Monday, August 12, 2013

காதல்: புரியாதவர்களுக்கு பொழுதுபோக்கு!

தாஜ்மகால்

முகலாய மன்னர் ஷாஜகானின் அந்தப்புரத்தை அலங்கரித்த மூன்றாவது மனைவி தான் மும்தாஜ்.இவர் 14 பிள்ளைகளுக்கு தாய். 14-ஆவதாக பெண் பிள் ளையின் பிரசவத்தின் போது நோய்வாய்ப்பட்டு மரணம் அடைந்தார். மும் தாஜ் மீது வைத்திருந்த அன்பின் காரணமாக ஷாஜகானின் கறுத்த தலைமுடி முழு
வெள்ளை நிறத்திற்கு மாறியதாக கூறுவார்கள்.

ஷாஜகானின் மனம் கவர்ந்த மும்தாஜின் மரணத்திற்குப் பின் அவர் நினை வாக தாஜ்மகால் கட்ட முயற்சிகள் மேற்கொண்டு, புகழ்பெற்ற பொறியாளரை அழைத்து, தாஜ் மகாலுக்கான வரைபடம் தயாரிக்கச் சொல்கின்றார். தன் திறமைகள் அனைத்தையும் பயன்படுத்தி எவ்வளவோ சிறப்பான வரைபடங் கள் வரைந்தும் மன்னர் ஷாஜகான் திருப்தி பெறாமல் கோபமடைகிறார். இதை
ஒவ்வொரு நாளும் பொறியாளர் தன் காதல் மனைவியிடம் சொல்லி வருத்தப் படுகின்றார். பொறியாளரின் மனைவி ஆறுதல் கூறுகிறாள்.

காதல் மனைவி மும்தாஜின் மரணம் ஏற்படுத்தி இருக்கும் பாதிப்பை மன்னர் ஷாஜகான் மட்டுமே அறிவார்,நாம் அறியோம். எனவே தான் அவரின் எதிர் பார்ப்பை உங்களால் பூர்த்தி செய்ய முடியவில்லை என்று கூறி கணவனின் திறமையை வெளிக் கொணர பொறியாளரின் மனைவி ஒரு நாள் தற்கொலை செய்து கொள்கிறாள். மனைவியின் மரணம் ஏற்படுத்திய வலியை உணர் கிறான் அந்த பொறியாளர். மனைவியின் மகத்துவத்தைப் புரிந்து கொள் கிறான்.பின் தன் மனைவியின் நினைவாகவே தாஜ்மகாலின் இன்றைய வடி வத்தை இறுதி செய்து மன்னரிடம் பாராட்டு பெறுகிறான்.

மும்தாஜின் நினைவாகவே 1631ஆம் ஆண்டு 22 ஆயிரம் பணியாட்களைக் கொண்டு, தலைசிறந்த கட்டிட வடிவமைப்பாளர்களின் உதவியுடன் கட்டிடப் பணி தொடங்கியது. 1654 இல் கட்டி முடிக்கப்பட்டது. தாஜ்மகால் காதல் பரி சல்ல மனைவிக்கு ஒரு கணவன் எழுப்பிய கல்லறை.

இதற்காகவே மும்தாஜ் இறந்த போது பர்ஹான்பூரில் அடக்கம் செய்யப்பட்ட
உடலை ஆறு மாதங்கள் கழித்து தோண்டி எடுத்து ஊர்வலமாக வந்து ஆக்ரா வில் தாஜ்மகால் கட்டப்பட்ட இடத்தில் மீண்டும் புதைக்கப்பட்டது.

தண்டனை

தாஜ்மகாலை கட்டியதற்காகவே ஷாஜகான் - மும்தாஜூக்கு பிறந்த நான்கா வது மகன் ஒளரங்கசீப்,வெறுப்புற்று தந்தையுடன் சண்டையிட்டு,கைதுசெய்து ஆட்சி அதிகாரத்தை எடுத்துக் கொண்டான்.அதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் சமூக நலன் சார்ந்து ஒளரங்கசீப் சொன்ன காரணம் ஏற்புடைய தாக உள்ளது.

