Saturday, August 31, 2013

உ.பா.ச - போகாத ஊருக்கு

மத்திய அரசின் உணவுப் பாதுகாப்புச் சட்டம் போகாத ஊருக்கு வழி தேடுகிறது!

தேசிய உணவுப் பாதுகாப்பு மசோதா குறித்து நாடாளுமன்றத்தில்,#மதிமுக உறுப்பினர் அ.கணேசமூர்த்தி அவர்கள் 26.08.2013 அன்று ஆற்றிய உரை:

நூற்றுக் கணக்கான ஆண்டுகளாக அடிமைப்பட்டு, அந்நியர்களால் சுரண்டப் பட்டு, உண்ணும் உணவிற்குக் கூட உத்தரவாதம் இல்லாத நிலையில் நம் நாட்டு மக்கள் இருந்தனர்.நாடு சுதந்திரம் அடைந்து 67 ஆவது ஆண்டை கொண் டாடிக் கொண்டு உள்ளோம். பல ஐந்தாண்டுத் திட்டங்களை நிறைவு செய்துள் ளோம்.
கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்டித் தீர்த்த திட்டங்களால் நாட்டு மக்களின்
உணவிற்குக் கூட உத்தர வாதம் தரமுடியாமல்,தற்போது சட்டத்தால் உணவுப் பாதுகாப்பு தருகிறோம் என்பது வேதனைப் பட வேண்டிய ஒன்றாகும். அதற் காக இந்த அரசு வெட்கப்பட வேண்டும்.

தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மசோதாவின் படி அனைத்து மாநிலங்
களிலும் மக்கள் தொகை கணக்கின் அடிப்படையில் உணவுப் பாதுகாப்புச்
சட்டத்தின் பயனாளிகளின் எண்ணிக்கையை மத்திய அரசே நிர்ணயம் செய் யும். அதன் அடிப்படையில் தான் அந்தந்த மாநில அரசுகள் பயனாளிகளைக் கண்டறிந்திட வேண்டும் என்பது நடைமுறைக்கு ஒவ்வாத பொருத்தமற்ற செயலாகும்.இது மாநில அரசின் உரிமைகளில் மத்திய அரசின் தலையீடாகும்.

மத்திய அரசு சமூகப் பொருளாதார, இன அடிப்படையிலான கணக்கெடுப்பை இன்னும் முழுமையாக முடிக்க வில்லை.அதேபோல், வறுமைக் கோட்டிற் கான வழிகாட்டு நெறிமுறையினையும் இதுவரை வெளியிடவில்லை. இந் நிலையில், மாநில அரசுகள் இத்திட்டத்தின் பயனாளிகளை எந்த அடிப்படை யில் ஆறு மாதத்திற்குள் தெரிவு செய்ய முடியும்.

அனைவருக்கும் உணவுப் பாதுகாப்பு அளிக்க தற்போது தமிழகத்திலும் கேரளத் திலும் நடைமுறையில் உள்ள அனைவருக்கும் பொது விநியோக முறையை அனைத்து மாநிலங்களிலும் நடைமுறைக்குக் கொண்டுவர உரிய நடவடிக் கையினை மத்திய அரசு செய்திருக்கலாம். அதை விடுத்து, போகாத ஊருக்கு இந்த அரசு வழி தேடிக்கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் பொது விநியோகத் திட்டப் பயனாளிகள் அனைவருக்கும் மாதம் 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப் படுகிறது. ஏற்கனவே இந்தியாவில் பல
மாநிலங்களில் ஒரு கிலோ உணவு தானியம் 2 ரூபாய்க்கு விநியோகிக்கப்படு கிறது. இம்மசோதாவினால் இனி ஒரு கிலோ தானியத்தின் விலை 3 ரூபாய் என நிர்ணயிக்கப்படுகிறது. எனவே, இது இருப்பதையும் பறிப்பதாக உள்ளது.

இந்த மசோதாவின் மூலம் தமிழகத்தில் பொதுவிநியோக குடும்ப அட்டை வைத்திருக்கும் 50 சதவிகித நகர்ப்புற வாசிகளும் 25 சதவிகித கிராமப்புற மக் களும் இப்போது தங்களுக்கென உரிமையாக்கப்பட்டுள்ள அனைத்துப் பொது விநியோக திட்ட சலுகைகளையும் இழப்பார்கள்.

இருக்கும் உரிமைகளையும் இழக்கச் செய்யும் இம் மசோதா எப்படி உணவுப்
பாதுகாப்புச் சட்டமாகும். இது மக்களுக்காக கொண்டு வரப்படும் சட்டமல்ல, மக்களின் வாக்குகளை கவருவதற்காக கொண்டு வரப்படும் ஒரு ஏமாற்று யுக்தியாகும்.

இச்சட்டம் நடைமுறைக்கு ஒத்துவரா விட்டாலும் கூட எப்படியாவது மக்களை
ஏமாற்றி உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் மூலம் பெறக்கூடிய தேர்தல் வெற்றி யிலேயே அரசின் கவனம் உள்ளதே தவிர,நாடு எப்படி இருக்க வேண்டும் என்ற கவலை இந்த அரசுக்கு இல்லை.

