Sunday, August 4, 2013

‘தந்தி’ பறந்தது!

சங்கொலி தலையங்கம்

ஆங்கிலேயர் ஆட்சியில் 1850 நவம்பர் மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப் பட்ட “தந்தி”, 2013, ஜூலை 15 அன்று தனது சேவையை நிறுத்திக் கொண்டு விட்டது. நாட்டு மக்களின் வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் கலந்த தகவல் களை 163 ஆண்டுகளாக கொண்டு சேர்த்த ‘தந்தி’யின் மறைவு  உண்மையிலே யே சோகத்தைத்தான் ஏற்படுத்தி இருக்கின்றது. தந்தி சேவை முடிவுக்கு வந்த ஜூலை 14 ஆம் தேதி, தந்தி அலுவலகங்களில் ஏராளமான மக்கள் வரிசையில் காத்திருந்து தமது நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் ‘தந்தி’ அனுப்பி மகிழ்ந்துள்ளனர். இதில் வாழ்க்கையில் முதல் முறையாகவும் கடைசி முறை யாகவும் தந்தி கொடுத்தோரும் உண்டு.
அறிவியல் யுகத்தில் “பழமைகள்” விடைபெறுவது காலத்தின் கட்டாயம்தான்.
மின்னஞ்சல் மூலம் உலகத்தின் எந்த மூலைக்கும் ஒரு நொடியில் தகவல்கள்
போய்ச்சேரும் ‘கணிப்பொறிக் காலத்தில்’ ‘தந்தி’ என்பது மக்களிடம் இருந்து
அந்நியப்பட்டுவிட்டது.

தபால் அலுவலக ஊழியர் வீட்டின் வாசலில் வந்து நின்று “ஐயா, தந்தி!”, என்று
அழைக்கும் போது குடும்பத்தில் இருக்கும் மொத்த உறுப்பினர்களும் அடி வயிறு கலங்க பதைபதைத்து நிற்பார்கள். தந்தியின் வாசகங்களைப் படித்த பிறகுதான் அந்த ஒரு நொடியில் ஏற்பட்ட திகைப்பும் அதிர்ச்சியும் விலகும்; இனி இத்தகைய தருணங்கள் நமது வாழ்க்கையில் ஏற்படப் போவதில்லை.

தந்தி தொழில்நுட்பத்தையும் ஒலி மொழியையும் மிகவும் சிரமப்பட்டு உருவாக் கியவர் சாமுவெல் பின்லே ப்ரீஸ் மோர்ஸ் என்ற அமெரிக்கர். இவர் ஒரு
பாதிரியாரின் மகன். ஓவியக்கலையில் தேர்ச்சி பெற்றவர். ஓவியம் ஒன்றை மோர்ஸ் வரைந்து கொண்டிருந்தபோது, அவரது காதல் மனைவி உடல் நல மில்லை என்ற தகவல் வந்து சேருகிறது. மோர்ஸ் ஊர் போய் தனது மனைவி யைக் காண்பதற்கு முன்பே, மனைவி உயிர் பிரிந்தது. உடலும் அடக்கம் செய் யப்பட்டது. உடனடியாக தகவல் கிடைத்திருந்தால் மனைவியை உயிரோடு பார்த்திருக்க முடியும் என்று மோர்ஸ் மிகவும் துயரம் அடைந்தார். இதன் விளைவாக ஓவியப் பணியை இடையிலேயே நிறுத்திவிட்டு தகவல் தொடர்பு ஆராய்ச்சியில் இறங்கினார்.

