Tuesday, August 6, 2013

துணை நிற்போம்! தோள்கொடுப்போம்! -பகுதி 1

கூடங்குளம் அணுமின் உலையால் இலட்சக்கணக்கான மக்களைக் கொன்று குவித்திட இந்திய அரசு துணிந்துவிட்டது!

கூடங்குளம் அணுமின் உற்பத்தி தொடங்கிவிட்டது. எந்த விதத்திலும் அடக்க முடியாத பேராபத்து மக்களின்உயிரைக் குடித்திடத் தயாராகிவிட்டது.உலகமே கண்டு அஞ்சிடும் அணுக்கதிர் வீச்சுக்கு அப்பாவித் தமிழர்களை அழித்து நாச மாக்கிடும் அநீதியை ஒருக்காலும் அனுமதிக்க முடியாது.

தென்தமிழக மக்கள் இந்தப் பேரழிவில் இருந்து தப்பிக்க முடியாது. மக்களைக்
காத்தருள வேண்டிய தமிழக அரசு பயங்கர மரணத்திற்குப் பச்சைக் கொடி
காட்டிவிட்டது. ஆலகால விசத்தை அள்ளிப்பருகி, மக்களைக் காப்பாற்றினான் சிவபெருமான் என்பது புராணக் கதை. அந்த சிவனே இப்போது வந்தாலும்கூட இந்த அணுக்கதிர் இயக்கத்தை-அதன் பேரழிவைத் தடுத்து நிறுத்தவே முடி யாது. இந்த நிலையில் தான் மக்களைக் காத்திடப் பொங்கி எழுந்து போர்ப் பிரகடனம் செய்து களத்தில் இறங்கியுள்ளார் இரண்டாம் அண்ணா வைகோ.
கூடங்குளம் அணுமின் உலையை இயங்க விடாமல் இழுத்து மூடினால் மட் டுமே மக்களைக் காப்பாற்ற முடியும். அதற்கு ஒட்டுமொத்தத் தமிழர்களையும்
திரட்டிக் களத்தில் இறங்கிப் போராட முன்வரவேண்டும். கூடங்குளம் பகுதி தானே பூண்டோடு அழியும், நமக்கென்ன என்று மற்ற பகுதிவாழ் மக்கள் அலட் சியம் காட்டக்கூடாது.அணுக்கதிர் வீச்சு காற்றில் பரவி, கடலில் கலந்து, தடம் தெரியாமல் உணவில் கலந்து எல்லா மக்களையும் ஆக்கிரமித்துக் கொள்ளும். அதிபயங்கரப் பேரழிவு கொண்டது அணுக்கதிர் இயக்கம். இதைப்பற்றி பொது
மக்களுக்குப் புரிய வைக்க வேண்டியது நம் கடமையாகும்.



1948 இல் தான் அணு ஆற்றல் கமிசன் இந்தியாவில் உருவாக்கப்பட்டது. முதல்
செயல் தலைவராக ஹோமிபாபா என்பவர் நியமிக்கப்பட்டார். அப்போது சுதந்திர இந்தியாவின் பிரதமராக பண்டித ஜவஹர்லால் நேரு இருந்த காலம்.
இந்த ஹோமிபாபா என்பவர் யார்? இந்தியாவின் மிகப்பெரிய தொழில் அதிப ராக விளங்கிடும் டாடா அவர்களின் சொந்த மருமகன் தான் இவர். அணு
ஆற்றல் கமிசனின் மூன்று உறுப்பினர்களில் டாடாவும் ஒருவர்.

மாமா டாடாவின் ஆதரவால் ஹோமி பாபா - பிரதமர் நேரு அவர்களுக்கு
நெருக்கமாகிவிட்டார். அந்த வழியில்,ஹோமிபாபா மேலை நாட்டுடன் அணு சக்தித் தொடர்பான தொழில் நுட்ப இறக்குமதி குறித்துப் பேச்சுவார்த்தை
நடத்தியதாகச் சொல்லப்பட்டது.

1958 இல் அணு ஆற்றல் கமிசனின் அதிகாரங்கள் அனைத்தும் ஹோமி பாபா விடம் இருந்தது. மொத்தத்தில் இந்தியாவின் மிகப்பெரிய நிதி ஒதுக்கீடுகளில் ஒன்றாகிய அணு ஆற்றல் துறை-தொழில் அதிபர் டாடா மற்றும் பண்டித நேரு குடும்பச் சொத்தாகி விட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர்களோ, மந்திரிகளோ, எழுப்பும் கேள்விகளுக்குக்கூட,
அணு ஆற்றல் கமிசன் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. “எல்லாம்
பிரதமர் நேருவிடம் சொல்லப்பட்டுவிட்டது” என்று பதில் அளிக்கும் நிலை அன்று இருந்து வந்தது.

