Saturday, August 3, 2013

பாரதியும் பாவேந்தரும் -பகுதி 1

பாரதியும் பாவேந்தரும் ஊட்டியா வீரத்தை; 
மானத்தை இளைய தலைமுறை போற்றிட வேண்டும் !- #வைகோ 

சென்னை மணவழகர் மன்றம் முத்தமிழ் விழா அறக்கட்டளை மற்றும் ராஜா சர் அண்ணாமலை செட்டியார் நினைவு அறக்கட்டளை சார்பில், மணவழகர் மன்றத்தின் 57 ஆம் ஆண்டு முத்தமிழ் விழாவும், டாக்டர் பா.சிவந்தி ஆதித்த னார் அவர்களின் உருவப் படத்திறப்பு விழாவும் ராஜா அண்ணாமலை மன்றத் தில் 12.7.2013 அன்று நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் “பாட்டுக்கு ஒரு புலவ னும் பாவேந்தரும்” என்ற தலைப்பில் கழகப்பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் சிறப்பு வைகோ உரை ஆற்றினார்.
விவரம் வருமாறு:

தேன்தமிழ்ப் பேச்சாலும் தெள்ளுதமிழ் எழுத்தாலும், தமிழ் மக்களைத் தன் வயப் படுத்திய தமிழ்த்தென்றல் திரு வி.க. அவர்களின் புகழ் மணக்கும், 57 ஆவது முத்தமிழ் விழாவில், இமயக் கொடுமுடி முதல் குமரித் திருவடி வரை, 32
இலட்சம் விழிகள்,பொழுது புலரும் வேளையில், தங்கள் எண்ணங்களைத் தாவ விடுகின்ற தினத்தந்தி நாளிதழை, வெற்றிகரமாக இயக்கியவரும், தந்தை சி.பா. ஆதித்தனார் தமிழர்தந்தையாக உயர்ந்து நடத்தியதும், அதனை மென் மேலும் விரிவுபடுத்தி, 15 பதிப்புகளிலும் 16 இலட்சம் வாசகர்களை ஈர்க்கின்ற வராக, பத்திரிகை உலகத்தினுடைய, அணையாப் பேரொளியாக, வலது கை கொடுப்பதை இடது கை அறியாத வள்ளன்மை உள்ளத்தோடு, எண்ணற்ற
குடும்பங்களை வாழ வைத்தவராக, விளையாட்டுத் துறையில் உயர்நிலைக்கு நமது தாயகமாம் தமிழகத்துக்கும், அதனை உள்ளடக்கிய இந்தியத் துணைக் கண்டத்துக்கும், ஒரு தனி மனிதன் எவரும் செய்ய இயலாத சாதனைகளை,
வெற்றிச் சாதனைகளாகப் படைத்துத் தந்தவராக, கல்வித்துறையில் ஒரு பல்கலைக்கழகத்தையே இயக்கியவராக, காலத்தால் அழியாத பெரும்  புகழைப் பெற்று இருக்கின்ற டாக்டர் சிவந்தி ஆதித்தனார் அவர்களுடைய திருவுருவப் படத் திறப்பு விழாவுக்குத் தலைமை தாங்குகின்ற, அறம்சார் நீதி உலகத்துக்குத் தாய்த் தமிழகம் தந்த, உச்சநீதிமன்றத்தில் மெச்சத்தக்க இடத் திலே நீதி அரசராகத் திகழ்ந்த, மாண்புமிகு ஐயா இலக்குமணன் அவர்களே,

இந்த விழாவில் நான் பங்கு ஏற்கின்ற அரிய வாய்ப்பினைத் தொடர்ந்து வழங்கு கின்ற, அன்போடு என்னை அழைத்த, இம்மணவழகர் மன்றத்தை இயக்கி வரு கின்ற, நீதிஅரசர் மாட்சிமை தங்கிய கோகுலகிருஷ்ணன் அவர்களே, வரவேற் புரை ஆற்றிய, மணவழகர் மன்றத்தின் செயலாளர் அன்புமிகு கன்னியப்பன் அவர்களே, தியாகத்தாலும், தன்னலம் கருதாத உழைப்பாலும், பொதுவாழ்வில் அனைவராலும் மதிக்கப்படுகின்ற,பொது உடைமை இயக்கத்தின் முன்னணித்
தலைவர்களுள் ஒருவரான அண்ணன் நல்லகண்ணு அவர்களே,

