திருப்பூர் மாவட்டக் கழகத்தின் சார்பில் கழக வளர்ச்சி நிதி - தேர்தல் நிதி வழங்கும் நிகழ்ச்சி 22.07.2013 அன்று பல்லடத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் ஆற்றிய உரையில் இருந்து....
எங்கெங்கு காணினும் சக்தியடா
தம்பி, ஏழு கடல் அவள் வண்ணமடா
அண்டவெளியினில் கோடி அண்டம்
அத்தாயின் கைப்பந்தென ஓடுதடா
ஒரு கங்குலில் ஏழு முகில் இனமும் வந்து
கர்ஜனை செய்வது கண்டதுண்டோ?
என்ற இந்தப் பாடல்தான், பாவேந்தருடைய முதல் பாடலாக, எனது கவிதா மண்டலத்தில் இருந்து அனுப்பப்படுகிறது என, முண்டாசுக் கவிஞன் பாரதி
வருணனை செய்த பாடல்.
எழுபது இலட்சம் ரூபாயைத் தந்து விட்டு, இங்கும் அதுபோல ஏழு முகில் இன மும் கர்ஜனை செய்வதைப்போல, எங்கே வரப்போகிறது களம்? அந்தக் களத் தில் எங்களை வெல்வார் உண்டோ? என இங்கே உணர்ச்சிமயமாகத் திரண்டு
இருக்கின்ற கழகக் கண்மணிகளே, உங்களைச்சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின் றேன்.
களத்தில் சல்லடம் கட்டி நிற்கின்றோம் என்பதை எடுத்துக் காட்டுவதற்காகத் தான், கழக நிதி வழங்குவதற்காக, இந்தப் பல்லடத்தைத் தேர்ந்து எடுத்து இருக் கின்றீர்கள் போலும்!
1934 இல், அறிவாசான் தந்தை பெரியார் அவர்களை, பேரறிஞர் அண்ணா அவர் கள் சந்திக்க நேர்ந்த திருப்பூர், திராவிட இயக்கத்துக்குத் தந்த கொள்கை வேழ மாக, தொழிலாளர் தலைவனாக,சோதனைகள் முற்றுகை இட்ட வேளையில்,
நீதிக்காக நாங்கள் தொடர்ந்த அறப்போரின் முன்னணித் தளகர்த்தர்களுள் ஒரு வராக இயங்கி, இன்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் அவைத் தலைவராகவும், மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணியின் பொதுச் செயலாள ராகவும் திகழ்கின்ற ஆருயிர் அண்ணன் திருப்பூர் துரைசாமி அவர்கள் இந்தக் கூட்டத்துக்குத் தலைமை தாங்குகின்றார்கள்.
கவலைகளும், சூழ்ந்து வருகின்ற நிலைமைகளால்,நெஞ்சிலே வெகுண்டெ ழும் வேதனையும் படர்ந்தால், சொற்கள் தானாகத் தாவி வரும்.திகைத்துப் போய் மனம் ஆனந்த வெள்ளத்தில் திக்குமுக்காடுகிறபோது, எனக்கு வார்த் தைகள் தடுமாறும். அப்படி ஒரு நிலைமையில் இருக்கின்றோம்.
நான்கு மணி நேரமாக இந்த அரங்கத்தில் அமர்ந்து இருக்கின்றீர்கள். உணவு அருந்துகின்ற நேரம் தவறி விட்டது. இந்த நிலையிலும், இவ்வளவு பெருங் கூட்டத்தில் ஏதேனும் ஒரு சலசலப்பு இல்லை; அவசரக்குரல் இல்லை. இரா ணுவத்தில் கூட இந்தக் கட்டுப்பாட்டைப் பார்க்க முடியாது.அப்படி வார்ப்பிக் கப்பட்ட இயக்கம் மறுமலர்ச்சி தி.மு.க. இது நாட்டுக்குத் தேவையான இயக்கம்.
திருப்பூர் மாவட்டத்தில் 70 இலட்சம் ரூபாய் என்பது பெருந்தொகை. கற்பனை செய்ய முடியாத தொகை.