டாடா நிறுவனத்தை அடுத்து லார்சன்-டியூப்ரோ நிறுவனம் கோட்டாவில் உள்ள அணு உலைக்கான கருவிகளைத் தயாரிப்பதற்கான உரிமைகளைப்
பெற்றிருந்தது. அதன் மூலம் 500 முதல் 600 கோடி அளவுக்கு தனது மூலதனத் தைப் பெருக்கிக்கொண்டது.

1988 இல் கூடங்குளத்தில் சோவியத் யூனியன் உதவியுடன் இந்திய அரசு அணு உலை அமைக்க உள்ள திட்டம் வெளியிடப்பட்டது. அப்போது பல அமைப்பு
க ளும், சில அறிவியல் துறையைச் சார்ந்தவர்களும் எதிர்ப்புத்தெரிவித்தனர். 1988 நவம்பர் 21 இல் நாடாளுமன்றத்தில் அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி அறிவித்தபோது, அதனை எதிர்த்த ஒரே ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் யார் எனில் அவர் நம் வைகோதான்.

மத்திய அரசு வல்லுநர் குழுவின் அமைப்பே கேள்விக்குரியது?

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் பாதுகாப்பை அறிந்துகொள்ள இவர்கள்
கையாண்ட ஆதாரங்கள் யாவும் இந்திய அணுசக்தித் துறையும், அணுமின்
கழகமும் வழங்கியவை. எந்த விதமான கேள்வியும் இல்லாமல், முறையான
ஆய்வு ஆதாரங்களுமின்றி கண்மூடித்தனமாக ஏற்றுக்கொண்ட அநீதி நடை பெற்றுள்ளது.

நாகபுரியைச் சேர்ந்த நீரி எனும் (National Environmental Engineering Research Institute) நிறு வனம், 2003 ஆம் ஆண்டில் கூடங்குளம் பற்றி முன் வைத்த முதலாம், இரண் டாம் அணு உலைக்கான முழுமையான சுற்றுச் சூழல் குறித்து தாக்கல் செய்த அறிக்கையை இந்திய அணுமின் குழுமம் முழுமையாக அறிந்துகொள்ளாமல் மூடி மறைத்து விட்டது.

நீரி அறிக்கையின் முதல் அத்தியாயத்தில் உள்ள கூடங்குளம் அணுமின் நிலைய அமைவிடத்தின் நிலஇயல் மற்றும் நீரியல் குறித்த பகுதியில் (அத்தி யாயம்1, பத்தி 1,4,1, பக்கம்-15) உள்ள சொற்றொடர், கூடங்குளம் அணுமின்
திட்டத்தின் வரலாற்றை அறிவியல் ரீதியாக வாசித்து அறிந்த எவருக்கும்
அதிர்ச்சி தருவதாகவே அமைந்து இருக்கிறது.

கூடங்குளம் அணுமின் உலை குறித்து கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட
பல்வேறு ஆய்வுகள் அணுஉலை அமைவிடத்தில் உள்ள பாறையில் பெரும் படியான சீரற்ற தன்மை இல்லை என்பதைச் சுட்டிக்காட்டுகின்றன. (Various investigation carried out earlier at the project site indicate no major rock discontinuities) 

அணு உலை களின் நில அதிர்வுகளைத் தாங்கும் திறன் குறித்து ஆராயும் தொழில்நுட்ப வல்லுநர் டாக்டர் ஆதிமூலம் பூமிநாதன், 2004 ஆம் ஆண்டு,நவம் பர் மாதம் பன்னாட்டுப் புகழ்பெற்ற இந்திய அறிவியில் சஞ்சிகை (Current Science)  யில் இது குறித்து தம்முடைய கருத்தை வெளிப்படையாகவே பதிவு செய்துள்ளார்.

கூடங்குளத்தில் அடித்தளப் பாறைகளை ஊடுருவியுள்ள கால்கேரியஸ் பொருட்கள் என்று பேராசிரியர் பூமிநாதன் தமது கட்டுரையில் குறிப்பிட்டிருக் கும் பொருள் உள்ள இடத்தில், தமிழ்நாடு நில இயல் சுற்றாய்வுத்துறை ஆய் வாளர் ஆர்.இராமசாமி 1987 ஆம் ஆண்டே பல்வேறு வகையான எரிமலைப்
பாறைகள் இருப்பதைக் கண்டறிந்து சுட்டிக்காட்டியுள்ளார்.

