Saturday, August 17, 2013

மதிமுக மாணவர் அணி தீர்மானங்கள்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின்  
மாநில, மாவட்ட மாணவர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் 
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில, மாவட்ட மாணவர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்17.08.2013 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தலைமைக் கழகம் தாயகத்தில் நடைபெற்றது.
கழக மாணவர் அணிச் செயலாளர் தி.மு.இராசேந்திரன் அவர்கள் தலைமை வகித்தார். இதில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள் :-
தீர்மானம் : 1 

“நாடாளுமன்றத்தில் வைகோ”

கல்லூரி மாணவ-மாணவியருக்கான மாபெரும் பேச்சுப் போட்டி ரூபாய் 7 இலட்சம் பரிசு


இந்திய நாடாளுமன்றத்தில் இருபத்தி ஐந்து ஆண்டுகாலம் தமிழினத்தின் உரிமை வாழ்விற்காக அஞ்சாது போரிட்ட தமிழினப்போராளி தலைவர் வைகோ அவர்களின் நாடாளுமன்ற விவாதங்களையும்; தமிழினப் பகைவர் களை ஊடறுத்து தாக்கிய பலஉரைகளையும், குறுக்கீடுகளையும், எச்சரிக்கை ளையும், தமிழகத்தின் எதிர்கால அரசியலை முன்னெடுக்கப் போகும் இளைய தலைமுறையினராம் மாணவக்கண்மணிகள் உணர்ந்து உள்வாங்கி உணர்வு பெற வேண்டும் என்பதோடு,

அந்த எழுச்சிமிகு உரைகளை வழிகாட்டு நெறிகளாகக் கொண்டு வருங்காலத் தில் செயல்புரிந்திட வேண்டும் என்ற சீரியநோக்கத்தோடும்,மாணவக்கண் மணி களிடம் பேச்சாற்றல் திறனை வளர்த்திட வேண்டும் என்ற குறிக்கோளு டனும்,

கழக மாணவர் அணி, கல்லூரி மாணவ-மாணவியருக்கான
“நாடாளு மன்றத் தில் வைகோ” 

என்ற பொதுத்தலைப்பில் பேச்சுப் போட்டியினை மாவட்டக் கழகங்களின் ஒத்துழைப்போடு வருகின்ற 20-10-2013ஞாயிற்றுக்கிழமை மாவட்ட அளவில் நடத்துவது என்றும்;

இதில் வெற்றி பெறும் முதல் மூன்று மாணவர்களுக்கு முறையே ரூ.5000, ரூ.3000, ரூ.1000 ரொக்கப் பரிசு... வழங்குவது என்றும்;

இம்மூவரும் 24.11.2013 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும் மண்டல அள விலான பேச்சுப் போட்டியில் பங்கேற்க தகுதிஉடையவர்கள் ஆவார்கள் என்றும்; அதில் வெற்றி பெறும் முதல் மூன்று மாணவர்களுக்கு முறையே ரூ.6000, ரூ.4000,ரூ.2000 என்ற அளவிலும் ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்றும்;

மண்டலப் போட்டியில் வெற்றி பெற்று முதல் மூன்று இடம் பெற்ற மாணவர் கள் டிசம்பர் 22 ஞாயிறு அன்று சென்னையில்நடைபெறும் மாநிலப் பேச்சுப் போட்டியில் பங்கேற்க தகுதி உடையவர்கள் ஆவார்கள் என்றும்;

மாநிலப் பேச்சுப் போட்டியில் முதல் இடம் பெறும் மாணவருக்கு ரூ.1 லட்ச மும்; இரண்டாம் இடம் பெறும் மாணவருக்கு ரூ.50ஆயிரமும், மூன்றாம் இடம் பெறும் மாணவருக்கு ரூ.25 ஆயிரமும் ரொக்கப் பரிசு உட்பட மாவட்ட-மண்டல - மாநிலஅளவிலான மொத்தப் பரிசுத் தொகை ரூபாய் 7 இலட்சம் வழங்குவது என்றும்;

மாவட்ட, மண்டல, மாநிலப் போட்டிகளில் பங்கேற்கும் “அனைத்து மாணவப் பேச்சாளர் சிறப்பு கருத்தரங்கு” 2014 ஜனவரி 5ஞாயிற்றுக்கிழமை திருச்சி மாநகரில் நடத்தப்படும் என்றும்;

மாநிலப் போட்டியில் வென்ற மூவருக்கு பரிசுத் தொகையினையும், மாவட்ட, மண்டல, மாநில அளவிலான போட்டிகளில் முதல் 3இடங்களைப் பெற்றோ ருக்கும், பேச்சுப் போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவப் பேச்சாளர் களுக் கும், பணியாற்றிய நடுவர்பெருமக்களுக்கும் கையொப்பமிட்ட பாராட்டுச் சான் றிதழ்களையும், சிறந்த மாணவப் பேச்சாளருக்கான “நற்றமிழ் நாவரசு” விருது களையும் வழங்கி சிறப்பித்து பேருரை ஆற்ற பொதுச்செயலாளர் வைகோ அவர்களை அழைப்பது என்றும் இக்கூட்டம் ஒருமனதாகத் தீர்மானிக்கின்றது.