மின்காந்த சக்தி பற்றிய ஆராய்ச்சி, தொழில் நுட்பங்களைக் கற்றுத் தெரிந்து,
ஒலியை கம்பிகள் மூலம் எடுத்துச் செல்லும் வழி முறையில், தந்தி சாதனத் தை வடிவமைத்தார். தொடக்கத்தில் இந்த தொழில்நுட்பத்தில், தந்தி கம்பங் களை நட்டு, தந்தி கம்பிகளை கொண்டு செல்வதில் இடையூறுகள் இருந்தன. அதிக செலவும் பிடித்தன. ஆனால், தனது அயராத முயற்சியால், மோர்ஸ் வெற்றி கண்டார்.உலகின் முதல் தந்தி வழித் தகவல் தொடர்பு, அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனுக்கும் 38 மைல் தொலைவில் இருக்கும் பால்டிமோர் நகருக்கும் இடையில் 1844, மே 24 ஆம் தேதி அனுப்பப்பட்டது. இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் முதல் தந்தி 1855 இல் கல்கத்தாவுக்கும் மும்பைக்கும் இடையில் தரப்பட்டது.

தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக கம்பி வழி தந்திகள்,‘கம்பியில்லா தந்தி யாக’ மாறியது. இந்திய விடுதலைப் போராட்டக் காலத்தில் தந்தியின் பயன் பாடுதான்,தகவல் பரிமாற்றத்தில் முக்கிய இடம் பெற்றிருந்தது.இந்திய தேசிய காங்கிரசை 1885 இல் ‘ஆலன் ஆக்டேவியன் ஹியூம்’ எனும் வெள்ளையர் உருவாக்கியபோது, இந்தியப் பெருநகரங்களான டெல்லி, மும்பை, கல்கத்தா, சென்னை ஆகியவற்றை இணைக்கவும் காங்கிரஸ் இயக்கத்தை வேரூன்றச் செய்யவும் ‘தந்திதான்’ தகவல் தொடர்பு சாதனமாக பெரிதும் பயன்பட்டிருக் கின்றது.

அதே நேரம் 1942 இல் மகாத்மா காந்தி அடிகள், வெள்ளையனே வெளியேறு
இயக்கத்தைத் தொடங்கி, ஆகஸ்டு புரட்சி வெடித்தபோது, வெள்ளையனே வெளியேறு போராட்டங்களை ஆங்கிலேய அரசு ஒடுக்க முயற்சி செய்த போது, ஆங்கில அரசாங்கத்தின் தகவல் தொடர்பை செயலிழக்கச் செய்வதற்கு மக்கள் தந்திக் கம்பங்களைச் சாய்த்தனர். தந்தி சேவையைத் தடுத்தனர்.

ஆங்கிலேய அரசுகள் நடத்திய நீதிமன்றங்களில் வழங்கப்பட்ட தீர்ப்புகளை
திருத்துவதற்கு இங்கிலாந்து மன்னருக்கு மேல்முறையீடு செய்வதற்கு ‘தந்தி கள்’ அனுப்பப்பட்டு இருக்கின்றன. இங்கிலாந்து பேரரசின் தலைமையகத்தி லிருந்து தகவல்கள் பல நேரங்களில் விரைவாகப் போய்ச் சேருவதற்கு அடிமைப்படுத்திய நாடுகளுக்கு எல்லாம் ‘தந்திகள்தான்’ பறந்து இருக்கின்றன. தமிழ்நாட்டில், தலைவர் தந்தை பெரியார், தந்தி மூலமாக அவசர செய்திகளை அனுப்பி அதன் விளைவாக பல நன்மைகள் விளைந்திருப்பதை வரலாற்றின் பக்கங்களில் காண முடிகிறது.

ஆங்கிலேயர் ஆட்சியில் இந்தியாவில் சிறுபான்மையினரின் வகுப்புரிமைப்
பிரச்சினை குறித்து “பிரிட்டிஷ் பிரதமர்” 17.8.1932 இல் தீர்ப்பை வெளியிட்டார்.
அதில் தாழ்த்தப்பட்டோருக்கு தனி வாக்காளர் தொகுதி என்பது ஏற்றுக் கொள் ளப்பட்டிருந்தது. வட்டமேஜை மாநாட்டிலிருந்து திரும்பி வந்த காந்தி அடிகள், இதனை ஏற்க மறுத்தார். தனி வாக்காளர் தொகுதி இந்துக்களிடையே பிளவு களை ஏற்படுத்தும் என்பது காந்தியின் கருத்து. எனவே இதற்காக கிளர்ச்சி
தொடங்கப் போவதாக காந்தி அறிவித்தார். உடனடியாக அவர் கைதுசெய்யப் பட்டு எரவாடா சிறையில் அடைக்கப்பட்டார். தனி வாக்காளர் தொகுதி ஏற் பாட்டை கைவிடாவிட்டால் சாகும்வரை உண்ணாநோன்பு இருக்கப்போவதாக அறிவித்தார்.