மும்தாஜ் மறைந்து தாஜ்மகாலை ஷாஜகான் கட்டத் தொடங்கிய காலத்தில் பஞ்சம் தலைவிரித்தாடியது, பசிதாங்க முடியாமல் மக்கள் உச்சகட்ட வேத னையை அனுபவித்தனர், ஒரு துண்டு ரொட்டிக்காக எதையும் இழக்கத் தயாராக இருந்தார்கள்.ஆனால், உணவு தருவதற்குத் தான் யாரும் இல்லை. மன்னன் என்பவன் தன் குடிமக்களைக் காப்பவனாக இருக்க வேண்டும்.

பஞ்சத்தைப் போக்க வேண்டியது அரசின் கடமை, மாறாக தன் மனைவி என்ப தற்காக மக்களுக்கு சேர வேண்டிய வரிப்பணத்தில் கல்லறையை நினைவி டத்தை இஸ்லாத்தின் வழிகாட்டுதலுக்கு எதிர் மாறாகக் கட்டுவதை ஏற்க முடியாது என்று சொல்லித் தான், ஷாஜகான் மகன் ஒளரங்கசீப் அவரை கைது
செய்து சிறையிலடைத்தான். அந்த சிறையிலிருந்து பார்க்கும்படி தண்டித்தார் ஒளரங்கசீப்.

கோடிக்கணக்கான மக்கள் பணம் விரயம் செய்து கட்டப்பட்ட தாஜ்மகால், அரண்மனை அல்ல,தொழுகை நடத்திடும் பள்ளி வாசலும் இல்லை. அது ஒரு கல்லறைத் தோட்டம்.

கிளியோபாட்ரா

பிரமிடுகளின் தேசம் என்று வர்ணிக்கப்படும் எகிப்தை ஆட்சி செய்த பன்னிரண் டாம் டாலமிக்கும் ராணி இஸிசுக்கும் பிறந்த பெண் பிள்ளைக்கு கிளியோ பாட்ரா என்று பெயர். இவளுக்கு முன் ஏழு கிளியோ பாட்ராக்கள் இருந்து உள்ளனர்.

எனவே தான் இவள் எட்டாவது கிளியோபாட்ரா என்று அழைக்கப் பெற்றார். இவள் 39 வயது வரை தான் இந்த பிரபஞ்சத்தில் வாழ்ந்தாலும்,இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்தும் பேசப்படும் பேரழகியாய் வாழ்ந்து கொண்டு இருக்கிறாள். இவளது அழகும் அறிவுக் கூர்மையும்,ஜோதிடம், வானசாஸ்திரத்தைக் கல்வி யாகக் கற்று பல்வேறு துறைகளில் அவளுக்கு இருந்த ஆர்வம், ஒன்பது மொழி களில் எழுதவும் பேசவும் படிக்கவும் அறிந்து இருந்தவள்.

அழகு சாதனப் பொருட்களை போட்டுக் கொள்வதோடு அவற்றின் மருத்துவ
குணங்கள் வேதியியல் தன்மை போன்றவற்றை அறிந்து பயன்படுத்தி வந் தாள். தன் 39 ஆம் வயதில் ஏழு விதமான வாசனைத் திரவியங்களைக் கண்டு பிடித்து மகிழ்ச்சி அடைந்தவள். கிளியோபாட்ரா பன்முக ஆற்றல் கொண்ட
சகலகலா வல்லி, மன்னர் டாலமிக்கு வயதானதால் தன்னுடைய 18 வயது
நிரம்பிய பருவமங்கை பேரழகி கிளியோபாட்ராவை பட்டத்து ராணியாக்க விரும்புகிறார். அக்கால கட்ட சட்ட திட்டம் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. காரணம் பெண் ஆட்சி செய்யக்கூடாது.

எனவே தனது 10 வயது பாலகனான இளைய டாலமிக்கும் மகள் கிளியோபாட் ராவுக்கும் அக்காள் தம்பி திருமணம் செய்து வைத்து கணவன் மனைவியாக்கி ஆட்சி பீடத்தில் அமர்த்திய மன்னர் டாலமி, பின்னர் ஓய்வெடுத்துக் கொண் டார்.

இவர்களின் ஆட்சி சுமுகமாக நடைபெற்று வந்தாலும் கிளியோ பாட்ரா மீது வெறுப்புற்றிருந்த உறவினர்களும் சில அமைச்சர்களும் திடீர் புரட்சியில் ஈடு பட்டு அவள் உயிருக்கு குறி வைத்தனர்.சாதுர்யமாக உயிர் தப்பி அண்டை
நாடான சிரியாவிற்கு தப்பிச் செல்கிறாள்.