தீர்மானம் : 2

18 வயது அடையும் இளம் மாணவர்களை
கல்வி நிலையங்கள் மூலமே வாக்காளர் ஆக்கிடுக!

தமிழகத்தில் சில மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி, ஐந்து கோடியே நான்கு லட்சத்து 31ஆயிரத்து 322 பேர் வாக்காளர்களாக உள்ளனர்.

இதில் 18 முதல் 29 வயது வரை உள்ள இளம் வாக்காளர்களின் எண்ணிக்கை மட்டுமே 1 கோடியே 33 லட்சத்து 12 ஆயிரம் ஆகும்.முப்பத்தி ஐந்து வயதுக்குட்பட்டவர்களை கணக்கிட்டால் சுமார் 2 கோடியைத் தாண்டுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு முடித்து வெளியேறும் மாணவர்களின் எண்ணிக்கை மட்டுமே சுமார் 7.20இலட்சம் ஆகும்.

இவர்களில் சிலர் 18 வயதினை பன்னிரண்டாம் வகுப்புப் பயிலும் போதும், பெரும்பான்மை மாணவர்கள் கல்லூரிகளில்முதலாண்டு பயிலும் போதும் நிறைவு செய்கிறார்கள். இவர்களில் பெரும்பாலோர் உடனே தங்களை வாக் காளர்களாக பதிவுசெய்துகொள்ள முன்வருவதில்லை. அதற்கான வழிமுறை களை அறிந்து வருவாய் வட்டாட்சியார் அலுவலகங்களில் விண்ணப்பித்து வாக்குரிமையை உறுதி செய்திட காலவிரையமும் ஏற்படுகிறது. இதைத் தவிர்த்திட, எப்படி வட்டாட்சியர்அலுவலகங்கள் மூலமாக பல நிலைகளைக் கடந்து சாதிச் சான்றிதழ் பெறும் நடைமுறையை மாற்றி பள்ளிகளே சாதிச் சான்றிதழ் வழங்கும் முறை தமிழகத்தில் நடைமுறையில் உள்ளதோ அதே போல் 18வயது பூர்த்தியான மாணவ-மாணவியர்களின்விண்ணப்பங்களை அந்தந்த பள்ளி கல்லூரி நிர்வாகங்களே தேர்தல் ஆணைய இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம்செய்து மாணவர்களின் ஒப்புதலோடு, மாண வர்களின் நிரந்தர முகவரி அமைந்துள்ள மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி வாக்காளர்கள் ஆக்கிட தேர்தல் ஆணையம் தக்க ஏற்பாடுகளை செய்திட முன் வர வேண்டும் எனவும், இதற்கான செலவினங்களைதேர்தல் ஆணையமே ஏற்க வேண்டும் எனவும் இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் : 3

காமன்வெல்த் நாடுகளின் பட்டியலில் இருந்து இலங்கையை நீக்குக!


தமிழ் இனத்தை கருவறுத்த கொடியவன், சுமார் 25 லட்சம் பூர்வகுடி தமிழர் களை நாடற்றவர்களாக்கிய கொடுங்கோலன்இராஜபக்சே ஆட்சியாளனாக இருக்கின்ற இலங்கையில் நவம்பர் 2013 இல் காமன்வெல்த் நாடுகளின் மாநாடு நடத்தப்படக்கூடாதுஎன்றும்; காமன்வெல்த் மாநாட்டை இலங்கை யில் நடத்தி, இனக்கொலை செய்த குற்றவாளி இராஜபக்சேவை தப்பிக்க வைக்க,தொடர்ந்து துரோகம் இழைக்கும் இந்தியா மேற்கொள்ளும் முயற்சி யை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிப்பதோடு, இனக்கொலைசெய்த இலங்கையை காமன்வெல்த் நாடுகளின் பட்டியலில் இருந்து நீக்கி வைக்க வேண்டும் என்று காமன்வெல்த் அமைப்பைஇக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம்: 4
சமச்சீர் கல்வி என்பது தாய்மொழிக் கல்வியே!

நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் சம அளவில் தரமான கல்வி வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டுமென்பதை உச்சநீதிமன்றமே உறுதிப்படுத்தி உள்ளது. சமச்சீர் கல்வி என்பது மேட்டுக்குடி மாணவர்கள் பயிலுகின்ற மெட் ரிக் பள்ளிகளின் ஆங்கிலமுறைக்கல்விக்கு இணையாக ஊராட்சி ஒன்றியப் பள்ளிகள் மற்றும் அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் மாணவர் களுக்குஆங்கிலக் கல்வி பயிற்றுவிப்பது தான் என தமிழக அரசின் அறிவிப்பு செருப்புக்கு ஏற்ற வகையில், காலை வெட்டிக் கொள்ளும்செயலாகும்.
எந்தவொரு பாடத்தையும் பிறவியிலேயே அறிந்த தாய்மொழியில் கற்பதன் மூலமே முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும்.எனவே, அரசுப் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் அனைத்துப் பாடங்களும் தாய் மொழியிலேயே கற்பிக்கப்படவேண்டுமெனவும் உலகத் தொடர்பு மொழியாக விளங்கும் ஆங் கிலம் மட்டுமே இதர மொழியில் கற்பிக்கும் ஒரே பாடமாக இருக்க வேண்டு மெனவும், இதனையே சமச்சீர் கல்வி முறையாக ஏற்க இயலும் எனவும், உலகில் பெருவளர்ச்சி கண்டுள்ள ஜப்பான், சீனா,பிரான்ஸ் உள்ளிட்ட தேசங் கள் தத்தமது தாய்மொழிக் கல்வி வாயிலாகவே நிகரற்ற சாதனைகளை புரிந்துள்ளதை கருத்திற்கொண்டுஒரு மொழிப்பாடமாக மட்டுமே ஆங்கிலம் கற்பிக்கப்பட வேண்டும் என்பதோடு, இதர அனைத்துப் பாடங்களுமே தாய் மொழியில்பயிற்றுவிக்கப்பட வேண்டுமெனவும்; அத்தகு சமச்சீர் கல்வி முறையைக் கொண்டுவர முழு முயற்சிகளை மேற்கொள்ளுமாறுஇக்கூட்டம் தமிழக அரசை வலியுறுத்துகிறது.

