மறுமலர்ச்சியின் நாற்றங்கால் மாணவர்களே!
மாணவர் அணி கலந்துரையாடலில் #வைகோ
கழகத்தின் மாநில, மாவட்ட மாணவர் அணி கலந்துரையாடல்கூட்டம் 17.08. 2013 அன்று தாயகத்தில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு
பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் ஆற்றிய உரையில் இருந்து.....
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாணவர் அணியின் கருத்துப் பட் ட றையில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். மாணவர் அணிச் செயலாளர் தம்பி இராஜேந்திரன் அவர்கள் ஒருங்கிணைத்தபடி, இந்த நிகழ்வு, இன்று காலையில் தொடங்கி,அந்தி சாயும் வரையிலும் தொடர்ந்து நடைபெற் றுக் கொண்டு இருக்கின்றது.கழக வளர்ச்சி குறித்து உங்களுடைய கருத்து களை எல்லாம் பகிர்ந்து கொண்டு இருக்கின்றீர்கள்.
இன்றைய நிலையில், ஒரு குடும்பத்தை ஒற்றுமையாகக் கொண்டு போவதே
ஒரு பெரும் பணி. தேர்தலில் வெற்றிகளே கிடைக்காத காலத்தில் ஒரு கட்சி யை நடத்துவது மிகவும் கஷ்டம்.ஆனால், இருபது ஆண்டுகளாக, இந்த இயக் கத்தை நடத்தி வந்து இருக்கின்றோம். தாயகத்தில் அமைந்து உள்ள இந்த அரங்கம் ஒரு நேர்த்தியான அரங்கம். இந்தக் கூட்டத்தில் நீங்கள் நிறைவேற்றி இருக்கின்ற தீர்மானங்களை எல்லாம் படித்தேன்.சிறப்பாக வடித்து இருக்கின் றீர் கள்.
தமிழக அரசியல் களத்தில்,மாணவர்களின் ஈடுபாடு குறைந்து விட்டதே;முன்பு போல மாணவர்கள் வருவது இல்லையே? என்றார்கள்.உண்மைதான். மாண வர்களுடைய மனநிலை பெருமளவுக்கு மாறி இருக்கின்றது.ஆனால்,அண்மை யில், ஈழ விடுதலைக்கான களத்தில் மாணவர்கள் வீதிகளில் இறங்கிப் போரா டினார்கள். லயோலா கல்லூரியில் மாணவர்கள் பட்டினிப் போராட்டத்தைத் தொடங்கியபோது நான் அங்கே சென்று அவர்களைப் பார்த்தேன்.
அப்போது அவர்களிடம் சொன்னேன்: இனி நான் இந்த இடத்துக்கு வர மாட் டேன். வந்தால், அரசியல் சாயம் பூசி விடுவார்கள். இந்தப் போராட்டத்தை நீங் கள் முன்னெடுத்துச் செல்லுங்கள்.எங்களால் உங்களுக்கு ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால், தயங்காமல் கேளுங்கள்; வெளியில் இருந்து செய்கிறோம்’ என்று சொல்லிவிட்டு வந்தேன். உண்ணாவிரதம் தொடங்கிய அந்த வேளை யில், மறுமலர்ச்சி தி.மு.கழகத்துக்கு மாணவர்களைக் கொண்டு வந்து சேர்த்து, அதனால் இந்த இயக்கத்துக்கு ஒரு பலன் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் நான் செயல்பட வில்லை.
அப்படியானால், மாணவர்கள் இடையே அரசியலைக் கொண்டு போவது சரி தானா? என்று கேட்டால், உலகத்தில் எல்லா நாடுகளிலும் விடுதலை இயக் கங்கள், கட்சிகள், மாணவர்கள் அமைப்பை உருவாக்கி வளர்த்து, அதன் மூல மாகத்தான் இலட்சியங்களை வென்றெடுத்து இருக்கின்றார்கள். இந்தியா விலும்கூட, காங்கிரஸ், பொது உடைமை இயக்கங்கள், பாரதிய ஜனதா என அனைத்துக் கட்சிகளிலும் மாணவர் அமைப்புகள் இருக்கின்றன. அது ஒரு
நாற்றங்கால்.
