Saturday, August 17, 2013

புலித்தடம் தேடி விழா பகுதி -1

கொழும்பில் காமன்வெல்த் மாநாடா?
கொலைகளுக்கெல்லாம் முத்தாய்ப்பா?
கொலைகாரனுக்கு மகுடம் சூட்டுவதைத் தடுத்து நிறுத்துவோம்! #வைகோ 

புலித்தடம் தேடி..... எனும் மகா.தமிழ்ப் பிரபாகரனின் நூல் அறிமுக நிகழ்வு, 10.08.2013 அன்று, தாயகத்தில் நடைபெற்றது.இந்நிகழ்வில் கழகப் பொதுச் செய லாளர் வைகோ அவர்கள் பங்கேற்று ஆற்றிய உரையில்இருந்து....

மகா. தமிழ்ப் பிரபாகரனை மனதாரப் பாராட்டுகிறேன்

காலப் புயலால் சாய்க்க முடியாத,ஊழிப் பெருவெள்ளத்தாலும் அழிக்க முடி யாத, காலக் கடைத்தீயே எழுந்தாலும் கருக்கிட முடியாத, மனித குல வரலாற் றில் பதிந்து போன புலித்தடத்தைத் தேடி, உயிரைத் துச்சமாக மதித்து, தமிழர்
களின் மரண பூமியாக்கப்பட்ட இலங்கைத் தீவுக்குச் சென்று ஆயிரமாயிரம் ஆண்டுகளாகக் கொடி உயர்த்திக் கொற்றம் அமைத்து,மகோன்னதமாக வாழ்ந் து வந்த ஈழத்தமிழர் தாயகத்தின் இரத்தம் உறைந்து போன பூமியில், உடைந்த
நெஞ்சோடு உலவி,தன் இருதயத்தின் இரணத்தை எழுத்தாக ஜூனியர் விகடன் இதழில் தொடரும் கட்டுரைகளாக ஆக்கித் தந்து, அதை விகடன் பிரசுரத்தார் புலித்தடம் தேடி என்ற நூலாகப் பதிப்பித்துக் கொடுத்த பின்னர், அகிலமெங் கும் அணு உலையை எதிர்க்கின்றவர்களுக்கு ஊக்க உந்துதல் களமாக இருக் கின்ற இடிந்தகரையில் அந்த நூலை வெளியிட்டு, அதுகுறித்த கருத்துகளைப் பதிவு செய்கின்ற நிகழ்வாக நடைபெற்றுக் கொண்டு இருக்கக் கூடிய இந்த மன்றத்தில், இந்த நூலை வழங்கிய, அன்புக்குரிய இளவல் மகா.தமிழ்ப் பிரபா கரன் அவர்களை நான் மனதாரப் பாராட்டுகிறேன்.
எந்தப் பெயரை உச்சரித்தால் நரம்புகளில் மின்சாரம் பாயுமோ, அந்தப் பெயரை மகா. தமிழ் பிரபாகரன் ஆக, இந்தக் களத்தில் தன்னைப் பதிவு செய்து கொண்டு இருக்கின்ற அருமைத் தம்பியின் இந்த நூல், பல மொழிகளிலும் வெளியிடப் படும் என்ற நல்ல செய்தியை அவர் தந்து இருக்கின்றார்.

இந்த நூலில்,இதயத்தை வேதனையில் வாட்டுகின்ற பல செய்திகள் இருக்கின் றன. கனத்த இதயத்தோடுதான் நான் இதைப் படித்து முடித்தேன். தொடராக
வெளிவந்த போது படித்ததை விட, இந்தப் படங்களுடன் முழுமையான ஒரு நூலாகத் தொடர்ந்து படித்த போது, தாங்க முடியாத சோகம் மனதைக் கப்பிக் கொண்டது. மகா துணிச்சல் வேண்டும். உயிரோடு திரும்ப முடியாது என்ற ஆபத்தை எதிர்கொண்டு போயிருக்கிறார் இந்த இளைஞர்.