தலைதாழாத் தன்மான உணர்வோடு இயங்கி வருகின்ற அரிய உரைதனைத் தந்து அமர்ந்து இருக்கின்ற என் அன்புச்சகோதரி வழக்கறிஞர் அருள்மொழி அவர்களே,

பொருநையாற்றங்கரையில் இருந்து வந்து, காவல்துறையில் பணி ஆற்றி, சிறந்த எழுத்தாளராகப் பரிணமிக்கத் தொடங்கி, புத்தகங்களின் பக்கம் நம்மு டைய எண்ணங்களைக் கொண்டு போய்ச் சேர்த்த மதிப்பிற்குரிய சகோதரர்
மாடசாமி அவர்களே, நன்றி சொல்ல இருக்கின்ற அன்புக்குரிய கருணாநிதி அவர்களே, ஆன்ற விந்தடங்கிய கொள்கைச் சான்றோர்களே, மதிப்பு மிக்க செய்தியாளர்களே, தமிழ் உணர்வாளர்களே, தலைதாழ்ந்த வணக்கம்.

இந்த அரிய வாய்ப்பைத் தந்த மணவழகர் மன்றத்தினருக்கு நன்றி.

எனக்கு என்ன மகிழ்ச்சி என்றால், 2005 ஆம் ஆண்டு, இதே மணவழகர் மன்றத் தில், தமிழர் தந்தை ஆதித்தனார் அவர்களுடைய நூற்றாண்டு விழாவில் நான் பேசுகின்ற வாய்ப்பைப் பெற்றேன்.இன்று அவரது தனயனுடைய புகழ் பாடு கின்ற விதத்தில், அவருடைய திருவுருவப் படத்தைத் திறந்து வைக்கின்ற இந்த நிகழ்ச்சியில் உரை ஆற்றுகின்ற வாய்ப்பையும் வழங்கியமைக்காக, தமிழ் வளர்க்கும் மணவழகர் மன்றத்துக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித் துக் கொள்கின்றேன்.

தமிழ் இசைக்கு மகுடம் சூட்டிய அண்ணாமலை அரசர் கட்டி எழுப்பிய இந்த மன்றத்தில், தமிழ் இனம் காக்க நடைபெறுகின்ற நிகழ்வுகள் ஏராளம், ஏராளம். ஈழத்தில் நடப்பது என்ன? என்ற தலைப்பில், இந்த அண்ணாமலை மன்றத்தில்
பேசுவதற்கும் அனுமதி கொடுத்தது இந்த அண்ணாமலை மன்றம். அந்தப் பேச்சு தேசத்துரோகம் என்று என்மீது தொடுக்கப்பட்ட வழக்கு, நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இருக்கின்றது.

இந்த ஜூலை 12 ஆம் நாளையும் நான் மறக்க முடியாது. அமெரிக்க நாட்டின் சிகாகோ நகரில்,தேவநேயப் பாவாணர் நூற்றாண்டு விழாவில் உரையாற்றி விட்டு, இதேநாளில், 2002 இல் நான் சென்னை விமான நிலையத்துக்கு வந்து
இறங்கியபோது, அங்கிருந்து நேராக வேலூருக்குக் கொண்டு செல்லப்பட்டு, அந்தச் சிறையையும் பார்க்கக்கூடிய வாய்ப்பைப் பெற்றேன்.ஆம்; விடுதலைப் புலிகளை நேற்றும் ஆதரித்தேன்; இன்றும் ஆதரிக்கின்றேன்; நாளையும் ஆதரிப்பேன் என்று கூறியதற்காக, பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட் டுச் சிறையில் அடைக்கப்பட்டேன்.(கைதட்டல்).



பாரதியும், பாவேந்தரும்

பாட்டுக்கு ஒரு புலவனும், பாவேந்தரும் என்ற பொருளிலே பேச விழை கிறேன் எனத்தெரிவித்தேன். இந்தப் பெயர்களை ஒலிக்கின்ற போதே, நம்மு டைய நரம்புகளில் வீரத்தை, மானத்தை மின்னலாய்ப் பாய்ச்சுகின்ற அந்தக்
கவிஞர்கள் உலவ வேண்டிய காலம், இந்தக் காலம்.அவர்களுடைய கவிதை கள், நமது மனத் தோட்டத்தில் உலவ வேண்டியது இந்தக் காலம்.

