Wednesday, August 21, 2013

மெட்ராஸ் கபே ஈரோடில் எதிர்ப்பு

மெட்ராஸ் கபே திரைப்படத்துக்கு தடை விதிக்க வலியுறுத்தி தமிழீழ ஆதரவு கூட்டியகத்தினர் சார்பாக மாவட்ட ஆட்சியர் வே.க.சண்முகம், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இரா.பொன்னி ஆகியோரிடம் நேற்று (20.08.13) காலை மனு அளித்தனர்.இந்த கூட்டியகத்தில் உள்ள 14 அமைப்புகள் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில் தெரிவித்தது...

மெட்ராஸ் கபே என்ற திரைப்படத்தில் தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தை தீவிரவாத இயக்கமாக சித்தரித்தும், தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை கொச்சைப்படுத்தியும் காட்சிகளை வடிவமைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவை அனைத்தும் உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் மனதை புண் படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இந்த திரைப்படம் சிங்கள இனவெறி அரசின் தமிழின அழிப்பை நியாயப்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது. 

எனவே இத்திரைப்படத்தை ஈரோடு மாவட்டத்தில் உள்ள எந்த திரையரங்கு களிலும் திரைடயிடக்கூடாது. மீறி திரையிட்டால் முற்றுகைப் போராட்டம் நடத்துவோம்.இத்திரைப்படத்தை திரையிட அனுமதித்தால் சட்டம்ஒழுங்கு கெட்டுப்போகும். எனவே, இத்திரைப்படத்துக்கு தடை விதிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.

மதிமுக நகர செயலர் பொன்னுசாமி, மக்கள் நல்வாழ்வு இயக்க ஒருங்கிணைப் பாளர் கண.குறிஞ்சி, தமிழ்த் தேச மக்கள் கட்சி பொதுச்செயலர் நிலவன், தமிழின பாதுகாப்பு இயக்க அமைப்பாளர் கி.வே.பொன்னையன், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்க மாவட்டச்செயலர் கலைவேந்தன், மக்கள் சிவில் உரிமைக்கழக மாவட்டச்செயலர் க.நா.பாலன் ஆகியோர் இந்த மனுவை அளித்தனர்.

No comments:

Post a Comment