Thursday, August 22, 2013

ஈழத்தமிழரின் இதயம் வைகோ

ஈழ தமிழனின் துயரத்தை சொல்ல வைகோ ஏறிய மேடைகள் 2009

ஜனவரி 18 தஞ்சை யில் உலகத்தமிழர் பேரமைப்புடன் இணைந்து இந்திய இலங்கை தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு தொடக்க விழாவில் #வைகோ முழக்கம்.

ஜனவரி 28 தமிழர்களுக்கு துரோகம் இழைக்கும் மத்திய - மாநில அரசுகளைக் கண்டித்து மாவட்டத் தலைநகரங்களில் வைகோ நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்.

பிப்ரவரி 4 தமிழ் மக்களை அழிக்கும் சிங்கள இனவெறி அரசுக்கு இராணுவ உதவி செய்யும் இந்திய அரசின் துரோகத்தைக் கண்டித்து இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் தமிழகம் முழுவதும் பொது வேலை நிறுத்தம். வைகோ பங்கேற்ப்பு
பிப்ரவரி 8 போர் நிறுத்தம் கோரி, ஈழத் தமிழர்களுக்கு துரோகம் இழைக்கும் மத்திய - மாநில அரசுகளைக் கண்டித்து இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில், நாடு முழுவதும் கறுப்புக் கொடி பேரணி. வைகோ பங்கேற்ப்பு

பிப்ரவரி 13 ஈழத்தமிழர் படுகொலையைக் கண்டித்தும், போர் நிறுத்தம் கோரி யும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் புது தில்லியில் உண்ணா நிலை அறப்போராட்டம்.

பிப்ரவரி 17 ஈழத் தமிழர் அவலம் போக்கிட இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் தமிழகம் முழுவதும் மனிதச் சங்கிலிப் போராட்டம். திருச்சி யில் வைகோ பங்கேற்றார்.

பிப்ரவரி 19 சென்னை இலங்கையில் போர்நிறுத்தத்தை வலியுறுத்தி பத்தா யிரம் பேர் பங்கேற்ற பழ.நெடுமாறன்தலைமையில் எழுச்சிமிகு கூட்டத்தில் வைகோ, பழ.நெடுமாறன், இன்னும் பல தலைவர்கள் முழக்கம்.

பிப்ரவரி 23 ஐ.நா. தலையிட்டு ஈழப்போரை நிறுத்த வலியுறுத்தி,இரண்டு கோடி மக்களிடம் கையெழுத்து பெறும் இயக்கத்தை இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சென்னையில் தொடங்கியது. வைகோ பங்கேற்றார்.

பிப்ரவரி 28 ராஜபக்சேவின் ஊது குழலாகச் செயல்படும் மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு தூத்துக்குடியில் மதிமுக செயலாளர் வைகோ தலைமை யில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக் கணக்கானோர் கைது, பாளையங்கோட்டை சிறையில் அடைப்பு.

மார்ச் 5 திருச்சியில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் பொதுக் கூட்டம். வைகோ பங்கேற்றார்.

மார்ச் 9 சென்னையில் உள்ள ஜப்பான் துணைத் தூதரிடம் ஈழப்போரை நிறுத்த முயற்சிக்க வேண்டும் என இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத் தலைவர் கள் முறையீடு.வைகோ பங்கேற்றார்.

மார்ச் 10 வேலூரில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கப் பொதுக் கூட்டம். வைகோ பங்கேற்றார்.

மார்ச் 11 சேலத்தில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கப் பொதுக் கூட்டம். வைகோ பங்கேற்றார்.

மார்ச் 15 இலங்கைத் தமிழர்பாதுகாப்புக்குழு மும்பையில் நடத்திய கூட்டத்தில் மதிமுக செயலாளர் வைகோ சிறப்புரையாற்றினார்.

மார்ச் 16 புதுச்சேரியில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க மக்கள் திரள் பொதுக்கூட்டம். வைகோ பங்கேற்றார்.

மார்ச் 20 தேசப் பாதுகாப்புச் சட்டத்தில் பலர் கைது செய்யப் பட்டதைக் கண்டித்து சென்னை, கோவையில் வைகோ தலைமையில் ஆர்ப்பாட்டம். மாவட்டத் தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம்.

ஏப்ரல் 8 ஈழத்தமிழர் படுகொலைக்கு துணை போகும் இந்திய அரசைக் கண்டித்து சென்னையில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

ஏப்ரல் 24 ஈழப்படுகொலைக்குத் துணை போகும் இந்திய அரசைக் கண்டித்து மதுரையில் வைகோ தலைமையில் ஆர்ப்பாட்டம்.

மே 21 ஈழத்தமிழர் பாதுகாப்பை வலியுறுத்தி மாவட்டத் தலைநகரங்களில் எழுச்சிப்பேரணி. சென்னையில் வைகோ.