கொழும்பு விமான நிலையத்தில் அவர் இறங்கியதற்குப் பிறகு, அவர் ஆய்வுக் கு அழைத்துச் செல்லப்படுவதும், இராணுவத் தினரும், காவல்துறையினரும் அவரை விசாரிப்பதும், அடுத்து என்ன நடக்கும் என்ற விதத்தில் அபாயம் அவரைச் சூழ்ந்ததும், அதன் பின்னர் அவர் எச்சரிக்கையோடு, மிகுந்த கவனத் தோடு ஒவ்வொரு பகுதிக்கும் சென்று நிலைமையைப் பதிவு செய்து இருக் கின்றார்.

பரந்தன், முல்லைத்தீவு, கிளிநொச்சி,யாழ் நகரில், வல்வெட்டித்துறை, நந்திக் கடல், முள்ளிவாய்க்கால்,  அனந்தபுரம், புதுக்குடியிருப்பு, புது மாத்தளன் என மரண ஓலம் ஒலித்துக் கொண்டு இருந்த பகுதிகளில், மகா தமிழ் பிரபாகரன் சென்று வந்து இருக்கின்றார்.சின்னஞ்சிறு பருவத்தில் எட்டாம் வகுப்பு படித் துக் கொண்டு இருந்தபோதே தன் அருமைத் தந்தையை இழந்தார். அவரது தாயார் செல்வி அவர்கள்,இங்கே அமர்ந்து இருக்கின்றார்.தன்னுடைய தந்தை யின் மன வேதனையை, தொடக்கத்திலேயே கவிதையாக அவர் தருகிறார்.

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்

என்று வள்ளுவப் பெருந்தகை கூறினார். மகா தமிழ் பிரபாகரனைப் பெற்ற தாய்க்கு நாங்கள் நன்றி செலுத்துகிறோம்; பெருமைப் படுத்துகிறோம். புக் பாய்ண்ட் அரங்கத்துக்காக கட்டணத்தைச் செலுத்தச் சென்றபோது, இந்த நூலின் தலைப்பு அவர்களை அச்சுறுத்தி இருக்கின்றது.

ஆம்; இந்தப் பெயரே பலரைப் பயமுறுத்துகிறது, அரசாங்கத்தையே அச்சுறுத் துகிறது. புலி என்ற பெயரைக் கேட்டாலே அச்சமா? அப்படி என்றால், இதை ஏன் தேசிய விலங்கு என்று கூறுகின்றீர்கள்?

இது, அண்ணாவின் தாயகம்

அந்த அரங்கம் கிடைக்கவில்லை என்று அவர் கூறினார். சென்னையில் உள்ள அரங்கங்களுக்கு எல்லாம்,காவல்துறை ஒரு சுற்று அறிக்கையை அனுப்பி இருக்கிறது என்று நான் கேள்விப்பட்டேன். இந்த நூல் குறித்த ஆய்வு அரங்கத் தில் நான் பங்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தம்பி மகா பிரபாகரன் விரும்பினார்.என் உதவியாளரிடத்தில் அவர் பேசுகிறபொழுது, அவர் தயங்கு கிறார் என்பதை நான் தெரிந்து கொண்டேன்.எந்த அரங்கமும் இடம் தரவில் லை என்றால், தாயக அரங்கத்தைக் கேட்டால் என்ன என்று அவர் சிந்திக் கிறார் என்று நான் அறிந்து கொண்டேன்.