நான் படிக்கின்ற காலத்தில், என் விடுதி அறைத் தோழன் என்ன சாதி? என்று
எனக்குத் தெரியாது.அப்படிப் பார்க்கின்ற கண்ணோட்டம் எந்த மாணவரிடமும்
கிடையாது. ஆனால், அரசியல் பார்வை இருந்தது, ஈடுபாடு இருந்தது. இன்று
போல ஊடகங்கள் கிடையாது, தொலைக்காட்சிகள் கிடையாது. சொற்பொழிவு களும், எழுத்துகளுமே மாணவர்களைக் கவர்ந்தன. கொள்கை, இலட்சியங் களில் ஈடுபாடு கொண்டார்கள். அண்ணாவின் உரை முழக்கம், இலட்சக்கணக் கான மாணவர் களை அவர்பால் ஈர்த்தது. ஆனால், இந்தக் காலக்கட்டத்தில் அந்த மனோநிலை மாறி இருக்கின்றது.எதிர்கால வெற்றியை மட்டுமே கருத் தில் கொண்டு, அவர்களுடைய படிப்பு அமைதியாகப் போய்க்கொண்டு இருக் கின்றது.
சில செய்திகளைக் கேட்கும்போது,மனதுக்கு மிகவும் வேதனையாக இருக்கின் றது. ஒரு நூறு இருநூறு மாணவர்கள் சேர்ந்து கொண்டு, எங்காவது தவறாக நடந்தால், அந்தச் செய்திகள் ஏடுகளில் பெரிதாக வருகின்றன. அதனால், சமு தாயத்தில் மாணவர்களைப் பற்றிய தவறான கருத்துகள் பரவுகின்றன; மதிப் பீடு குறைகின்றது. அப்படிப்பட்ட செய்தி களைப் படிக்கும்போது என் மனதுக்கு
வேதனையாக இருக்கும். அதற்காக நான் யாரையும் குறை சொல்லவில்லை.
ஈழவிடுதலைக் களத்தில், இலட்சக் கணக்கான மாணவர்கள் திரண்டு போராடி யது நமக்கு நம்பிக்கையை ஊட்டியது. அதன் விளைவாகத்தான், கட்டாயத்தின் பேரில், தி.மு.க. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை விட்டு வெளியேறி யது. ஆனால், அடுத்த சில மாதங்களிலேயே தன் மகளை மாநிலங்கள் அவை உறுப்பினராக ஆக்குவதற்கு, ஜன்பத் சாலை பத்தாம் எண் வீட்டு வாயிலில் போய்த் தவம் கிடந்தார். இதுதான் அவர்களது கொள்கை நிலைப்பாடு.
அன்புக்குரிய தோழர்களே,
1964 ஆம் ஆண்டு, இதே ஆகஸ்ட் மாதத்தில், சென்னை கோகலே அரங்கத்தில், பேரறிஞர் அண்ணா அவர்கள் முன்னால் பேசக்கூடிய வாய்ப்பை நான் பெற் றேன். அப்போது நான் ஒரு மாணவன். 49 ஆண்டுகள் கடந்து விட்டன. நமது இயக்கத்தின் இருபது ஆண்டுகாலப் பயணத்தில், ஒரு முக்கியமான கட்டத் துக்கு நாம் வந்துஇருக்கின்றோம்.
அண்ணா அவர்களுடைய இறுதி நாள்களில்,அடையாறு புற்றுநோய் மருத்துவ மனையிலேயே இருந்தவன் நான். அவர் ஒரு இயக்கத்தைத் தொடங்கி வெற்றி கரமாக நடத்திக் காட்டியவர் என்றால், அவர் ஆகாயத்தைப் போலப் பரந்த ஞானம் பெற்றவர்; அறிவுக் கடல். அவருடைய எண்ணப்படியே, அவருக்குக் கிடைத்த தளபதிகளும், தம்பிமார் படையும் அமைந்தது. நாவலர், கலைஞர்,
பேராசிரியர் இப்படிப் பட்டியல் இட்டுக்கொண்டே போகலாம்.
தலைசிறந்த எழுத்தாளர்கள், சொற் பொழிவாளர்கள்; கோடிக்கணக்கான மக் களை ஈர்த்த புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்., இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர்., நடிக மணி டி.வி.நாராயணசாமி, நடிப்பிசைப்புலவர் கே.ஆர். இராமசாமி உள்ளிட்ட திரை உலக நட்சத்திரங்களின் ஆதரவு, கலைவாணர் என்.எஸ்.கே. காட்டிய பரிவு என, கோடிக்கணக்கான மக்களை ஈர்க்கக் கூடிய கலை உலகத்தினர் ஒருபக்கத்தில் தந்த ஆதரவு. எண்ணற்ற சொற்பொழிவாளர்கள், கலைக்குழுக் களின் நாடு தழுவிய பிரச்சாரம் எல்லாம் உறுதுணையாக அமைந்தது.