எந்தக் காரணத்தைக் கொண்டும் கூடங்குளத்தில் அணுஉலை அமைக்கக் கூடாது என்றே அனைத்துத்துறை அறிஞர்களும் அரசுக்குத் தெரிவித்து உள்ள னர். அதுபற்றி சுருக்கமாகச் சிலவற்றை இங்கே பார்ப்போம்.

இன்று உலகெங்கிலும் அணுசக்திக்கு எதிரான குரல்கள் வலுக்கத் தொடங்கி
உள்ளன. ஏனெனில் இதனைச் சூழ்ந்துள்ள பேராபத்துகள் ஏராளம் ஏராளமாகும். ஓர் அணுஉலையின் சராசரி ஆயுட்காலம் 40 ஆண்டுகள். அதன் பிறகும்கூட அணுக்கழிவுகள் மிகவும் ஆபத்தான கதிர்வீச்சுகளுடன் 25,000 ஆண்டுகள் வரை உயிருடன் இருக்கும் தன்மையுள்ளது. அதுவரை இதனை ஆபத்து இல்லாமல் பாதுகாப்பதற்கான வழிமுறைகள் எதையும் இதுவரை நவீன விஞ்ஞானம் கண்டுபிடிக்க முடிய வில்லை.

எங்காவது ஏமாந்த மக்கள் இருக்கும் பகுதிகளில் கொண்டுபோய் அணுக்கழிவு
களைப் புதைத்து விடுவதுதான் இதுவரை வழக்கமாக இருந்து வருகிறது.நமது நெல்லை மாவட்டத்தின் அருகில் கூட அணுக்கழிவுகளைக் கொட்டவந்த செய்தி ஏடுகளில் வந்துள்ளதை அறியலாம்.

இந்த அணுஉலை இயங்கிக்கொண்டு இருக்கும் போதேகூட, கசியும் வாய்ப்பு
உண்டு. இதன் கதிர்கள் கண்ணுக்குப் புலப்படாது. நாசியிலும் நெடி ஏறாது. வேறு என்ன செய்யும்? 

மனிதர்களைக் கொன்று குவிக்கும்.செல்களை அழிக்கும். புற்றுநோய் உண் டாக்கும். தாய்மார்களின் கருவில் உள்ள குழந்தைகளை ஊனப்படுத்தும்.உருக் குலைக்கும். கால் கை இல்லாமல் வெறும் முண்டமாக ஆக்கிவிடும். பல தலைமுறைகளைத் தாண்டியும் மனித வர்க்கத்தைச் சீர்குலைக்கும். உலகில்
இதைவிடக் கொடுமையான விளைவுகள் வேறு எதுவுமே இல்லை.

தொழில்நுட்ப வளர்ச்சிகளில் உலகில் உள்ள முன்னணி நாடுகளில் ஒன்றாக
ஜப்பான் உள்ளது. 2011 இல் இந்த அணுக்கதிர் வீச்சால் ஜப்பான் நிலை குலைந் து போனதை உலகமே அறிந்து அதிர்ந்துபோனதை நாம் மறந்துவிடக் கூடாது. திடீரென்று ஓர் நாள் மத்தியான வேளையில் புவி அதிர்ச்சி ஏற்பட்டது.ஜப்பான் நாட்டில் புவி அதிர்ச்சி என்பது எப்போதும் வழக்கமாக இருப்பதுதான்.ஆனால் இந்த முறை வந்த புவி அதிர்ச்சி அப்படிப்பட்டது அன்று.

அதிகமாக (10) என்பதாக வைத்துக் கணக்கிடப்படும் ரிக்டர் அளவுகோலின் படி அன்று வந்த புவி அதிர்ச்சி 9.0 என்ற அளவில் தான் இருந்தது. அதன் விளைவு ஜப்பான் கண்டிராத பேரழிவும் பூதமாகக் கிளம்பியது. அதற்குப் பெயர்தான் சுனாமி! 10 மீட்டர் உயரம் உள்ள சுனாமிப் பேரலைகள் உக்கிர மாகக் கிளம்பின. 500 கிலோ மீட்டர் நீளமுள்ள கடற்கரையை ஒட்டி ஏகப் பட்ட பயங்கர அழிவு களை ஏற்படுத்தின.ஜப்பான் இதுவரை கண்டறியாத அழிவுகளை ஏற்படுத்தி யது.