இங்கே ஆலை அதிபர்களிடம் அச்சுறுத்தி வாங்கப்பட்ட தொகையா? இல்லை.
ஆசை வார்த்தை கூறி வாங்கப்பட்ட தொகையா? இல்லை.
இன்று நிதி தராவிட்டால், உங்களை வேறு விதத்தில் கவனிப்போம் என்று மிரட்டித் திரட்டபட்ட தொகையா? இல்லை.
அன்பு நெஞ்சங் கொண்டோர் அள்ளித் தந்த தொகை.எங்கள் மீது கனிவு கொண் டு இருக்கின்ற தமிழக மக்கள் வழங்கி இருக்கின்ற நிதி.
கவலைப்பட்டார்; களிப்பைத் தந்தார்
ஒன்றிரண்டு மாதங்களுக்கு முன்பு ஒன்றாகக் காரில் பயணிக்கின்றபோது, நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள நிதி வேண்டுமே? என்று நான் கவ லைப்பட்டபோது, பட்டறிவுமிக்க நமது மாவட்டச்செயலாளர் ஆர்.டி.எம். அவர் கள், அவைத்தலைவரை வைத்துக் கொண்டே சொன்னார்: மதுவின் பிடியில்
இருந்து தமிழகத்தை மீட்க, 13 நாள்கள் இந்தக் கொங்கு மண்டலத்தில் நீங்கள் நடைப்பயணம் மேற்கொண்டீர்களே? அப்பொழுதே பெரும் பொருட்செலவு தான் நமது தோழர்களுக்கு.
ஆயிரக்கணக்கான தோழர்களுக்கு உணவு,வழிநெடுகிலும் வரவேற்பு ஏற்பாடு கள், வண்ணமணிக் கொடிகள், தங்கும் இடம், மதுவின் கொடுமையை விளக்கு கின்ற பட்டயங்கள் என பெரும் பொருட் செலவு ஆகி இருக்கின்றது. எனவே
இப்போது உடனே தேர்தல் நிதி திரட்டுவது சற்றே கடினமாக இருக்கும். என வே, எங்கள் திருப்பூர் மாவட்டத்துக்கு மட்டும் இரண்டு மாதங்கள் தவணை கொடுங்கள் என்று கேட்டார்கள்.
அவர்களுடைய தயக்கத்தை உணர்ந்து கொண்டவனாக, நீங்கள் சொல்வது உண்மைதான்.உங்களுக்கு அதிக பளுவை நான் கொடுக்க விரும்ப வில்லை; உங்களால் இயன்றதைக் கொடுங்கள்; எவ்வளவு கொடுத்தாலும் மகிழ்ச்சி யோடு ஏற்றுக் கொள்கிறேன் என்றுதான் நான் சொன்னேன்.
ஆனால், 70 இலட்சம் ரூபாயை அள்ளிக் கொடுத்து இருக்கின்றீர்கள்! அன்று அவர் கவலைப்பட்டதற்கு மாறாக, இன்று என்னைக் களிப்பு அடையச் செய்து
இருக்கின்றார்.
கழகம் ஒரு கால்பந்து அணி
ஈரோடு மாவட்டத்தில் இந்த முறை பெருநிதி தர முடியவில்லையே என்று நமது நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் வருத்தப்பட்டார்கள். அவரிடம் நான் சொன்னேன்: யார் கொடுத்தால் என்ன? கால்பந்து ஆட்டத்தில், பதினோரு பேர்
ஆடுகிறார்கள். அவர்கள் எல்லோரும் சேர்ந்துதான், எதிர் அணியை எதிர்த்து நிற்கின்றார்கள். பதினோரு பேரும் போராடுகிறார்கள்; ஆனால், ஒரு வீரன் தான் கோல் அடிக்கின்றான்; அப்போது, மற்றப் பத்துப் பேரும் அவனைத் தோளில் தூக்கிக் கொண்டு ஆனந்தக் கூத்து ஆடுகிறார்கள். அந்தக் குழு வெற்றி பெற்று விட்டது.
அதுபோலத்தான், நமது கழகம் என்பது ஒரு கால்பந்து அணி. எல்லோரும் ஒன் றாகத்தான் ஆடுகிறோம். யார் கொடுத்தாலும், அது எல்லோரும் சேர்ந்து
கொடுத்தது போலத்தான்.
நீ அணிந்து இருப்பதும் ஆத்திப் பூ மாலைதான்;உன்னைக் களத்தில் எதிர்த்து நிற்கின்றானே, அவன் அணிந்து இருப்பதும் ஆத்திப் பூ மாலைதான்.

நின்ன கண்ணியும் ஆர்மிடைந் தன்றே;
நின்னொடு பொருவோன் கண்ணியும் ஆர் மிடைந் தன்றே;
ஒருவீர் தோற்பினும், தோற்ப நும் குடியே;
இருவீர் வேறல் இயற்கையும் அன்றே
என்றான் புலவன். அதை நான் சற்றே மாற்றிச் சொல்லுகிறேன். இது வீரமும் மானமும் தழைத்த கொங்கு மண்டலத்தின் கொடி. இங்கே,யார் கொடுத்தாலும், அது நீங்கள் எல்லோரும் சேர்ந்து கொடுத்ததுதானே? யாவர் வென்றிடினும், அது நீவிர் பெற்ற வெற்றி அல்லவா?
1996 முதல், இதுவரை நாம் சந்தித்த அனைத்துத்தேர்தல்களிலும், நம்மிடம் இருந்த நிதியை எல்லோருக்கும் சமமாகப் பகிர்ந்துதான் கொடுத்து இருக்கின் றோம். பாரபட்சமே கிடையாது.இத்தகைய அணுகுமுறையை நீங்கள் வேறு எங்கும் பார்க்க முடியாது. இந்த இயக்கத்தில் இருக்கின்ற சமத்துவம், சகாக் களுக்கு இடையே பகிர்ந்து கொள்கின்ற உணர்வும்தான் எங்களுடைய பெருமை.
அவைத்தலைவர் அண்ணன் திருப்பூர் துரைசாமி அவர்கள், நாள்தோறும் காலை முதல் இரவு வரை நிதி திரட்டுகின்ற பணிகளில் தம்மை முழுமையாக
ஈடுபடுத்திக் கொண்டு, இவ்வளவு நிதியைத் திரட்டுவதற்காகப் பாடுபட்டார் என்று, ஆர்டிஎம் அவர்கள் நேற்று என்னிடம் சொல்லிச் சொல்லி மகிழ்ந்தார் கள்.
தலைமை நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள்,முன்னோடிகள் என இந்த இயக்கத்தில் எல்லோருமே ஒரே குரலாக எழுகிறோம். ஒரே நேர்கோட்டில் சிந்திக்கின்றோம். கட்டுக்குலையாத இந்த ஒற்றுமை, எங்களுக்குக் கிடைத்து
இருக்கின்ற பெரிய பேறு.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இவ்வாறு உரை ஆற்றினார்.

No comments:
Post a Comment