Friday, August 23, 2013

திரையரங்கு நன்றி -வைகோ

தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து
“மெட்ராஸ் கஃபே” திரைப்படத்தை திரையிடாததற்கு நன்றி!
#வைகோ அறிக்கை

தமிழ் இனப்படுகொலை செய்த கூட்டுக்குற்றவாளிகள் தங்கள் தரப்பை நியா யப்படுத்திக் கொள்ள சிங்கள பேரினவாத அரசின் பேருதவியுடன் தமிழர் களை பயங்கரவாதிகளாக சித்தரித்து எடுக்கப்பட்ட “மெட்ராஸ் கஃபே” திரைப்படம் வெளியிடக்கூடாது என கொந்தளிக்கும் உணர்வுடன் விடுத்த வேண்டு கோளை ஏற்று இன்று (23.08.2013) வெளியிடுவதாக இருந்த திரைப் படம் திரை யிடப்படவில்லை.
தமிழகத்தில் அதிக திரையரங்குகளில் இப்படத்தை திரையிட இயக்குனரும்,
தயாரிப்பாளரும் பலவகையில் முயற்சி செய்து இலாபத்தில் பங்கு தருவதாக ஆசை வார்த்தை கூறியபோதும் தமிழர்களின் உரிமைகளுக்காக சுயநலமின்றி போராடும் எங்களின் வேண்டுகோளை ஏற்று தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து “மெட்ராஸ் கஃபே” திரைப்படத்தை திரையிடாமல் ஒத்துழைப்பு நல்கியிருக்கின்ற திரையரங்கு உரிமையாளர்களுக்கும், விநியோகஸ்தர் களுக்கும், திரையுலத்தினருக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றியை தெரிவித் துக் கொள்கிறேன்.

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.

‘தாயகம்’
சென்னை - 8
23.08.2013 

No comments:

Post a Comment