தீர்மானம் : 5

பள்ளி, கல்லூரி சேவைவரியை இரத்து செய்க!


தமிழகத்தில் உள்ள 5500க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் கல்லூரிகளில் மாணவர் நலனுக்காகச் செய்யப்படும் பள்ளி வாகனவசதி, தேனீர் வசதி, உடற் கல்வி, யோகா சிறப்பு பயிற்சி போன்றவற்றிற்கு கலால்துறை மூலம் சேவை வரி விதிக்க மத்திய அரசுஉத்தரவிட்டுள்ள செயல் லட்சக்கணக்கான பெற்றோ ரின் தலையில் பாராங்கல்லை தூக்கிப்போடும் அடாத செயலாகும். அனைவ ருக்கும் சமமான கல்வியை இலவசமாக வழங்கி, அறிவாற்றல் மிக்க தேசத் தைக் கட்டமைக்க வேண்டிய மத்திய அரசு,அதில் சிறிதும் அக்கரையின்றி பகல் கொள்ளைக்காரனைப் போல் சேவை வரியை அமுல்படுத்த துணிந் துள்ள செயலைவன்மையாகக் கண்டிப்பதுடன் தனியார் பள்ளி, கல்லூரிகளின் மாணவர் சேவைப் பணிகளுக்கு மத்திய அரசு நிர்ணயித்துள்ளசேவை வரி விதிப்பை திரும்பப் பெற வேண்டுமென இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம்: 6
பள்ளி மாணவர்களுக்கு இலவச சிறப்புப் பேருந்துகளை இயக்குக!
கல்லூரி மாணவர்களுக்கும் இலவச பேருந்து அனுமதிச்சீட்டு வழங்கிடுக!

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகள்; அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் சுமார் 30 இலட்சம் மாணவர்களுக்கு தமிழக அரசுஇலவச பேருந்து அனுமதிச் சீட்டு (Free Bus Pass) வழங்குகிறது.

இம் மாணவர்கள் பள்ளி செல்லும் நேரத்திற்கும், மாலையில் வீடு திரும்பி வருவதற்கும் பெரும் சிரமங்களை எதிர்கொள்கிறார்கள்.மாணவர்கள் ஒரே நேரத்தில் பள்ளிக்குச் செல்லவும், திரும்பி வரவும் தேவையான அளவு பேருந்து வசதிகள் இல்லாததால், பலமணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலையும், படிக்கட்டுப் பயணங்களினால் விபத்துகள் ஏற்படும் நிலையும் உருவாகின்றது.இந்நிலையைத் தவிர்க்க 200 அனுமதிச் சீட்டு உள்ள வழித் தடத்தில், குறைந்தபட்சம் இரண்டு சிறப்புப் பேருந்துகளை பள்ளிமாணவர் களை ஏற்றிச் செல்ல பிரத்யேகமாக இயக்க வேண்டுமெனவும்; அனுமதி அட்டைகளை பள்ளி திறந்த ஒரு வார காலத்தில்வழங்கிட ஏற்பாடு செய்திட வேண்டுமென்றும்; அரசு கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரி மாணவர் களுக்கும் தற்போதுள்ளபாதிக்கட்டணம் என்பதை மாற்றி, இலவச பேருந்து அனுமதிச் சீட்டு வசதிகளை விரிவாக்கம் செய்திட வேண்டுமெனவும் இக் கூட்டம் தமிழக அரசை வலியுறுத்துகிறது.

தீர்மானம்: 7

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச இரயில்வே அனுமதிச் சீட்டு வழங்குக!


தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு இலவசப் பேருந்து அனுமதிச் சீட்டு வழங்கப்படுவதைப் போல், அரசு மற்றும் அரசுஉதவிபெறும் கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவியர்கள் பள்ளி-கல்லூரிகளுக்குச் சென்று வர வாய்ப்புள்ள இடங்களில்இலவச இரயில்வே அனுமதிச் சீட்டுகள் வழங்கிட முன்வர வேண்டும் என்று இக்கூட்டம் மத்திய அரசை வலியுறுத்துகிறது.