சீசர்

மாவீரன் அலெக்ஸாண்டருக்கு நிகராக வரலாற்றில் பேசப்படும் ரோமானியப்
பேரரசின் வீரன் சீசர். தன்னுடைய எதிரி ஒருவன் எகிப்தில் தலைமறை வாக இருப்பதை அறிந்து,அவனை பழி தீர்ப்பதற்காக கி.மு. 48 இல் எகிப்திற்க்கு வந்தி ருந்தான். இதை அறிந்த கிளியோபாட்ரா சீசரை சந்திப்பதற்கு முயற்சி செய்து வெற்றி பெறுகிறாள்.

சிரியாவில் இருந்து அழகிய கம்பளத்தில் தன்னை வைத்து சுருட்டி எடுத்து கொண்டு எகிப்திற்கு மறைவாகக்கொண்டு வந்து இது தங்களுக்கான கிளியோ பாட்ராவின் பரிசு என்று சொல்லி அந்தக் கம்பளத்தை சீசரின் முன் விரித்து விட்டார்கள். புதுமையான முறையில் தன்னை ஆட்கொண்ட கிளியோபாட்ரா வின் பேரழகில் தன்னை இழந்து விடுகிறான்.அவள் மீது காதல் வயப்படு கிறான்.

எகிப்தின் ஆட்சி பீடத்தைப் பற்றிய வரலாற்றை எடுத்துச் சொல்லி தன் நாட் டின் ஆளும் உரிமையை மீட்டுக் கொடுத்தால் சீசரை திருமணம் செய்து கொள் வதாக அறிவித்தாள் பேரழகியை அடைவதற்கு சீசரின் வாள் எகிப்தின் மீது சுழன்றது முடிவு.டாலமியின் தலையை வெட்டி வீழ்த்தி மலையிலிருந்து உருட்டி நைல் நதியில் தள்ளிவிட்டார். கிளியோபாட்ராவை மீண்டும் எகிப்தின்
பட்டத்து ராணியாக முடிசுட்டினான்.

சீசரை தன் மணவாளனாக ஆக்கிக் கொண்டு சிசருடன் எகிப்திற்கும் ரோமிற் கும் மகிழ்ச்சிப் பயணம் செய்து கொண்டிருந்த வேளையில் கிளியோபாட்ரா கர்ப்பமுறுகிறாள். ஒரு நாள் பிரசவ வலி ஏற்பட்டு சுகப்பிரசவமாக அல்லாமல் துடிக்கின்றாள்.இதைப் பார்த்து தாங்கிக் கொள்ள முடியாத சீசர் தன் காதல் மனைவி கிளியோபாட்ராவைக் காப்பாற்றஅவளின் வயிற்றில் வாள் கொண்டு
கீறி குழந்தையை வெளியே எடுத்து தாயும் சேயும் காப்பாற்றப்பட்டனர்.

வரலாற்றில் முதன் முதலாக அறுவை சிகிச்சை மூலம் குழந்தை எடுக்கப்பட் டதால் இன்று வரை மருத்துவ மனைகளில் அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் நடைபெறுவதை சீசரின் நினைவாகவே சிசேரியன் என்று அழைக்கப்படுகிறது. ஒரு வரலாற்றுப் பதிவு.

எகிப்திற்கும் ரோமுக்கும் மாறி மாறிச் சென்று கொண்டு வருவதால் சீசரின் நடவடிக்கையில் வெறுப்புற்றவர்கள் ரோமப் பேரரசுக்கு எதிராக கலகத்தை உருவாக்கி செனட் சபையில் கொல்லப்படுகிறான். ரோமப் பேரரசு இரண்டாக உடைகிறது. கிழக்குப் பகுதியின் ஆட்சியை மாவீரன் மார்க் ஆண்டனி பிடித்து ஆட்சி செய்தான்.