நாடு முழுதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய காந்தி அடிகள், 1932, செப்டம்பர்
20 முதல் எரவாடா சிறையில் சாகும்வரை உண்ணாநோன்பை தொடங்கினார். தனி வாக்காளர் தொகுதி கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வந்த தாழ்த் தப்பட்ட மக்களின் உரிமைக்காவலர் அண்ணல் அம்பேத்கர், காந்தியின் உயி ரைக் காப்பாற்ற இந்த விவகாரத்தில் காந்தியின் கோரிக்கையை ஏற்க வேண் டும் என்று நெருக்கடி கொடுத்தனர். சிறையில் இருந்த காந்தி அடிகளை சந்தித் து அம்பேத்கர் இதுகுறித்து ஒரு முடிவு காணவேண்டும் என்றும் வலியுறுத் தப்பட்டது.

அப்போது தந்தை பெரியார் ஐரோப்பிய சுற்றுப்பயணத்தில் இருந்தார். காந்தி யின் எரவாடா உண்ணாநோன்பு, அம்பேத்கருக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி ஆகி யவற்றை அறிந்த தந்தை பெரியார், சுற்றுப்பயணத்தில் இருந்தவாறே, ஒரு நீண்ட தந்தியை அம்பேத்கருக்கு அனுப்பினார். அதில் பலகோடி மக்களின்
உரிமையைக் காட்டிலும், காந்தியாரின் உயிர் பெரியது அன்று. எனவே காந்தி யுடன் எந்த உடன்பாட்டிலும் கையெழுத்திட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.பெரியாரின் இந்த ‘தந்தி’ வரலாற்றில் மறக்க முடியாதது ஆகும்.

தந்தை பெரியாரின் இன்னொரு தந்தியும் சரித்திர சிறப்பு வாய்ந்தது; 1955 இல்
மத்திய அரசு இந்தியாவை வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என்று திசைகளின்
அடிப்படையில் நான்கு பெரும் மாகாணங்களாகப் பிரிப்பது என்று முடிவெடுத் தது.

இதன்படி தெற்கு மாகாணம் என்று கூறப்படும் தட்சிணப்பிரதேசத்தில் தமிழ் நாடும் இடம்பெறும் என்று புதிய திட்டத்தில் கூறப்பட்டது. தந்தை பெரியார் தட்சிணப் பிரதேசம் என்று உருவாக்கி, தமிழ்நாட்டை அதனுடன் சேர்ப்பது என்ற முடிவை கடுமையாக எதிர்த்தார்.

“தட்சிணப்பிரதேசம் வந்தால் தமிழராகிய நமக்குத்தான் ஆபத்து. தமிழ், கன்ன டம், மலையாளம் மூன்று நாடுகளும் ஒன்று சேர்ந்தால், பார்ப்பனர்களால்
கழித்துவிடப்பட்டு நம்மவருக்குக் கிடைத்துவரும் உத்தியோகங்கள் எல்லாம்
மலையாளிகள் கைக்குத்தான் போய்விடும். நாமெல்லோரும் போலீஸ், கக் கூஸ் எடுத்தல், ரெயில்வே கூலி முதலிய வேலைகளைத்தான் செய்ய வேண் டிய நிலைமை வரும்” என்று தந்தை பெரியார் எழுதினார்.

