Sunday, August 11, 2013

முல்லைப் பெரியாறு வழக்கில்

முல்லைப் பெரியாறு வழக்கில் உச்ச நீதிமன்றம் எழுப்பிய கேள்வி!

சங்கொலி தலையங்கம் 
‘தினத்தந்தி’ நாளிதழில் வெளிவரும் கன்னித்தீவு-சிந்துபாத் கதைகூட முடிந்து விடும். ஆனால், முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கு உச்சநீதி மன்றத்தில் முடியாது போல் தெரிகிறது. உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் மீண் டும் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைகளாலும், கேரள மாநில அரசு
எடுத்து வைக்கும் புதிய புதிய ஏற்க முடியாத காரணங்களாலும் தமிழ்நாட்டின்
உரிமையை நிலைநாட்ட முடியாமல், காலம் ஓடிக்கொண்டே இருக்கிறது.

முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடி யாக உயர்த்திக் கொள்ளலாம் என்று 2006 பிப்ரவரி 27 ஆம் தேதி உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஒய்.கே.சபர்வால் தலைமையில் நீதிபதிகள் சி.கே.தக்கர், பி.கே.பாலசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவை ஏற்க மறுத்த கேரள அரசு,அடாவடித்தனமான முறையில், 2006 மார்ச் 15 இல் நதிகள் பாதுகாப்புச் சட்டத்தை கேரள சட்ட மன்றத் தில் கொண்டுவந்து நிறைவேற்றியது.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்று நடைமுறைப்படுத்தாமல், தான் தோன்றித் தனமாக ஒரு அவசர சட்டத்தை கொண்டுவந்த கேரள அரசை எதிர்த்து, தமிழக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு தற்போது 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரணையில் இருக்கிறது. மாண்பமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையில் நீதிபதிகள் எச்.எல்.தத்து, சந்திரமவுலி கிருஷ்ணபிரசாத், மதன் பி.லோகுர், எம்.ஒய்.இக் பால் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன்பு, ஜூலை 23 ஆம் தேதி முல்லைப் பெரியாறு வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த இறுதி விசா ரணையில் தமிழக அரசின் சார்பில், வழக்கறிஞர் வினோத் பாப்டே, உச்சநீதி மன்றத்தில் ஜூலை 23, 24 மற்றும் 25 தேதிகளில் தமிழக அரசின் வாதங்களை முன்வைத்தார். கேரள அரசு தரப்பில் அரசு வழக்கறிஞர்கள் ராஜீவ் தவான் மற்றும் ஹரீஷ் சால்வே வாதாடினார்கள்.

வாதத்தைத் தொடங்கி வைத்து தமிழக அரசின் வழக்கறிஞர் வினோத் பாப்டே
கீழ்க்காணும் கருத்துகளை எடுத்துரைத்தார்.

“கடந்த 2006 ஆம் ஆண்டில், உச்ச நீதிமன்றம் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த உத்தரவிட்டது. ஆனால்,இந்த உத்தரவை ஏற்க மறுத்த கேரள மாநில அரசு, அடுத்த 16 நாட்களுக்குள் புதிய அணை கட்டு வதற்கான சட்டம் இயற்றும் தீர்மானத்தை சட்ட சபையில் நிறைவேற்றியது. அதன்பிறகு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மறுபரிசீலனை செய்யு மாறு கேரள அரசு தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

2010 ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த்
தலைமையில் உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட நிபுணர்கள் குழு முல் லைப் பெரியாறு அணையின் உறுதித் தன்மை குறித்து நுட்பமான ஆய்வுகளை மேற்கொண்டது. அந்தக் குழுவில் தமிழ்நாடு சார்பில் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன், கேரள மாநிலத்தின் சார்பில், நீதிபதி கே.டி.தாமஸ் இடம் பெற்றிருந்தனர். இந்தக் குழு 2012 ஆம் ஆண்டு தனது அறிக்கையை தாக் கல் செய்தது. அதில் பாறைகள் மீது கட்டப்பட்டு இருப்பதால், முல்லைப் பெரி யாறு அணை உறுதியாக இருப்பதாகவும்,எத்தனையோ முறை நில நடுக்கங் கள் ஏற்பட்டும், அணைக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் அறிக்கை யில் தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

அணையின் உறுதித் தன்மை பாதிக்கப்பட்டதாக நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலை மையிலான குழுவின் விசாரணை அறிக்கையில் எந்தப் பகுதியிலும் குறிப்பி டப்படவில்லை. இதிலிருந்தே முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காமல், கேரள அரசு புதிய அணை கட்டுவதில்தான் உறுதியாக இருக்கிறது.

ஒரு வேளை அணை வலுவிழந்து காணப்பட்டால் முல்லைப் பெரியாறு அணைக்குப் பதிலாக புதிய அணை கட்டுவதற்கு தமிழ்நாட்டிற்குத்தான் உரிமை இருக்கிறது. கேரள அரசுக்கு இதில் எந்தவித அதிகாரமும் இல்லை.

முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக கடந்த 1886 ஆம் ஆண்டு அக்டோபர் 29 ஆம் தேதி திருவாங்கூர் சமஸ்தானத்திற்கும் இந்திய அரசுக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. இதன்படி 999 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் நீடிக் கின்றது. தமிழ்நாட்டுக்குத்தான் முல்லைப் பெரியாறு அணையின் சட்டப்படி யான உரிமை இருக்கின்றது” என்று தமிழக அரசின் சார்பில் வழக்கறிஞர் வினோத்பாப்டே வாதங்களை எடுத்துரைத்தார்.

ஜூலை 23 கேரள மாநிலத்தின் சார்பில், அரசு வழக்கறிஞர் ராஜீவ் தவான்
வாதங்களை முன்வைத்தார்.

“கேரள அரசு ரூ.1000 கோடி மதிப்பில் முல்லைப் பெரியாறில் புதிய அணை  கட்டுவதற்கு முடிவு செய்துள்ளது. புதிய அணை கட்டப்பட்டாலும் தமிழகத் திற்கு வழங்கப்படும் தண்ணீரின் அளவை குறைக்க மாட்டோம்.ஆனால், தமிழ் நாடு மின்உற்பத்தித் திட்டம் பாதிக்கும் என்பதால், புதிய அணையைத் தடுக்க நினைக்கிறது. புதிய அணையினால் மின் உற்பத்தியும் பாதிக்காது” என்றார்.

ஜூலை 30, 31 ஆம் தேதிகளில் கேரள மாநிலம் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே வாதாடினார். அப்போது அவர், “இது முல்லைப் பெரியாறு
அணையின் தண்ணீருக்காகவோ பாதுகாப்புக்காகவோ தொடரப்பட்ட வழக்கு
அல்ல. 1886 ஆம் ஆண்டு திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கும், இந்திய அரசுக் கும் இடையே போடப்பட்ட ஒப்பந்தம், இந்தியா சுதந்திரம் பெற்றவுடன் காலா வதி ஆகிவிட்டது.

1950 ஆம் ஆண்டு திருவிதாங்கூர், கொச்சி பகுதிகளை இணைத்து கேரளா உரு வானது. 1970 ஆம் ஆண்டு கேரளாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே ஏற்பட் டது ஒரு தற்காலிக உடன்படிக்கைதான். அது நிரந்தரமானது அல்ல.2006 ஆம் ஆண்டு கேரள அரசு அணை பாதுகாப்புச் சட்டத்தை அறிமுகப்படுத்தியது. அப் போது முதல் 1970ஆம் ஆண்டு போடப்பட்ட உடன்படிக்கை செல்லுபடி ஆகாது. முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்திற்கு எந்தவித அதிகார மும் இல்லை.

1879 ஆம் ஆண்டு முல்லைப் பெரியாறு அணையைக் கட்டியது தமிழ்நாடுதான். இதனால், முல்லைப் பெரியாறு அணை தமிழ்நாட்டுக்குத்தான் சொந்தம். ஆனால், அணை பாதுகாப்பு சட்டப்படி அந்த அணையின் நீர் மட்டத்தை உயர்த் துவது தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் கேரளாவுக்குத்தான் இருக்கின் றது. 1979 ஆம் ஆண்டில் அணையில் விரிசல் ஏற்பட்டதால்தான் நீர் மட்டத்தை 136 அடியாக குறைக்க வேண்டி இருந்தது” என்று கேரள மாநில அரசு தரப்பில் வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே வாதங்களை முன்வைத்தார். ஜூலை 30 ஆம் தேதி கேரள அரசின் வழக்கறிஞர் சால்வே வாதாடியபோது, குறுக்கிட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், “2006 இல் உச்ச நீதிமன்றம் அணையின் நீர்மட்டத்தை 136 அடிலிருந்து 142 அடியாக உயர்த்திக்கொள்ளலாம் என்று உத்தரவு பிறப்பித்த 16 நாட்களுக்குள் அணை பாதுகாப்புச் சட்டத்தை கொண்டு வருவதற்கான அவசி யம் என்ன?” என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு சால்வே, “2006 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது திருத்தம் செய்யப் பட்ட சட்டம்தான். கேரள மக்களை பாதுகாக்கவே இந்தச் சட்டம் கொண்டுவரப் பட்டது. நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் குழு அறிக்கையில் பல்வேறு குளறுபடிகள் இருக்கிறது. அதனை ஏற்க முடியாது” என்றார்.

அப்போது நீதிபதிகள் கேரள அரசு வழக்கறிஞரிடம் சரமாரியாக கேள்வியை
எழுப்பினர். அணையின் நீர் மட்டத்தை 136 அடிக்கு மேல் உயர்த்திவிடக்கூடாது என்பதில் கேரள அரசு தீவிரம் காட்டி வருவதிலிருந்தே தமிழ்நாட்டுக்கு உரிமை உள்ளது என்பதை உறுதி செய்வதுபோல் இருக்கிறது. முல்லைப் பெரி யாறு அணையின் நீரை கேரள மக்கள் பாசனத்துக்கு பயன்படுத்து கிறார்களா? அப்படி பயன்படுத்தவில்லை என்றால், கேரள அரசு கொண்டுவந்த அணை பாதுகாப்புச் சட்டம் செல்லுபடி ஆகாது அல்லவா? ஒரு மாநிலத்தில் கொண்டு வரும் சட்டமானது அண்டை மாநிலங்களின் உரிமையைப் பறிப்பது போல் இருக்கக்கூடாது. அணை பாதுகாப்பாக உள்ளதா? இல்லையா? என்பது குறித்து கேரள தரப்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளுக்கு ஆவணங்கள் ஆதாரங்கள் இருக்கிறதா? என்று நீதிபதிகள் கேட்டனர்.

ஆனால், கேரள வழக்கறிஞர் அவற்றுக்கு உரிய பதில் அளிக்காமல், வழக்கின்
போக்கை மாற்றும் வகையில் வாதாடினார்.

மேலும், கேரள அரசின் வழக்கறிஞர் சால்வே ஜூலை 31 ஆம் தேதி வாதங் களை எடுத்துரைத்த போதும், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குறுக்கிட்டனர்.

அணை தமிழ்நாட்டுக்குச்சொந்தம் என்ற வாதத்திலேயே தமிழ்நாட்டுக்குத்தான் சட்ட ரீதியான உரிமை அதிகம் இருப்பதைக் காட்டுகிறது. அதனால்தான் நீர் மட்டத்தை உயர்த்த வேண்டும் என்று தமிழ்நாடு உரிமையுடன் கேட்கிறது. அணை தற்போது பாதுகாப்பாக இருக்கிறதா? இல்லையா? என்பதை கேரள அரசு உறுதி செய்ய வேண்டும்.உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நீர்மட்டத்தை உயர்த்தினால் என்ன பாதிப்பு ஏற்படும் என்பதற்கு ஏதேனும் ஆதாரங்கள் இருக் கிறதா?” என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த சால்வே, “முல்லைப் பெரியாறு நீர்மட்டத்தை குறைத்தால்
இடுக்கி அணை நீர்மட்டம் உயராது. ஆனால், தமிழ்நாடு இடுக்கி அணையின் நீர்மட்டம் குறையும் என்பதால்தான் கேரள அரசு,முல்லைப் பெரியாறு அணை யின் நீர்மட்டத்தை உயர்த்தாமல் இருப்பதாக நினைப்பது தவறு.மக்கள்நலனை யும், பாதுகாப்பையும் கருத்தில் கொண்டுதான் நீர்மட்டத்தை உயர்த்தாமல் இருக்கிறோம்” என்றார். உடனே நீதிபதிகள்

