Saturday, August 3, 2013

ஏழை படும் பாடு!

சங்கொலி தலையங்கம்

இந்திய அரசின் திட்டக்குழு ஜூலை 23 ஆம் தேதி நாட்டில் உள்ள ஏழைகள் குறித்த தனது மேதாவித்தனமான அறிக்கையை வெளியிட்டிருக்கின்றது. திட் டக்குழுவினால், நியமிக்கப்பட்ட டெண்டுல்கர் குழுவின் அறிக்கைதான் இது என்றாலும், இதுவே திட்டக்குழுவின் அசல் அறிக்கையாக பின்னர் ஏற்கப் படும் அபாயம் இருக்கின்றது.

ஏனெனில், 2011 இல் உச்ச நீதிமன்றத்தில், ஏழை மக்கள், வறுமைக் கோட்டிற்கு
கீழே இருப்பவர்கள் எப்படி தீர்மானிக்கப் படுகிறார்கள் என்று திட்டக்குழு
அறிக்கை தாக்கல் செய்தது. அதில் இந்தியாவின் கிராமப்புறத்தில் வயது வந்த
ஒருவரின் வருமானம் தினசரி ரூ.26 என்றால், அவர் வறுமைக் கோட்டில் வாழ் கிறார் என்றும், நகர்புறத்தில் உள்ள ஒருவரின் வருமானம் தினசரி ரூ.32 ஆக
இருப்பின், அவர் வறுமைக்கோட்டிற்கு கீழே வாழ்கிறார் என்றும் தெரிவித்து
இருந்தது.
திட்டக்குழுவின் இந்த மதிப்பீட்டிற்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந் தது. தற்போதும் அதைப்போலவே, குரங்கு குட்டியைவிட்டு ஆழம் பார்ப்பது போல, திட்டக்குழு டெண்டுல்கர் குழு மூலம் பெற்ற பரிந்துரைகளை கசிய விட்டுள்ளது.

திட்டக்குழு இப்போது கொடுத்துள்ள அறிக்கையில், கிராமப்புறங்களில் ஒரு
நாளைக்கு 27 ரூபாயும், நகர்ப்புறங்களில் 33 ரூபாயும் வருமானம் ஈட்டுபவர் கள் ஏழைகளாக கருதப்பட மாட்டார்கள். கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங் களி லும் முறையே ரூ.27 மற்றும் ரூ.33 இவற்றுக்குக் கீழே வருமானம் பெறுபவர் கள் தான் வறுமைக்கோட்டிற்குக் கீழே வாழ்பவர்களாக திட்டக்குழு மதிப்பிட்டு உள்ளது.

அது மட்டுமல்ல, கடந்த 10 ஆண்டுக் காலத்தில் வறுமைக் கோட்டிற்குக் கீழே
வாழும் மக்கள் எண்ணிக்கை சுமார் 10 சதவீதம் குறைந்து விட்டதாகவும் திட் டக்குழு கூறுகிறது. 2004-2005 இல் வறுமைக்கோட்டிற்கு கீழே வாழும் மக்கள் 37.2 சதவீதம் என்ற அளவில் இருந்தது. இது 2011-12 ஆம் ஆண்டுகளில் 21.9 சதவீதம் என்ற அளவில் குறைந்துவிட்டது என்று திட்டக்குழு சுட்டிக்காட்டி இருக்கின்றது.

திட்டக்குழுவின் இத்தகைய மோசடியான, நகைப்பிற்கு இடமான, வறுமைக் கோடு பற்றிய மதிப்பீடு பல்வேறு பொருளாதார விற்பன்னர்களாலும், சமூகப் போராளிகளாலும் கடும் கண்டனத்திற்கு உள்ளாகி இருக்கின்றது.திட்டக்குழு வின் இந்த அறிக்கை பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வெங்கா யம் 1 கிலோ விலை 50 ரூபாய்க்கு மேல் விற்பனையாகிறது.1 லிட்டர் தண்ணீர் கூட ரூ.20க்கு விற்கப்படுகிறது. விலைவாசி உயர்வினால் மக்கள் கடுமை யான பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

உணவுப் பண்டங்கள் விலை நாள்தோறும் உயர்ந்த வண்ணமே உள்ளது. ஒரு
நாளைக்கு ரூ.200 சம்பாதிக்கும் உடல் உழைப்பு தொழிலாளராக இருந்தாலும்,
இன்றைய சூழலில் வாழ்க்கை நடத்துவது என்பது மிகுந்த சிரமம். நாட்டின்
உண்மைநிலை இவ்வாறு இருக்க எந்த அடிப்படையில் திட்டக்குழு வறுமை
பற்றிய மதிப்பீட்டு அறிக்கைகளை தருகின்றது?