பிரதமர் ஜவகர்லால் நேருவின் இப்புதிய திட்டத்தை எதிர்த்து தமிழக முதல்வர்
காமராஜர் எதையும் செய்ய முடியாத நிலையில் இருந்தார்.இந்நிலையில்பெங் களூரில் தங்கி இருந்த காமராஜருக்கு, தந்தை பெரியார் ஒரு தந்தி கொடுத்தார்.

“தட்சிணப் பிரதேசம் ஏற்படுவது என்பது தமிழர்களுக்கு வாழ்வா, சாவா என்பது
போன்ற உயிர்ப் பிரச்சினையாகும். உங்களுக்கும் மற்றெல்லோருக்கும் இது
தற்கொலையானதும் ஆகும். தட்சிணப் பிரதேசம் ஏற்படுமானால் முன்பின்
நடந்திராத கிளர்ச்சி செய்வதற்குத் தமிழ் மக்களை நெருக்குவதாகிவிடும். அருள் கூர்ந்து நம் எல்லோரையும் தமிழ்நாட்டையும் காப்பாற்ற வேண்டு கிறேன்” என்று தந்தியில் பெரியார் எச்சரிக்கை செய்திருந்தார்.

தமிழக முதலமைச்சர், பெருந்தலைவர் காமராஜர் தந்தை பெரியாரின் ‘தந்தி’ யைப் பிரதமர் நேருவின் கவனத்திற்கு கொண்டு சென்றார். 1938 இல் தந்தை பெரியார் தலைமை ஏற்று நடத்திய இந்தி எதிர்ப்புப் போராட்டத்தையும், தமிழக மக்களிடம் ஏற்படுத்திய தாக்கத்தையும் அறிந்திருந்த பண்டிதநேரு, உடனடி யாக தட்சிணப்பிரதேசம் உள்ளிட்ட பெரும் மாகாணங்கள் பிரிக்கும் திட்டத்தை
கைவிட்டார்.பின்னர்தான் மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டன என் பது வரலாறு. இப்படி தந்தை பெரியாரின் ‘தந்திகள்’ வரலாற்றின் பக்கங்களில் புகழ்மிக்க இடத்தைப் பெற்றிருக்கின்றன.

தூக்குமேடைக்கு அழைத்துச் செல்ல நாள் குறிக்கப்பட்ட ஒரு கைதியின் உயிரை ஒரு தந்திதான் காப்பாற்றியது. அந்த உயிரை காப்பாற்றிய மனிதநேய மாண்பாளர், கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் என்பதையும் வர லாற்றில் பார்க்க முடிகிறது.

1977 இல் நெருக்கடி நிலை காலத்தில் ‘மிசா’வில் கைது செய்யப்பட்டு தலை வர் வைகோ, பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அப் போது ஒரு கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்த குருசாமி என்பவரைச் சந்தித்தார். குருசாமி,வெள்ளை ஏகாதிபத்தியத் தை எதிர்த்து வீரமுரசு கொட்டிய வீரபாண்டிய கட்டபொம்மன் வாரிசு என்ப தை யும் அறிந்து கொண்டார். குடும்ப சொத்து காரணமாக குருசாமியின் மாமனா ருடன் ஏற்பட்ட மோதலில், அவர் மாமனார் ஆயுதம் ஏந்தி குருசாமியைத்தாக்க வந்தபோது இவர் தற்காப்புக்காக திருப்பித் தாக்கியதில், குருசாமியின் மாம னார் இறந்து போனார் என்பதும் தெரியவந்தது. குருசாமி சிலம்பம், தேவராட் டம் முதலிய கலைகள் கற்றவர். அப்பாவியான அவரது உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்று தலைவர் வைகோ முடிவு செய்தார். ஏற்கனவே 1977 ஜூனில் குருசாமியின் கருணை மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

தலைவர் வைகோ 1978 இல் மாநிலங்களவை உறுப்பினராக பதவி ஏற்றவுடன்,
குருசாமியைக் காப்பாற்ற அப்போதைய இந்தியக் குடியரசுத் தலைவர் நீலம்
சஞ்சீவி ரெட்டியைச் சந்தித்து, 38 எம்.பி.க்கள் கையெழுத்துடன் ஒரு முறை யீட்டைக் கொடுத்தார். வீரபாண்டிய கட்டபொம்மன் வாரிசு குருசாமிக்கு
கருணை காட்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். குடியரசுத் தலைவர் நீலம் சஞ்சீவி ரெட்டி, குருசாமிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற இடைக் கால தடையும் வழங்கினார்.