அதை உணர்ந்து கொண்டு நான் சொன்னேன்: தம்பி இந்தக் கூட்டத்தை நீங்கள் எந்த அரங்கில் நடத்தினாலும் நான் வருகிறேன். ஆனால், எந்த அரங்கமும் கிடைக்கவில்லை என்றால்,தாயகத்தில் எங்கள் அரங்கம் இருக்கிறது; நீங்கள் அதைப் பயன் படுத்திக் கொள்ளலாம் என்றேன்.எல்லைகளை எல்லாம் கடந்து
அன்பைப் பொழிகின்றவள் தாய்; வானளாவிய பாசத்தைப் பொழிகின்றவள் தாய். காஞ்சிபுரத்தில் அண்ணாவின் இல்லத்துக்கும் இந்தப் பெயர் தான்; அத னால்தான், தாயகம் என்கின்ற பெயரை, எங்கள் கட்சியின் அலுவலகத் துக்கு நாங்கள் சூட்டினோம்.

ஈழத்தில் கொடுந்துயர் நடைபெற்றுக் கொண்டு இருந்த நேரத்தில்,முத்துக் குமார் மரணத் தீயைத் தாவி அரவணைத்துக் கொண்டு மடிந்ததற்குப் பிறகு, தமிழகத்தில் ஒரு விழிப்பு உணர்வை ஏற்படுத்தி,யுத்தத்தை எப்படியாவது நிறுத்தி விடலாமா? என்று தமிழகம் கனன்று கொந்தளித்துக் கொண்டு இருந்த
நேரத்தில், அருமைச் சகோதரி பேராசிரியை சரஸ்வதி அவர்கள் தலைமை யில், நூற்றுக்கணக்கான தாய்மார்கள் உண்ணாநிலை அறப்போர் நடத்திய போது, அந்த இடத்தின் உரிமையாளரை, காவல் துறையினர் அச்சுறுத்தி மிரட் டியதன் விளைவாக, நீங்கள் இந்த இடத்தை விட்டு உடனே வெளியேறுங்கள்
என்று அவர்கள் கூறிய நேரத்தில்,

எங்கே சென்று இந்த உண்ணாநிலை அறப்போரைத் தொடர்வது எனத்திகைத்த அவர்கள், தாயகத்தில் தொடரலாமா? எனக் கேட்டபோது, அதற்காகத்தானே இந்தத் தாயகம் இருக்கிறது; துன்பப்பட்டவர்கள் யாராக இருந்தாலும், அவர் களது துயரத்தைப் போக்குகின்ற நிழல் தருகின்ற இடமாகத்தான் எங்களு டைய இயக்கத்தின் தலைமையகம் தாயகம் இருக்கிறது என்பதனால், அந்தச் சகோதரிகள்,இங்கே வந்து உண்ணாநிலை அறப்போரை நடத்தினார்கள்.

ஒரு போராட்டக் களம் என்றால்,அங்கே தங்கள் முகத்தைப் பதிவு செய்து கொள்ளப் பலர் வருவார்கள்.எங்களைக் கடுமையாக விமர்சிக்கக் கூடிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள், எங்களை ஏற்றுக் கொள்ளாதவர்கள், எங் களை நிந்திக் கின்றவர்கள், அவர்களுக்கு, எப்படி நாம் மறுமலர்ச்சி தி.மு.க.
அலுவலகத்துக்குச் செல்வது? என்ற எண்ணம் ஏற்பட்டு விடும் என்பதனால், அவர்கள் உண்ணா நிலை அறப்போர் நடத்திய பகுதியை முழுமையாக அவர் களுக்கே ஒதுக்கிக் கொடுத்து விட்டோம். அங்கே எங்கள் கட்சியின் சாயல் ஒரு துளியும் படிந்து விடக் கூடாது என்பதில் நாங்கள்கவனமாக இருந்தோம். நானும்,தோழர்களும் அந்தப் பகுதிக்கே செல்லாமல், மற்றொரு வழியைப்
பயன்படுத்திக் கொண்டோம்.