திட்டக்குழுவின் இந்த அதி அற்புதமான கண்டுபிடிப்பு அறிக்கைவெளியானவு டன் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிலர் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சு வது போல, திட்டக்குழு அறிக்கையை நியாயப்படுத்திட முனை கின்றனர். காங் கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ராஜ் பாப்பர் எம்.பி.,“மும்பையில் ஒரு வர் ரூ.12க்கு முழுச் சாப்பாடு சாப்பிட முடியும்” என்று கூறுகிறார். மற் றொரு காங்கிரஸ் எம்.பி., ரஷீத் மசூத், டெல்லியில் ஜூம்மா மசூதி அருகில் ஐந்து ரூபாய்க்கு வயிறார சாப்பிடலாம் என்று கூறுகிறார்.

காங்கிரஸ் எம்.பி.க்களை விட ஒருபடி மேலே போய், கூட்டணி கட்சியின் சார் பில், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர், மத்திய மரபுசாரா எரிசக்தித்துறை
அமைச்சர் பரூக் அப்துல்லா, “சாப்பாடு என்பது அவரவர் மனதைப் பொறுத்தது.
ஒரு ரூபாய் இருந்தால்கூட போதும், வயிறார சாப்பிடலாம். ஆனால், அதற்கு
மனது இருக்க வேண்டும். 100 ரூபாய்க்கும் சாப்பாடு கிடைக்கிறது” என்று கூறி
இருக்கிறார். பிச்சைக்காரர்கள் கூட ஒரு ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்து
வரும் காலத்தில், ஒரு ரூபாயில் சாப்பிடலாம் என்று காங்கிரஸ் கூட்டாளி பரூக் அப்துல்லா கூறுகிறார். ரோம் எரிந்த போது பிடில் வாசித்த நீரோ மன்னர் களைத்தான் காங்கிரஸ் கூட்டணி அரசின் ஆட்சியாளர்கள் நினைவு படுத்து கின்றனர்.

உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவை ஏற்று, வறுமைக்கோட்டிற்குக் கீழே உள்ள வர்கள் பற்றிய புள்ளி விவரங்களை சேகரிக்க ரங்கராஜன் தலைமையிலான
குழு ஒன்றை பிரதமர் அமைத்துள்ளார். இக்குழுவின் அறிக்கை அடுத்த ஆண்டு
மே மாதம் தயாராகும் என்று கூறப்படுகிறது. அதற்குள் திட்டக்குழு வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்கள் பற்றி மதிப்பீடுகளை வெளியிட்டு ரங்கராஜன் குழுவிற்கு வழிகாட்டுதல்களை அளித்து இருக்கிறது என்றுதான் கருத வேண்டி இருக்கின்றது.

வறுமை குறித்து மதிப்பீடு செய்வதன் உண்மையான நோக்கம் என்ன? மிகவும்
நுட்பமாக ஆராய்ந்தால் புதிய பொருளாதார கொள்கைகள் நடைமுறைப் படுத் தப்பட்ட பிறகு கடந்த 15 ஆண்டுகளில்தான் இத்தகைய மதிப்பீட்டு அறிக்கை களை மத்திய அரசு தயாரித்து வருகின்றது. ஏனெனில் இந்த மதிப்பீடுகள் தான் வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதைத் தீர்மானிப்பதற்கு பயன்படுகின்றன. உலக வங்கியும், பன்னாட்டு நிதியமும் (WTO, IMF) அரசின் மானிய செலவினங்களைக் குறைத்து படிப்படியாக இரத்து செய்ய வேண்டும் என்று கட்டளையிடுகின்றன.

முதல் ஐந்தாண்டு திட்டக் காலத்திலிருந்து வறுமை குறித்த மதிப்பீடுகள் வறு மை ஒழிப்புத் திட்டங்களை உருவாக்கவும், அவற்றைக் கண்காணிக்கவும் 
மக்கள் நலனை முன் வைத்து செயற்படவும் பயன்பட்டு வந்தன.ஆனால், புதிய பொருளாதார கொள்கை நடைமுறைக்கு வந்த 1991ஆம் ஆண்டிலிருந்து இவை அரசாங்கத்தின் செலவினங்கள் ஏழைகளுக்கு அதிகரிப்பதைத் தடுக்கவும், மானியங்களைக் குறைக்கவும் வறுமைக்கோடு புள்ளிவிவரங்கள் பயன்படுத் தப்படுகின்றன.

