Thursday, August 22, 2013

மெட்ராஸ் கபே -கோவை

கோவையில் "மெட்ராஸ் கபே' திரைப்படத்தை வெளியிடும் திரையரங்கை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என #மதிமுக அறிவித்துள்ளது.
இது குறித்து அக்கட்சியின் மாநகர மாவட்டச் செயலாளர் ஆர்.ஆர்.மோகன் குமார் வெளியிட்ட அறிக்கை:
இந்தி மொழியில் தயாரிக்கப்பட்டு, தமிழில் மொழிமாற்றம் செய்த "மெட்ராஸ் கபே' திரைப்படம் இம்மாதம் 23-ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது. இப்படத்தில் ஈழத்தமிழர்களையும், விடுதலைப்புலிகளைக் கொடூரமானவர்களாகவும் சித்திரித்துள்ளனர். 

அதே நேரத்தில் இந்திய ராணுவத்தினர், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி உள்ளிட்டோரின் படுகொலைக்கு விடுதலைப்புலிகளே காரணமானவர்களாக திரைப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கதாபாத்திரத்தை தவறாக சித்திரித்துள்ளனர். படத் தயாரிப்பாளரும், கதாநாயகனுமான ஜான் ஆபிரஹாமும், இயக்குநர் சுஜித் சர்க்காரும் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் ஈழத்தமிழர்கள் மற்றும் விடுதலைப்புலிகளின் நிலை குறித்து அவர்களுக்குத் தெரியாது. 

இப்படத்தை வெளியிட்டால் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படும். கோவை மாவட்டத்தில் உள்ள திரைப்பட விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் இத்திரைப்படத்தை வெளியிடக் கூடாது. 

இதனை மீறிக் கோவை மாவட்டத்தில் மெட்ராஸ் கபே திரைப்படத்தை வெளியிடும் திரையரங்கு முன்பாக மதிமுக சார்பில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும்.

No comments:

Post a Comment