Wednesday, August 7, 2013

புத்தரும் மதுவிலக்கும்!

தமிழ்நாட்டில் ஆயிரம் ஆண்டுகட்கும் மேலாகப் பெளத்த சமயம் நிலைத்து வளர்ந்து செழித்திருந்தது.

தமிழர் புத்தரைத் ‘தயாவீரன்; தர்மராஜன், அருளறம் பூண்டோன், அறத்தகை முதல்வன், புத்த ஞாயிறு, போதிமாதவன், மன்னுயிர் முதல்வன், பிறவிப் பிணி மருத்துவன் என்று பல படப் புகழ்ந்து போற்றி வந்திருக் கின்றனர். தமிழ்
நாடெங்கும் பெளத்தப் பள்ளிகள் நிறைந்திருந்தன.

சித்தார்த்தர்

புத்தரின் இயற்பெயர் சித்தார்த்தர் குடும்பப் பெயர் கெளதமர். அவர் ஞான மடைந்த பிறகு ஏற்பட்ட பெயரே புத்தர். பிற்காலத்தில் புத்தர் (பூர்ண ஞானம் பெற்றவர்) ததாகதர் முன்னோர் வழியில் செல்பவர்) என்று அழைக்கப்பட்டார்.
திரிபிடகங்கள்

புத்தர் அருளிய அறவுரைகளும் சங்க விதிகளும் அவரைப் பற்றிய வரலாறு
களும் பெளத்தத் திருமுறைகளில் மூன்று பிரிவான தொகுதிகளாக உள்ளன. அவைகளுக்குத் திரிபிடகங்கள் என்று பெயர் (பிடகம்-பெட்டி அல்லது கூடை திரி-மூன்று)


சுத்தபிடகம்

விநயபிடகம், சுத்தபிடகம், அபிதம்ம பிடகம் என்ற திரிபிடகங்களில் சுத்த
பிடகத்தில் ஐந்துபகுதிகளில் குத்தக நிகாயம் என்ற பகுதி உள்ளது.

தம்மபதம்

இந்துக்களுக்குப் பகவத் கீதை எப்படியோ அப்படிப் பெளத்தர்களுக்கு முக்கிய மானது தம்மபதம் (Dhamma Pada). இதற்கு ஆங்கிலத்தில் மட்டும் 40க்கும் மேற் பட்ட மொழிபெயர்ப்புகள் உள்ளன.

இலத்தீன், ஜெர்மன், பிரெஞ்சு போன்ற ஐரோப்பிய மொழிகளிலும் மொழி பெயர்ப்புகள் உண்டு.

தம்மபதத்தின் சூத்திரங்கள் சுருக்கமாயும், பொருள் நிறைந்தும், விறு விறுப் பாயும், உணர்ச்சி மயமாயும், கவிதைப் பண்புடனும் இருப்பதால் இவைகளைப் பலரும் விரும்பிப் படிப்பது இயற்கை.பெளத்த சமயக் கொள்கைகள் பலவற் றை யும், வாழ்க்கைக்கு வேண்டிய நீதிகளையும் இவை களிலே தெளிவாகக் காணலாம்.

‘மது’வின் தீமை குறித்து புத்தர் சொல்கிறார் இதோ:

தம்மபத மலவக்கோ (மலவர்க்கம்)

ஸீ ரா மேரயபானங்ச
யோ நரோ அறுயுஜ் ஜதி
இதே வமேஸோ லோகஸ்மிஸ்
மூலங் கணதி அத்தனோ

மயக்கம் உண்டாக்குகிற குடிவகைகளைக் குடிக்கிறவரும் இவ்வுலகத்திலே யே தமது வேரைத் தாமே தோண்டிக் கொள்கிறார்கள்.

(Bhikkhu Somananda மொழிபெயர்ப்பு சென்னை, 1950,பக்கம் 136.)

suramerayapanan ca
yo naro anuyunjati
idh evameso lokasmim
mulam khanati attano.

