Monday, August 12, 2013

தமிழர் பிரச்னைகளில் மதிமுக

தமிழர் பிரச்னைகள் தொடர்பாக மதிமுக போராடுகிறது என்றார் பொதுச் செயலாளர்  #வைகோ.

பெரம்பலூரில் பெரம்பலூர் -அரியலூர் மாவட்ட மதிமுக சார்பில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற தேர்தல் நிதியளிப்புக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியது:

திமுகவை எதிர்த்து தொண்டர்களால் உருவாக்கப்பட்ட மதிமுக அண்ணாவின் கொள்கை வழியில் நடத்தப்படுகிறது. அரசியலில் நேர்மை, நாணயம்,ஒழுக்கம் உள்ள ஒரே கட்சி மதிமுகதான். நேர்மையாக உழைத்து கறைபடாத கரத்திற் குச் சொந்தக்காரர்களாக விளங்கி வருகிறோம். மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கொண்டு கட்சி நடத்தி வந்தவர்கள் எல்லாம், காணாமல் போகும் நிலை உருவாகி வருகிறது. ஆனால் யாராலும் எங்கள் கட்சியை அழிக்க முடியாது. தற்போது மக்களிடையே மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்த நேரத்தில் மதிமுக தொண்டர்கள் கடுமையாக உழைத்து, அதை வாக்கு
களாக மாற்ற வேண்டும். திமுக, அதிமுகவுக்கு மாறுபட்ட அரசியல் கட்சியாக மதிமுக திகழ்கிறது. தமிழகத்தைப் பொருத்தவரை பொதுமக்களும், இளைஞர் களும் மதிமுகவைத் தேர்வு செய்ய உள்ளனர். சுயமரியாதை, தன்மானத்தால் தான் கடந்த சட்டப்பேரவை தேர்தலை மதிமுக புறக்கணித்தது.

தமிழர்களுக்காக மது ஒழிப்பு, ஸ்டெர்லைட் ஆலை, கூடங்குளம் அனுமின் நிலையம், ஈழத்தமிழர், நதிநீர் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை முன் வைத்து மதிமுக போராடி வருகிறது. இலங்கையில் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள காமன் வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது. மேலும், அங்கு காமன்வெல்த் மாநாட்டை நடத்தக் கூடாது. செப். 15 அண்ணா பிறந்த நாளில், விருதுநகரில் மதிமுக தேர்தல் மாநாடு நடைபெறுகிறது.

இதில் பெரம்பலூர், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த கட்சியினர் திரளாகக் கலந்து கொள்ள வேண்டும். இந்த மாநாடு அரசியலில் திருப்பத்தை ஏற்படுத் தும் என்றார் வைகோ.

முன்னதாக, பெரம்பலூர் மாவட்டம் சார்பில் ரூ. 10 லட்சமும், அரியலூர் மாவட்டம் சார்பில் ரூ. 19 லட்சமும் தேர்தல் நிதி வழங்கப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டச் செயலர் செ. துரைராஜ் தலைமை வகித்தார்.

அரியலூர் மாவட்டச் செயலர் கு. சின்னப்பா வரவேற்றார். பெரம்பலூர் நகரச் செயலர் ஏ.ஆர். ராஜேந்திரன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment