Monday, August 5, 2013

ஓமந்தூர் இராமசாமியாரும், மதுவிலக்கும்!

காந்தியடிகளின் கொள்கைகளை முழுக்க முழுக்க பின்பற்றி வாழ்ந்த சிறந்த உத்தமர், விவசாய முதலமைச்சர் ஓ.பி.ஆர். என்று அழைக்கப்பட்ட ஓமந்தூர்
பி.ராமசாமி ரெட்டியார். இவரைப் போன்ற ஒழுக்க சீலர்கள் அபூர்வமாகவே தோன்றுவார்கள்.

இவர் முதலமைச்சராக இருந்தபோதுதான் சித்த மருத்துவ ஆராய்ச்சிக்காக சென்னை அமைந்தகரையில் மேற்குக் கோடியில் 10 ஏக்கர் நிலம் வழங்கினார்.
அதுதான் சித்த மருத்துவத்தலைமையகம்,ஆராய்ச்சி நிலையமாகவும் அறிஞர் அண்ணா பெயரால் திகழ்ந்து வருகின்றது.
பாவேந்தர் பாரதிதாசன்

“ஓமந்தூர் இராமசாமியை
நாம் உளமார நனி வாழ்த்துகின்றோம்.
நல்லது செய்யும் நாட்டம் உடையவர்
அல்லாத நாட்டினின்று அகற்ற நினைப்பவர்
வஞ்சச் செயலால் வாழுமோர் இனத்தவர்
அஞ்சத் தகுமோர் சூழ்நிலை அமைத்தும்
அறமே மறமென வாயடி அடித்தும்
இறைமை தன்னை எடுத்தாண்டு கொள்ள
நெருங்குவார் அவர் நெருப்பென்று மீள்வார்
பொதுவில் வந்த அதிகாரத்தைத்
தனிமையில் விற்கும் தக்கைகள் ஒழியத்
தாய் நிலம் தவஞ்செய்து கிடக்கும் இந்நாள்
பணத்திற் சிறிதும் பற்றிலா ஏழையைத் தலை அமைச்சராய்ப்
பெற்றது தாய் நிலம்”

என்று புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் ஓமந்தூராரைப் போற்றிப்பாடினார்.

பேரறிஞர் அண்ணா

அறிஞர் அண்ணா திராவிட நாடு இதழில் (4.4.1948 பக்கம் 8,9,10,11) பெரியார் இராமசாமியும், காந்தி ராமசாமியும் என்ற தலையங்கம் தீட்டினார். 18.4.48
திராவிட நாட்டில் வெள்ளி முளைக்க 8 ஆண்டுகள், வகுப்புவாதம் - லேசாகத் தொடர்கதை எனும் கட்டுரை தீட்டினார் அறிஞர் அண்ணா.

புத்தனேரி ரா.சுப்பிரமணியம்

கவிஞர் ரா.சுப்பிரமணியம் ‘தினசரி’ இதழில் அப்போது எழுதிய கவிதை,

“இமயமே சாய்ந்திட்டாலும், இம்மியும் நேர்மை நீங்கார்
அமைதியின் வடிவம் ஆனார் அன்பினால் ஆளவந்த
தமிழகக் காந்தி நம் ராமசாமி நம் முதலமைச்சர்
கமிழ்ந்திடு (கமிழ்தரும்) புகழால் மீண்டும்
கட்சியின் தலைவர் ஆனார்

என்ற அந்தக் கவிதையைப் படித்து மகிழ்ந்த அறிஞர் அண்ணா தனது திராவிட நாடு கட்டுரையிலும் மேற்கோள் காட்டி மகிழ்ந்தார். ஆர்வமும் அறமும்
பொங்கும் ஆட்சியாக அவர் தம் ஆட்சி இருந்தது.

திருச்சி பெரம்பலூரில்..

திருச்சி பெரம்பலூரில் கள்ளச் சாராயம் காய்ச்சப்படுவதாக பிரபல தேசபக்தர்
கொடுமுடி இராஜகோபாலன் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரிடம் புகார் அனுப் பினார். மறுநாளே தன்னைச் சந்திக்க ஒரு ஆளை அனுப்பி வரச் சொன்னார். ஒருவாரம் ஓமந்தூராரும் கொடுமுடி ராஜகோபாலும் ஒன்றாகவே இருந்தார் கள்.