ஆண்டனி

ஆட்சிக்கு வந்த முதல் வேலையாக ரோமப்பேரரசின் இந்நிலைக்கு காரண மான எகிப்து ராணி கிளியோபாட்ராவை குறி வைக்கிறான்.ரோமப் பேரரசுக்கு எதிராக கலகம் விளைவிப்பவர்களுக்கு எகிப்தில் அடைக்கலம் கொடுப்பதாக குற்றம் சாட்டி அதைப் பற்றிய விசாரணைக்கு நேரில் வரவேண்டும் என்று ஓலை அனுப்புகிறான். தகவல் அறிந்த கிளியோபாட்ரா மதிநுட்பத்துடன் ஒரு
முடிவிற்கு வருகிறாள். வலிமை மிகுந்த ரோமப் பேரரசை எதிர்த்து வெற்றி பெற முடியாமல் போனால் எகிப்தின் ஆளும் உரிமையை இழக்க நேரிடும்.

எனவே யுத்தத்தைத் தவிர்த்து தன் பேரழகால் ஆண்டனியை வழிக் கொணர திட்டமிட்டு அதற்கான ஆயத்தத்தோடு ஒரு நதிக்கரையில் ஆண்டனியை சந்தித்து ஒரு மோகனப் புன்னகையைப் பரிசாகத் தந்தாள்.மாவீரன் சீசரையே வீழ்த்திய அந்த மந்திரப் புன்னகை ஆண்டனியையும் கிளியோபாட்ராவின் கட் டுப் பாட்டுக்குள் கொண்டு வந்தது.இருவரின் காதல் பரிசாக இரட்டை குழந்தை களைப் பெற்றெடுத்தாள்.அக்குழந்தைகளின் தந்தை தான் தான் என்று பிரகட னப் படுத்தினான்.

ஆண்டனிக்கு ஏற்கனவே ஒரு திருமணம் நடைபெற்று இருந்தாலும் கிளியோ பாட்ராவே தன்னுடைய உண்மையான மனைவி என்ற தால் இது சீசரின் உற வினன் முதல் மனைவியின் உறவினனுமான ஆக்டோவியான் இதில் கோப முற்று இதற்கு காரணமான கிளியோ பாட்ராவை ஒழித்துக் கட்ட எகிப்து மீது
படையெடுத்தான். கிளியோ பாட்ராவிற்கு துணையாக ஆண்டனியும் யுத்தத் தில் பங்கேற்றான்.

ஓர் ஆண்டு நீடித்த போரின் முடிவில் ஆக்டோவியான் கை ஓங்கியது.மாவீரன் ஆண்டனி சரணடைந்தான்.கிளியோபாட்ரா தப்பித்து ஒரு ரகசிய குகையில் தஞ்சம் அடைந்தாள்.இந்நிலையில் போரின் யுக்தி சந்தடி இன்றி வதந்திகளை ஆக்டோவியான் பரப்பினான். கிளியோபாட்ரா இறந்து விட்டாள் என்று. இதை உண்மை என்று நம்பி கிளியோபாட்ராவின் மீது வைத்திருந்த அன்பின் காரண மாக ஆண்டனி தன் உடைவாளை எடுத்து தன்னைத் தானே மாய்த்துக்கொண் டான்.

காத்திருந்த கிளியோபாட்ராவும் இனி உயிர் வாழவேண்டிய அவசியம்இல்லை என்று விஷம் கொண்ட பாம்பைக் கொண்டு வந்து தீண்டச் செய்து அந்த அழகு பதுமையும் உயிர் நீத்தாள். உலகப் பேரழகியான கிளியோபாட்ரா தன் உயிரி னும் மேலாக தன் தாய்நாடான எகிப்தை மிக மிக நேசித்தாள். அவள் தனது
பேரழகை ஆயுதமாக ஆக்கி தன் நாட்டுரிமையை நிலை நிறுத்துவதற்கு கேட யமாக பயன்படுத்தினாள் பருவ மாற்றங்களால் உருவ மாற்றம் அடையாத சாகசங்கள் நிறைந்த கிளியோபாட்ராவின் வாழ்க்கை அவளின் 39ஆவது வய தில் முடிந்தது.

ரோமப் பேரரசு மிகக்குறுகிய காலத்தில் வீரத்தை பிரதானமாக வைத்து எழுந்த
அதே வேகத்தில் விழுந்து சுக்கு நூறாகியதன் காரணம் வீரத்தை பின் தள்ளி கேளிக்கைகளில் ஆட்சியாளர்கள் திசை மாறியதன் விளைவு.

