ஈழத்தமிழர்களுக்காகப் பொங்கிய ராம் ஜெத்மலானி!
ஈழப்பிரச்சனை டெல்லி மற்றும் வடமாநிலங்களிலும் இப்போது எதிரொலிக் கிறது. ஈழப்போரின்போது தமிழர்கள் பட்ட அவலம் மற்றும் சேனல்4 தொலைக் காட்சி வெளியிட்ட காட்சிகள் அனைத்தையும் வைத்து #வைகோ தொகுத்த சி.டி.இப்போது ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் வெளி வந்துள்ளன.
அனைத்து மாநிலத் தலைநகரங் களிலும் இவற்றை வெளியிடும் காரியத்தை வைகோ தொடங்கி உள்ளார். இதற்கான விழா கடந்த 26 ஆம் தேதி டெல்லியில் நடந்தது.அன்றுதான் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாள் என்பதால், உணர்ச்சி மயமாக இருந்தது அரங்கம்.
இந்தி மொழியில், “ஈழத் தமிழர்கள் இனக்கொலை; இதயத்தில் கசியும் இரத்தம்” என்ற நூல் மற்றும் குறுந்தட்டின் வெளியீட்டு நிகழ்ச்சிக்கு ஏராளமான டெல்லி
வாசிகள் வந்திருந்தார்கள்.முன்னாள் டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேந்திர சச்சார் வெளியிட முதல் பிரதியை பத்திரிகையாளர் குல்தீப் நய்யார் அவர்கள் பெற்றுக்கொண்டார்.இந்த விழாவுக்குத் தலைமை தாங்கினார் பிரபல
வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி.இவர்கள் மூவரது பேச்சும் இலங்கைத் தமிழர் கள் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் நடவடிக்கை களைக் கடுமையாக விமர்சித்தது.
மூத்த பத்திரிகையாளர் குல்தீப் நய்யார் பேச்சு அனைவரையும் உன்னிப்பாகக் கவனிக்க வைத்தது.“விடுதலைப்புலிகள் இயக்கம் பற்றியும் அவர்களது நோக்கம் கோரிக்கைகள் மற்றும் கேப்டன் பிரபாகரன் எப்படிப்பட்டவர் என்றும்
தெரிந்துகொள்ள, சென்னையில் அவர்களது இயக்கத்தினரைச் சந்தித்தேன். பின்னர் இலங்கைக்குச் சென்று புலிகளின் தலைமையகம் மற்றும் பல இடங் களுக்குச் சென்று வந்தேன். அங்கு சிங்களவர்களும் தமிழர்களும் வேறுபட்டு
இருப்பதைக் காணமுடிந்தது.
சிங்களவர்கள் இனவெறியர்களாக இருந்தது. சில போலிஸ் நிலையங்களில் தமிழில் எஃப்.ஐ.ஆர்.மட்டுமல்ல.. மனுக்கள்கூட பெறுவது இல்லை. இப்படிப் பட்ட பல்வேறு வேதனைகள் குறித்து அப்போதே நான் எழுதியுள்ளேன். அப் போது ஜனாதிபதியாக இருந்த ஜெயவர்த்தனாவையும் சந்தித்தேன்.அவரிடமே இன வேறுபாடு குறித்துக் கேட்டேன். அதுதான் கடைசியில் முற்றியது.சேனல் 4 காட்சி அதனைத்தான் காட்டுகிறது. இவை எல்லாம் நினைத்துக்கூடப் பார்க்க
முடியாத கொடூரங்கள்.
சரண் அடைய வந்தவர்களையும் சுட்டுக்கொல்கின்றனர். பெண்களை, குழந் தை களைக் கொல்லும் விதமெல்லாம் மனித நேயத்துக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது. இதை எல்லாம் வைகோ புத்தகமாகக் கொண்டுவந்துள்ளார். இந்த
விவகாரங்களில் ஊடகங்கள், குறிப்பாக வட இந்திய ஊடகங்கள் தெளிவு அடையவில்லை.