அன்றைய காலத்தில் ஆளுங்கட்சி காங்கிரஸ். எதிர்க்கட்சி பொது உடைமை
இயக்கத்தினர். அவர்கள் இந்த மண்ணின் உணர்வுகளை எதிரொலிக்காததால்,
அந்த இடத்தை திராவிட முன்னேற்றக் கழகம் கைப்பற்றியது.காங்கிரசுக்கு
மாற்று இயக்கம் தி.மு.க.தான் என்ற நிலைமை உருவானது. எத்தனையோ
ஏடுகள் தி.மு.கழகத்தின் கருத்துகளை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்த்தன.
எனவே, கட்சி வேகமாக வளர்ந்தது.இத்தனை சக்தியோடு அண்ணா அவர்கள் காங்கிரசை ஆட்சியில் இருந்து அகற்றினார்கள். இன்று வரையிலும், காங் கிரஸ் கட்சி, புனித ஜார்ஜ் கோட்டைப் பக்கம் எட்டிப் பார்க்க முடியவில்லை.
அடுத்து எம்.ஜி.ஆர். நாள்தோறும் இலட்சக்கணக்கான மக்கள் அவரது படங் களைத் திரை அரங்குகளில் பார்த்துக்கொண்டே இருந்தார்கள். அவர்களுடைய இதயங்களில் எம்.ஜி.ஆர். தனி இடத்தைப் பெற்றார்.அவரது பாடல்கள் நாடு முழு வதும் ஒலித்தன. திருமணமா, துக்கமா, கோவில் திருவிழாவா? எங்கே
பார்த்தாலும் அவரது பாடல்கள்தான் ஒலித்துக் கொண்டு இருந்தன. 72 ல் அவர் தி.மு.கழகத்தில் இருந்து வெளியேற்றப் பட்டபோது, நடந்த முதலாவது தேர்த லிலேயே, திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில்,ஆளுங்கட்சியாக இருந்த திமு.க.டெபாசிட் இழக்கக்கூடிய நிலைமைக்குச் சென்றது.எம்.ஜி.ஆருக்கு மகத் தான வெற்றி. கம்யூனிஸ்டுகள் அவரோடு கரம் கோர்த்துக் கொண்டார் கள்.
பார்த்தாலும் அவரது பாடல்கள்தான் ஒலித்துக் கொண்டு இருந்தன. 72 ல் அவர் தி.மு.கழகத்தில் இருந்து வெளியேற்றப் பட்டபோது, நடந்த முதலாவது தேர்த லிலேயே, திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில்,ஆளுங்கட்சியாக இருந்த திமு.க.டெபாசிட் இழக்கக்கூடிய நிலைமைக்குச் சென்றது.எம்.ஜி.ஆருக்கு மகத் தான வெற்றி. கம்யூனிஸ்டுகள் அவரோடு கரம் கோர்த்துக் கொண்டார் கள்.
தி.மு.க.வை எதிர்க்கின்ற ஏடுகள், எம்.ஜி.ஆருக்கு ஆதரவாக, எட்டுக் காலச்
செய்திகளை வெளியிட்டன. காமராசரின் தலைமையிலான காங்கிரஸ் மீண் டும் பலம் பெறத் தொடங்கிய நேரத்தில், எம்.ஜி.ஆரின் வெற்றி, நிலைமையை
மாற்றிவிட்டது. இனி காங்கிரசுக்கு வாக்கு அளித்துப் பயன் இல்லை என்ற
முடிவுக்கு மக்கள் வந்தார்கள். அண்ணாதி.மு.க. வெற்றி பெற்றது. எம்.ஜி.ஆர்.
முதல் அமைச்சர் ஆனார்.
செய்திகளை வெளியிட்டன. காமராசரின் தலைமையிலான காங்கிரஸ் மீண் டும் பலம் பெறத் தொடங்கிய நேரத்தில், எம்.ஜி.ஆரின் வெற்றி, நிலைமையை
மாற்றிவிட்டது. இனி காங்கிரசுக்கு வாக்கு அளித்துப் பயன் இல்லை என்ற
முடிவுக்கு மக்கள் வந்தார்கள். அண்ணாதி.மு.க. வெற்றி பெற்றது. எம்.ஜி.ஆர்.
முதல் அமைச்சர் ஆனார்.