கலில்ஜிப்ரான்-செல்மா

1883 டிசம்பர் 6ஆம் நாள் பிறந்து 1931 ஏப்ரல் 10ஆம் நாள் இந்தப் பூவுலகை விட்டு 47ஆம் வயதில் மறைந்து போனான் கலில் ஜிப்ரான் என்னும் அரபுக்கவிஞன். அவன் வாழ்ந்த காலத்தில் அவன் சார்ந்த கிறித்துவ சமயத்தில் இருந்த பழமை
வாதத்தையும் மூடப்பழக்க வழக்கத்தையும் பகிரங்கமாக எதிர்த்ததால் அவன் லெபனானில் இருந்து அமெரிக்காவுக்கு நாடு கடத்தப் படுகிறான். அவன் நாடு கடந்து சென்ற போதும் தன் தாய் மண்ணை மறக்காமல் முன்னிலும் அதிகம்
நேசிக்க ஆரம்பித்தான், அதிகம் எழுதினான்.

ஆனிவேரில் இருந்து வளர்ந்து விருட்சமாக நிழல்களைப் பரப்பி தாய்மரத் திற்கு ஆதரவாக விழுதுகளாக விழுந்து வலிமையை தரும் ஆலமரத்தைப் போன்று அவன் எழுதியது அனைத்தும் விழுதுகளாக லெபனானின் விருட்ச மாக இருந்தது.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மறைந்து போன ஜிப்ரானை 21ஆம் நூற்றாண்டிலும் நமது நினைவுகளில் வாழ்கின்ற அளவிற்கு அவனது எழுத் தின் சிந்தனை ஓட்டம் இருக்கிறது. அந்த மாபெரும் கவிஞனின் வாழ்விலும்
செல்மா என்ற பெண் பாறையின் இடுக்கில் வேர்விட்ட செடி போல் மின்ன லாய் வந்து மறைந்து போனாள்.அவள் மீது அவன் வைத்திருந்த காதலே அழி யாப் புகழ்பெற்ற காதல் பறவையின் முறிந்த சிறகுகள் காவியம். அதை பேராசி ரியர் அப்துல்லாஹ் பெரியார்தாசன் தமிழ்மொழி பெயர்ப்பில் படித்து வியந்து போகாதவர்கள் யாரும் இருக்க முடியாது.

தன் காதலி செல்மா ஒரு சமயத் தலைவனின் உறவினனுக்கு திருமணம் செய் து வைக்கப்பட்டு ஐந்தாண்டு கால துன்பம் நிறைந்த வாழ்கையில் அவளை சந்திக்கின்ற போது அவர்களுக்குள் நடந்த விவாதங்கள் மறக்க கூடியவை அல்ல.மாதத்திற்கு ஒருமுறை ஒரு தேவாலயத்தில் சந்தித்து சிலமணி நேரங் கள் பலவிஷயங்களை பேசி பகிர்ந்து கொண்டனர்.

சோகத்தால், மகிழ்ச்சியால்,துயரத்தால், நம்பிக்கையால் நிரப்பப்பட்ட தெய்வீக நிமிடங்கள் அவை.தங்களின் இறந்த காலத்தை நினைவு கூர்ந்து நிகழ்காலத் தை விவாதித்தனர்.ஒருவர் துயரத்தை மற்றவரோடு பகிர்ந்துகொண்டு ஒருவர்
மற்றவர்க்காக ஆறுதலும் நம்பிக்கை கனவுகளோடும் அவர்களின் ரகசிய சந் திப்பு நேரங்கள் கடந்து சென்றன.

செல்மாவின் கணவன் ஏழ்மையால் விடுதிகளுக்குள் விரட்டப்பட்ட அப்பாவி பெண்களுக்கிடையே எப்போதும் சுகங்காண்பவனாய் இருந்ததால் செல்மா வை பற்றிய நினைவு இல்லாதவனாக இருந்தான்.ஏதோ உள்ளுணர்வு அவள் மீண்டும் பிரிய வேண்டிய நேரம் வந்து விட்டதாக உணர்ந்து நாம் பிரிய வேண் டிய நேரம் வந்துவிட்டது என்று செல்மா சொன்ன போது ஜிப்ரானின் உலகம் மீண்டும் இருண்டு போனது.

