
இருநூறுக்கு மேற்பட்ட நாடுகளை உடைய உலகில் 30 நாடுகள் மட்டுமே அணு மின் உலைகளை அமைத்துள்ளன.குறிப்பாக, இரண்டாம் உலகப் போரில் கலந்துகொண்ட 6 நாடுகள்தான் அதிகமாக அணுஉலைகளை அமைத்து உள் ளன. இதிலிருந்தே அணு உலைகள் மின்சாரம் உருவாக்குவதற்காகக் கட்டப்
படவில்லை என்பதை உணர்ந்து கொள்ளலாம்.
ஓர் அணுஉலை அமைக்கப்படுவதற்கு 35 ஆயிரம் கோடி செலவழிக்கப் படு கிறது. இந்த அணு உலையின் வாழ்நாள் 40 ஆண்டுகள்தான்.

40 ஆண்டுகளுக் குப் பின் இந்த அணு உலைகளை எத்தனை ஆயிரம் கோடி செலவு செய்தாலும் பாதுகாப்பாக அழிக்கவோ, உடைக்கவோ முடியாது.
அதே இடத்தில் வைத்து 25 ஆயிரம் வருடங்களுக்கு அப்படியே அச்சுக்குலை யாமல் பாதுகாக்க வேண்டுமாம்.
அதன் வாழ்நாள்தான் முடிந்துவிட்டதே,அதை உடைத்தெறிய வேண்டியது
தானே என்று சொல்வீர்கள். அதுதான் முடியாது. அந்த அணுஉலைகளின் கதிர்
இயக்கம் அப்படியே தான் இருக்கும்.ஆதலால் அணுஉலையினைஉடைக்கவும் முடியாது. புதைக்கவும் முடியாது. உலகில் உள்ள அணு விஞ்ஞானிகளால் இதற்கு ஒரு வழி கண்டுபிடிக்க இன்னமும் முடியவில்லை.
இந்நிலையில் கடவுள் துகள் வேறு கண்டறியப்பட்டுள்ளதாக யாரோ ஒரு விஞ்ஞானி கதைவிட்ட செய்தி ஏடுகளில் வந்துள்ளது. கடவுள் எதில் இருந்து உற்பத்தியானது என்று கூறுவதற்கு எந்த விஞ்ஞானியும் தேவையில்லை. “கடவுளைப் படைத்தவன் முட்டாள்” என்று ஏற்கனவே சமூக சீர்திருத்த விஞ் ஞானி பெரியார் ஆய்ந்தறிந்து சொல்லி விட்டார்.
தந்தை பெரியாரின் விஞ்ஞான ஒளி வேகமாகப் பரவிய காரணத்தால் தான்,
திருவாரூர் வீதியில் நின்றிருந்த கருணாநிதி, தமிழகத்தின் முதலமைச்சராக முடிந்தது.

கண்ணுக்குத் தென்படாதது நியூட்ரினோ அணுத்துகள் என்பார்கள். அதைவிட
ஆபத்தான சாதித் துகளைக் கண்டுபிடித்து, தமிழ்நாட்டில் ஒவ்வொரு மனித னும் பிறக்கும்போதே கண்ணுக்குத் தெரியாமல் பிறப்போடு சாதியும் கலந்து வரச் செய்த விவேகிகள் கூட்டத்தையே... விஞ்ஞானிகளைவிடப் பெரிய சாத னையாளர்களாகக் கருதும் நிலை உள்ளது. இவர்களால் உருவாக்கப் பட்ட சாதி பேதங்களை எத்தனை அணுகுண்டுகளாலும் அழிக்க முடியாது.இதற்கு மேல் தொடர்ந்தால் கட்டுரை திசைமாறிப் போகும்.
அணுக்கழிவுகள்தாம் இருப்பதிலேயே அதிக கதிரியக்கம் கொண்டவை.இதில்
ப்ளூட்டோனியம் மிகுதியாக உள்ளது.ஒரு கிராம் ப்ளூட்டோனியத்தில் 10
இலட்சத்தில் ஒரு பகுதி இருந்தால் போதும், இலட்சக்கணக்கான மக்களுக்கு
புற்று நோயைப் பரப்பும் சக்தி அதற்கு உண்டு. இத்தகைய பேராபத்துள்ள அணுக் கழிவுகளை 2 இலட்சம் ஆண்டுகளுக்கு பாதுகாப்பாக பூட்டி வைத்திட ஒரு பெட்டகத்தைக் கண்டுபிடிக்க இயலாமல் உலக விஞ்ஞானிகள் கை பிசைந்து நிற்கிறார்கள்.