சாஞ்சிப் போர்க்களப் பதிவுக்கு நன்றி

அந்த வகையில், ஒரு மரண பூமிக்குச் சென்று வந்த ஒரு வீரனுடைய நூலை
ஆய்வு செய்யக் கூடிய நிகழ்வு, இந்தத் தாயகத்தில் அமைந்து இருப்பது குறித்து நான் பெருமைப்படுகிறேன்.அவருடைய எழுத்துகள், என்னை மிகவும் பாதித்து இருக்கின்றன.

நம்முடைய தோழர்கள் பலருக்கு அவருடைய முகம், தெரிந்த முகமாக இருக் கலாம். ஆம்; கடந்த ஆண்டு, செப்டெம்பர் மாதம் 17 ஆம் நாள், அறிவாசான் தந்தை பெரியார் பிறந்த நாளில், பேரறிஞர் அண்ணா சதுக்கத்தில் இருந்து, நாம் 1200 பேர் புறப்பட்டு, மூன்று மாநிலங்களைக் கடந்து, விந்திய சாத்புரா மலைகளின் சரிவுகளில், கொடியவன் இராஜபக்சே மத்தியப் பிரதேசத்துக்கு உள்ளே சாஞ்சிக்கு வருவதை எதிர்த்து,கருங்கொடி ஏந்தி கண்டனப் போராட் டம் நடத்தியபோது, அந்தப் பயணத்தில் நம்மோடு, ஜூனியர் விகடன் இதழின் சார்பில், புகைப்படக் கலைஞராகவும், செய்தியாளராகவும், செய்திகளை மக்களுக்குக் கொண்டு போய்ச் சேர்க்கின்றவராகவும், நம்மோடு அதே பேருந் தில் பயணித்தவர்தான் மகா தமிழ் பிரபாகரன் என்பதை, நான் இங்கே மகிழ்ச்சி யோடு தெரிவித்துக் கொள்கிறேன். அதனால்தான், கோடிக் கணக்கான மக்க ளுக்கு அந்தச் செய்தி போய்ச் சேர்ந்தது.

அந்த மூன்று நாள்கள், நெருப்பு வெயிலில், பகலிலும், இரவிலும், அந்தத் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து நாம் நடத்திய போராட்டச் செய்தியை, ஏடு களும், ஊடகங்களும் அந்த அளவுக்குக் கொண்டு போய்ச் சேர்க்கவில்லை. வடபுலத்து மக்களுக்குப் போய்ச் சேர்ந்த அளவுக்குப் போய்ச் சேரவில்லை.
ஆனால், ஜூனியர் விகடன் இதழின் மூலமாகத்தான் கோடானுகோடி மக்க ளுக்கும், இணையதளத்துக்கும் கொண்டு போய்ச் சேர்க்கப்பட்டது.அதிலும் குறிப்பாக, புகைப்படங் களோடு, நிமிடத்துக்கு நிமிடம் செய்திகளைத் தந்ததால் தான், அது மக்களுக்குப் போய்ச் சேர்ந்தது.அதனால் மறுமலர்ச்சி தி.மு கழகத் துக்கு ஏதாவது பெருமை வந்து சேர்ந்து விட வேண்டும் என்று நான் நினைக்க வில்லை.



நம்முடைய வேதனையை, நம்முடைய துயரத்தை, ஈழத்தமிழர் படுகொலை யை, கொடியவன் ராஜபக்சே செய்த அக்கிரமத்தை, உடைக்கப்பட்ட கோவில் களை, அழிக்கப்பட்ட தமிழர் நிலத்தை, தமிழர் வாழ்வை, இந்த அகிலம் அறிந்து
கொள்ள வேண்டும்; அனைத்து இந்தியா அறிந்து கொள்ள வேண்டும்; இந்தத் துணைக்கண்டத்தில் இருக்கின்ற பல்வேறு தேசிய இனங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்கின்ற நோக்கத்துக்காகத்தான், நாங்கள் இங்கே இருந்து 1500
மைல்களுக்கு அப்பால் சென்று ஒரு போராட்டக் களத்தை அமைத்தோம்.