நீண்ட காலமாக மக்களின் விருப்பத் திற்கு மாறாக வாழ்ந்துவிட்டோம். தன்
விருப்பப்படி வீசி விளையாடும் பந்தைப் போன்று மதகுருக்களால் வழிநடத்தப் பட்டோம். நம்மை மரணம் ஈர்த்துக் கொள்கிற வரை இப்படியே தான் வாழ வேண்டுமா? நமக்காக நாம் எப்போது வாழப் போகிறோம்? செல்மா உன் சிறை யை உடைத்து உன்னை மீட்கிறேன் வா செல்மா வாழ்வோம் என்று அழைத்தான்.

அதற்கு செல்மா தடைகள் நிறைந்த கொடிய பாதையில் நடப்பதுவே என் வாழ்க்கையின் விதியென்றானபின் உன்னையும் அவ்வழியே அழைத்துச் செல் ல என் மனம் இடம்தரவில்லை. நீ வாழ வேண்டிய இளைஞன். காற்றைப் போன்று சுதந்திரமானவன். சமூக வஞ்சகத்திற்கு நீ இரையாகி விடுவாயோ என்று நான் அஞ்சுகிறேன்.

அதற்கு ஜிப்ரான் நாம் ஏன் நமக்காக தோண்டப்பட்டுள்ள இருள் குகைக்குள் வாழ வேண்டும். நான் உன்னை நேசிக்கின்றேன் நீயும் என்னை நேசிக்கின் றாய். உணர்வுள்ள உன்னதமான இதயங்களுக்கு அளிக்கப்பட்ட தெய்வீகக் கொடை காதல். நாம் இந்தத் தேசத்தையும் இதன் அடிமைத்தனத்தையும் மட மை யையும் விட்டுவிட்டு தொலைவிலுள்ள தேசத்திற்கு போய் விடுவோம்.

வா செல்மா வா புயலை எதிர் கொள்ளும் கோபுரங்களாய் நாம் நிற்போம். எதிரி களையும் அவன் ஆயுதங்களையும் எதிர்கொள்ளும் வீரர்களாக நாம் இருப் போம்.வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் வரலாற்றில் வாழ்வோம் என்றான். அதற்கு செல்மா காதலும் அமைதியும் நிறைந்த புதிய வாழ்க்கைக்கு நான் அருகதை
இல்லாதவள். அளவான காதல் அன்புக்குரிய அடையாளம் காணும்.

கறை படிந்த உள்ளம் இருளால் சூழப்பட்ட உலகம் இந்தக் கொடுங் கடலில் சூறாவளி நம்மைப் பிரித்தாலும் அலைகள் நம்மை கரை சேர்க்கும், நாம் விலக் கப்பட்ட கனி எதையும் புசிக்கவில்லை. எந்த தேவ கட்டளையையும் மீறவில் லை, இருப்பினும் நரகத்தில் நாம். எந்த ரகசியத்தை நாம் காக்க நினைத்தோ மோ  அது மதகுருவிற்கு தெரிந்து என்னை என் கணவனின் வீட்டில் சிறை வைக்கப்பட்டு உன்னை சந்திக்கின்ற சந்தோஷத்தை சமாதி ஆக்கிவிட்டார்.

மகுடம் பறிக்கப்பட்ட மன்னனைப் போன்று நான் துடிக்கிறேன் சுதந்திரமாக பிறந்தாலும் மனிதர்கள் எப்போதும் தம் முன்னோர்கள் வகுத்த வாழ்வியலைப் பின்பற்றுபவர்கள் இந்த நேர்மை செல்மாகராமியிடம் நிறைந்திருந்தது.

செல்மாவின் ஐந்தாண்டு மணவாழ்க்கை பிள்ளைப் பேறின்றியே கடந்துவிட் டது. அவளது கணவன் மேன்சவ்ர்பேகாலிஃப் தன் வாரிசுகளால் வம்சத்தின் தொடர்பை தொடர முடியாமல் செல்மாவின் பிள்ளைப் பேறில்லாத பெண்
என்பதால் வெறுப்புடன் நடத்தப் பட்டாள்.

ஒரு சராசரி மனிதன் பிள்ளைப் பேறில்லா தன் மனைவியை எதிரியாகவே பார்க்கிறான். அவளை உதாசினப் படுத்துகிறார்கள் உதறித் தள்ளுவர். அவளின் மரணத்தை விரும்புவர். இருப்பினும் செல்மா நம்பிக்கையுடன் ஒவ்வொரு நாள் பிரார்த்தனையிலும் ஒரு பிஞ்சுக் குழந்தையை பிச்சை கேட்டாள் ஆண்ட வனிடம்.