தீர்மானம் : 8
பத்தாம் வகுப்பு - பன்னிரெண்டாம் வகுப்பு
பொதுத் தேர்வை அந்தந்த பள்ளிகளிலேயே நடத்துக 

பத்தாம் வகுப்பு - பன்னிரெண்டாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வுகளை ஆண்டு தோறும் சுமார் 15 லட்சம் இளம் மாணவச்செல்வங்கள் எழுதுகின்றனர்,

ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு - பன்னிரெண்டாம் வகுப்புகளில் குறைந்த பட்சம் 100 மாணவர்கள் இருந்தால் மட்டுமே அப்பள்ளிக்குபொதுத் தேர்வு மையத்தை பள்ளிக் கல்வித்துறை அனுமதிக்கிறது. அதற்கு குறைவான எண்ணிக்கையில் உள்ள பள்ளிகளைச்சேர்ந்த மாணவர்கள் பல கிலோ மீட்டர் தூரம் சென்று வேறு மையங்களில் தேர்வு எழுதுகின்ற நிலை உள்ளது.

பயின்ற பள்ளியில் பொதுத் தேர்வு எழுதும் மாணவனின் மனநிலையிலிருந்து வேறு பள்ளிக்குக் கட்டாயமாக அனுப்பப்பட்டு, தேர்வுஎழுதும் மாணவனின் மனநிலை பெரிதும் வேறுபட்டு, மதிப்பெண்கள் குறைய வாய்ப்பு உள்ளது. அரசே உயர்நிலைப் பள்ளி,மேல்நிலைப் பள்ளி என்று பள்ளிகளின் தரத்தை உயர்த்திவிட்டு, தேர்வு எழுதுவதற்கு மாத்திரம் அனுமதி இல்லை என்பது சரியல்ல.
எனவே எத்தனை மாணவர்கள் அப்பள்ளியில் உள்ளார்கள் என்பதை கணக்கில் கொள்ளாமல் அந்தந்த பள்ளிகளிலேயே தேர்வுமையம் அமைத்து, பத்தாம் வகுப்பு-பன்னிரெண்டாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வை மாணவர்கள் எழுதிட அனுமதியளிக்கவேண்டுமென இக்கூட்டம் தமிழக அரசை வலியுறுத்துகிறது.

தீர்மானம் : 9

ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு அமல்படுத்துக!


தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர் பயிற்சி பெற்றோர் மற்றும் பி.எட்., பயிற்சி பெற்றோரை அவர்கள் கல்வித் தகுதியின் படிவேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்பதே எங்கள் கருத்தாகும்.
மருத்துவம், பொறியியல், சட்டம் போன்ற அதிமுக்கியத்துவம் வாய்ந்த பிரிவு களில் கற்றோர் தத்தமது துறையில் எவ்வித தகுதித்தேர்வுகளையும் எதிர் கொள்வதில்லை. தக்க பயிற்சி மற்றும் முயற்சிகளின் மூலமாகவே மிகச் சிறந்த மேதைகளாக முன்னேறிசாதனை படைத்துள்ளனர். எனவே ஆசிரியர் தேர்வில் மேலும் ஒரு தகுதித்தேர்வு அவசியமில்லை என்றாலும், ஆசிரியர் தகுதித்தேர்வை உச்சநீதிமன்ற தீர்ப்பு உறுதி செய்துள்ளதால் தமிழக அரசு தகுதித் தேர்வு நடத்தி ஆசிரியர்களை நியமிக்கிறது.

இன்றும் (17.08.2013) நாளையும் (18.08.2013) 14 ஆயிரம் காலி பணியிடங்களுக்கு 6.78 இலட்சம் பேர் தகுதித்தேர்வு எழுதுகிறார்கள்.பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியல் இன பிரிவினரின் கல்வி, வேலை வாய்ப்பிற்கான இட ஒதுக்கீட்டைஅமுல்படுத்தி பல்வேறு துறைகளில் வெற்றிக்கொடி நாட்டு வதற்கு அடித்தளமிட்ட இடஒதுக்கீட்டு நாயகர் தந்தை பெரியார்அவர்களால் பண்படுத்தப்பட்ட பூமியான தமிழகத்தில் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் முழுமையான இட ஒதுக்கீடு முறைஅமுல்படுத்தப்பட வேண்டும் என இக்கூட்டம் தமிழக அரசை வலியுறுத்துகிறது.

தீர்மானம் : 10

மருத்துவக் கல்வி பொது நுழைவுத் தேர்வை ஏற்கமாட்டோம்


கல்வியில் மாநிலங்களுக்கு உள்ள கொஞ்ச நஞ்ச அதிகாரத்திற்கும் வேட்டு வைக்கும் எந்தவொரு பொது நுழைவுத் தேர்வுமுறையே மத்திய அரசு புகுத்திட முனைந்தாலும் அதனை ஒரு போதும் ஏற்க மாட்டோம் என்பதோடு மருத்து வக் கல்வியில் சேரஅகில இந்திய நுழைவுத் தேர்வுக்கு தடைவிதித்துள்ள உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அப்படியே ஏற்றுக் கொள்ள மத்திய அரசு முன்வர வேண் டும் எனவும் மறு சீராய்வு மனுத்தாக்கல் செய்ய உள்ளதாக அறிவித்துள்ள மத்திய அரசின் அறிவிப்பை திரும்பப் பெறவேண்டுமெனவும் இக்கூட்டம் மத்திய அரசை வலியுறுத்துகிறது.