மேற்சொன்ன எந்த பலமும் நமக்குக் கிடையாது. ஆனால் நீதிக்காகப் போரா டத் தொடங்கி, இருபது ஆண்டு களில் தமிழக அரசியல் களத்தில், இந்த இயக் கத்தை நாம் நிலைநிறுத்தி இருக்கின்றோம். தொடர்ந்து போராடி வருகின் றோம்.
எனக்கு என்ன வேதனை தெரியுமா?திராவிட இயக்கத்தை, ஒரு ஐம்பது ஆண்டு காலம் பின்னோக்கித் தள்ளி விட்டார் கலைஞர். ஈழத்தமிழருக்குத் துரோகம் இழைத்தார். அவர்களது பேரழிவுக்குக் காரணமாக இருந்தார். வரலாறு அவரை ஒருபோதும் மன்னிக்காது. இதையெல்லாம்விட,திராவிட இயக்கத்தைப் பழிக்கு ஆளாக்கி விட்டார். இன்றைக்கு எதிரிகள் நம்மீது குற்றச்சாட்டுகளை அடுக்குகின்ற நிலைமையை உருவாக்கி விட்டார்.எத்தனை இலட்சம் தொண் டர்களின் கண்ணீரில், வியர்வையில், தீக்குளித்த மடிந்த பலரது உயிர்த்தியா கத்தில் உருவான இயக்கம் அது.
முன்பு திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றிகளைப் பெற்று இருக்கலாம்; இப் போது அண்ணா தி.மு.க. வெற்றி பெற்று இருக்கலாம். ஆனால், கொள்கை
அளவில் நீர்த்துப் போய் விட்டார்கள். இதற்குப் பிறகு எதிர்காலம் என்ன?
திராவிட இயக்கத்தின் கொள்கைள் நீர்த்துப் போகவிடாமல், பாதுகாத்து வந்து இருக்கின்ற இயக்கமாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் திகழ்கின் றது.(பலத்த கைதட்டல்).தனி நாடு கேட்டது அண்ணாவின் திமுக.,இன்றைக்கு,
சுதந்திரத் தமிழ் ஈழம் என்ற கோரிக்கையைப் பிரகடனம் செய்து இருப்பது மறு மலர்ச்சி தி.மு.க. நமது இயக்கத்தில் திறமையான சொற்பொழிவாளர்கள், எழுத்தாளர்கள் இருக்கின்றார்கள். ஆனால், அண்ணா காலத்தோடு ஒப்பிடுகை யில் குறைவு தான். அந்த அளவுக்கு இல்லை. கலை உலகத்தினரின் ஆதரவும் கிடையாது.
சங்கொலியைப் படியுங்கள்
இன்றைக்கு நமது சங்கொலியில் எழுதுகிறார்களே, கவிஞர் தமிழ்மறவன்,செந் திலதிபன், வந்தியத்தேவன்,மணிவேந்தன்,ஈட்டிமுனை இளமாறன், இதுபோல இன்றைக்கு எழுதுகின்ற வேறு ஒரு திராவிட இயக்க ஏடு இப்போது இல்லை. சங்கொலிதான் இருக்கின்றது. அதில் நீங்கள் செய்தி களைப் பெறலாம். இலங் கையில் நடைபெற இருக்கின்ற காமன்வெல்த் மாநாட்டைப் பற்றி விரிவாகச் சொல்லி இருக்கின்றோம். இந்த வார சங்கொலியில் வந்து இருக்கின்றது.
தலையங்கங்கள் அருமையாக இருக்கின்றன. படியுங்கள்.
சட்டமன்றத்தில் நாடாளுமன்றத்தில் இடம் இல்லாத இந்த இயக்கத்துக்காகப்
பணி ஆற்ற வந்தவர்கள் நீங்கள்.என்னால் முடிந்த அளவுக்குப் பாடுபட்டு
இருக்கின்றேன். அனைவரும் ஒன்று சேர்ந்து போராடுவோம். எதிர்பார்த்த
காலத்தில் கிடைக்காத வெற்றிகள், எதிர்பார்க்காதபோது மிகப்பெரிய அளவில் நம்மை வந்து சேரும். இந்த நிகழ்ச்சியைச் சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்திட உறுதுணை புரிந்த மாணவர் அணிச் செயலாளருக்கும் மாநிலத் துணை அமைப் பாளர்கள், நிர்வாகிகள் அனைவருக்கும், நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் இவ்வாறு உரை ஆற்றினார்.
No comments:
Post a Comment