“அப்படியென்றால்,மக்களின் பாதுகாப்பில் உச்சநீதிமன்றத்துககு அக்கறை  இல்லாததுபோல் வாதங்களை முன் வைக்கிறீர்கள். 2006 ஆம் ஆண்டு மிகுந்த
விசாரணைக்கு பிறகுதான் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்த உத்தரவிட்டது. 2010 ஆம் ஆண்டு ஏ.எஸ். ஆனந்த் குழுவையும் உச்ச நீதிமன்றம் நியமித்தது. அந்தக் குழுவும் ஆய்வு நடத்தி அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என்றும், அதனால், எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் அறிக்கை அளித்தது. 

ஆனால், கேரள அரசு இதனை செயல்படுத்தாமல், தேவையற்ற வாதங்களை முன் வைக்கிறது. உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவு வெளியான 16 நாட்களுக் குள் கேரள அரசு அணை பாதுகாப்புச் சட்டம் கொண்டு வருகிறது. இது உச்ச நீதிமன்ற தீர்ப்பைச் செயலிழக்கச் செய்வது போல இருக்கிறது. தேவைப்பட் டால், அணை பாதுகாப்புச் சட்டத்தை இரத்து செய்யும் உரிமைகூட உச்ச நீதி மன்றத்துக்கு இருக்கிறது. மாநிலம் கொண்டுவரும் எந்தச் சட்டமும் உச்ச நீதி மன்ற உத்தரவை பாதிக்கக்கூடாது” என்று எச்சரிக்கை விடுத்தனர்.

இந்த வழக்கு விசாரணையின்போது, இன்னொரு சிக்கலான கேள்வியை உச்ச
நீதிமன்ற நீதிபதிகள் எழுப்பி இருப்பதுதான் தமிழ்நாட்டின் மரபு உரிமையை
பாதிக்கும் வகையில் இருக்கின்றது. 1886 இல் திருவாங்கூர் சமஸ்தானத்துடன்
போடப்பட்ட ஒப்பந்தமே காலாவதி ஆகிவிட்டது என்று கேரளா கூறுகிறது.
உச்ச நீதிமன்றமோ இதையே வேறு வகையில் கேட்கிறது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இந்த ஒப்பந்தம் திருவாங்கூர் அரசுக்கும் இந்திய அர சுக்கும் இடையில்தான் போடப்பட்டுள்ளது. தமிழக அரசுக்கு அதிகாரம் அளிக் கப்பட்டதாக எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை.எனவே தமிழக அரசுக்கு எந்த அடிப்படையில் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்பதற்கான விளக்கத்தை அளிக்க வேண்டும் என்று வற்புறுத்தினார்கள்.

இதற்கு தமிழக அரசின் வழக்கறிஞர் வினோத்பாப்டே விளக்கம் அளித்தார். கடந்த 1930 மற்றும் 1979 ஆம் ஆண்டுகளில் போடப்பட்ட ஒப்பந்தங்களை  சுட் டிக்காட்டி விளக்கம் அளித்ததை நீதிபதிகள் ஏற்க மறுத்தனர்.முக்கியத்துவம் வாய்ந்த முல்லைப் பெரியாறு அணை ஒப்பந்தத்தில் தமிழக அரசுக்கு உள்ள அதிகாரங்கள் குறித்து சரியான விளக்கம் அளிக்க முடியாததற்கு கண்டனமும் வருத்தமும் தெரிவித்த நீதிபதிகள் இது தொடர்பான ஆதாரங்களை அறிக்கை யாக தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசின் வழக்கறிஞருக்கு உத்தர விட்டுள்ளனர்.

தமிழ்நாட்டுக்காக அன்றைய ஆங்கிலேய அரசு 1886 அக்டோபர் 29 இல் திருவி தாங்கூர் சமஸ்தானத்துடன் செய்துகொண்ட முல்லைப் பெரியாறு ஒப்பந்தத் தை இன்றைய தமிர்நாடு உரிமை கோர வாரிசுரிமை உண்டா? இதை மெய்ப் பிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி லோதா உத்தர விட்டார்.

