Saturday, August 24, 2013

மது ஒழிப்பில் சி.சுப்பிரமணியம்

திருச்சி அருகே உள்ள காவிரிக் கரையோரம் திருப்பராயத்துறையில் தபோ வனம் அமைத்துக் கல்விப் பணியாற்றிய சித்பவானந்தர் அவர்களால் வார்ப் பிக்கப்பட்டவர் சி.எஸ்.என்று அழைக்கப்படும் பாரத ரத்னா சி.சுப்பிரமணியம் அவர்கள். சட்டப் படிப்பை முடித்த பிறகு, கோவை அருகே போத்தனூர் இரயில் நிலையத்தில் காந்தியடிகளை முதன் முதலாக நேரில் சந்தித்தார். அப்போதி ருந்து காங்கிரஸ் பேரியக்கத்தில் தனது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டார்.

1947 ஆகஸ்டு 15 அன்று பண்டித ஜவஹர்லால் நேரு சுதந்திர தின பிரகடனத் தை நிகழ்த்தும்போது உடன் இருந்தவர். இராஜாஜி அமைச்சரவையில் தமிழகத் தின் கல்வி, நிதி அமைச்சராக இருந்தவர். தொடர்ந்து பெருந்தலைவர் காம ராஜர் அமைச்சரவையிலும் மந்திரியாக நியமிக்கப்பட்டார். அதற்குப் பிறகு பொள்ளாச்சி அமைச் சரவையிலும் மந்திரியாக நியமிக்கப்பட்டார்.

அதற்குப் பிறகு பொள்ளாச்சி நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மத்
திய அரசின் உணவு மற்றும் வேளாண்துறை அமைச்சராக இருந்தவர். பின்பு
அறிவியல் தொழில்நுட்ப அமைச் சராகவும், பாதுகாப்புத்துறை அமைச் சராக வும் பொறுப்பு வகித்தார் சி.சுப்பிரமணியம் அவர்கள். போர்லாக் விருது, இந்தி யாவில் உயரிய விருதான பாரத ரத்னா விருது ஆகியவற்றை பெற்றவர். இவரது இளமைக்காலத்தில் முதல் களப்போராக கள்ளுக்கடை மறியலில் கைதாகி பத்து மாதம் சிறை தண்டனை பெற்று பின்பு விடுதலையானார். இந்தப் போராட்டம் தந்தைக்கும், மகனுக்கும் நடைபெற்ற அறப்போர் ஆகும்.

1932 ஆம் ஆண்டு ஜூலை மாதம் பொள்ளாச்சி நகரில் அரசு கள்ளுக்கடை ஏலத் தை நடத்தியது. கிராம அதிகாரியாக இருந்த சி.சுப்பிரமணியம் அவர்களின்
தந்தையார் சிதம்பரக் கவுண்டர் அவர்கள் அரசு சார்பில் கள்ளுக்கடை ஏலம்
விடும் பணியில் பங்குபெற இல்லத்திலிருந்து புறப்பட்டுச் சென்றார்.அப் போது தனது தந்தையாரை கள்ளுக்கடை ஏலம் விடும் பணிக்குச் செல்லக் கூடாது என்றும், வேலையிலிருந்து உடனடியாக விலக வேண்டும் என்றும்
மன்றாடினார்.

ஆனால் அவரது தந்தை சிதம்பரக் கவுண்டர், சி.சுப்பிரமணியம் அவர்கள் கூறி யதை மறுத்ததோடு, அரசு பணியாளராகிய நான் எனது கடமையைச் செய்ய
வேண்டும் என்று கூறிவிட்டு ஏலத்திற்குப் புறப்பட்டுச் சென்று விட்டார்.

ஏலம் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில், சில காங்கிரஸ் தொண்டர் களுடன்
சி.சுப்பிரமணியம் அவர்களும் சென்று ஏலம் நடத்தவிடாமல் மறியல் செய் தனர்.இந்நிலையில் சி.சுப்பிரமணியம் அவர்களை காவல் துறையினர் கைது செய்து அன்று இரவு முழுவதும் சிறையில் அடைக்கப்பட்டார். இதைக் கேள் விப்பட்ட பொள்ளாச்சி நகர்மன்றத் தலைவர் நாச்சிமுத்துக் கவுண்டர் காவல் நிலையம் சென்று சிறு சிறு உதவிகளை சுப்பிரமணியம் அவர்களுக்குச் செய் தார். இதோடு நில்லாமல், பொள்ளாச்சி ஆட்சியர் எம்.கே.வெள்ளோடி அவர் களிடம் சுப்பிரமணியம் அவர்களின் குடும்ப பூர்வீகத்தை எடுத்துக் கூறினார்.

பூர்வீகத்தை கேள்விப்பட்ட ஆட்சியர் எம்.கே.வெள்ளோடி அவர்கள் சிறையில்
இருந்த சி.சுப்பிரமணியத்தை அழைத்து மன்னிப்புக் கேட்டால் விடுதலை செய்து விடுவதாகக் கூறினார். அதற்கு சி.சுப்பிரமணியம் அவர்கள், நான் கடை பிடித்து வரும் காந்திய கொள்கை களில் மதுவிலக்கு முதன்மையானது. அத னால் மன்னிப்பு கேட்க மாட்டேன். சிறையிலேயே இருக்கத் தயார் என்று
கூறினார். இதை அப்படியே நீதிபதி முன்பும் கூறினார். இதைக்கேட்ட நீதிபதி
பத்து மாத கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்புக் கூறினார். மேலும், மாவட்ட ஆட்சியல் மூலம் ரூபாய் 500 அபராதமும் விதிக்கப்பட்டது. இதை செலுத்தத் தவறியதால் கூடுதலாக இரண்டு மாதம் சேர்த்து சிறைதண்டனை
அனுபவித்தார்.

பொதுவாழ்வில் புகழ்பெற்ற குடும்பத்தில் இருந்து வந்தவரை கையில் விலங் கு பூட்டியவாறு வீதிகளில் அழைத்துச் செல்லப்பட்டு, கோவை சிறைக்கு பேருந்தில் ஏற்றிச் செல்லப் பட்டார். பின்பு கோவையிலும் தெருத் தெருவாக
கையில் விலங்குடனே கூட்டிச் சென்று சிறையில் அடைத்தனர். ஓராண்டு
காலம் கடுங்காவல் தண்டனையை ஆரம்பித்த சி.சுப்பிரமணியம் அவர்கள்
மூன்று வாரங்களுக்குப் பின் வேலூர் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.

சிறைச்சாலையில் பட்டாபி சித்தா ராமய்யா, பேராசிரியர் என்.ஜி.ரங்கா ஆகி யோருடன் பழகும் வாய்பு கிடைத்தது. தன்னுடைய இளமைக் காலத்தில் செய்த கள்ளுக்கடை மறியல் சி.சுப்பிரமணியம் அவர்களை வாழ்வின் மிக
உயர்ந்த நிலைக்கு அழைத்துச் சென்றது.

நன்றிகள் 

கட்டுரையாளர் :- 
உடுமலை இரவி

வெளியீடு :- சங்கொலி

No comments:

Post a Comment