And a man who is addicted to intoxicating drinks digs up his own roots in this very world.

(U.Dhamma joti, The Dhammapada, page 154-155)

Anthony Elenjimittam

“He who destroys life, who speaks what is not true, who misappropriates what is not given to him, who consorts with another man’s life, who is addided to intoxicating drinks, such a one digs his own grave even in this very life

என்று அந்தோணி எலின்ஜிமிட்டப் ஆங்கிலத்தில் விளக்கம் தருகிறார்.

ப.ராம ஸ்வாமி

உயிர்க் கொலை செய்வோனும் பொய் பேசுவோனும், பிறர் பொருள் களைப் பறிப்போனும், பிறர் மனை எண்ணுவோனும், வெறிகொடுக்கும் மது வகை களைப் பருகுவோனும் இவ்வுலகிலேயே தம் வேர்களைத் தாமே கல்லெறி கிறார்கள் என்று நெல்லை நகர்மன்ற முன்னாள் தலைவர் அறிஞர் ப.ராமஸ் வாமி தனது தம்மபதம் நூலில் (1954) பக்கம் 75 இல் தமிழில் விளக்கம் தந்துள்ளார்.

பெரியார்தாசன்

டாக்டர் எஸ்.ஏ.எதிரிவீர ஆங்கில நூலை தமிழில் புத்ததம்மம் அடிப்படைக் கொள்கைகள் என்று டாக்டர் வீ.சித்தார்த்தா (பெரியார் தாசன்) தந்துள்ளார். அதில் பக்கம் 80 இல் வீழ்ச்சி பற்றிய போதனை (பராபவசுத்தம்) ஒரு மனிதனின்
வீழ்ச்சிக்குரிய காரணங்களை விவரிக்கிறார்.

தம்ம போதனையிடம் வெறுப் படைதல்; தீயோரை விரும்புதலும் நன்னடத் தையை வெறுப்பதும்; தூக்கம், வீணர் கூட்டு, வேம்பல், பயனற்றிருத்தல்; தன் வயது முதிர்ந்த தாய் தந்தையரைப் பேணாதிருத்தல்; துறவோரை ஏமாற்று தல், பொய்மைக்கு ஆட்படுதல்; திரண்ட செல்வம் பெற்றிருந்தும் தான் மட்டும்
பயன்துய்த்தல்; பிறப்பு செல்வம், குலம் ஆகியவற்றைக் கொண்டு பெருமைப்
பட்டுப் பிறரைத் தூற்றுதல்; சினமுடையவனால் குடிகாரனாய்; சூதாடியாய்; செல்வத்தை வீணாக்கு பவராய் இருத்தல்; தன் மனைவியோடு திருப்தியுறா மல் பிறன்மனை விழைதல்; வயது முதிர்ந்த பின் இளம் பெண்ணை மணத்தல்; எப்போதும் பொறாமையில் தகித்தல்; உளதாரி யாயும், குடிகாரராயும் உள்ள
ஆணையோ, பெண்ணையோ வேலைக்கு அமர்த்தல்; மிகப்பேரிய ஆசை, மேற்கண்ட குணங்களில் எது இருப்பினும் அது ஒருவருக்கு வீழ்ச்சியை உண்டாக்கிவிடும்.

தமிழர் தலைவர் வைகோ

மதுவின் கொடுமைகளை, தீமைகளை தமிழகமெங்கும் பிரச்சாரம் செய்து ‘முழு மதுவிலக்கு; அதுவே நமது இலக்கு’ என்று நித்தமும் போராடி வரும் தமிழர் தலைவர் வைகோவின் எண்ணங்கள் வெற்றி பெறும் நாள் தொலை வில் இல்லையன்றோ.

நன்றிகள் 

கட்டுரையாளர் :- செ.திவான்

வெளியீடு :- சங்கொலி

No comments:

Post a Comment