சாராயம் காய்ச்சுவோர் தண்டிக்கப் பட்டனர். அவர்களுக்கு உடந்தையாக இருந் த காவல்துறை அதிகாரிகள் தண்டிக்கப்பட்டனர்.பல அதிகாரிகள் தங் களது பதவியை இழந்தனர்.

கொடுமுடி ராஜகோபாலன்

“இன்றைய அமைச்சர்களாக இருந்தால் என் புகார் கடிதத்தையே சாராயம் காய்ச்சுவோரிடம் கொடுத்து மாமூலும் பெற்றுக் கொண்டு என்னையும் கொலை செய்திருப்பர்” என்றார் தியாகி இராஜகோபாலன். இறுதி வரை இந்தப் புகார் விவகாரம் எந்த போலிஸ் அதிகாரிக்கும் கிடைக்கவில்லை; அரசுக் கோப்புகளிலும்இடம்பெறவில்லை. (மாண்புமிகு ஓமந்தூர் இராமசாமி  ரெட்டி யாரின் நூற்றாண்டு மலர், தொடுத்தவர் கு.சேதுராமன், 1995, பக்கம் 166)

மதுவிலக்கு

ஓமந்தூரார் ஆட்சியில் அன்றைய தமிழகத்தின் 25 மாவட்டங்களிலும் மது விலக்கு கொண்டுவரப்பட்டது.மதுவிலக்குச் சட்டம் செம்மையான முறையில்
அமுல்செய்யப்படவும் அது வெற்றியாக அமையவும் ஆவனயாவும் செய்தார். (சோமலெ - விவசாய முதல் அமைச்சர் பக்கம் 331)

1895 இல் ஓமந்தூரில் பிறந்து அரசியலில் மெல்ல மெல்ல வளர்ந்து 1922 திண்டி வனம் காங்கிரஸ் கமிட்டித் தலைவராகி, சிதம்பரத்தில் நடைபெற்ற தென் ஆற் காடு மாவட்ட காங்கிரஸ் மாநாட்டில், (தந்தை பெரியார் தலைமையில் நடை பெற்றது)பங்கேற்றார்.1947 மார்ச் 23 சென்னை மாகாணத்தின் பிரதமராகப்பதவி ஏற்றார். 1949 ஏப்ரல் 6 இல் முதலமைச்சர் பொறுப்பில் இருந்து  விலகினார்.

காந்தி ராமசாமி! பெரியார் ராமசாமி!

இந்தியா சுதந்திரம் அடைந்த 1947க்கு முந்தைய ஆண்டும், பிந்தைய ஆண்டும்
சென்னை ராஜதானியின் முதலமைச்சராக இருந்த இவர் குறித்து அறிஞர் அண்ணா எழுதிய திராவிட நாடு கட்டுரைகளை வாசிக்க விரும்புவோர் ப.திரு மாவேலனின் காந்தி ராமசாமியும் பெரியார் ராமசாமியும் என்ற நூலினை
வாசித்து அறிந்து கொள்ளலாம்.

தமிழர் தலைவர் வைகோ

ஓமந்தூரார் தனது ஆட்சிக்காலத்தில் மதுவிலக்கை கொண்டு வருவதில் அதிக அக்கறைகாட்டி வெற்றி கண்டவர். அன்றைய தமிழகத்தின் 25 மாவட்டங் களி லும் மதுவிலக்கை வெற்றிகரமாக அமுல்படுத்தியவர் ஓமந்தூரர். அவரைப் போன்ற தியாக சீலர்கள் போற்றிய மதுவிலகுக் கொள்கையை ‘முழு மது விலக்கு; அதுவே நமது இலக்கு’ என்ற முழக்கத்துடன், இலட்சிய உணர்வுடன் அயராது பணியாற்றி வரும் தமிழர் தலைவர் வைகோவின் ‘மதுவிலக்கு’ முயற்சிகள் விரைவில் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமில்லை.

நன்றிகள் 

கட்டுரையாளர் :- செ.திவான்

வெளியீடு :- சங்கொலி

No comments:

Post a Comment