தங்கள் பாட்டு வரிகளிலே இந்த நாட்டின் எல்லைகளைச் சொல்லுகின்ற போது,

நீலத்திரைகடல் ஓரத்தில் நின்று
நித்தம் தவம் செய் குமரி எல்லை - வட
மாலவன் குன்றம் இவற்றிடை யேபுகழ்
மண்டிக் கிடக்கும் தமிழ்நாடு

என்று சொன்ன, பாட்டுக்கொரு புலவனின் எண்ணத்தையே எதிரொலிக்கின்ற வகையில், தன்னுடைய பாடல் வரிகளாக ஆக்குகின்றார் பாவேந்தர்.

சூழும் தென்கடல் ஆடும் குமரி
தொடரும் வடபால் அடல்சேர் வங்கம்
ஆளும் கடல்கள் கிழக்கும் மேற்காம்
அறிவும் திறனும் செறிந்த நாடு

என்றார்.

வாழ்க்கை இனிமையானது. நம்பிக்கைக்கு உரியது என்று, மகாகவிஞனாக அனைவராலும் போற்றப் படுகின்ற, எட்டயபுரம் தந்த முண்டாசுக் கவிஞன்,
அந்த நாள்களில் எழுதிய வசன கவிதை, இன்றைக்கு வசன கவிதைகளைப் படைக்கின்ற சிந்தனையாளர்களுக்கெல்லாம், ஒரு ஊன்று கோலாகத் திகழ் கின்ற வரிகள் ஆகும். அவற்றைப் படிக்கின்றபோது, நான் மெய்சிலிர்த்துப் போனேன்.

இவ்வுலகம் இனிமையானது.
இதில் காணும் வானும் இனிமையுடைத்து
காற்று இனிது; தீ இனிது; நீர் இனிது; நிலம் இனிது
சூரியன் நன்று, திங்களும் நன்று
வானத்துச் சுடர்களெல்லாம் இனியன
மழை இனிது மின்னல் இனிது இடி இனிது
கடல் இனிது மலை இனிது காடு நன்று
ஆறுகள் எல்லாம் இனியன
உலோகமும் மரமும் செடியும் கொடியும் மலரும்
கனியும் காயும் இனியன
பறவைகள் எல்லாம் இனியன; ஊர்வனவெல்லாம்
நல்லன
விலங்குகள் எல்லாம் இனியன; நீர் வாழ்வனவெல்லாம்
நல்லன
மனிதர் மிகவும் இனியர்;
ஆண் நன்று, பெண் இனிது, குழந்தை இன்பம்
இளமை இனிது முதுமை நன்று
உயிர் நன்று சாதல் இனிது

இப்படி,வாழ்க்கையை இனிப்பாகவே காட்டுகிறான்.சாவும் இனிதே என்கிறான்.

நேற்று இருந்தார் இன்று இல்லை; தன் கேள் அலறச் சென்றார்.‘நெருநல் இருந் தார், இன்று இல்லை என்ற பெருமை உடைத்து இவ்வுலகு’ என்றார் வள்ளுவர்.

வானத்தில் இருந்து தொடங்குகின்ற பாரதி,காற்றை, நிலத்தை , நீரை, நெருப் பை, விண்ணில் சிறகடிக்கும் பறவைகளை, நிலத்தில் உலவுகின்ற விலங்கு களை, மரத்தை, செடியை, கொடியை, மலரை, காயை, கனியை, இவை எல்லா
வற்றையுமே இனியன என்கிறான். மனிதர்கள் மிகமிக இனியர் என்கிறான். வாழ்க்கை கசப்பாக இருக்கிறது என்று ஏன் எண்ணுகிறீர்கள்? கருப்பாக இருக் கிறோமே என்று குயில் கூவாமல் இல்லையே? அதன் கீதம் இனிமையாகத் தானே இருக்கிறது? ஆகவே, குயிலைப் பற்றிப் பாடினான்.