தீர்மானம்: 11
பட்டியல் இன மாணவர்களின் கல்விக் கட்டணம்
அரசே செலுத்தும் அரசாணையை நடைமுறைப்படுத்துக!


தமிழகத்தில் படிக்கும் தலித் மற்றும் பழங்குடி இன மாணவ-மாணவியரின் மேற் படிப்பிற்கு அரசு நிர்ணயித்துள்ள கல்விக்கட்டணத்தை இம் மாணவர் களுக்காக அரசே அந்தந்த கல்லூரிகளுக்கு செலுத்தி விடும் என்ற அரசாணை யை தமிழக அரசு கடந்தஆண்டு வெளியிட்டது. எனினும் இந்த அரசாணை இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. அது குறித்த விளக்கங்களையும் அரசுத்துறையில் பெறமுடியவில்லை.

ஏழை-எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் பொருளாதாரச் சிரமங் களை எதிர்கொள்ளாமல் மேற்கல்வி பயில உதவும்அரசாணையை உடனே செயல்படுத்திட தமிழக அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் : 12

தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமுல்படுத்துக!
நடைப்பயண வீரர்களுக்குப் பாராட்டு! 


தமிழகத்தில் நடைபெறுகின்ற கொலை, கொள்ளை, பாலியல் தொல்லை உள்ளிட்ட சமூகச் சீர்கேடுகளுக்கும் இளந்தலைமுறையினர் போதைப் பழக்கத்திற்கு ஆளாகிற அவலங்களுக்கும் கொடிய சாலை விபத்துகளுக்கும் இலட்சோபலட்சம்தாய்மார்களின் கண்ணீருக்கும் மூலகாரணமாக விளங்கும் மதுக்கடைகள் அனைத்தையும் முழுமையாக அடைத்து முழுமதுவிலக்கை தமிழகத்தில் அமுல்படுத்திட முன்வருமாறு தமிழக அரசை இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

முழு மதுவிலக்கை வலியுறுத்தி தலைவர் வைகோ அவர்கள் தலைமையில் கழக மாணவர் அணி, தொண்டர் அணி, இளைஞர்அணியினர் பங்கேற்ற 2012 டிசம்பர்-உவரி, மதுரை நடைப்பயணம்; 2013 பிப்ரவரி கோவளம்-மறைமலை நகர் நடைப்பயணம்; 2013ஏப்ரல் பொள்ளாச்சி - ஈரோடு வரையான 38 நாட்கள் 1100 கி.மீ. மதுஒழிப்பு நடைப்பயணத்தில் தம்மை வருத்திப் பங்கேற்று சமூகக்கடமையாற்றிய மாணவர் அணி, இளைஞர் அணி, தொண்டர் அணி, கண்மணிகளுக்கு இக்கூட்டம் பாராட்டை தெரிவித்துக்கொள்கிறது.
தீர்மானம்: 13
மது ஒழிப்பு உரிமைப்போர் நடத்திய
சட்டக்கல்லூரி மாணவி நந்தினி அவர்களுக்குப் பாராட்டு!


தலைவர் வைகோ அவர்களின் முழு மதுவிலக்கு நடைப்பயணங்கள் தமிழகத் தில் இலட்சக்கணக்கான தாய்மார்கள் மற்றும்பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அந்த நடைப்பயணங்கள் ஏற்படுத்திய விழிப்புணர் வின் விளைவாக பலமாவட்டங்களில் தாய்மார்களும், உள்ளாட்சி அமைப்பின் பிரிதிநிதிகளும் ஆங்காங்கே மதுக்கடைகளை மூடக்கோரிபோராட்டங்களை நடத்தி வருவதும், விருதுநகர் மாவட்டத்தில் வடமலாபுரம் ஊராட்சி மன்றத் தின் முழு மதுவிலக்கைஅமல்படுத்த வலியுறுத்தும் தீர்மானத்தை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை ஏற்று, வடமலாபுரம் கிராமத்தில் மதுக் கடை யைத் திறக்கக்கூடாது என வழங்கியுள்ள தீர்ப்பும் தன்னெழுச்சியுடன் காலவரையற்ற உண்ணாநிலை அறப்போரைத்தொடங்கி முழு மதுவிலக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும பணியில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு கடமையாற்றியமதுரை சட்டக் கல்லூரி மாணவி செல்வி நந்தினி அவர்களின் முயற்சிக்கும் இக்கூட்டம் பாராட்டுகளை தெரிவிப்பதோடு, கழகமாணவர் அணியினர் முழு மதுவிலக்குப் பிரச்சாரப் பணிகளை இடை விடாது மேற்கொள்ள வேண்டுமென்பதுடன், எங்கெல்லாம்மது ஒழிப்பு உரிமைப் போர் எழுகிறதோ, அங்கெல்லாம் மக்களோடு இணைந்து நின்று அறவழியில் போராட வேண்டுமென தமிழகமாணவக் கண்மணிகளையும், கழக மாணவர் அணி அமைப்புகளையும் இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம்: 14

பல்லடம் சகோதரி த.தேவி அவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்குக!