டோக்கியோவில் இருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஃபுகுஷிமா
நகரில் இருந்த நான்கு அணுஉலைகளில் மூன்று செயல் இழந்தன. வேறு 
எந் தத் தொழிற்சாலையாக இருந்தாலும் எரிந்து புகைந்து அடங்கிவிடும். ஆனால், அணுஉலை என்பது அப்படிப்பட்டதல்ல, அணு உலைகள் செயல் இழந்தபோதும் எரிபொருட்கள் சூடு ஏறின. சூடு என்றால், சாதாரணமானதல்ல,
பல்லாயிரக்கணக்கான டிகிரி வெப்பநிலை கொண்டது.

ஜப்பான் தமது விஞ் ஞான வலிமை எல்லாம் பயன் படுத்தியும், கடல் நீரை அள்ளி  இறைத்து ஊற்றி யும் சமாளிக்கமுடியவில்லை. அணுக்கதிர் வீச்சால் மாண்டு மடிந்த மக்கள் தொகையைச் சரியாகக் கணக் கிடவும் முடியவில்லை. அதுமட்டுமல்ல, காற்றில் கலந்து உணவுத் தொடரையே கொடிய விசமாக்கி விட்டது அணுசக்தி.

தண்ணீர், பால், கீரைகள், கிழங்குகள்,காய் கனிகள் எல்லாம் ஃபுகுஷிமா அணு உலைகளில் இருந்து கசிந்துவந்த கொடிய அயோடின் 131 மற்றும் சீசியம்
137 ஆகிய இரு கதிர்வீச்சுத் தனி மங்களால் விசமாக்கப்பட்டு விட்டன.எல்லா வசதியும் உள்ள ஜப்பானே நிலைகுலைந்து போய்விட்டது.

இந்த நிலை நமக்கு வந்தால், என்ன ஆகும் என்பதனை ஒவ்வொரு மனிதனும் சிந்தித்துப்பார்க்க வேண்டும்.கூடங்குளம் பகுதி மக்கள் மட்டுமல்ல, சென்னை யில் உள்ள மக்களும் இதை எண்ணிச் செயல்பட வேண்டும். இந்த அணுஉலை ஆதிக்கத்தை எதிர்த்துப் போராட மக்கள் தலைவர் இரண்டாம் அண்ணா வைகோ தலைமையில் செயல்பட முன்வர வேண்டும்.

அணுகுண்டு வெடிப்புக்கும், அணு உலையின் உற்பத்திக்கும் அப்படி ஒன்றும் பெரிய வித்தியாசம் இல்லை.இரண்டும் ஒரே தன்மை உடையவை தான். ஓர் அணுகுண்டு வெடித்தால் என்ன ஆகுமோ? அதே நிலைதான் ஓர் அணுஉலை கசிந்தாலும் ஏற்படும்.

1945 ஆம் ஆண்டு ஆகஸ்டு ஆறாம் நாள் ஜப்பானில் ஹிரோஷிமா நகரில்
அமெரிக்கா அணுகுண்டு வீசியது.3,50,000 மக்கள் வாழும் நகரம் அது.அந்த அணுகுண்டுக்கு சின்ன பையன் என்று பெயர். அணுகுண்டு வெடித்த ஒரு சில நொடிகளில் 75,000 மக்கள் உடல் கருகிச் செத்து மடிந்தார்கள்.இதற்கு முன் இப்படி ஒரு அழிவுச் சக்தி இருப்பதை உலகம் உணரவில்லை. மீதம் உள்ள 2,50,000 மக்கள் சில நாட்களில் சித்தரவதைப்பட்டுச் செத்தார்கள். மேலும் சில இலட்சம் மக்கள் கண்கள் இழந்து, கை கால் களை இழந்து, உடல் வெந்து புண் ணாகி உண்ணமுடியாமலும், உட்கார முடியாமலும் வெந்து நொந்து கிடந்து
மரணத்தைத் தழுவினார்கள். மேலும் சில இலட்சம் மக்கள் அணுக்கதிர்
இயக்கத்தால் தாக்கப்பட்டு, ஐந்து ஆறு ஆண்டுகளில் மடிந்தார்கள். இப்படி ஒரு
கொடுமையை இதற்குமுன் உலகம் கண்டதில்லை.

கூடம்குளம் அணுமின் நிலையத்தால் நமக்கும் இப்படி ஒரு நிலை வரத்தான்
வேண்டுமா? இத்தகைய நிலைக்குக் காரணமான அதிகார வர்க்கத்தினரை
இனியும் ஆதரிப்பீர்களா?