அந்தக் கவிஞன், பாட்டுக்கு ஒரு புலவன் பாரதி,பாவேந்தரைச் சந்திக்கின்ற காட்சிக்கு வருகிறேன்.அது, 1909 ஆம் ஆண்டு. விடுதலைக் களத்தில் ஆயுதம் ஏந்தியோருக்கும், அடிமை விலங்குகளை உடைக்கத் துடித்தோருக்கும், நிழல் கொடுத்து அரவணைத்த, பாவேந்தரை ஈந்த புதுவை மண்ணில், கொட்டடி வேணு நாயக்கர் வீட்டு மணவிழாவில் இசைநிகழ்ச்சி. அங்கே அமர்ந்து இருந்த வர்கள் 25 பேர்.வேணு நாயக்கர் ஒரு பாட்டுப்பாடச் சொல்லுகிறார்.அன்றைக்கு  கனகசுப்புரத்தினமாக இருந்த பாவேந்தர் ஒரு பாடல் பாடுகிறார்.

வீர சுதந்திரம் வேண்டி நின்றார்,
வேறொன்று கொள்வாரோ?

இந்தக் கருத்து, இன்றைக்கு எவ்வளவு பொருத்தம் பாருங்கள் தோழர்களே! குருதிக் களத்தில், பகைவனை எதிர்த்து உயிர்களைத் தந்த நிலத்தில், எங்கள் மூதாதையர்கள் கொற்றமும் கொடியும் உயர்த்தி வாழ்ந்த மண்ணிலே, சுதந்தி ரத்துக் காகவே ஆவியைத் தந்த மண்ணிலே, ஈழம் என்று கேட்டு விட்டு இன் னொன்றை ஏற்பாரோ? என்பதற்குத்தான்,

வீர சுதந்திரம் வேண்டி நின்றார்
வேறொன்று கொள்வாரோ?
கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால்
கைகொட்டிச் சிரியாரோ?

என்ற இந்த வரிகள் கொண்ட பாடலின் முதல் வரிகளை, கனகசுப்புரத்தினம் பாடுகிறார்.

இந்தப் பாடலைத் தந்த பாரதி, அங்கே அமர்ந்து இருப்பது, கனகசுப் புரத்தினத் துக்குத் தெரியாது.அங்கே அமர்ந்து இருந்த ஒருவரையே மற்ற அனைவருடை ய கண்களும் நோக்குகின்றன.அவர், ரவிவர்மா பரமசிவம் போலும் என்று
இவராகவே மனதிற்குள் கற்பனை செய்து கொள்ளுகிறார்.

அடுத்து, இன்னும் ஒரு பாடலைப் பாடுக என்று கேட்கிறார்கள். அப்போதுதான், தங்கை இங்கே சொன்னாரே அதைப்போல,

தொன்று நிகழ்ந்திடு அனைத்து முணர்ந்திடு
சூழ்கலை வாணர்களும்
இவள் என்று பிறந்தவள் என உணராத இயல்பினராம்
எங்கள் தாய்

என்று பாடுகிறார். கணீரென்ற குரலில் அவர் பாடி முடித்தவுடன், வேலு நாயக் கர், பாரதியைச் சுட்டிக் காட்டி, இவரைத் தெரியுமா? என்று கேட்கிறார்.

தெரியாது என்ற சொற்கள் என் நாவில் தவழ்வதற்கு முன்னதாகவே, பாரதி கேட்கிறார், தமிழ் வாசிச்சு இருக்கீங்களோ? என்று. இந்தச் சந்திப்பு குறித்து
பாவேந்தரே பின்னர் எழுதி இருக்கின்றார்.

அடக்கத்தின் காரணமாக, கொஞ்சம் என்கிறார் பாவேந்தர். உணர்ந்து பாடுகிறீர் கள் என்று, அம்மாமனிதன், இவரைப் பார்த்துச் சொல்லுகிறார்.