திருப்பூர் மாவட்டம்-பல்லடம் நகரில் தந்தை நோய்வாய்ப்பட்ட நிலையில், குடும்பத்தைக் காக்க தன் தந்தைக்குச் சொந்தமானஆண்கள் முடி திருத்தகத் தில் வேலைபார்க்க முன்வந்த பி.காம்., பட்டதாரி சகோதரி த.தேவி அவர் களின் தன்னம்பிக்கைமுயற்சியை மறுமலர்ச்சி தி.மு.க. மாணவர் அணி பாராட்டுகிறது.

படித்து முடித்த மாணவ-மாணவிகளுக்கு தகுதியானதோர் வேலைவாய்ப்பு நாட்டில் கிடைக்கவில்லை என்பதையே இச் செயல்காட்டுகிறது. படித்த பெண்மணியான இவர் தங்கள் குடும்பத்தின் வறுமை நிலை போக்க ஆண் களுக்கு முடிதிருத்தும் தொழிலில்ஈடுபடுவது நமது பண்பாட்டுக்கு உகந்தது அல்ல. எனவே, தமிழக அரசு, சகோதரி தேவி அவர்களின் குடும்பச் சூழல், அவரதுதன்னம்பிக்கை மிக்க முயற்சியைப் பாராட்டும் விதமாக ஒரு சிறப்பு நிகழ்வாக அவருக்கு தகுதியான அரசு வேலைவாய்ப்புவழங்கிட முன்வர வேண்டுமென தமிழக அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் : 15

சென்னை - கன்னியாகுமரி இரட்டை இரயில்பாதை திட்டம் விரைந்து நிறைவேற்றுக!


தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இருந்து தென்கோடி முனையான கன்னியாகுமரிக்கு இன்றுள்ள அகல இரயில்பாதையில் இயக்கப்படும் இரயில் களின் பயண நேரம் 15 மணி நேரமாக உள்ளது. புதிதாகப் போடப் பட்டுள்ள நாற்கரச் சாலைகளில் 8மணி நேரத்தில் மகிழுந்துங்களும், ஒன்பதுமணி நேரத்தில் சொகுசுப் பேருந்துகளும் வந்து செல்கின்றன. தென்னக இரயில்வே யின்வருவாயில் முதலிடம் வகிக்கின்ற இவ்வழித்தடம் ஒரு வழிப்பாதையாக இருப்பதே இக்குறைபாட்டிற்குக் காரணமாகும். இருவழிப்பாதையாக்க கொள்கை அளவில் ஒப்புக் கொண்டுள்ள இரயில்வேதுறை ஆண்டுதோறும் ஒதுக்குகின்ற நிதியின் மூலம் சிலகி.மீ. தூரமே இரட்டைப்பாதை அமைக்க முடிகிறது. இப்பாதையை விரைவாக முடிக்க இன்னும் பல ஆண்டுகள் ஆகும் நிலைஉள்ளது. இப்பாதையின் அவசியத்தைக் கருத்தில் கொண்டு சென்னை-கன்னியாகுமரி இரயில் தடத்தை இரட்டை வழித்தடமாகவிரைந்து முடிக்கத் தேவையான முழு நிதியையும் ஒதுக்கிட இந்திய அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் : 16

செங்கோட்டை - கொல்லம் அகலப்பாதைத் திட்டத்தை விரைந்து நிறைவேற்றுக!

சிவகாசி நாடாளுமன்ற உறுப்பினராக தலைவர் வைகோ அவர்கள் பணியாற் றியபோது, முந்தைய காங்கிரஸ் அரசால்சாத்தியமற்றது என்று நிராகரிக்கப் பட்ட விருதுநகர்- செங்கோட்டை - கொல்லம் -தென்காசி- நெல்லை-திருச் செந்தூர் மீட்டர் கேஜ்பாதையை அகல இரயில்பாதையாக்கிடும் திட்டத்தை அன்றைய இந்தியப் பிரதமர் வாஜ்பாய் அவகளின் மூலம் பெற்றுத் தந்து தென்தமிழகத்தின் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படவும் தொழில்கள் வளர்ச்சிக்கும் வித்திட்டார். மொத்தம் 247 கி.மீ. தூரமுள்ளஇதன் இன்றைய மதிப்பீடு ரூ.1500 கோடியாகும்.

இவ்வழித்தடத்தில் செங்கோட்டை- சென்னை பொதிகை எக்ஸ்பிரஸ் இரயி லும், திருச்செந்தூர் - சென்னை செந்தூர் எக்ஸ்பிரஸ் இரயிலும்;செங்கோட்டை - நெல்லை; செங்கோட்டை - மதுரை; நெல்லை - திருச்செந்தூர் பாசஞ்சர் இரயில்களும் இயக்கப்படுகின்றன.