கூடங்குளம் அணுமின் உலைக் கழிவு களை என்ன செய்யப் போகிறார்கள்?
என்று அதிகார வர்க்கத்தினரைக் கேட்டுப் பாருங்கள். ஒரு வேளை “அம்மா ஆணையிட்டால், அணுக்கதிர் அடங்கிப் போகும்” என்று சொன்னாலும் ஆச் சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை.அவ்வளவு புத்திசாலிகள் அங்கே உள்ளனர்.
அமெரிக்காவின் யுக்கா அணுக்கழிவுக் கல்லறை
மாந்தர்குல வரலாற்றிலேயே நிலஇயல் ஆய்வுகள் அதிகம் மேற்கொள்ளப் பட்ட இடம் அமெரிக்காவின் யுக்கா பகுதியாகும். அதன் உண்மையான நில இயல் இயக்கம் குறித்து இன்றுவரை முழுமையாக விளங்கிக்கொள்ள முடி யாத மர்மம் நிறைந்த இடமாகவே இந்த யுக்கா மலை இருந்து வருகிறது.
அமெரிக்காவின் யுக்கா மலைப் பகுதிக்கும், தமிழ்நாட்டில் உள்ள கூடங்குளம் அணுமின் உலைத் திட்டத்திற்கும் நெருக்கமான உறவு இருந்து வருகிறது. ஆனால், அது மறைமுகமான உறவாகும்.
இந்த ரகசிய உறவின் உள்நோக்கம்தான் என்ன என்பது உளறுவாய் அமைச்சர்
நாராயணசாமி போன்றவர்களுக்கே கூடத் தெரியாது. கடந்த 30 ஆண்டு களாக இந்த யுக்கா மலை மர்மத்தை அமெரிக்கா பாதுகாத்துவருகிறது. யுக்காமலை அமைந்துள்ள நெவேதா மாநிலத்தின் அரசுக்கோ அல்லது அம்மாநில மக்களுக் கோ என்ன நடக்கிறது என்பது தெரியாது.
1977 ஆம் ஆண்டில் தான் யுக்காவின் பெயர் உலகத்தின் கண்களுக்கு ஓரளவு
தெரிய வந்தது. அமெரிக்க நாட்டில் உள்ள அனைத்து அணுமின் நிலையங்
களிலும் உள்ள கதிரியக்கம் கொண்ட கழிவுகளையெல்லாம் நிரந்தரமாகச்
சேமித்து வைக்கும் இடம்தான் இந்த யுக்காமலை.
அபாயம் குறைந்த நிலஇயல் பண்புகள் கொண்ட பகுதிகளில் தான் அணுமின்
நிலையங்களையோ அணுக்கழிவுக் கல்லறைகளையோ அமைக்கவேண்டும். அதற்கான முன்ஆய்வு களை முறைப்படி செய்திருக்க வேண்டும். அமெரிக்கா வும் அதை முறையாக கண்டறியவில்லை அல்லது அறிந்திருந்தும் வேறு வழி யில்லாமல் ஒரு முடிவுக்கு வந்திருக்கலாம்.
யுக்காமலைப் பகுதியில் செயல் ஊக்கம் கொண்ட பஸால்ட் எரிமலைப் பாறை கள் உள்ளன. அதனால் அங்கே அமையப் பெற்ற அணுக்கழிவுக் கல்லறைக்கு எரிமலை வழியான ஆபத்துகள் வரக் கூடும் என்றே ஆய்வுகள் தெளிவாகக் கூறின.

அணுஉலை மற்றும் அணுக்கதிர் கழிவுக் கல்லறை போன்ற அமைவிடங்கள், எரிமலை போன்ற ஆபத்துகளில் இருந்து மீள்வதற்கு உரிய ஆலோசனை களை, யுக்கா மலைக் கல்லறை அமைப்பு நிர்வாகி களுடன், கூடங்குளம் அணு மின் நிர்வாகிகள் கலந்துரையாடிப் பெற்றனர்.
