Wednesday, August 21, 2013

காங்கிரசை மக்கள் தூக்கி எறிவார்கள்

#வைகோ ஆவோசம்

மறுமலர்ச்சி தி.மு.கநடத்தும்,செப்டம்பர் 15 அண்ணா பிறந்தநாள் விழா -விருது நகர் மாநாட்டிற்காக பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்று (21.08.13 ) காலை 9 மணி அளவில் தலைவர் வைகோ பார்வையிட்டார். அவருடன் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, மாவட்டச் செயலாளர் கள் ஆர்.எம்.சண்முகசுந்தரம், புதூர் பூமிநாதன், டி.டி.சி.சேரன் மற்றும் எம்.டி. சின்ன செல்லம், மாநில மாணவர் அணிச் செயலாளர் தி.மு.இராசேந்திரன்,
நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சிப்பிப்பாறை இரவிச்சந்திரன், சட்ட மன்ற முன்னாள் உறுப்பினர்கள் ஆர்.வரதராஜன், ஆர்.ஞானதாஸ், மாநில தொண்டர் அணிச் செயலாளர் பாஸ்கரசேதுபதி, மின்னல் முகமது அலி, மாநில மீனவர் அணிச்செயலாளர் நக்கீரன், பேராசிரியர் பாத்திமா பாபு, பெல்.ராஜமாணிக்கம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
செய்தியாளர்களிடம் வைகோ கூறியதாவது:-

இந்த மாநாடு சரியாக 9 மணிக்கு தொடங்கும். மாநட்டுக்கு இமயம் ஜெபராஜ் தலைமை தாங்குகிறார்; புலவர் சே. செவந்தியப்பன் திறந்து வைக்க, விருது நகர் மாவட்டச் செயலாளர் ஆர்.எம்.சண்முகசுந்தரம் வரவேற்புரையாற்று கிறார். அதன் பின் சிப்பிப்பாறை இரவிச்சந்திரன் கொடியேற்ற; அறிஞர் அண்ணா சுடரை டாக்டர் சதன் திருமலைக்குமார் ஏற்றுகிறார்.

இந்தியாவின் ஏற்பாட்டில் இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடக்க இருக் கிறது. இனக்கொலை செய்த இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை, நடத் தக்கூடாது. இந்த மாநாடு நடத்துவதன் மூலம் கூட்டுக்குற்றவாளி இந்தியா தப்பித்துக்கொள்ளலாம் என நினைக்கிறது.இந்நிலையில், இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக்கூடாது என்று, காங்கிரஸ் தலைமையிலான அமைச்சரவையில் இருந்த கூட்டுக் குற்றவாளி கள் கூறி வருகிறார்கள். அது ஏமாற்று நாடகம்.

விடுதலைப்புலிகளை கொச்சைப்படுத்தும் மெட்ராஸ் கஃபே என்ற திரைப்படம் ஆகஸ்ட் 23 ஆம் தேதி படம் திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தத் திரைப்படத்தை இந்திய அரசு தடை செய்ய வேண்டும்.. தமிழ்நாட்டில் திரையிட தமிழர்கள் அனுமதிக்கக் கூடாது.தமிழகத்தில் திரையிடுவதற்கு, தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது; திரை அரங்குகளின் உரிமையாளர்கள் திரையிடக் கூடாது என வேண்டுகிறேன். தமிழகத் திரை உலகத்தினர்,
தயாரிப் பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையிடுவதைத் தடுப்பதற்கு முன்வர
வேண்டுகிறேன்.

இந்திய அமைதிப்படையால் எவ்வளவு பெண்கள் கற்பழிக்கப்பட்டு கொல்லப் பட்டார்கள் என்பதை நான் ஆதாரங்களோடு நாடாளுமன்றத்தில் பேசியிருக் கிறேன். இந்த திரைப்படத்தை திரையிடக்கூடாது என்று நாங்கள் அறவழியில் போராடுகிறோம்.

இதற்கு மேலும் இப்படம் தமிழ்நாட்டில் திரையிடப்படுமானால், திரை அரங்கு களை முற்றுகை இடும் அறப்போரை நடத்துவோம்; கழகக் கண்மணிகளும், தமிழ் உணர்வாளர்களும், ஈழத்தமிழர் உரிமைக்குத் தொடர்ந்து போராடி வரு கின்ற தோழர்களும், களமாடிய மாணவர்களும், பெருந்திரளாகப் பங்கு ஏற் கேற்று போராடுவோம்.

மத்திய அரசின் தவறான பொருளதார கொள்கையினால், இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்திருக்கிறது. இந்தியா அரசும் வீழ்ச்சியடைந்து கொண்டி ருக்கிறது. பாதுகாப்புத் துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் அந்நிய முதலீடை மத்திய அரசு அனுமதித்திருக்கிறது. மாதத்திற்கு இரண்டு முறை பெட்ரோல் விலை, டீசல் விலை உள்ளிட்ட அத்திவசியப் பொருட்களின் விலை களை உயர்த்திக்கொண்டே போகும் காங்கிரஸ் தலைமையிலான அரசு, இனி ஒருபோதும் ஆட்சிக்கு வர முடியாது. வருகின்ற  நாடாளுமன்றத் தில் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை மக்கள் தூக்கி எறிவார்கள்.


No comments:

Post a Comment