Tuesday, August 6, 2013

நான் ஏன் மதிமுக.வில் சேர்ந்தேன்?

மருத்துவர் சரவணன்

இன்று இங்கே நாம் ஒரு ஆயிரம் பேர் திரண்டு இருக்கின்றோம். மாற்று அரசி யல் குறித்துச் சிந்திக்கின்ற புதிய இளைஞர்கள் நிறைய வந்து இருக்கின்றார் கள். எல்லோருமே ம.தி.மு.க.வில் முழுமையான ஈடுபாடு கொண்டவர்கள் என்று சொல்லிவிட முடியாது. அவர்களைப் போன்று ஒருவனாகத்தான் நானும் இருந்தேன். 

நான் ஒரு மருத்துவர். மதுரை நரிமேடு மருதுபாண்டியன் நகரில், 200 படுக்கை கள் கொண்ட சரவணன் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையை நடத்திக் கொண்டு இருக்கின்றேன்.எல்லா மருத்துவர்களையும் போலவே சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கும் உண்டு. ஆனால், நான் ஈட்டுகின்ற பணத் துக்கு உரிய வரியை அரசாங்கத்துக்குச் செலுத்தி விட வேண்டும் என்ற கொள்கை கொண்டவன்.
என்னுடைய தந்தையார் பாண்டியன் கிராமத்தில் இருந்து படித்து வந்தவர். மதுரையில் ஒரு ஆசிரியராகப் பணி ஆற்றினார். எனவே, நடுத்தரக் குடும்ப
மாக, ஓரளவு வசதியாகவே வளர்ந்தேன்.தமிழ்நாட்டில் தமிழ் பேசிக்கொண்டு,
ஆங்கிலக் கல்வி முறையில்தான் பயின்றேன். அகிலன் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாகவும் நடித்தேன். அந்தப் படம் மூன்று வாரங்கள் ஓடியது. இப் போதும் கூட ‘சரித்திரம் பேசும்’ ‘சரித்திரம் பேசும்’ என்ற ஒரு படத்தில் நடித்துக் கொண்டு இருக்கின்றேன்.இன்று பிற்பகலில், அந்தப் படத்துக்கான படப்பிடிப் பில் கலந்து கொள்ள இருக்கின்றேன்.

‘சூர்யா அறக்கட்டளை’ (Surya Trust) என்ற ஒரு அமைப்பையும் வைத்துக் கொண் டு இருக்கின்றேன். அதன் மூலம் கடந்த 14 ஆண்டுகளாக மதுரையில் குறிப் பிடத்தக்க பணிகளைச் செய்து இருக்கின்றோம். அதிலும் குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால், ஒவ்வொரு மாதமும் ஆறு குழந்தைகளுக்கு இலவச அறுவை மருத்துவம் செய்கிறோம்.

இதய சிகிச்சை என்றால் ஒன்று முதல் ஒன்றரை இலட்சம் ரூபாய்வரையிலும்
ஆகும். ஏழை, எளிய மக்களின் மருத்து வத்துக்காக, அரசும் சில உதவிகளைச்
செய்கின்றது. நாம் ஒரு இடத்துக்குச் செல்வதற்காக, ஒரு பேருந்து நிலையத் தில் காத்துக் கொண்டு இருக்கின்றோம். நீண்ட நேரம் ஆனாலும், நாம் போக வேண்டிய பேருந்து மட்டும் வராது. அதுபோலத் தான், அரசு உதவி தரக்கூடிய
மருத்துவத் திட்டங்கள் உள்ளன. 950 நோய்களைப் பட்டியல் போட்டு இருக் கின்றார்கள்.

ஆனால், பெருஞ்செலவு பிடிக்கின்ற மருத்துவ வசதிகள் அதில் வராது.அப்ப டிப்பட்ட குழந்தைகளுக்கு, சூர்யா அறக்கட்டளை மூலமாக உதவிகள் செய் கிறோம்; மருத்துவ முகாம்களையும் நடத்த இருக்கின்றோம் என்பதை உங் களிடம் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அனைத்து அரசியல் கட்சிகளையும் சேர்ந்தவர்கள், நன்கொடை கேட்பதற்காக என்னிடம் வருவார்கள்.அதுபோலத்தான், ம.தி.மு.க.வினரும் வந்தார்கள். அப் படி வந்த என்னுடைய உறவினர் சேகரோடு நான் பேசினேன். ‘தலைவர் வைகோ அவர்களைச் சந்திக்க வேண்டும்’ என்று அவரிடம் சொன்னேன். ஏற் பாடு செய்தார்.

