Wednesday, August 21, 2013

பத்து தமிழர்கள் பட்டினிப் போராட்டம்

செங்கல்பட்டு சிறப்பு முகாமில் 10 ஈழத் தமிழர்கள். மீண்டும் பட்டினிப் போராட்டம் தொடங்கினர்.

காந்தி மோகன், காண்டீபன், பரமேஸ்வரன், ஜான்சன், சுமன், ரமேஷ், சசிதரன், ஈஸ்வரன், பாலகுமார் , காளிதாஸ் ஆகியோர்கள் இன்று காலை முதல் பட்டினிப் போராட்டத்தை தொடங்கினர்.
செங்கல்பட்டில் உள்ள சிறப்பு முகாமில் பல ஆண்டுகளாக ஈழத் தமிழர்கள் பலர் அடைத்து வைக்கப்படுள்ளனர். இதில் பலர் மீது எந்த வழக்குக்கும் இல்லாத நிலையில் திறந்த வெளி முகாமிற்கு மாற்றாமல் வெளிநாட்டு வாழ் அகதிகள் சட்டத்திற்கு புறம்பாக இவர்கள் சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சுமார் 5 நபர்களை விடுதலை செய்யவதாக கணக்கு காட்டப்பட்டு மேலும் 10 தமிழர்களை இந்த முகாமில் சிறை வைக் கிறது கியூ பிரிவு காவல்துறை. இதனால் இங்கு இருக்கும் ஈழத் தமிழர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறது.

தற்போது உள்ள 52 தமிழர் களில் பலர் ஏற்கனவே பல முறை உண்ணா நிலை போராட்டம் செய்துள்ளனர். சிலருக்கு விடுதலை உத்தரவும் கிடைத்தும் காவல்துறை இவர்களை விடுவிக்காமல் அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது.
இதனால் இம்முறை முகாம்வாசிகள் முடிவாக ஒரு சாகும் வரை பட்டினிப் போராட்டம் செய்வதாக அறிவித்து போராட்டத்தில் குதித்து உள்ளனர். தங்களை திறந்த வெளி முகாமிற்கு மாற்றும் படி கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த முகாம்களில் வாழும் ஈழத் தமிழர்களின் துயரம் முடிவில்லாமல் நெடுங் கதையாக தொடர்கிறது . மனித உரிமை ஆர்வலர்கள் , அரசியல் கட்சிகள் , தமிழ் அமைப்புகள் இவர்களுக்காக குரல் கொடுத்தாலும் , அரசு மட்டும் இவர்களின் துன்பத்தை கண்டும் காணாது போல் உள்ளது. இந்த முறையாவது அரசுகள் இவர்களின் குரலுக்கு செவி சாய்க்குமா என மனித உரிமை ஆர்வலர்கள் , தமிழர்கள் எதிர்நோக்கி உள்ளார்கள் ...



No comments:

Post a Comment