இதுமட்டுமல்ல, 1945 ஆம் ஆண்டு,அதே அமெரிக்கா, ஜப்பான் நாட்டில் உள்ள நாகசாகி நகரின் மீது மீண்டும் ஒரு அணுகுண்டைப் போட்டது. குண்டு வெடித்து சில நொடிகளிலேயே 1,50,000 மக்கள் இருந்த இடத்திலேயே உடல் கருகிச் செத்து மடிந்தார்கள்.இப்படி ஒரு நிலைக்கு நாம் ஆளாக வேண்டுமா? தமிழினமே சிந்தித்துப் பார்.

இந்த இரண்டு அவல நிகழ்ச்சிகளிலும் அணுகுண்டு போடப்படும் என்பது தெரி யாமல், எந்த விதமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யாமல் இருந்த காலத் தில் ஏற்பட்டது. ஆனால், எல்லா விதமான பாதுகாப்புகளையும் விஞ்ஞான
ரீதியில் செய்யப்பட்டிருந்தும், செர்னோபில் அணுமின் உலை வெடித்ததால் உடனடியாக 10,000 மக்கள் உடல் கருகி இறந்தனர். அதன் பிறகு தொடர்ந்து 20 ஆண்டுகளில் 9,85,000 மக்கள் செர்னோபில் வெடித்த கதிர் இயக்கத்தால் உயிர் இழந்தனர்.என்பதையும் நாம் நினைத்துப்பார்க்க வேண்டும்.

அணுஉலைக்கு ஆதரவாகச் சில பேர் பேசுகிறார்கள். “சரியான பாதுகாப்பு உள் ளது. எந்தவிதமான ஆபத்தும் வராது” என்றெல்லாம் சொல்கிறார்கள். எல்லாம் வல்ல ஜப்பானே அணுஉலை வெடித்தபோது கைபிசைந்து நின்றதை மறந்து விட்டுப் பேசுவது மனிதத் தன்மையற்ற செயலாகும்.

அணுக்கதிர் இயக்கம் என்றால் அது எப்படி இருக்கும்?

நம்ம ஊரில் எக்ஸ்ரே எடுக்கும்போது பார்த்திருப்பீர்களே, எக்ஸ்ரே கருவி களைப் பொருத்திவிட்டு, உடனே ஓடிப் போய் வேறு ஒரு தனி அறைக்குள் மிகக்கனமான சுவர்களுக்குப் பின்னால் நின்றுகொண்டு தான் பட்டனை அழுத் துவார்கள். ஏனென்றால், எக்ஸ்ரே படம் எடுக்கும்போது அதன் கதிர் வீச்சு அவர் களைப் பாதித்துவிடாமல் இருப்பதற்காகவே அப்படிச் செய்கிறார்கள்.

எக்ஸ்ரே படம் எடுப்பதற்குப் பயன் படுத்தப்படும் கதிர் இயக்கத்தின் அளவு என் ன தெரியுமா? அந்த அளவு கோலுக்கு சீவர்ட் என்று கணக்கிடுகிறார்கள். அதா வது 1 சீவர்ட் என்பது (1000000) பத்து இலட்சத்தில் ஒரு பங்கு கதிர் இயக்கம் தான் எக்ஸ்ரே கருவியில் பயன்படுத்தப்படுகிறது. இதற்கே எக்ஸ்ரே எடுப்ப வர்,தடுப்பு உடைகளை மாட்டிக்கொண்டு வேறு ஒரு அறைக்குள் போய் நின்று விசையை அழுத்துகிறார். எனவே, ஒரு மிகப்பெரிய அணு உலையை இயக்கும் போது எத்தனை சீவர்ட் கதிர் இயக்கம் உண்டாகும் என்பதனை கற்றோரே
கணக்குப் போட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்.

அணுஉலைகள் உடைந்தாலும் உடையாவிட்டாலும் அணுமின் உலைகள் இயங்கும்போது வெளிப்படுத்தப்படும் கதிர் இயக்கமே அணு உலையைச் சுற்றி யுள்ள பலநூறு மைல்கள் சுற்றளவுக்கு பேரழிவை உண்டு பண்ணும் என்பதில் சந்தேகமே இல்லை.

தொடரும்...

நன்றிகள்

கட்டுரையாளர் :- கவிஞர் தமிழ்மறவன்

வெளியீடு :- சங்கொலி

No comments:

Post a Comment