உடனே வேணு நாயக்கர்,அந்தப் பாட்டெல்லாம் போட்டிருக்காங்களே, அவங்க தான் இந்த சுப்பிரமணிய பாரதி என்றவுடன், வெட்கம், நாணம், மகிழ்ச்சி, பயம் எல்லாம் என் மனதுக்குள் எழுந்ததால்,ஒரு நீண்ட பெரிய நிலைக்கண்ணா டிக்கு முன்னாலே நின்றால், நான் ஒரு இஞ்சி தின்ற குரங்காக இருப்பேன் என் பதைச்சொல்லவே வேண்டாம்; அப்பொழுது பாரதியார் என்னவெல்லாம் சொன்னார் என்பது,அப்போதே எனக்கு நினைவு இல்லை.

இப்பொழுது எப்படி நினைவு இருக்கும்? ஆயினும், அவர் சொன்ன ஒரு சொல் மட்டும் மறக்கவில்லை;வேணு, நீ ஏன் இவரை நம்ம வீட்டுக்கு அழைத்து வர வில்லை? என்று கேட்டது மறக்கவில்லை.ஆண்டுகள் பலவாயினும் மறக்க வில்லை. இந்தச் சொற்கள் மறந்து விடுமோ? என் நினைவை விட்டுத் தவறி விடுமோ? என்று கருதி, அந்தச் சொற்கள் மீது ஏறி அமர்ந்து அழுத்திக்கொண் டேன் என்று பாவேந்தர் எழுதி இருக்கிறார்.

கவிதா மண்டலத்தின் நுழைவாயில், இந்த இரண்டு கவிஞர்களுக்கும் எப்படி அமைந்து இருக்கிறது பார்த்தீர்களா?

பாரதி தங்கி இருந்த இல்லத்துக்கு, பாவேந்தரை அழைத்துச் செல்லுகின்றார் கள். சற்றே உரையாடி விட்டு, அவர் கவிதை எழுதச் செல்லப் போகிற போது, அங்கே இருந்த கவிதை வரிகளைப் புரட்டுகிறார் கனகசுப்புரத்தினம். தனது
இதயத்துக்கு உள்ளே உள்வாங்கிக் கொள்கிறார்.

மனித இயல்பு என்ன தெரியுமா? ஒரு துறையில் சிறந்து விளங்குகின்ற ஒரு வரை, அதே துறையில் உள்ள மற்றொருவர், அழுக்காறு இல்லாது  அணைத் துக் கொள்ளுகின்ற தன்மை, மாமனிதர் களுக்கு மட்டும்தான் வருமே தவிர, சாதாரண மனிதர்களுக்கு ஏற்படாது. தன்முனைப்பு அதை ஏற்காது. ஆனால், பாரதி இந்தக் கவிஞரை அரவணைத்துக் கொள்ளுகிறான்; அவரது திறமையை ஊக்கு விக்கின்றான்.

எங்கெங்கு காணினும் சக்தியடா, தம்பி
ஏழுகடல் அவள் வண்ணமடா; அங்கு
தங்கும் வெளியினில் கோடி அண்டம்
அத்தாயின் கைப்பந்தென ஓடுகிறான்,
ஒரு கங்குலில் ஏழு முகில் இனமும் வந்து
கர்ஜனை செய்வது கண்டதுண்டோ?
மங்கை நகைத்த ஒலி என நான்,
அந்த மந்த நகை அங்கே மின்னுதடா

இந்தப் பாடல்தான், பாரதியார் கேட்டவுடன் கனகசுப்புரத்தினம் பாடிய முதல் பாடல்.

இந்தப் பாடலை,‘சுப்பிரமணிய பாரதியின் கவிதா மண்டலத்திலே இருந்து ஒரு பாடல்; இதைப் பிரசுரிக்க’ என்று ஒரு குறிப்பு எழுதி, சுதேச மித்திரனுக்கு, சுப்பிரமணிய பாரதியார் அனுப்பி வைக்கிறார். இப்படி, அவர்களுடைய நட்பு உலகம் தொடர்கிறது, விரிவு அடைகிறது.

சில நாள்கள் கழித்து, பாரதியார் இல்லத்துக்கு மீண்டும் செல்கிறார் கனகசுப்பு ரத்தினம். பாரதியின் முகத்திலே வாட்டம். நெஞ்சிலே கவலை, அகத்தில் இருக் கின்ற கவலை, அவரது முகத்தில் தெரிகின்றது. அவரது வாட்டத்தின் காரணத்தை அறிய முனைகிறார் கனகசுப்புரத்தினம். ஒரு கடிதத்தை எடுத்து நீட்டுகிறார் பாரதி. அது, சென்னையில் இருந்து ஒரு தினசரி ஆசிரியர், பாரதி யாருக்கு எழுதிய கடிதம். அந்தக் கடிதத்தில், நீ கவிதை எழுத வேண்டாம்; வச னம் மாத்திரம் எழுது; பாட்டு எழுதி உன் நேரத்தை வீணாக்க வேண்டாம் என்று எழுதி இருந்தார்.