விடுதலைப்புலிகளை தீவிரவாதிகள் என்ற கருத்தை மத்திய அரசு புகுத்தி உள் ளது. நான் ஒரு காந்தியவாதி.வன்முறைகளை எதிர்ப்பவன்.ஆனால்,இலங்கை யில் அவர்கள் உரிமைக்காகத்தான் போராடினார்கள். அங்கு நடந்தவை குறித்து சர்வதேச விசாரணை தேவை” என்று உறுதிபடச் சொன்னார்.
ராம் ஜெத்மலானியின் பேச்சு உணர்ச்சி மயமாக இருந்தது. “இந்த நாளோ, இந் தக் கூட்டமோ பொழுது போக்குக்காக அல்ல. இந்த நாள் நாம் துயரங்களைப் பகிர்ந்துகொள்ளும் நாள். அதுவும் நமது அரசின் செயல்படாத தன்மையைக் குறித்துப் பேசும் நாள். ஒரு முக்கியமான சர்வதேசச் சட்டம் எல்லோருக்கும்
தெரிந்திருக்க வேண்டும்.

மனித உரிமைகள் எந்த நாடுகளில் மீறப்பட்டாலும், அதுவும் அண்டை நாடு களில் மீறப்பட்டால், உடனே தட்டிக்கேட்க வேண்டும் என்பது சர்வதேசச் சட் டங்களில் உள்ளவை.ஆனால், இனப்படுகொலைகள் நடந்தபோது, வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தது இந்தியாவின் தவறு. இதனை அண்டை நாட்டு
உள் விவகாரங்களில் தலையிடு வதாகச் சொல்ல முடியாது.மனிதநேய அடிப் படையில் நிச்சயம் உதவ வேண்டும்.
ராஜீவ்காந்தியுடன் ஓர் ஒப்பந்தம் போட்டு ஜெயவர்த்தனா ஏமாற்றினார். அதனை உணரும் பக்குவம் ராஜீவுக்கு இல்லை. பிரதமர் வாஜ்பாய் இலங்கைத் தமிழர் களுக்காக அதிகம் இரக்கப்பட்டார்.ஆயுத உதவியை மறுத்தார்.ஆயுதங் களை இலங்கைக்கு விற்பதையும் தடைசெய்தார்.பி.ஜே.பி. ஆட்சி முடிந்து காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த 2004 ஆம் ஆண்டு முதல் நிலைமை மாறியது.
அதனால்தான் காங்கிரஸ் நான் கடுமையாக எதிர்க்கிறேன்.
வைகோ தமிழர்களுக்காக எடுக்கும் ஒவ்வொரு முயற்சிக்கும் நான் துணை நிற்பேன். என் உயிர் உள்ள மட்டும் வைகோவுக்கும் தமிழர் களுக்கும் என் சக்தியை முழுமையாகப் பயன்படுத்துவேன்” என்றார் ராம் ஜெத்மலானி.
இறுதியாக உரையாற்றிய வைகோ,“மாவீரர் திலகம் பிரபாகரனின் பிறந்த நாளில் இந்தியாவின் தலைநகரில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது. சுதந்திரத்தமிழ் ஈழம் அமைவது ஒன்றுதான் இனப் பிரச்சனைக்கு ஒரே தீர்வாக இருக்க முடி யும். இதற்காகப் பொதுவாக்கெடுப்பு உலகம் முழுக்க நடத்தப்பட வேண்டும். ராஜபக்சே குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டும். அந்த அழிவை நடத்து வதற்கு முழு ஒத்துழைப்புக் கொடுத்தது மத்திய காங்கிரஸ் அரசு.எதிர் காலத்தில் அமையப்போகும் புதிய மத்திய அரசாங்கம், இது பற்றிய விசார ணைக் கமிஷனை அமைக்க நாங்கள் போராடுவோம்” என்று அறிவித்தார்.
“ஈழத்தமிழர்கள் இனக்கொலை; இதயத்தில் கசியும் இரத்தம்” என்ற புத்தகம் மற்றும் சி.டி.களை இந்தியாவில் உள்ள அனைத்து மாநில மொழிகளிலும் வெளியிட இருக்கும் தகவலை வைகோ மேடையில் அறிவித்தார்.
ஈழப்பிரச்சனை இந்தியப் பிரச்சனை ஆவதற்கு இது அடித்தளம் அமைக்கும்.
- ஜூனியர் விகடன் - 5.12.2012

No comments:
Post a Comment