ஐ.நா.வின் உணவு மற்றும் விவசாய அமைப்பு செய்துள்ள வரைமுறை யின் படி உணவுப் பாதுகாப்பு என்பது ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை நடத்துவ தற்கு அனைத்து மக்களுக்கும் அனைத்து நேரங்களிலும் தேவையான உணவு கிடைப்பதற்கு வெளிப் படையான மற்றும் பொருளாதார ரீதியான வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். ஆனால், இந்த மசோதா அனைவருக்கும் உணவுப் பாதுகாப்பு உத்தரவாதம் அளிப்பதில்லை.

தமிழகத்தைப் பொறுத்தவரையில்,ஊரகப் பகுதியில் வாழும் மக்களில் 62.55 சதவிவிகிதத்தினரும், நகர்ப் பகுதியில் வாழும் மக்களில் 37.79 சதவிகிதத்தின ரும் மட்டுமே உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் மூலம் பயன் அடைவர். மீத முள்ளவர்களுக்கு இச்சட்டம் பாதுகாப்பு அளிப்பதில்லை.மேலும், தமிழகத்தில் தற்போது அனைத்து குடும்ப அட்டைதாரர் களுக்கும் இலவச அரிசி வழங்கப் பட்டு வரும் நிலையில் முன்னுரிமை குடும்பங்கள் என வரையறை செய்து
அவர்களுக்கு மட்டும் உணவு தானியத்தை மானிய விலையில் வழங்குவது என்பது தற்போது உள்ள பொது விநியோகத் திட்டத்தையே சீர்குலைத்து விடும்.

மாநில அரசுக்குத் தேவையான அளவு உணவுப் பொருட்களை மத்திய அரசு
வழங்க முடியவில்லை என்றால்,அதற்குரிய நிதி, மாநில அரசுக்கு வழங்கப் படும் என உணவுப் பாதுகாப்பு அவசரச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

இதன் மூலம் மத்திய அரசு தனது பொறுப்பைத் தட்டிக் கழிப்பதாக உள்ளது. விவசாய விலைக் கமிஷனின் கூற்றுப்படி உணவு விளையும் அனைத்து மாநி லங்களிலும் அங்காடி வரத்துகளில் 98 சதவிகிதம் அரசு கொள்முதலுக்கு அனுப்பப்படுகிறது.மீதமுள்ள 2 சதவிகிதத்தையும் வாங்கி விட்டால், வெளி அங்காடியே இல்லாமல் போய்விடும்.

உற்பத்தியாகும் உணவின் அளவும் மக்களின் உணவுத் தேவையும் சரியாக
கணக்கிடப்படுவதில்லை. சமநிலைப் படுத்தும் வகையில் திட்ட மிடுதல்
இல்லை. உணவுத் தேவையை விட அரசுக் கொள்முதல் அதிக அளவு உள்ள தால், வெளிச் சந்தையில் உணவுப் பொருட்களின் விலை பன்மடங்கு உயர்ந்து விடுகிறது.

உலகிலேயே உணவு ஏற்றுமதியில் சிறப்பான இடம் பிடித்துள்ள இந்தியாவில், விவசாயம் தத்தளிக்கிறது.கையிருப்பில் உணவு தானியங்கள் 5 கோடி இருந் தும் உணவு விலை தாறு மாறாக ஏறுகிறது. உற்பத்தி செய்யும் விவசாயிக்கு கிடைக்கும் விலைக்கும் உணவுப் பொருட்களை நுகர்வோர் வாங்கும் விலைக் கும் இடையில் மாபெரும் வித்தியாசம் உள்ளது.உணவுக்குப்பாதுகாப்பு இல்லா தோர் எண்ணிக்கையும் மிக அதிக அளவில் உள்ளது. இந்த வேறுபாடுகளுக்கு நமது அரசின் திட்டமிடலில் உள்ள தவறுகள் தான் காரணமாக இருக்க முடி யும்.

உணவுக் கழகத்தின் செயல்பாட்டைத் தணிக்கை செய்து வழங்கியுள்ள அறிக் கை ஆழ்ந்த கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாகும். அதில் எல்லோருக் கும் உணவு வழங்கும் உணவுப் பாதுகாப்புச் சட்டம் இயற்று வதற்கு முன்பு கொள்முதல் செய்யப் பட்ட கோதுமையை வீணாக்காமல் பாதுகாப்பு செய்ய வழி தேடுங்கள் என எச்சரிக்கிறார்கள்.

உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு உரிய விலைக்கு பாதுகாப்பு அளித்து, அதி க உற்பத்தி செய்ய அவர்களை ஊக்கப்படுத்துங்கள். வாக்குகளைப் பெறுவதற் காக திட்டங்கள் என்பதை விடுத்து நுகர்வோர் அனைவரின் வாங்கும் சக்தியை உயர்த்துவதற்கான திட்டங்களைத் தீட்டுங்கள். அதுவே உண்மையான உண வுப் பாதுகாப்பிற்கான சட்டமாக அமையும்.

அ.கணேசமூர்த்தி எம்.பி., இவ்வாறு உரை ஆற்றினார்.

No comments:

Post a Comment