எங்கள் தலைவர் வைகோ அவர்களின் இக்கனவுத் திட்டம் பல்லாயிரக் கணக் கான பொதுமக்களுக்கும், மாணவக்கண்மணிகளுக்கும் பெரும்பயன் அளிக் கிறது - என்றாலும் செங்கோட்டையில் இருந்து கேரள மாநிலம் கொல்லம் வரையானஇரயில்பாதை இன்னும் அமைக்கப்படவில்லை. அதற்கு தேவைப் படும் நிதி ரூ.200 கோடியாகும். நடப்பு ஆண்டில் 20 கோடி ரூபாய்மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் திட்டம் நிறைவேற்றம் என்பது ஆமை வேகத்தில் உள்ளது. இத்திட்டத்தைநிறைவேற்ற காலதாமதம் ஆவதன் மூலம் தென் தமிழகத்திற்கும் - கேரள மாநிலத்திறகும் இடையேயான பன்னெடுங் கால வணிகவளர்ச்சி பாதிக்கப்படுகிறது. எனவே சுமார் 15 ஆண்டுகளாக முற்றுப் பெறாமல் உள்ள இரு மாநிலங்களை இணைக்கின்றசெங்கோட்டை - கொல்லம் அகல இரயில்பாதையை சிறப்பு நிகழ்வாகக் கருதி ரூ.200 கோடி முழுமையாக நிதியுதவி அளித்துவிரைந்து பணி முடிக்க மத்திய அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் : 17

தமிழ் நாட்டுக்கு அறிவித்த இரயில்களை இயக்குக!
புதிய இரயில்பாதை அமைத்திடுக! 


நாட்டில் ஒட்டுமொத்த முன்னேற்றத்தில் இரயில் போக்குவரத்து இன்றியமை யாக் காரணிகளில் ஒன்றாக விளங்குகிறது. கடந்தஇரயில்வே நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட சென்னை - பழனி தினசரி இரயில்; சென்னை - தஞ்சை தினசரி இரயில்;கோவை - மன்னார்குடி இரயில்; கோவை - இராமேஸ் வரம் வாராந்திர இரயில்; நாகர்கோவில் - பெங்களூரு தினசரி இரயில்; புதுச் சேரி- திருப்பதி வாராந்திர இரயில்; திருச்செந்தூர் - பழனி பயணிகள் இரயில்;

கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பே அறிவிக்கப்பட்ட செங்கோட்டை- ஈரோடு - கோவை - தினசரி இரயில் சேவைகள் எதுவும் இதுவரை தொடங்கப் படவில்லை. இந்த இரயில் சேவைகளில் உடனடியாக தொடங்க வேண்டு மெனவும்,

லாப நோக்கு இல்லாமல் மக்களுக்கு பயனளிக்கும் இரயில் பாதைத்திட்டங் களுக்கு வலுவான வருவாய் வாய்ப்புஇல்லையென்றாலும் மாநில அரசே 50 சதவிகித நிதியினை வழங்க வேண்டும் என்பதை கட்டாயப்படுத்தும் மத்திய அரசின்நடவடிக்கைகளை கண்டிப்பதோடு இதன் காரணமாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு வேலை தொடங்கப்படாமல் உள்ள

திண்டுக்கல் - குமுளி, திருவண்ணாமலை - ஜோலர்பேட்டை, மொரப்பூர்-தர்மபுரி; அரியலூர்-தஞ்சாñர் இரயில் பாதைஅமைக்கும் திட்டத்தில் மத்திய இரயில்வே துறையே தம் சொந்த நிதியில் மேற்கொள்ள முன் வர வேண்டும் எனவும் இக்கூட்டம்வலியுறுத்துகிறது.

தீர்மானம் : 18

தமிழகத்தின் எதிர்காலத் தலைமுறையைச் செப்பனிட
மாணவர் பயிற்சிப் பாசறைகள்


இளம் மாணவச் செல்வங்களுக்கு இன உரிமை குறித்து முற்றான புரிதலை ஏற்படுத்துவதோடு, தன்னலமற்ற தியாக உணர்வு மிக்கசிறந்த தலைமைப் பண்பு கொண்டவர்களாக அவர்களை உருவாக்கிட வேண்டும் என்பதை இன்றியமையாத கடமையாகமறுமலர்ச்சி திமுக மாணவர் அணி கருதுகிறது.

அதனடிப்படையில் தமிழகத்தில் 11 மண்டலங்களில் தேர்தெடுக்கப்பட்ட 20 ஆயிரம் மாணவர்களுக்கு இன உரிமை மற்றும்தலைமைப் பண்பு பயிற்சிப் பாசறைகளை 2014 ஜனவரியில் தொடங்கி நடத்துவது என இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

தீர்மானம் : 19

2 லட்சம் மாணவர்களை கழக உறுப்பினராகச் சேர்த்தல்


வளர்ந்து செழித்திருக்கின்ற தொலைத் தொடர்பு வசதிகளால் தமிழ்நாட்டு மாணவர்கள் சர்வதேச அரசியலைக்கூட நன்றாகத்தெரிந்தும், புரிந்தும் வைத்திருக்கிறார்கள்.

அந்த மாணவர்களின் அறிவும்-ஆற்றலும்-செயல்திறனும் உலகில் பல கொடுமைகளுக்கு ஆளாகித் தவிக்கின்ற தமிழ் இனத்தைப்பாதுகாக்க பயன்பட வேண்டுமெனவும்; அதற்கான முயற்சிகளில் ஒரு அங்கமாக தகுதியும், திறமை யும், அரசியல் ஆர்வமும் உள்ளஇரண்டு இலட்சம் மாணவர்களை தமிழ் இனத்தின் உரிமைக்காக ஓயாத அலைகளாக போராடி வரும் மறுமலர்ச்சி திராவிடமுன்னேற்றக் கழகத்தில் உறுப்பினராக சேர்ப்பது என இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

தீர்மானம் : 20

விருதுநகர் மாநாடு பத்தாயிரம் மாணவர்கள் சீருடையில் பங்கேற்பு


தமிழ்த்தாயின் தவத் தலைவர் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாள் விழா - மறுமலர்ச்சி திமுக மாநில மாநாடு செப்டம்பர் 15அன்று விருதுநகரில் நடைபெற இருக்கிறது.