தலைவரைப் பார்த்தவுடன், இரண்டு கைகளையும் சேர்த்துக் குவித்து, பணி வாக வணக்கம் தெரிவித்தேன்.உடனே தலைவர் என் கைகளைப் பிடித்துக் கொண்டு, ‘இதெல்லாம் தேவை இல்லை; நீங்கள் ஒரு மருத்துவர்; என்று அன் போடு கூறினார்கள். அந்த ஒரு கணம் நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.
ம.தி.மு.க. என்பது சுயமரியாதை உள்ள இயக்கம். தந்தை பெரியாருக்குப் பிறகு,
சுயமரியாதை இங்கேதான் இருக்கின்றது என்பதைப் புரிந்து கொண்டேன்.

‘டாக்டர், நீங்கள் மதுரையில் மிகவும் பிரபலமான மருத்துவர்; ஏழை, எளிய
மக்களுக்கு மருத்துவ உதவிகள் வழங்குகின்றீர்கள் என்றெல்லாம் கேள்விப் பட்டேன். ஒரு மருத்துவர் என்ற நிலையையும் தாண்டி, மக்கள் உங்களை கூடு தலாக நேசிக் கின்றார்கள் என்றும் சொன்னார்கள்.நீங்கள் ஒருவர் எங்கள் இயக்கத்தில் சேருவது, பத்து ஆயிரம் பேர் சேருவதற்குச் சமம்’ என்று தலை வர் வைகோ அவர்கள் சொன்னபோது, நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். இது எனக்கு ஒரு மிகப்பெரிய அங்கீகாரம்.இனி நான் வேறு எங்கேயும் போக
முடியாது; போகவும் மாட்டேன்.இங்கேயேதான் இருப்பேன்.

நான் ஏன் இந்த இயக்கத்தில் சேர்ந்தேன்? நாளைக்கே வைகோ முதல் அமைச் சர் ஆகிவிடுவார் என்ற நிலையிலோ, அல்லது வேறு ஏதேனும் ஆதாயம் தேடியோ நான் இந்தக் கட்சியில் சேரவில்லை. இன்றைய தமிழக அரசியல் தலைவர்களுள், நேர்மையானவர் வைகோ. கொள்கைப் பிடிப்பு மிக்கவர். அவருடைய கடந்த கால நடவடிக்கைகளைப் பார்த்து, தமிழகத்தில் நாகரிக மான அரசியலை, வைகோவைத் தவிர வேறு யாரும் தர முடியாது என்ற ஒரே
காரணத்துக்காகத்தான், இந்தக் கட்சியில் சேர்ந்தேன். ஒரு மாதம் ஆகிறது.

இந்தக் கருத்துக் களத்தில், மாற்று அரசியல் குறித்த கருத்துகளை நாம் பரி மாறிக் கொண்டு இருக்கின்றோம்.இன்றைக்கு இப்படி மற்ற அரசியல் கட்சிகள் பேச முடியுமா?

இந்திய நாட்டின் ஒரு தமிழனாக இருந்து கொண்டு, நாம் கடந்து வந்த பாதை என்ன? இப்போது எந்த இடத்தில் நின்று கொண்டு இருக்கின்றோம் என்பதை ஆராய்ந்து பார்த்தால், இந்த நாடு ஒரு வளமான நாடுதான். என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில் என்று ஒரு புகழ் பெற்ற பாடல்கூட உண்டு. கல் தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்த குடி தமிழ்க் குடி என்று பெருமை பேசுகிறோம்.

அந்தக் காலத்தில், இந்தியாவில் பொன்னும், பொருள்களும் குவிந்து கிடந்தன என்று சொல்லுவார்கள்.இதையெல்லாம் வரலாற்றில் படிக்கின்றோம். முக மதியர்கள் படையெடுப்பு, பிரெஞ்சுக் காரர்கள் படையெடுப்பு, ஆங்கிலேயர்கள்
படையெடுப்புகளுக்குப் பிறகு தான், நாம் ஒரு ஏழை நாடு என்ற நிலையை
அடைந்து இருக்கின்றோம்.

இராபர்ட் கிளைவ் சேர்த்த சொத்துகளின் மதிப்பு மட்டும் 400 கோடி ரூபாய் என்று சொல்லுகின்றார்கள். அப்படியானால், எவ்வளவு கொள்ளை அடித்துக் கொண்டு போயிருக்கின்றார்கள் என்பதை எண்ணிப் பாருங்கள். கடைசியில் அவர் தற்கொலை செய்து கொண்டுதான் இறந்தார் என்பது வேறு விசயம்.

எத்தனையோ பேர் உயிர்த்தியாகம் செய்து இந்த நாடு விடுதலை பெற்றது. 65 ஆண்டுகள் கடந்து விட்டன.பொதுவாக என்ன பேசுகிறார்கள்? எங்கடா முன் னேறி இருக்கின்றோம்? என்று. மக்கள் தொகையில் இரண்டாவது இடத்தில்
இருக்கின்றோம்.