உணவுப் பொருட்களுக்கான மானியங்கள், மருத்துவம், வீட்டு வசதி, வங்கிக்
கடன்கள், ஓய்வு ஊதியங்கள், குழந்தைகள், பெண்களுக்கான நலத்திட்டங்கள்
ஆகியவற்றிற்கு ஒதுக்கப்படும் நிதி, ஒரு குறிப்பிட்ட பகுதி மக்களுக்கு மட்டு மே கிடைக்கக்கூடிய வகையில் மாற்றப்படுகின்றன. பொது விநியோக முறை யில், ஏழைகளுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்களுக்கான மானியங் களைக் குறைப்பதற்கு வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள ஏழைகளின் எண் ணிக்கையைக் குறைத்துக் காட்ட வேண்டிய நிர்பந்தம் மத்திய அரசுக்கு ஏற்பட் டிருக்கின்றது. இதன் விளைவாகத்தான் திட்டக்குழு முற்றிலும் மோசடியான நம்ப முடியாத வெளிப்படைத் தன்மையற்ற முறையில் வறுமைக்கோட்டின் அளவைத் தீர்மானித்து வருகின்றது.

மத்திய அரசின் இத்தகைய மோசடித்தனமான புள்ளிவிவரங்களை, மத்திய அரசின் வெவ்வேறு துறைகளின் மதிப்பீட்டு அறிக்கைகள் அம்பலப் படுத்தி
உள்ளன. 1992 ஆம் ஆண்டிலிருந்து மத்திய அரசின் கிராமப்புற வளர்ச்சித்துறை அமைச்சகமும், திட்டக்குழுவும் ஏழைகள் குறித்து மேற்கொண்ட ஆய்வுகளுக் கான செயல் வழிமுறைகள் (Methodlogies) வேறு பட்டவையாகவும், வெவ்வே றான அளவீடுகளை (Assessments)) முன் வைப்பதாகவும் இருக்கின்றன.

1992 இல் கிராமப்புற வளர்ச்சி அமைச்சகம் எடுத்த கணக்கெடுப்பின்படி, அந்த
ஆண்டில் வறுமைக்கோட்டிற்குக் கீழே உள்ள குடும்பங்களின் எண்ணிக்கை,
நாட்டின் மக்கள் தொகையில் 52 சதவீதமாகும். இதே கால கட்டத்தில்,திட்டக் குழு வின் மதிப்பீட்டின்படி வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள பரம ஏழைகள் எண்ணிக்கை 37 சதவீதமாகும்.

ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் 1997 இல் மீண்டும் இதுபோன்று எடுக்கப் பட்ட
கணக்கின்படி கிராமப்புற வளர்ச்சி அமைச்சகம் மற்றும் திட்டக்குழு எடுத்த
புள்ளிவிவரங்களில் 10 சதவீதம் அளவிற்கு வித்தியாசம் இருந்தது. எனினும்
அறிவியல் ரீதியான கொள்கை ஏதுமின்றி எடுக்கப்பட்ட இந்த இரு தனித்தனி யான அளவுகோள்களும், அளவீடுகளும், அரசாங்கத்தின் செயல் திட்டங்களில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள மக்களுக்கு, மாநில வாரியாக நிதி ஒதுக்கீடு செய்வதில் கூட்டாக இணைக்கப்பட்டன.

இதுமட்டுமன்றி வறுமைக்கோடு நிர்ணயம் செய்வதற்கான செயல்வழி முறை களை மத்திய கிராமப்புற வளர்ச்சித்துறை அமைச்சகமும், திட்டக்குழுவும்,
1992 இல் இருந்து இதுவரை மூன்று முறை மாற்றி இருக்கின்றன. ஏழைகளை
வரையறுப்பதற்கானஒரு சீரான கொள்கை அரசுக்கு இல்லை என்பதைத்தான்
இது காட்டுகிறது.