பாட்டின் பயனை அறியாத இந்தத் தினசரி ஆசிரியர், இப்படி எழுதி விட்டாரே என்று, சோர்வு எனும் இருளுக்குள் சிக்கினார் பாரதி. இதையும் பாரதிதாசன் தான் பின்னாளில் சொல்லுகிறார்.அந்தச் சோர்வை மீறி எழுந்தார், ஊக்கம்
அடைந்தார். சில நாள்கள் கழிந்தன. மீண்டும் ஒருமுறை பார்க்கச் சென்று இருந் தோம். இப்போது ஒரு கடிதத்தை எடுத்துக் கொடுத்தார். அயர்லாந்து
நாட்டின் விடுதலை வேட்கைக் கவிஞன் கஜின்ஸ் எழுதிய கடிதம் அது.

நம்மை வியப்புக் கடலில் ஆழ்த்துகிறது. இன்று போல, கணினிகள் எதுவும் இல்லை. மின்னணுவின் சாதனைகள் மின்னாத காலம். கணப்பொழுதில் உல கின் மறு மூலைக்குத் தொடர்பு கொள்ளக் கூடிய கருவிகள் அமையாத நாள் கள். அந்த அயர்லாந்துக் கவிஞன், அப்போது ஜப்பான் நாட்டில் இருக்கிறான். அங்கிருந்து பாரதிக்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறான்.உங்கள் கவிதை ஒன் றை எனக்கு அனுப்புங்கள். அதன் பொருளை உணர்ந்து, அதை நான் ஆங்கிலத் தில் மொழி பெயர்த்து வெளியிடுகின்றேன் என்று கேட்டு கஜின்ஸ் எழுதி இருக்கின்றான்.

அதை பாவேந்தரிடம் காண்பித்துவிட்டு,அப்போதே ஒரு கவிதையைச் சொல் லுகிறார்.

வேண்டுமடி எப்போதும் விடுதலை;

ஆம் ஆதிக்கக் கரங்களை முறித்து எறிகின்ற அந்த உரிமை வேட்கை, கவிஞ னுடைய இருதயத்துக்கு உள்ளே நிறைந்து இருந்ததால்,வேண்டுமடி எப்போ தும் விடுதலை என்ற பாடலை எழுதி அனுப்புகிறார். அதை கஜின்ஸ் மொழி
பெயர்க்கிறார்:

Oh mother,
give us liberation

இப்படி, பாரதி, பாவேந்தருடைய நட்பு தொடர்கிறது.

சென்னைக்கு வருகிறார் காந்தி. அப்போது அவரைச் சந்திக்கச் சென்ற நமது முண்டாசுக் கவிஞன், மிஸ்டர் காந்தி, இன்று திருவல்லிக்கேணி கடற்கரை யில் நான் ஒரு கூட்டம் பேசுகிறேன்; தலைமை தாங்க நீங்கள் வரமுடியுமா? என்று கேட்கிறார். அதைக் கேட்டுத் திகைத்துப் போன காந்தியார், தன்னுடைய உதவியாளர் மகாதேவ தேசாயை அழைத்து, இன்றைய நிகழ்வுகள் குறித்த
குறிப்புகளைக் கேட்கிறார். பிறகு பாரதியைப் பார்த்து, இன்று மாலையில் நான் வேறு ஒரு நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டியிருப்பதால், உங்களுடைய நிகழ்ச்சியை நாளை வைத்துக் கொள்வதாக இருந்தால் நான் வரலாம் என்ற போது, இல்லை, நாளைக்குச் சாத்தியப்படாது; அறிவித்தபடி இன்றைக்கு நான் பேசியாக வேண்டும்; உமது இயக்கத்தை நான் ஆசீர்வதிக்கின்றேன் என்று
சொல்லிவிட்டுப் போனான் கவிஞன் பாரதி. (கைதட்டல்)

அவர் முதன்முதலாக உரை ஆற்றிய இடம் எது தெரியுமா? சென்னை மாநிலக் கல்லூரியின் தமிழ் மன்றம். கருணை என்ற தலைப்பில் பேசுகிறார்.அந்த உரை யில் விவரிக்கின்றார்.

