Saturday, August 17, 2013

பேரறிஞரும் பெருந்தலைவரும்

பேரறிஞர் அண்ணாவும், பெருந்தலைவர் காமராசரும்!

“பொன்னில்லான் பொருளில்லான்
புகழின்றி வசையில்லான்
இல்லாளும் இல்லான்
இல்லையென்னும் ஏக்கமில்லான்

என்று பண்ணரசன் கண்ணதாசனால் பாடப் பெற்றவர் பெருந்தலைவர் காமராசர்.

சாத்தூர் சட்டமன்ற உறுப்பினராக,விருதுநகர் நகர சபை உறுப்பினராக, நகர் மன்றத் தலைவராக, இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினராக, ஸ்ரீவில் லிப்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினராக, தமிழக முதலமைச்சராக,குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினராக,திரும்பவும் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினராக,இரண் டாவதாக,மூன்றாவதாக தமிழகத்தின் முதலமைச் சராகவும், நாகர்கோவில் நாடாளுமன்ற உறுப்பினராகவும், தமிழ்நாடு காங்கிரஸ் செயலாளராகவும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராகவும்,தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராகவும், அகில இந்திய காங்கிரஸ் பார்லிமெண்டரி போர்டு உறுப்பினராகவும், அகில இந்திய காங்கிரஸ் தலைவராகவும் பதவி வகித்தவர்
பெருந்தலைவர் காமராசர்.
இத்தனை பதவி வகித்திருந்தாலும் வாடகை வீட்டிலேயே கடைசி வரை வாழ்ந்திட்ட கர்மவீரர் காமராசருக்கும் அறிஞர் அண்ணாவிற்கும் இடையே
இருந்த ஆழமான உறவுகள் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் இதோ...

1954 இல் முதலமைச்சர் ஆனார் காமராசர். குடியாத்தம் தொகுதி இடைத்தேர் தலில் போட்டியிட்டார்.அவரது வெற்றிக்காக 26.9.1954 திராவிடநாடு இதழில் ‘நிலையும் நினைப்பும்’ என்ற பெட்டிச் செய்தியில்,‘குலக்கொழுந்தே! குணா ளா!’ என்று காமராஜரை வாழ்த்தினார் அண்ணா..


சொர்க்கவாசல்

அறிஞர் அண்ணா கதைவசனம் எழுதி நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமி
நடித்து வெளிவந்த படம் ‘சொர்க்க வாசல்’. அந்தப் படத்திற்காக தணிக்கையில் பிரச்சினை வந்தபோது,படம் தணிக்கை பற்றி அண்ணா பேசவுமில்லை. ஆனால் படம் வெளி வந்தவுடன் அண்ணாவும், முதலமைச்சர் காமராசரும் சந்தித்தனர். இருவரும் ஒன்றாக அமர்ந்து பல விவரங்கள் பேசினர்; ஆனால், படத்தில் ஆட்சேப கரமான பகுதிகள் இருக்கின்றனவா என்பது பற்றி விவாதித் துக் கொள்ளவே இல்லை என்பது கடந்தகால கண்ணியமான வரலாறு.

1957

1957 இல் காமராசர் முதல்வர். அறிஞர் அண்ணா காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப் பினர். காஞ்சிபுரம் தொகுதியின் பாகல்மேடு கிராமத்தில் மக்கள் குறை கேட் கும் நிகழ்ச்சி. அப்போது காமராசர் அதிகாரிகளிடம் நடந்து கொண்ட தன்மை யையும், பழகிய விதத்தையும்,கேட்ட கேள்விகளையெல்லாம் கண்ட அண்ணா, காமராசரை மிகவும் பாராட்டிப் பேசினார்.

அன்று பகல் இருவரும் அங்கு ஏற்பாடு செய்யப்பட்ட விருந்தில் ஒரே மேசை யில் உட்கார்ந்து உணவு அருந்தினார்கள்.அந்தப் புகைப்படத்தை அந்த ஆண்டு
பொங்கல் வாழ்த்தாகப் பலர் வெளியிட்டு மகிழ்ந்தனர்.