யுக்கா அணுக் கழிவுக் கல்லறையின் அமைவிடத்தில் இருந்து 20 கிலோமீட்டர் சுற்றளவுப் பகுதியில், கோடி ஆண்டுக்குள் உருவான 40 பாஸால்ட் பாறை முக வாய்களிலும் (Basalt vents) 10 இலட்சம் ஆண்டுக்குள் உருவான 6-ஸிண்டர் எரி மலைப் பாறைக் கூம்புகளும் (Cinder cones) உள்ளன.
யுக்கா அணுக்கழிவுக் கல்லறையின் அமைவிடத்தைப்போல் இந்தியாவில்
உள்ள - மற்றும் கூடங்குளம் அணுமின் கழிவுக் கல்லறை அமை விடத்தை
எங்கே வைக்கப் போகிறார்கள் என்பது தெரியாது. அணுக்கழிவுக் கல்லறை
அமைப்பதில் அமெரிக்காவும், இந்தியாவும் கூட்டாகச் சேர்ந்து,தமிழ்நாட்டில் அணுக்கழிவுக் கல்லறை வைக்கப் போகிறதோ என்கிற சந்தேகத்திற்கும் இடம் உண்டு.
இந்திய அரசின் மறைமுகமான திட்டப்படி,இந்தியாவில் உள்ள அனைத்து அணுஉலைக் கழிவுகளையும் கொட்டி வைப்பதற்கு தமிழ்நாட்டில் ஒரு மலை யைத் தேர்வு செய்திருப்பதாகத் தெரிய வருகிறது. இதற்காகவே தேனி மாவட் டத்தில் உள்ள தேவாரம் பொட்டிப்புரம் அரம்பர் மலையில் சுரங்கம் தோண்டப் படுவதாகத் தெரிய வருகிறது.
அரம்பர்மலையில் இல்லாவிட்டாலும் வேறு ஒரு மலையில் அணுஉலைக்
கழிவுகளைப் புதைக்கப் போகிறார்கள் என்பது மட்டும் உறுதியாகும்.எதற்கும் நாம் விழிப்போடு இருக்க வேண்டும்.
நமது தலைவர் வைகோ அவர்களைத் தவிர, கூடங்குளம் அணுமின் உலை யால் வரும் பேராபத்தை எதிர்த்துப் போராடுவதற்கு வேறு எந்த அரசியல் கட்சித் தலைவர்களும் முன்வரவில்லை என்பது குறிப்பிடத் தக்கதாகும். அவர் களின் அலட்சியத் திற்கு ஏதாவது ஒரு காரணம் இருக்கலாம். அது நமக்குத் தேவை இல்லாதது.
தமிழக அரசியலில் மக்கள் நல மருத்துவராகத் திகழும் வைகோ அவர்கள்தான் - நாளைவரும் பின் விளைவுகளைத் தடுக்கும் விதத்தில் நாடித்துடிப்பை அறிந்து, நல்ல மருந்து அளித்துக் காப்பாற்றக் கடமைப்பட்டு உள்ளார்.
அணுஉலைகளுக்கு எதிரான போராட்டங்கள்
மகாராட்டிர மாநிலத்தில் ஜைத்தாப்பூர் அருகில் உள்ள மாத்பன் கிராமத்தில்,
பிரான்சு நாட்டு நிறுவனமான அரேவா உலகின் மிகப்பெரிய அணு உலையை
நிறுவ உள்ளது. அந்தப் பகுதியில் கடந்த 20 வருடங்களில் 92 பூகம்பங்கள் ஏற் பட்டுள்ளன. அரேவா அணு உலையில் ஏகப்பட்ட தொழில் நுட்பப் பிரச்சினை கள் உள்ளன என்று இந்த அரேவா நிறுவனத்தின் மீது பிரிட்டிஷ் அரசு ஏராள மான குற்றச்சாட்டுகளை வைத்தது.
அரேவா அமைத்துள்ள அணு உலையை எதிர்த்து மகாராட்டிர மக்கள் போராட் டத்தில் இறங்கினார்கள்.துப்பாக்கிச் சூட்டிற்கு மூவர் பலியாயினர்.
அணுஉலைகளால் ஏற்படும் ஆபத்துகளை உலகில் உள்ள மக்கள் தெளிவாகத் தெரிந்தே வைத்திருக்கிறார்கள். அதனால், அணுஉலைகள் மூடப்பட்டு வரு கின்றன.கல்பாக்கத்தில் உள்ள அணு மின் உலைக்கழிவுகளை என்ன செய்
கிறார்கள்? எங்கே புதைக்கிறார்கள்? என்பது இதுவரை யாருக்கும் தெரியாது.
இதுகுறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தபோது, “இது தேசப்பாது காப்புக்கான செய்தி, அதனால் வெயியிடமுடியாது” என்று பதில் கிடைத்தது. உச்ச நீதிமன்றமும் இதில் தலையிட முடியாது என்று கூறிவிட்டது
கூடங்குளம் அணுமின் நிலைய அமைவிடத்தின் நில இயல் குறித்து அணு சக்திக் கழகம் மேற்கொண்டு வரும் அரைகுறை ஆய்வு தொடர்பாக காந்தி
கிராமம் கிராமியப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் டாக்டர்
மார்க்கண்டனும், நாகர்கோவில் விஞ்ஞானி டாக்டர் லால்மோகனும் உச்ச
நீதிமன்றத்தில் 2002 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பொதுநல வழக்கு ஒன்றைத்
தொடர்ந்தார்கள்.
கூடங்குளம் அணுமின் நிலைய அமைவிடத்திலும் அதனைச்சுற்றியுள்ள பகுதி யிலும் எரிமலைச் செயல்பாடுகளுக்கான அறிகுறிகள் இருப்பதை அணுசக்தித் துறை திட்டமிட்டே மறைத்து வருகிறது.கூடங்குளம் அணுமின் உலை தொடர் பாக அனைத்து ஆய்வு அறிக்கைகளையும் ரகசியமாக அணுமின் நிலைய அதி காரிகள் பொறுப்பில்தான் வைத்துக்கொள்ளவேண்டுமா? என்பதைச் சீர்தூக்கிப்
பார்ப்பதற்காகச் சுதந்திரமான நிலஇயல் அறிஞர் குழு ஒற்றினை இந்திய அரசு
உருவாக்க வேண்டும் என்ற உத்தரவை நீதிமன்றம் வழங்க வேண்டும் என்று
அந்த வழக்கில் அவர்கள் கேட்டுக் கொண்டார்கள்.
நிலஇயல் துறையில் மூத்த விஞ்ஞானி ஞா.விக்டர் ராஜமாணிக்கத்தின் ஆய் வறிக்கை அந்த வழக்கின்போது நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
அபிசேகப் பட்டியிலும், சுரண்டையிலும் முறையே 1998 மற்றும் 2001 ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்த சிறு அளவு எரிமலை வெடிப்புகளில் இருந்து வெளிப் பட்ட எரிமலைப் பாறைகள் குறித்தும், அந்த நிகழ்வுகளுக்கும் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் பாதுகாப்பிற்கும் உள்ள தொடர்பு குறித்தும் பேராசி ரியர் விக்டர் ராஜமாணிக்கத்தின் அறிக்கை பேசியது:-
“05.8.1998 மற்றும் 24.11.2001 இல் சுரண்டையிலும்,அபிசேகப்பட்டியிலும் நிகழ்ந்த உருகிய பாறை உமிழ்களில் இருந்து பெற்ற கற்களை என் ஆய்வகத்தில் ஸ்கேன் செய்தும், பிற ஆய்வுகளுக்கு உட்படுத்தியும் ஆய்வு மேற்கொண் டேன். இந்தக் கற்கள் கண்ணாடியின் தன்மையைக் கொண்டு இருக்கின்றன. வாயுக்களால் உருவான குமிழ்களையும் ஓட்டைகளையும் இக்கற்களில் பார்க்க முடிகிறது. கருகிப் போயிருப்பதற்கான அறிகுறிகளையும் இக்கற் களில் காண முடிகிறது. எரிமலைப் பாறைக்கு இருக்கும் தனித் தன்மைகளை இந்தக் கற்கள் கொண்டு இருக்கின்றன.
ஆகவேதான் கூடங்குளத்தில் ஒரு பெரிய அணுமின் உலையை நிறுவும் முன் பே அந்தப் பகுதியில் நில இயல் உறுதியை சந்தேகத்திற்கு இடமின்றி நிறுவும் நுட்பமான ஆய்வுகளை அவசியம் மேற்கொண்டாக வேண்டும்” என்று அந்தப் பொதுநல வழக்கில் கேட்டு இருந்தார்கள்.
கூடங்குளம் அணுமின் திட்டம் மத்திய அரசின் கொள்கை சார்ந்த ஒரு திட்டம்.