அப்படிப்பட்ட உணர்வு தம்பி மகா பிரபாகரனுக்கும் இருந்ததனால்,அவர் இந்தச் செய்தியைக் கொண்டு போனார். இந்தப் போராட்டத்தை நடத்துகின்றவர்கள் ஒரு அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள்,வைகோவின் சகாக்கள் என்பதால்,
மறுமலர்ச்சி தி.மு.கழகத்துக்கு ஏதாவது பெயர் வந்துவிடுமோ என்ற எண்ணம்
இல்லாமல், இந்தச் செய்தி மக்களுக்குப் போய்ச் சேர வேண்டும் என்ற விதத் தில் அதைப் பதிவு செய்தார். அதற்கு நன்றி தெரிவிப் பதற்கான வாய்ப்பு எனக் குக் கிடைக்க வில்லை. இந்த நிகழ்ச்சியின் வாயிலாக, மறுமலர்ச்சி திராவிட
முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அவருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள் கின்றேன்.

துடித்துப் போனேன்

இந்த நூலில் பல செய்திகளைப் பார்க்கின்றபோது, மனம் பதைபதைக் கின்றது. வல்வெட்டித்துறைக்கு இவர் செல்கிறார். அங்கே, நான் நெஞ்சால் பூசிக்கின்ற தலைவன் பிரபாகரன் அவர்களுடைய இல்லம், இடித்துத் தரைமட்டமாக்கப் பட்டு, உடைந்து போன ஒரேயொரு சுவர் மட்டும்தான் மிச்சம் இருக்கின்றதாம்; அதுவும் இடிபாடாகக் காட்சி அளிக்கின்றது.அதில், தேசியத் தலைவர் பிரபா கரன் இல்லம் என்ற எழுத்துகள், கருப்பு மை அழிக்கப்பட்டு இருக்கின்றது என்று இந்தத் தம்பி குறிப்பிட்டு இருக்கின்றார்.

வழிநெடுகிலும் அவர் கண்ட காட்சிகள், இதயத்தைப் பிழிவதாக இருக்கின்றன. சித்திரவதைகள் தொடருகின்றன. இன்றைக்கும் அங்கே படுகொலைகள் தொடரு கின்றன. மர்மமான சாவுகள் தொடரு கின்றன. மாகாண சபைத் தேர் தலில் போட்டியிடுவதற்கு வேட்பாளராக ஆக்கிக்கொண்ட, சுயேச்சை வேட்பா ளரான ஒரு தமிழர், இந்த வாரம் படுகொலை செய்யப்பட்டு இருக்கின்றார். பல் லாயிரக்கணக்கான தமிழர்கள் காணாமல் போயிருக் கிறார்கள். அவர்கள் எப்படிக் கொல்லப் பட்டார்கள் என்பது குறித்து நான் ஊகித்ததே கிடையாது. இவர் எழுதியதைப் படித்தபோது நான் துடித்துப் போனேன்.

உயிரோடு எரிக்கின்றான்

அடையாறில் இருக்கின்ற மின் மயானத்துக்கு, பல இறுதி நிகழ்வு களுக்கு நாம் சென்று இருக்கின்றோம்.அங்கே சில நிமிடங்களுக்கு உள்ளாக ஒரு மனித உடல் சாம்பலாகி விடும்.ஆனால், ஈழத்தில் தமிழர்களை உயிரோடு கட்டி வைத்து, மின் மயானங்களுக்கு உள்ளே தள்ளி எரித்து இருக்கின்றார்கள். உல கில் இப்படி நான் கேள்விப்பட்டதே இல்லை. அதை இந்த நூலில்தான் அறிந்து கொண்டேன். அது மட்டும் அல்ல. எத்தனை விதமான கொடுமைகள், சித்திரவ தைகள்? அப்படிப்பட்ட முகாம்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.