பின்னர் மீண்டும் குருசாமியின் கருனை மனு தள்ளுபடி செய்யப்பட்டு, 1981
செப்டம்பர் 15 அன்று அவருக்கு தூக்கு என்று நாள் குறிக்கப்பட்டது. தலைவர்
வைகோ, 50 எம்.பி.க்களின் கையெழுத்துடன் ஒரு முறையீட்டை 1981 செப்டம் பர் 8 அன்று குடியரசுத் தலைவரிடம் அளித்தார். அதை அப்போதைய உள்துறை
அமைச்சர் வெங்கட சுப்பையாவிடம் அனுப்பினார் குடியரசுத் தலைவர். தூக் குத் தண்டனையை நிறுத்தும் அதிகாரம் இந்திய அரசுக்கு உள்ளது என்று உள் துறை அமைச்சரிடம் வாதாடி, 1981 செப்டம்பர் 9 இல் குருசாமியின் தூக்குத் தண்டனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இதற்கிடையில் குருசாமியின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் கியான்
ஜெயில்சிங் நிராகரித்துவிட்டார்.விடுதலைப்போராட்ட வீரர் ஒருவரின் வாரிசு
என்பதற்காக கிரிமினல் குற்றவாளி எவருக்கும் தண்டனையைக் குறைக்க முடியாது என்று காரணம் கூறப்பட்டது. இந்நிலையில் குருசாமிக்கு 1984, ஜூன் 21 அன்று தூக்குதண்டனை நிறைவேற்றப்படும் என்று நாள் குறிக்கப்பட்டது.

சென்னையில் இருந்து தலைவர் வைகோவுக்கு இத்தகவல் தெரிவிக்கப்பட்ட வுடன், எப்படியும் குருசாமியின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்று உறுதி பூண்டார்.அப்போது பிரபலமாக இருந்த வழக்கறிஞர் என்.டி.வானமாமலை அவர்களைச் சந்தித்து, நீண்ட நேரம் ஆலோசனை செய்தார். அதன்படி உடனடி யாக செயலில் இறங்குவது என்று தீர்மானிக்கப்பட்டது. பாளையங்கோட்டை சிறையில் இருக்கும் குருசாமி, உச்சநீதிமன்றத்திற்கும், சென்னை உயர்நீதி மன்றப் பதிவாளருக்கும், தன்னைக் காப்பாற்றக்கோரி ‘தந்திகள்’ அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டது.

தூக்குதண்டனை நிறைவேற்ற இரண்டு நாட்களே உள்ள நிலையில் குருசாமி யின் ‘தந்தி’யை மனுவாக ஏற்று வழக்கை விசாரிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் கோரப்பட்டது. தலைவர் வைகோவின் முயற்சியால் உயர்நீதி மன்றமும் குருசாமியின் தூக்குதண்டனையை நிறைவேற்ற இடைக்கால
தடை உத்தரவு பிறப்பித்தது. பின்னர் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டு,
சிறையில் கழித்த தண்டனை காலத்தைக் கழித்து சொற்பகாலமே சிறையில்
இருந்துவிட்டு விடுதலை ஆனார் குருசாமி.

தூக்கு மேடைக்கு போக இருந்த குருசாமியின் உயிரை ‘தந்தி’தான் காப்பாற்றி யது.இன்னும் எவ்வளவோ வரலாற்று நிகழ்வுகளுடன் பின்னிப் பிணைந்தி ருந்த ‘தந்தி’தான் இப்போது நிரந்தரமாக பறந்துவிட்டது. மறைந்துவிட்டது.

No comments:

Post a Comment