மத்திய திட்டக்குழு 1993 இல் ஏழை மக்களை அடையாளம் காண பேராசிரியர்
லேக்தாவாலா தலைமையில், பரம ஏழைகளின் அடையாளங்கள் எண்ணிக் கை குறித்த மதிப்பீட்டு நிபுணர் குழு ஒன்றை அமைத்தது. இந்தக் குழு சில
பரிந்துரைகளை உருவாக்கி அரசுக்கு அறிக்கை அளித்தது. மத்திய அரசால்
அமைக்கப்பட்ட குறைந்தபட்ச தேவைகள் மற்றும் செயலூக்க நுகர்வுத்தேவை களுக்கான திட்ட ஏற்பாடு குறித்த பணிப்பிரிவு (Task Force on Projections of Minimum Needs and Effective Consumtion Demand) உருவாக்கிய வழிகாட்டுதல்களையே லேக்தா வாலா குழுவும் பரிந்துரை செய்தது.

இதன்படி வறுமை என்பதை எப்படி தீர்மானித்தனர் என்றால், கிராமப்புறத்தில்
உள்ள தனிநபர் ஒரு நாளைக்கு 2400 கலோரிக்கான உணவும், நகர்ப்புறத்தில் 2,100கலோரிக்கான உணவும் எடுத்துக்கொள்ள தேவையான மாதாந்திர செலவு கள் என்ற அளவின் அடிப்படையில் வறுமை என்பது வரையறுக்கப் பட்டது.
வரையறுக்கப்பட்ட இந்த வறுமைக் கோடு, உணவு அல்லாத எரிபொருள், துணி,வீட்டு வசதி, மருத்துவம் போன்றவற்றிற்கு ஆகும் செலவினங்களை யும் உள்ளடக்கியிருந்தது.

இந்த வரையறைகளின்படி திட்டக்குழுவின் தற்போதைய வறுமைக்கோடு என்பது கிராமப்புறத்தைப் பொறுத்தவரையில், தனிநபர் ஒருவரின் மாத வரு மானம் ரூ.327 மட்டுமே. இது நகர்ப்புறத்தைப் பொறுத்தவரையில் ரூ.454 ஆகும். மாநில அளவில் கிராமப்புற வறுமைக்கோடு, மாநில விலை குறியீட்டு எண் ணுடன் இணைந்ததாகும்.இதன்படி ஆந்திராவில் கிராமப்புறத்தில் தனிநபர்வரு மானம் மாதம் ஒன்றுக்கு ரூ.262 ஆகும். இது மராட்டியத்தில் ரூ.318ஆகவும்,
உத்திரப்பிரதேசத்தில் ரூ.336 ஆகவும், மேற்கு வங்கத்தில் ரூ.350 ஆகவும், வட கிழக்கு மாகாணங்களில் ரூ.365 ஆகவும், கேரளாவில் ரூ.374 ஆகவும்  வேறு பாடு கொண்டதாக வறுமைக்கோடு நிர்ணயம் இருக்கின்றது.

1992 இல் முதல் தடவையாக வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ளவர்கள் குறித்த
கணக்கெடுப்பை நடத்தியபோது வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களை
அடையாளம் காண ஆண்டிற்கு ரூ. 11 ஆயிரம் வறுமைக் கோட்டிற்கான அள வாக நிர்ணயிக்கப்பட்டது. இந்தக் கணக்கெடுப்புக்குப் பிறகு, கிராமப்புற
வளர்ச்சி அமைச்சகம் நாட்டில் 52 சதவீத கிராமப்புற குடும்பங்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழானவை என்று தெரிவித்தது. அடுத்து 9 ஆவது ஐந்தாண்டுத் திட்டத்திற்கான இரண்டாவது கணக்கெடுப்பின் போது திட்டக்குழு வேறு அளவீடுகளைப் புகுத்தியது.

வருமானத்தை அடிப்படையாகக் கொண்ட அடிப்படை அளவிற்குப் பதிலாக
செலவு-நீக்கல் அடிப்படையில் (Expenditure cum exclusion) அடிப்படை அளவு உரு வாக்கப்பட்டது. இதில் ஒரு குறிப்பிட்ட ஐந்து பொருட்களில் ஏதேனும் ஒன்றை ஒரு குடும்பம் வைத்திருந்தால் அது வறுமைக் கோட்டிலிருந்து நீக்கப்படும். இந்த நீக்கம் அடிப்படையான கொள்கைக்கு (Exclusion Criteria),வீடு, நிலம், குடும் பத்தின் ஏதேனும் ஒரு உறுப்பினரின் ஆண்டு வருமானம் ரூ.20 ஆயிரம், தொலைக்காட்சிப் பெட்டி மற்றும் விவசாயக் கருவி இவற்றில் ஏதாவது ஒன்று இருந்தால்கூட அந்தக் குடும்பம் வறுமைக்கோடு பட்டியலில் வராது.