அவளின் பிரார்த்தனையும் இறுதியில் நிறைவேறியது. தன் கண்ணீருக்கு ஊடே ஒரு பிரகாசமான எதிர்காலதின் பிரசவிப்பின் வலியை உணர்ந்தாள் வாழ்வுக்கும் சாவுக்கும் இடையே போராட்டம் பிரசவ வலியில் துடித்தபடி படுக்கையில் செல்மா. மறுநாள் விடியலில் ஒரு ஆண் குழந்தையைப்
பெற்றெ டுத்தாள்.

மகிழ்ச்சியாக என் மகனே என் துயரத்தைப் போக்க வந்தவனே என்று கண் மூடி கதறினாள். குழந்தையும் முதன் முதலாகத் தன் கண்களைத் திறந்து தன் தாயைப் பார்த்து பின் நடுங்கியபடி தன் கண்களை நிரந்தரமாக மூடிக்கொண் டது.வாழ்வின் மொட்டில் அப்போது தான் மலர்ந்த அல்லி மலர் மரணத்தின்
காலடியில் நசுக்கப்பட்டதை உணர்ந்தாள்.

இறந்த குழந்தையை இறுக அணைத்துக் கொண்டு என் மகனே உன்னோடு என் னையும் அழைத்துச் செல்லவே நீ வந்திருக்கிறாய். உன் விருப்பத்தை நிறை வேற்ற இதோ நான் தயார் என்று செல்மாவின் ஆவியும் பிரிந்தது. அந்தக் குழந்தை ஒரு கருணையற்ற தந்தையிடமிருந்து தன் தாயை மீட்பதற்காகவே
வந்ததைப் போன்று ஒரே சவப் பெட்டியில் இரண்டு சவங்களையும் வைத்து மண்மூடினர். பாதிரிகளும்,உறவினர்களும் கலைந்து சென்றபின் செல்மாவின் கல்லறைமேல் விழுந்து தன்னுடைய இதயத்தையும் அந்த புதைகுழியில் வைத்து கதறினான்,அந்த அரபுக் கவிஞன் கலில்ஜிப்ரான்.

ஒவ்வொருவருக்கும் தன் முதல் காதல் நினைவிருக்கும். அந்த பரபரப்பான
நிமிடங்களின் நினைவுகளை அவர்கள் எப்போதும் மறக்க சம்மதிப்பதில்லை.
அதே போன்று தான் ஜிப்ரான் தன் காதலி செல்மாவின் நினைவாகவே வாழ்ந் தான். மண் மூடிய கல்லறை தன் உயிர் உள்ள காதலை வாழ்விக்க பெய்ரூட் நகர வீதிகளில் வலம் வரும் வாலிப வேங்கைகளே பைன் மரக் காடுகளுக்கு அருகே இருக்கும் என் செல்மாவின் கல்லறையை நீங்கள் கடக்கும் பொழு தெல்லாம் தயவு செய்து கொஞ்சம் மெதுவாகவும் அமைதியாகவும் கடந்து செல்லுங்கள்.

ஏனெனில் உங்கள் காலடி ஓசை என் செல்மாவின் அமைதியான உறக்கத்தைக் கலைத்துவிடும். அவள் உடலை மூடியிருக்கும் மண்ணுக் கருகே மெளனமாய் நின்று மெல்ல என் பெயரை உச்சரித்து கடல்களுக்கு அப்பால் காதல் பைத்திய மாய் தவித்துக் கொண்டிருக்கிற ஜிப்ராலின் நம்பிக்கைகள் எல்லாம் இங்கே தான் புதைக்கப்பட்டுள்ளது என்று மெதுவாகச் சொல்லுங்கள்.காதல்; புரிந்த வர்க்கு புனிதமானது புரியாதவர்களுக்கு பொழுது போக்கு

தொடரும்........
நன்றிகள் 

கட்டுரையாளர் :- 
மல்லை சத்யா

வெளியீடு :- சங்கொலி

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படுத்துவிட்டு வரலாமே.

No comments:

Post a Comment