1935 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி இயற்றிய இந்திய சட்டத்தின் 177 ஆவது பிரிவு, உச்ச நீதிமன்றத்தின் வினாவுக்கு சரியான பதிலாக அமைந்துள்ளது. இச்சட்டத்தின் 177(1)(அ) பின்வருமாறு கூறுகிறது.

“இச்சட்டத்தின் பகுதி III செயலுக்கு வருவதற்கு முன்பு இந்திய அரசுச் செய லாளர் செய்துகொண்ட ஓர் ஒப்பந்தம் பகுதி III இல் கூறப்பட்டுள்ள மாகாணங் களில் ஒன்றிற்கு உரியதாக இருந்தால் அந்த ஒப்பந்தம் அந்த மாகாணம் செய் து கொண்டதற்கு உரிய அதிகாரத்தைப் பெறுகிறது.”

நாட்டின் விடுதலைக்குப் பின்னர் 1950 ஜனவரி 26 இல் நடைமுறைக்கு வந்த
இந்திய குடியரசின் அரசியல் சாசனத்தின் சட்ட விதி 363 மிகத் தெளிவாகக்கூறு கிறது.

363(1) இக்குடியரசுச் சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பு எந்த ஓர் இந் திய ஆட்சியாளரோ அல்லது இந்திய அரசாங்கமோ ஒரு தரப்பாக இருந்து போடப்பட்ட ஒப்பந்தம் உடன்படிக்கை ஏற்பாடுகள், சன்னத்துக்கள் ஆகியவற் றை செல்லாது என்று அறிவிப்பதற்கு உச்ச நீதிமன்றத்திற்கோ அல்லது எந்த நீதிமன்றத்துக்கோ அதிகாரம் இல்லை.

தற்போதுள்ள அரசமைப்புச் சட்டத்தின் விதி 131 இல் 1956 இல் சேர்க்கப்பட்ட
புதிய திருத்தமும் இன்னும் தெளிவாக சுட்டிக்காட்டுகிறது.

இச்சட்டம் செயலுக்கு வருவதற்கு முன்பு இந்திய அரசு செய்துகொண்ட ஒப்பந் தம் உடன்படிக்கை, ஏற்பாடுகள், சன்னத்துக்கள் ஆகியவை தொடர்ந்து நடை முறையில் இருக்குமானால் அவற்றின் செல்லுபடித் தன்மை பற்றி உச்சநீதி மன்றம் விசாரிக்க அதிகாரம் இல்லை.

ஆக, உச்ச நீதிமன்றம், பழைய சென்னை மாகாணத்தின் வாரிசுரிமை தமிழ் நாட்டுக்கு இருக்கிறதா? என்று எழுப்பிய கேள்விக்கு, விடுதலைக்கு முன்னால் இயற்றப்பட்ட இந்தியச் சட்டத்தின் பிரிவு 177(1)அ, 1950 இல் உருவாக்கப்பட்ட அரசமைப்புச் சட்டத்தின் விதி 363(1) மற்றும் 1956 ஆம் ஆண்டு சேர்க்கப்பட்ட திருத்தம் விதி 131 ஆகியவை மிகத் துல்லியமான,தெளிவான விளக்கத்தை அளிக்கின்றது. ஆகவே, உச்ச நீதிமன்றம் வாரிசுரிமைதாரர் யார் என்று எழுப் பிய கேள்வியே தேவையற்றது. சட்டப்படி அதற்கு அதிகாரமும் இல்லை.

உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் வலுவான ஆதாரங்கள் முன் வைக்கப்பட்டு, தமிழ்நாட்டின் உரிமையையும் முல்லைப் பெரியாறு ஒப்பந்தத் தில் நமக்குள்ள அதிகாரத்தை நிலைநாட்டவும் கேரள அரசின் புதிய அணை கட்டும் நயவஞ்சகமான சதித் திட்டத்தை முறியடிக்கவும் வேண்டும் என்பதே தமிழக மக்களின் எதிர்பார்ப்பு ஆகும்.

No comments:

Post a Comment