மனிதன் தன் மகனிடத்தில், அரசன் குதிரை இடத்தில்,அரசி பணிப்பெண்ணிடத் தில், வைத்தியன் நோயாளியிடத்தில், சிங்கம் தன் குருளையிடத்தில், தாய்ப் புலி தன் பிள்ளைப் புலியிடத்தில் அன்பு காட்டுவது என்பது, மிக உயர்ந்த அன்பு அல்ல; அது இயற்கை.

நெடுநேரம் பசியால் உணவு தேடிக் கொண்டு இருக்கின்ற ஒருவன், தின்பதற்
காகக் கையில் வைத்து இருக்கின்ற பொருளை, அவனை விட அதிகம் பசி யோடு, இப்போது உணவு அருந்தினால் தான் அவன் இனி உயிர் வாழ முடியும் என்ற நிலையில் இருப்பவனின் ஏக்க விழிகளை ஒருவன் பார்க்க நேர்ந்தால், தன் கையில் வைத்து இருக்கின்ற உணவை, அவனிடம் கொடுக்கின்றானே, அவனது செயலுக்குப் பெயர்தான் கருணை என்கிறார். (கைதட்டல்).

வேல்களும், வாட்களும் உராய்ந்து கொண்டு இருக்கின்ற ஒரு யுத்த களம். அங்கே, சிட்னி என்ற ஒரு பெருவீரன், ஈட்டிகள் பாய்ந்த நிலையில், உடலில் இருந்து குருதி சோர,தண்ணீர் தண்ணீர் என்று ஏங்கித் தவிக்கிறான். அவனது நா வறண்டு போயிற்று. அப்போது, தண்ணீர் கொண்டு வந்து கொடுக்கின்றார் கள். அதைப் பருக நினைக்கிறான். அப்போது, அருகில் அவனது விழிகள் படரு கின்றன. அவனைவிடத் துயரமான நிலையில், உயிர் வாழவே இயலாதோ? என்ற நிலையில், தண்ணீர் கிடைக்காதா? என்று ஏக்கத்தோடு பார்க்கின்ற மற் றொருவனின் கண்களைப் பார்க்கின்றான். உடனே, தன்னுயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை மறந்து, மற்றொரு வீரனுக்குக் கொண்டு போய்க் கொடுக்கச் சொன்னான். அப்படிச் சொல்லுகின்றபோது, இவனது உயிரும் பிரிந்து விட்டது. இதற்குப் பெயர்தான் காருண்யம்.

மாநிலக் கல்லூரியில் இப்படி உரை ஆற்றுகிறார் பாரதி.

1964 ஆம் ஆண்டு, நான் மாநிலக் கல்லூரியில் மாணவனாகச் சேர்ந்தபொழுது, பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையே நடைபெற்ற சொற்போட்டியின் முதல்சுற்றில், பாரதியின் கவிதை வரிகளைப் பேசித்தான் முதலாவதாக நான்
தேர்வு பெற்றேன்.(கைதட்டல்). அந்த மாநிலக் கல்லூரியில் சிலையாக எழுந்து நிற்கின்றாரே தேடித்தேடித் தமிழ்ப் பனுவல்களை நமக்குக் கொண்டு வந்து சேர்த்த உ.வே.சா. அவர்களைப் பற்றி, நமது மாடசாமி அவர்கள் இங்கே
குறிப்பிட்டார்கள்.