ஆதலால், தன்னால் தலையிட இயலாதென்று உச்ச நீதிமன்றம் கைவிரித்து விட்டது.
பன்னாட்டு அணுசக்தித் துறையின் கணிப்பை பண்ணையார்குளம் சார்ஸ்ட் குழி மெய்யாக்கியது
கூடங்குளம் அணுமின் நிலையம் அமைவிடத்திலிருந்து வடமேற்கு திசையில் 10 கிலோ மீட்டரில் உள்ளது இராதாபுரம். அதற்குத் தெற்கில் அமைந்திருப்பது பண்ணையார்குளம் கிராமம். 2011 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் நாள் அங்கே திடீரென்று ஓர் அதிசயப் பள்ளம் உண்டாகியது.அதற்குப் பெயர்தான் பன்னாட் டு நிறுவனம் சுட்டிக்காட்டிய கார்ஸ்ட் குழி.இந்தப் பகுதியின் பிதுங்கு எரிலைப்
பாறைகளின் இயக்கம் நிலத்து அடி நீருடன் தொடர்பு கொண்டது.அதன் விளை வாகவே இந்தச் கார்ஸ்ட் குழி உருவாகியது.
கூடங்குளம் அணுமின் நிலையத்தின் பாதுகாப்புடன் தொடர்புகொண்ட இந்த
முக்கிய நிகழ்வை அணுசக்தித் துறையும் மத்திய அரசு அமைத்த வல்லுநர்
குழுவும் வழக்கம்போல் கண்டு கொள்ளவே இல்லை.2011 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் நாள் மாலை மலர் ஏட்டில் இந்தக் கார்ஸ்ட் குழி படத்துடன் வெளியிடப் பட்டது.
ராதாபுரம் அருகே உள்ள பண்ணையார் குளம் கிராமத்தில் 10 அடி சுற்றளவில்,
15 அடி ஆழத்தில் திடீரென ஒரு பள்ளம் தோன்றியது. சுற்றுப்புறத்தில் உள்ள
மழைநீரையும் தேங்கியிருந்த தண்ணீரையும் இந்தப் பள்ளம் சர்ர் என்று இழுத் துக்கொண்டது. பூமிக்குள் மறைந்து மாயமானது. ஒரு பெரிய குளத்து நீரையும் சேர்த்து உறிஞ்சிக் கொண்டது. மாலை மலர் செய்தி அறிந்த மக்கள் வந்து வியப்புடன் பார்த்தனர்.
கூடங்குளம் அணுமின் நிலையம் அமைவிடம் பற்றிக் குறிப்பிட்ட ஏ.டி. ரோ ஷன், பி.ஷைலாமோனி, செளரவ் ஆச்சாரியார் ஆகியோர் அளித்த ஆய்வறிக் கையில், “இது கார்ஸ்ட் பிராந்தியம்” அதனால் அணுமின் நிலையம் அமைக்கக் கூடாது. ஆபத்தான பகுதி என்று கூறியுள்ளனர். அணுசக்தித்துறையும், மத்திய அரசும் இதை எல்லாம் பொருட்படுத்தவே இல்லை. “தமிழ்நாடு தானே ஒழிந்து போகட்டும்” என்ற உள்நோக்கத்திலேயே மத்திய அரசு இயங்கி வருகிறது.
இந்த அநீதியைத் தட்டிக் கேட்பதற்குத் தைரியமுள்ள ஒரே தலைவர் வைகோ
அவர்கள் நாடாளுமன்றத்தில் இல்லாதது தமிழ்நாட்டுக்கு நேர்ந்த மாபெரும்
பின்னடைவாகும். வர இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் வைகோ அவர் கள் விருதுநகர் தொகுதியில் போட்டியிட வேண்டுமென நமது தோழர்களும் நல்லெண்ணம் கொண்டோரும் விரும்புகின்றனர். அந்த விருதுநகர் தொகுதி உள்பட கூடங்குளம் அணுக்கதிர் இயக்கத்தின் அழிவுப் பரப்புக்குள் அடங்கிய வைதான்.அதன் விவரத்தைப் பிறகு பார்க்கலாம்.