ஆனால், எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும், உலகத்தில் 50 ஆவது
இடம், 60 ஆவது இடம் என்கிறார்கள். இதற்கு யார் பொறுப்பு? கிட்டத்தட்ட 55 ஆண்டுகள் இந்த நாட்டை ஆண்டது காங்கிரஸ் கட்சிதான். அவர்கள்தான் இதற்குப் பொறுப்பு ஏற்க வேண்டும். நேரு அமைச்சரவையில் இருந்த இரண்டு அமைச்சர்கள் மீதே ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன.அப்படியானால், இந்தி யாவில் ஊழலுக்கு அடித்தளம் அமைத்ததே காங்கிரஸ் கட்சிதான் என்று சராசரி மனிதர்கள் கருதுகின்றார்கள்.

இப்போது நடந்து கொண்டு இருக்கின்ற ஆட்சியில், ஸ்பெக்ட்ரம் ஊழல், நிலக் கரி ஊழல், காமன்வெல்த் விளையாட்டு ஊழல் என பல்லாயிரம் கோடி ஊழல் களைப் பார்த்துக் கொண்டே இருக்கின்றோம்.தமிழகத்தின் இரண்டு திராவிடக்
கட்சிகளின் ஆட்சியின் கேடுகளைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

இதற்கெல்லாம் ஒரு மாற்று தேவைப் படுகின்றது. உண்மையாகவே மக்கள்
நலனில் அக்கறை உள்ள ஒரு தலைவன் தேவைப்படுகிறான்.அரசியலில் நேர்மை; பொதுவாழ்வில் தூய்மையான ஒருவர்; இன்றைக்கு நாகரிகமான அரசியலை நடத்துவதில் முன்னணியில் நிற்பவர் நமது தலைவர் வைகோ அவர்கள்தாம். மக்களிடமும் நமது கட்சியைப் பற்றிய நல்ல எண்ணம் இருக் கின்றது. அதை வாக்குகளாக மாற்ற வேண்டும்.வைகோ ஆட்சிப் பொறுப்பை
ஏற்றால்தான், தமிழகத்தில் ஒரு புதிய மறுமலர்ச்சியை நாம் பார்க்க முடியும்.

இன்றைய இளைஞர்கள் கறைபடியாமல் இருக்கின்றீர்கள்.ஆனால், 50 ஆண்டு கள் அரசியல் பணி ஆற்றிய பிறகும், எந்தக் கறையும் படாமல் இருக்கின்றார் வைகோ. ஆபிரகாம் லிங்கன் சந்தித்த அனைத்துத் தேர்தலிலும் தோற்றார். 55
வயதுக்கு மேல், குடியரசுத் தலைவர் தேர்தலில் தான் வெற்றி பெற்றார்.

மாற்று அரசியலுக்கு எப்படி வித்து இடுவது? அடிப்படையில் இருந்து தொடங்க வேண்டும். நமது தலைவருடைய கொள்கைகளை, அடித்தட்டு மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். உங்களைப் போன்ற இளைஞர்கள், இணைய தளங்களில் அந்தப் பணியைச் சிறப்பாகச் செய்து கொண்டு இருக்கின்றீர்கள்.

இன்றைக்கு 1000 பேர் இங்கே வந்து இருக்கின்றீர்கள். உங்கள் ஒவ்வொருவர் பின்னாலும் கண்டிப்பாகப் பத்துப் பேர் இருப்பார்கள்.கிராமங்களுக்குச் செல்ல வேண்டும். அடித்தட்டு மக்களைச் சந்திக்க வேண்டும். என்னால் இயன்ற வரை யிலும் அந்தப் பணியை நான் செய்ய எண்ணி உள்ளேன். நம்மிடம் இணைய தளம் உள்ளது. தலைவரைப் பற்றிய நல்ல செய்திகளைத் தொடர்ந்து பதிவு செய்து கொண்டே இருப்போம்.

நான் ஒரு மருத்துவமனையில் பணி ஆற்றியபோது,மாதம் 20,000 ஆயிரம் தான் சம்பளம் வாங்கிக்கொண்டு இருந்தேன். துணிந்து வெளியில் வந்து மருத்துவ மனையைத் தொடங்கினேன். இன்று, கோடிக்கணக்கில் சம்பாதிக்க முடிகின் றது. அதைக் கொண்டு,என்னால் இயன்ற சேவையை மக்களுக்குச் செய்து கொண்டு இருக்கின்றேன். அதைப் போலத் துணிந்து முயற்சித்தால் வெற்றி
நிச்சயம்.

இந்திய அரசியலில் மதிப்புமிக்க தலைவர் வைகோ, தமிழகத்தின் முதல் அமைச்சராக வருவார்; வருவார்; நாட்டு மக்களுக்கு நன்மைகளைத் தருவார்
தருவார்; நாமும் நன்றாக வருவோம் வருவோம் என்று கூறி விடைபெற்றுக்
கொள்கின்றேன்.

(“மாற்று அரசியல்: இளந்தலைமுறையின் கருத்துக்களம்” நிகழ்ச்சியில் ஆற்றிய உரை, திருப்பரங்குன்றம் - 28.07.2013)

No comments:

Post a Comment