1905 ஆம் ஆண்டு. வரலாற்றில் மிக முக்கியமான காலம். சென்னை மாநிலக் கல்லூரியில் உரை ஆற்றினாரே பாரதி, அதே ஆண்டு ஜனவரித் திங்களில், சோவியத் ரஷ்யாவாகப் பின்னாளில் உருவெடுத்ததே, அந்த ருஷ்யாவில் புரட்சி.மாரிக்கால அரண்மனைக்கு முன்னர் நடைபெற்ற புரட்சி. இதற்கு முன்பு அவர்கள் அங்கே வந்த போது,அவர்கள் கைகளில் பைபிள் இருந்தது;  இம் முறை வந்தபோது, அவர்களது கைகளில் துப்பாக்கிகள் இருந்தன என்று சொல்லப்பட்ட அந்த முதல் புரட்சி தோற்றுப் போனாலும்கூட, அதற்கு அடுத்த திங்களில், இந்தியா ஏட்டில், ருஷ்யப் புரட்சியின் தொடக்கம் அது என்று  சொல்லி பாரதி எழுதுகிறான்.

1906 ஆம் ஆண்டு, மார்ச் 2 ஆம் நாள் மீண்டும் எழுதுகிறான். 1907 ஆம் ஆண்டி லும் எழுதினான்.ஆயுதங்களைத் தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். படை அணிகளை வகுத்துக் கொள்ளுங்கள். ருஷ்ய தேசத்தின் சுயராஜ்யப் பிரியர் களைப் போல ரகசிய சங்கங்களிலே சேர்ந்து கொள்ளுங்கள். உங்களுக்குத் தேவையான ஆயுதங்கள், உங்கள் நாட்டிலேயே இருக்கின்றன; ஆயுதங் களைக் கூர் தீட்டுங்கள். அவற்றை ஏந்திக் கொள்ளுங்கள்; கொடுங்கோலர் களை அடித்து விரட்டுங்கள்.

இது பாரதி எழுதியது. அடிமை விலங்குகளை உடைப்பதற்காக எழுதியது. மீண் டும் 1909 ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் நாள், அதே இந்தியா ஏட்டில் மீண்டும் எழுதுகிறார்.

அயலான் ஒருவன் உனக்குத் தீங்கு செய்கிற போது, சுதந்திர சம்ரக்ஷணைக் காக, அவன் மீது நீ பலாத்காரத்தை ஏவினால், உலக கர்மத்தின்படி அது சரியானதே.

உன் சுதந்திர வேட்கையைத் தடுக்க, உன் சுதந்திர உரிமையைப் பறிக்க, எதிரி ஆயுதத் தாக்குதல் நடத்தினால், அவனை எதிர்த்து நீ ஆயுதப் பிரயோகம் செய் வாயாக. அதுவே சரியான வழிமுறையாகும் என்கிறார் பாரதி. இதைத்தான்,
மகாபாரதத்தில் கண்ணன் சொன்னான். தேர்த் தட்டில் காண்டீபத்தை நழுவ விட்ட காண்டீபனுக்குச் சொன்னான். தயங்கி நின்ற தனஞ்செயனுக்குச் சொன் னான்.

அதைத்தான், காண்டீபம் எழுக; நின் கைவண்ணம் எழுக என்ற திரைப்படப் பாடலாக இயற்றிய கண்ணதாசன், வங்கத்தில் பிறந்து இருந்தால் நோபெல் பரிசை என் கவிஞன் பாரதிதான் பெற்று இருப்பான்; அவனைப் போற்றாத தமி ழனை நான் தமிழனாகவே ஏற்க மாட்டேன் என்றும் சொன்னார்.

கோடிக்கணக்கான மக்கள் கண்ணனை,கிருஷ்ணனைப் போற்றுவ தால், அதைக் குறிப்பிட்டு பத்திரிகையில் எழுதுகிறார் பாரதி.நாமார்க்கும் குடியல் லோம்; நமனை அஞ்சோம் என்ற அப்பர் அடிகளைப் போலவே, அச்சம் இல் லை, அமுங்குதல் இல்லை, நாணுதல் இல்லை; எதற்கும் அஞ்சோம்;கடல் பொங்கி வந்தாலும், விண் இடிந்து விழுந்தாலும், அச்சம் என்ற பேச்சுக்கு இட மே இல்லை. அச்சம் இல்லை, அச்சம் இல்லை, அச்சம் என்பது இல்லையே! உச்சி மீது வான் இடிந்து வீழுகின்றபோதிலும், அச்சம் என்பது இல்லையே என்று, அச்சம் அற்ற உணர்வினைத் தந்தான் கவிஞன்.

தொடரும்.......

No comments:

Post a Comment