இந்தப் புதிய அளவீடுகளைப் பயன்படுத்தி, 1997 இல் கிராமப்புற மக்களில் 41.05 சதவீதம் மக்கள், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள பரம ஏழைகள் என்று கிராமப் புற வளர்ச்சித்துறை அமைச்சகம் கூறியது. இதையும்கூட திட்டக்குழு ஏற்க தயக்கம் காட்டியது. எனவே, திட்டக்குழுவின் ஆலோசனையின்படி, மீண்டும் நிபுணர் குழு ஒன்றை கிராமப்புற வளர்ச்சித்துறை அமைச்சகம் அமைத்தது. அந்தக் குழு முந்தைய இரு வழிமுறைகளையும் நிராகரித்துவிட்டு, மூன்றாவ தாக ஒன்றைக் கொண்டுவந்தது.

இந்தப் புதிய விதிமுறைப்படி ஒரு பட்டியல் தயாரிக்கப்பட்டு, 13 வரம்பு அளவு கள் (Parameters) உருவாக்கப்பட்டு, ஒவ்வொன்றுக்கும் தனித் தனி மதிப்பெண் (Score) கொடுக்கப்பட்டது. இதன்படி ஒரு குடும்பம் முழு நிறைவான உணவுக்கு குறைவாக உட்கொண்டால் பூஜ்யம் மதிப்பெண் கொடுக்கப்படும். இருவேளை உணவு எடுத்துக்கொண்டால் 3 மதிப்பெண்கள் கொடுக்கப்படும். ஒரு குடும்பம் சொந்தமான தனிப்பட்ட கழிவறை கொண்டிருந்தால் அதிகபட்சம் 4 மதிப்பெண் கள் கொடுக்கப்படும்.மதிப்பெண்கள் அடிப்படையில் வறுமைக்கோடு தீர்மா னிக்கப்படும்.

இவ்வாறு கேலிக்குரிய வகையில் அளவீடுகளை உருவாக்கி வறுமைக்கோட் டை மதிப்பீடு செய்து உலகவங்கி, பன்னாட்டு நிதியத்தின் உத்தரவுகளை நடை முறைப்படுத்துவதுதான் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின் நோக்கமாக
இருக்கின்றது. உணவுப் பாதுகாப்புச் சட்டம் வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள
பரம ஏழைகளின் உணவுக்கு உறுதி செய்கிறது என்று தம்பட்டம் அடித்துக் கொண்டே வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் எண்ணிக்கையைக்குறைத் துக்காட்டுவதும், திட்டக்குழு புள்ளி விவரங்களை வெளியிடுவதும் ஏன் என்ற கேள்வி எழுகிறது.

தேசிய மாதிரி ஆய்வு நிறுவனம் (NSSO) எடுத்த கணக்கீட்டின்படி தற்போதுள்ள நிலை 90 சதவீத மக்கள் கிராமப்புறங்களில் ஒரு நாளைக்கு 70 ரூபாயும், 90 சதவீத மக்கள் நகர்ப்புறங்களில் ஒரு நாளைக்கு 154 ரூபாயும் செலவழிக்கக் கூடிய அளவில் இருக்கின்றனர் என்று தெரிவிக்கும்போது திட்டக்குழு கிராமப் புறங்களில் ரூ.27, நகர்ப்புறங்களில் ரூ.33 தினமும் செலவழிக்கின்றவர்கள் தான் வறுமைக்கோட்டிற்குக் கீழே உள்ளவர்கள் என்று மதிப்பிட்டுள்ளது எவ்வளவு மோசடியானது என்று தெரிகிறது.

தேசிய ஆலோசனைக்குழுவின் உறுப்பினர் என்.சி.சக்சேனா கூறியுள்ளவாறு
திட்டக்குழுவின் புள்ளிவிவரங்கள் காட்டும் செலவில் பூனைகளும் நாய்களும்
மட்டுமே உயிர்வாழ முடியும் என்பதுதான் உண்மை நிலை.

ஏழைகள் படும் பாட்டைவிட திட்டக்குழுவின் மதிப்பீடு கொடுமையானதாக
இருக்கின்றது. திட்டக்குழு தலைவர் பிரதமர் மன்மோகன்சிங், துணைத்தலை வர் மாண்டேக் சிங் அலுவாலியா இருவரும்தான் பதில் கூற வேண்டும்.

No comments:

Post a Comment