நான்காவது மாடித் தளத்தில், டிஐடி (Terrorism Investigation Department) என்ற இந்தச் சொல்லை உச்சரித்தாலே சிங்களவனும் பதறு கிறானாம். அப்படிப்பட்ட
சித்திரவதைக்கூடம் அது. மரணம் என்றால் நொடிப் பொழுதில் உயிர் போய் விடும். ஆனால், அங்கே,கொடூரமான முறையில் சித்திரவதை செய்து சிறுகச் சிறுகக் கொல்லு கிறார்கள்.

நரம்புகளைச் செயல் இழக்கச் செய்கின்ற ஊசிகளைக்குத்து கின்றார்கள்; தலை கீழாகக் கட்டித் தொங்கவிட்டு அடிக்கின்றார்கள்; நகங்களைப் பிய்த்து எறி கிறார்கள்; இமைகளைப் பிடுங்குகிறார்கள்; மின்சாரத்தை உடலில் செலுத்து
கிறார்கள்; மாட்டுறுப்பைச் சூடாக்கி, இந்த விளக்கத்துக்கு உள்ளே செல்ல நான் விரும்பவில்லை, அதைக் கொண்டு தலையில் அடிக்கின்றார்கள்; பலமாக அடிக்க அடிக்க, மூளைக்கு உள்ளே நரம்புகள் சிதைந்து போகின்றன; முதுகுத் தண்டைச் செயல் இழக்கச் செய்கின்றார்கள்; இத்தனைக் கொடுமைகளும் நடந்தன.இவ்வளவு துயரங்களையும் அவர்கள் தாங்க நேர்ந்தது. ஒவ்வொரு
சம்பவமாக அதைப் பதிவு செய்து இருக்கின்றார்.

புதுக்குடியிருப்பு, முள்ளிவாய்க்கால்,புது மாத்தளனில், பள்ளிக்கூடங்கள் தான் மருத்துவமனைகள் ஆயின.பிணங்கள் குவிக்கப்படுகின்ற கூடாரமாகவே இருந்தன. அங்கே விறகுக் கட்டைகளைப் போலத் தமிழர்கள் உடல்கள் அடுக் கப்பட்டு இருந்தன என்று, தமிழ்வாணி ஞானகுமார் சொன்னார்.அதை இவரும் குறிப்பிடுகின்றார். ஐ.நா.பொதுச்செயலாளர் அமைத்த மூவர் குழு தந்த அறிக் கையிலும் அவை பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன.

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்த ஒரு மூத்த போராளி,நடந்ததை இந்த நூலில் பதிவு செய்து இருக்கின்றார். அவர் சொல்லுகிறார்: மருத்துவமனை என்று அறிவிக்கப் பட்ட இடத்துக்குப் போனோம். ஒரு பெண் தாய்மைப் பேறு அடைந்து இருந்தாள். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவளை நாங்கள் அங்கே கொண்டு போனோம். பங்கருக்கு உள்ளே மருத்துவர் இருந்தார். அவ ரது குடும்பத்தோடு இருந்தார். அவரிடம் நான் போய், சனம் நிறையச் செத்துக்
கிட்டு இருக்கு...இந்தப் புள்ளைக்கு நீங்க வைத்தியம் பாக்கணும் என்று நான் அழைத்தேன். அவர் தேநீர் பருகிக்கொண்டு இருந்தார்.போங்கள் வருகிறேன் என்று சொன்னார். உடனே வரவில்லை.அதற்குள் இந்தப் பிள்ளை செத்துப்
போய்விட்டாள். அடுத்த சில நிமிடங்களில், விமானத்தில் இருந்து வீசிய குண்டு அந்தப் பங்கர் மீதே விழுந்தது. அந்த மருத்துவரும்,அவரது மனைவி யும் இறந்து போனார்கள் என்கிறார். அதை இவர் பதிவு செய்து இருக்கிறார்.

தொடரும் ....

No comments:

Post a Comment