மறுமலர்ச்சி திமுக அரசியல் வரலாற்றில் பொன்னேடாக பதிவாகப் போகின்ற எழுச்சிமிகு இம்மாநாட்டில் கழக மாணவர்அணியினர் பத்தாயிரம் பேர் சீருடையில் பங்கேற்பது என இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

தீர்மானம் : 21

மண்டல மாணவர் அணி பொறுப்பாளர்கள் நியமனம்


கழக மாணவர் அணி செயல் திட்டங்களை விரைந்து முன்னெடுக்க வசதியாக இணைப்பில் கண்டுள்ளவாறு மாநில மாணவர்அணித் துணைச் செயலாளர் களை மண்டல மாணவர் அணி பொறுப்பாளர்களாக கழகப் பொதுச் செயலா ளர் அவர்களின் ஒப்புதல்பெற்று நியமித்திட இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

தீர்மானம் : 22

கழக மாணவர் அணி நிர்வாகிகள் நியமனம்


கழக மாணவர்அணி அமைப்புகளை மேலும் வலிமைப்படுத்திடவும் அறிவிக் கப்பட்டுள்ள செயல் திட்டங்களை நிறைவேற்றிடவசதியாகவும், ஒன்றிய-நகர, பேரூர், பகுதிக் கழக மாணவர் அணி அமைப்பாளர், துணை அமைப்பாளர் களை நியமித்திட அந்தந்தஒன்றிய-நகர, பகுதிச் செயலாளர்களிடம் பட்டியல் பெற்று மாவட்டச் செயலாளர்களின் பரிந்துரையுடன் கழகப் பொதுச்செயலா ளர்அவர்களின் ஒப்புதலுக்கு அனுப்பி, நியமனம் செய்திடும் பணியினை மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர்கள், துணைஅமைப்பாளர்கள் முனைப் புடன் செய்திட வேண்டுமெனவும் இப்பணியினை செப்டம்பர் திங்கள் 30ஆம் தேதிக்குள் நிறைவு செய்திடவேண்டுமெனவும்; மண்டல மாணவர் அணிப் பொறுப்பாளர்கள் இதனை ஒருங்கிணைத்திட வேண்டும் எனவும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

தீர்மானம்: 23

சங்கொலி சந்தா


தமிழ் இனத்தின் கவசமாக விளங்கிடும் ‘சங்கொலி’ வளர்ந்திட கழக மாணவர் அணியின் மாநில துணைச் செயலாளர்கள், மாவட்டஅமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், ஒன்றிய-நகர-பகுதி-பேரூர் கழக அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள்அனைவரும் தவறாமல் சந்தாதாரர் ஆகிட வேண்டும் என்ப தோடு, தங்கள் பகுதியில் உள்ள நூலக வாசகர்கள் மற்றும் நட்பு வட்டங் களைச் சேர்ந்த மாணவக் கண்மணிகள் ‘சங்கொலி’ படித்திட கூடுதல் சந்தாக் களை சேர்த்திட முனைந்து பணியாற்றவேண்டும் என்று இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

‘தாயகம்’                                                                                       தலைமைக் கழகம்
சென்னை-8                                                                                மறுமலர்ச்சி தி.மு.க.
17.08.2013



மறுமலர்ச்சி தி.மு.க. மாணவர் அணி கலந்துரையாடல் கூட்டம்
நிகழ்ச்சி நிரல்
சென்னை - 17.08.2013



தலைமை : தி.மு.இராசேந்திரன், மாநிலச் செயலாளர்

வரவேற்புரை :மு.மாயன், வடசென்னை மாவட்ட அமைப்பாளர்

நிகழ்ச்சி தொகுப்பு :மணவை தமிழ்மாணிக்கம்

மாநில துணைச் செயலாளர்

கருத்துரை : 1. மாநிலத் துணைச் செயலாளர்கள் : 2. மாவட்ட அமைப்பாளர்கள்

சிறப்புரை : மக்கள் தலைவர்

வைகோ

மல்லை சத்யா

இமயம் ஜெபராஜ்

மு.செந்திலதிபன்

க. அழகுசுந்தரம்

வே. ஈசுவரன்

ஆ.பாஸ்கரசேதுபதி

பங்கேற்போர்: மாவட்டச் செயலாளர்கள்

வடசென்னை சு.ஜீவன், தென்சென்னை வேளச்சேரி பி.மணிமாறன், காஞ்சி பாலவாக்கம் க.சோமு, திருவள்ளூர் டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன், திருச்சி டி.டி.சி. சேரன்

தலைமைக் கழகச் செயலாளர்கள்

வழக்கறிஞர் ஜி.தேவதாஸ், சீமா பஷீர், கவிஞர் தமிழ்மறவன், கோ.நன்மாறன், குமரி விஜயகுமார், கவிஞர் கோமகன்

நன்றியுரை: புதூர் கே.கே.முத்துக்குமார் வடசென்னை மாவட்ட துணை அமைப்பாளர்




No comments:

Post a Comment