மே 29 தமிழ் உணர்வாளர்கள் அலுவலகம் தாக்கப்பட்டதைக் கண்டித்து
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் சென்னையில் கண்டனக் கூட்டம்.

ஜூன் 8 தேசப்பாதுகாப்புச் சட்டத்தில் கோவை இராம கிருட்டிணன், மதிமுக மாணவர் அணி அமைப்பாளர் புதூர் சந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட் டதைக் கண்டித்து கோவையில் பொதுக்கூட்டம். மதிமுக செயலாளர் சிறப்புரையாற்றினார்.

ஜூலை 15 மதிமுக பொதுச்செயலாளரின் குற்றம் சாட்டுகிறேன் I accause நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

ஜூலை 24 முள்வேலி முகாமில் சித்திரவதைக்குள்ளாகும், ஈழத்தமிழர் களைக் காக்க, இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் சென்னை யில் ஆர்ப்பாட்டம்.

ஆகஸ்ட் 18 அடக்குமுறை சட்டங்களைத் தகர்த்து சிறை மீண்ட
போராளி களுக்கு பெரியார் தி.க நடத்திய பாராட்டுக் கூட்டத்தில் வைகோ வாழ்த்துரைத்தார்.

ஆகஸ்ட் 20 இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் சென்னையில் மக்கள் திரள் பொதுக்கூட்டம், ஈழத்தமிழர் வாழ்வுரிமைக்கான பிரகடனம் வெளியிடப்பட்டது.

செப்டம்பர் 30 முல்லைப் பெரியாறு பிரச்சினையில் துரோகம் இழைக்கும் மத்திய அரசையும், தமிழக மீனவர் களைத் தாக்கும் சிங்கள அரசையும் கண்டித்து மதிமுக பொதுச்செயலாளர் தலைமையில் சென்னையில் ஆர்பாட்டம்.

அக்டோபர் 10 முள்வேலி முகாம்களில் வதைபடும் ஈழத் தமிழர் களை விடுவிக்க வலியுறுத்தி சென்னை மெமோரியல் ஹால் அருகில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அக்டோபர் 18 கர்நாடகத் தமிழ் மக்கள் இயக்கத்தின் சார்பில் பெங்களூரில் நடைபெற்ற தமிழீ ஆதரவு மாநாட்டில் மதிமுக செயலாளர் வைகோ சிறப்புரை ஆற்றினார்.

அக்டோபர் 27 சிங்கள அரசின் இனப்படு கொலையையும், துரோகம் செய்து துணை நிற்கும் மத்திய, மாநில அரசுகளையும் கண்டித்து இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் ராமேசுவரம், கோவை, சென்னை, கன்னி யாகுமரி ஆகிய இடங்களில் இருந்து விழிப்புணர்வுப் பயணங்கள் திருச்சி நோக்கிப் புறப்பட்டது.

அக்டோபர் 29அன்று திருச்சியை அடைந்தது. நிறைவுக் கூட்டத்திலும், ராமேசுவரம், திருச்சி பயண வழியிலும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உணர்ச்சி முழக்கமிட்டு எழுச்சி உரை ஆற்றினார்.

நவம்பர் 27 சென்னை தியாகராயர் நகர் பொதுக் கூட்டத்தில் மாவீரர்கள் நினைவைப் போற்றி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பழ.நெடுமாறன் ஆகியோர் வீரவணக்கம் செலுத்தினார்கள்.

டிசம்பர் 11 இராமநாதபுரம் தங்கச்சி மடத்தில் நடைபெற்ற மீனவர் வாழ் வு ரிமை மாநாட்டில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சிறப்புரை யாற் றினார்.

டிசம்பர் 27 தஞ்சையில், நடைபெற்ற உலகத் தமிழர் பேரமைப் பின் ஏழாம் ஆண்டு நிறைவு - ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கான உலகத் தமிழர் மாநாட்டில், பழ.நெடுமாறன் தலைமையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நிறைவுப் பேருரை யாற்றினார்.

இந்த தொகுப்பு ஓராண்டில் குறிப்பிட்ட நிகழ்வுகளை மட்டும் தொகுக்க பட்டுள்
ளது ,கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக  எங்கெல்லாம் பேச வாய்ப்பு கிடைக் கிறதோ அங்கெல்லாம் ஈழ தமிழனுக்கு ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி வருவார் வைகோ என்பது உலகம் அறிந்த உண்மை ,

ஏன், ஈழ தமிழனின் நிலையை தினமும் எதோ ஒரு இடத்தில் எதோ ஒரு மேடையில் உச்சரிக்காமல் தூங்காத இதயம் தான் " தமிழர் இதயம் வைகோ "

No comments:

Post a Comment