28.10.1957 இல் காமராசர் ஆட்சி மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கம்யூ னிஸ்ட் தலைவர் எம்.கல்யாண சுந்தரம் கொண்டு வந்தார். 30.10.1957 அன்று அதன் மீது அறிஞர் அண்ணா,சட்டமன்றத்தில் உரையாற்றினார்.இறுதியில் 31. 10.1957 அன்று வாக்கெடுப்பு. அறிஞர் அண்ணாவின் தலைமையிலான சட்ட மன்ற உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல், காமராசருக்காக நடுநிலை வகித்தார்கள் என்பது நினைவில் நிற்கும் வரலாறு.

எதிர்ப்பதிலும் புகழ்தான்

“வடநாட்டினரே பாராட்டும் அளவுக்கு காமராசர் உயர்ந்திருக்கிறார் என்றால் அது தமிழகத்திற்குத்தான் பெருமையாகும். காமராசரின் புகழ் உயர்ந்ததால்
தமிழகத்தின் புகழும் உயரும்.அத்தகைய புகழ்மிக்க அவரை எதிர்ப்பதில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்குப் பெருமைதான் என்று நாடறிய பறை சாற்றியவர் அண்ணா.விருதுநகரில் பெருந்தலைவர் வெற்றி வாய்ப்பை இழந்தபோது, கோபம் கொண்டார் அண்ணா; வெற்றி ஆரவாரத்தில் ஈடுபட்ட கழகத் தோழர்களிடம் அதனை நிறுத்தச் சொன்னார்.

“காமராசர் தோற்கக்கூடாத நேரத்தில் தோற்றிருக்கிறார். இன்னொரு தமிழர்
அவர் இருந்த இடத்திற்கு வருவதற்கு ஆயிரம் ஆண்டுகள் ஆகும்” எனக் கோப மாகவும், வருத்தமாகவும் கூறி,பண்பாளர் அறிஞர் அண்ணா, 23.4.1967 இல் காஞ்சிபுரம் பச்சையப்பன் உயர் நிலைப்பள்ளி ஆண்டு விழாவில் காமராசர் உருவப் படத்தைத் திறந்து வைத்து, காமராசர் தம்முடைய பணிகளின் மூலம் நாட்டின் தரத்தை உயர்த்த முயன்றார். தமிழர்களுக்கு நற்பணி ஆற்றினார்.
தமிழர்கள் பெருமைப்படத்தக்க நல்ல காரியங்களைச் செய்தார்.

நாங்கள் இருவருமே வளம் சேர்த்துக் கொண்டவர்கள் இல்லை. நான் அவரது
படத்தைத் திறக்கிறேன் என்றால் அவர் தமிழகத்துக்கு நன்மை செய்தார் என்ப தற்காக என்று புகழாரம் சூட்டினார்.

காமராசருக்கு எதிராக நாகர்கோவில் நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்ப்பிரச் சாரம் செய்திட மறுத்த ஏந்தல் அறிஞர் அண்ணா,

அண்ணா உடல் நலக்குறைவாக இருந்த போது சென்னைப் பொது மருத்துவ
மனைக்கு நேரில் சென்று பார்த்து,அங்கிருந்த டாக்டர் குழுவைக் கண்டித்தார் காமராசர். அதன் பிறகே அண்ணாவை கவனிப்பதற்கு என்று குழு அமைக்கப் பட்டது என்பதும் நிதர்சன உண்மையாகும்.

அண்ணா மறைந்தபோது, “அண்ணா துரையின் நீடித்த சேவை தமிழ் நாட்டுக்கு கிடைக்காமல் போனது வருந்தத்தக்கது. அவர் மறைவு தமிழ்நாட்டுக்கு பெரிய நட்டமாகும்” என்று புகழாரம் சூட்டியவர் காமராசர்.

அரசியலில் இருவரும் இரு துருவங்கள்; ஆனால் நட்பில், உறவில் இரு கண் களாகச் செயல்பட்டார்கள். இதுதான் உண்மை.

நன்றிகள்

கட்டுரையாளர் :- செ.திவான் 

வெளியீடு :- சங்கொலி

No comments:

Post a Comment