Prof. G.Victor Rajamanickam
Dean & Science Faculty
Sr. Professor and Head
Department of
Industries and Earth Sciences
Principal Investigator for DST,
DOD, CSIR, INSA, GMC, UGC,
Tamilnadu University, Thanjavur -
613 005
ஆதலால், தன்னால் தலையிட இயலாதென்று உச்ச நீதிமன்றம் கைவிரித்து விட்டது.
பன்னாட்டு அணுசக்தித் துறையின் கணிப்பை பண்ணையார்குளம் சார்ஸ்ட் குழி மெய்யாக்கியது
கூடங்குளம் அணுமின் நிலையம் அமைவிடத்திலிருந்து வடமேற்கு திசையில் 10 கிலோ மீட்டரில் உள்ளது இராதாபுரம். அதற்குத் தெற்கில் அமைந்திருப்பது பண்ணையார்குளம் கிராமம். 2011 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் நாள் அங்கே திடீரென்று ஓர் அதிசயப் பள்ளம் உண்டாகியது.அதற்குப் பெயர்தான் பன்னாட் டு நிறுவனம் சுட்டிக்காட்டிய கார்ஸ்ட் குழி.இந்தப் பகுதியின் பிதுங்கு எரிலைப்
பாறைகளின் இயக்கம் நிலத்து அடி நீருடன் தொடர்பு கொண்டது.அதன் விளை வாகவே இந்தச் கார்ஸ்ட் குழி உருவாகியது.
கூடங்குளம் அணுமின் நிலையத்தின் பாதுகாப்புடன் தொடர்புகொண்ட இந்த
முக்கிய நிகழ்வை அணுசக்தித் துறையும் மத்திய அரசு அமைத்த வல்லுநர்
குழுவும் வழக்கம்போல் கண்டு கொள்ளவே இல்லை.2011 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் நாள் மாலை மலர் ஏட்டில் இந்தக் கார்ஸ்ட் குழி படத்துடன் வெளியிடப் பட்டது.
ராதாபுரம் அருகே உள்ள பண்ணையார் குளம் கிராமத்தில் 10 அடி சுற்றளவில்,
15 அடி ஆழத்தில் திடீரென ஒரு பள்ளம் தோன்றியது. சுற்றுப்புறத்தில் உள்ள
மழைநீரையும் தேங்கியிருந்த தண்ணீரையும் இந்தப் பள்ளம் சர்ர் என்று இழுத் துக்கொண்டது. பூமிக்குள் மறைந்து மாயமானது. ஒரு பெரிய குளத்து நீரையும் சேர்த்து உறிஞ்சிக் கொண்டது. மாலை மலர் செய்தி அறிந்த மக்கள் வந்து வியப்புடன் பார்த்தனர்.
கூடங்குளம் அணுமின் நிலையம் அமைவிடம் பற்றிக் குறிப்பிட்ட ஏ.டி. ரோ ஷன், பி.ஷைலாமோனி, செளரவ் ஆச்சாரியார் ஆகியோர் அளித்த ஆய்வறிக் கையில், “இது கார்ஸ்ட் பிராந்தியம்” அதனால் அணுமின் நிலையம் அமைக்கக் கூடாது. ஆபத்தான பகுதி என்று கூறியுள்ளனர். அணுசக்தித்துறையும், மத்திய அரசும் இதை எல்லாம் பொருட்படுத்தவே இல்லை. “தமிழ்நாடு தானே ஒழிந்து போகட்டும்” என்ற உள்நோக்கத்திலேயே மத்திய அரசு இயங்கி வருகிறது.
இந்த அநீதியைத் தட்டிக் கேட்பதற்குத் தைரியமுள்ள ஒரே தலைவர் வைகோ
அவர்கள் நாடாளுமன்றத்தில் இல்லாதது தமிழ்நாட்டுக்கு நேர்ந்த மாபெரும்
பின்னடைவாகும். வர இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் வைகோ அவர் கள் விருதுநகர் தொகுதியில் போட்டியிட வேண்டுமென நமது தோழர்களும் நல்லெண்ணம் கொண்டோரும் விரும்புகின்றனர். அந்த விருதுநகர் தொகுதி உள்பட கூடங்குளம் அணுக்கதிர் இயக்கத்தின் அழிவுப் பரப்புக்குள் அடங்கிய வைதான்.அதன் விவரத்தைப் பிறகு பார்க்கலாம்.
தொடரும்.......
நன்றிகள்
கட்டுரையாளர் :- கவிஞர் தமிழ்மறவன்
No comments:
Post a Comment