Tuesday, August 20, 2013

வைகோவின் குற்றம் சாட்டுகிறேன் -பகுதி 12

நாள் :- 06.11.2006

யாழ்ப்பாணம் நெடுஞ்சாலையைத் (A9 நெடுஞ்சாலை) திறக்கவும், ஈழத் தமிழர் களுக்கு உணவு, மருந்துகள் கிடைத்திடவும் நடவடிக்கை மேற் கொள்க!

பிரதமருக்கு #வைகோ கோரிக்கை

இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அவர்களுக்கு, ம.தி.மு.க. பொதுச்
செயலாளர் வைகோ அவர்கள், இன்று (6.11.2006) ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதன் விவரம் வருமாறு:

அன்புள்ள டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு,

வணக்கம்.

இலங்கை இனவாத அரசு, ஈழத் தமிழர்கள் மீது தனது முப்படைகளையும் ஏவி, பெருந் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டு வருகிற செய்திகள் அதிர்ச்சி அளிக் கின்றன. இலங்கைப் பிரதமர் ரத்தினசிறி விக்கிரமநாயகே, நவம்பர் 4 ஆம் தேதி வெளிப்படுத்திய கொடுஞ்சொற்களில் இருந்து, அந்தத் திட்டம் உண்மை என்பது உறுதி ஆகிறது.

2001 ம் ஆண்டு கிறிஸ்துமஸ்  நாளில்,விடுதலைப்புலிகள் தாங்களாகவேமுன் வந்து, முப்பது நாட்களுக்குப் போர் நிறுத்தத்தை அறிவித்தார்கள். பின்னர் 2002 ஆண்டு பிப்ரவரி மாதம் 24 ம்தேதி வரை போர்நிறுத்தத்தை நீட்டித்தார்கள். அதன் பின்னர்தான் இலங்கை அரசு போர்நிறுத்தத்தை ஏற்றது. அமைதிப் பேச்சு களுக்காக நார்வே அரசு உண்மையாக, முழுமுயற்சிகளை மேற்கொண்டது. மூன்று சுற்றுகள் வெற்றிகரமாகப் பேசியதற்குப் பிறகு, அன்றைய இலங்கை அதிபராக இருந்த திருமதி சந்திரிகா குமாரதுங்காவின் ஏமாற்று நடவடிக்கை களால் அந்தப் பேச்சுகள் தடைப்பட்டன.

மீண்டும் அமைதிப் பேச்சுகள், 2006 ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 22, 23 ஆகிய தேதி களில் ஜெனீவா நகரில் நடைபெற்றது. இந்தப் பேச்சுகளின்போது ஏற்பட்ட
உடன்பாட்டை இலங்கை அரசு மதித்து நடக்கவில்லை. எனவே, முட்டுக் கட்டை தொடர்ந்தது.

14.8.2006 அன்று, இலங்கை விமானப்படை, செஞ்சோலை அனாதை இல்லத் தில், 61 இளஞ்சிறார்களைக் கொன்று, 170 குழந்தைகளைப் படுகாயப் படுத்தி யது, உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.இந்தத் தாக்குதலில் கொல்லப் பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள், இலங்கை அரசு ஏற்கனவே நடத்திய கொடூரத் தாக்குதல்களில் இறந்து விட்டதால், அனாதையாக்கப்பட்ட இந்தக் குழந்தைகளுக்கு உணவு, உறைவிடம், கல்வி ஆகியவற்றை அளித்து, அன் போடு அரவணைப்பதற்காகவே விடுதலைப்புலிகள் ‘செஞ்சோலை’ அனாதை இல்லத்தை அமைத்துப் பராமரித்து வந்தார்கள்.

அண்மையில், 2006 அக்டோபர் 28, 29 ஆகிய நாள்களில், ஜெனீவாவில் நடந்த
அமைதிப் பேச்சுகளில், ஏ.9. நெடுஞ்சாலையைத் திறக்க முடியாது என்ற இலங்கை அரசின் பிடிவாதப் போக்கால், எந்த முடிவும் எட்டப்படவில்லை.

இலங்கையில் தமிழர்கள் வாழும் பிற பகுதிகளையும், யாழ்ப்பாணத்தையும்
இணைக்கின்ற ஏ.9 என்ற நெடுஞ்சாலை, இலங்கை ராணுவத்தால் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னரே மூடப்பட்டுவிட்டது. இதன் விளைவாக மக் கள் நடமாட்டம் முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. அங்கு உள்ள மக்க ளுக்குக் கிடைக்க வேண்டிய உணவு, மருந்துகள் கிடைக்காததால், அவர்கள் பட்டினிச் சாவுக்குத் தள்ளப்பட்டு உள்ளது, மிகுந்த மனவேதனையை அளிக் கிறது. பால்பவுடர் கிடைக்காமல் குழந்தைகள் பசியால் இறக்கிறார்கள். போதிய மருந்துகள் கிடைக்காததால், நோயாளிகள் பரிதாபமாக மடிகிறார்கள்.

ஏ.9 நெடுஞ்சாலையைத் திறப்பதற்கு இலங்கை அரசாங்கத்திடம் முறையாக
எடுத்துச் சொல்லி வழிவகை செய்தால்தான், அங்கு வாழும் தமிழர்கள் பட்டி னிச்சாவில் இருந்து காப்பாற்றப்படுவார்கள் என்பதால், இந்திய அரசு நெடுஞ் சாலையைத் திறப்பதற்கான முயற்சிகளை உடனடியாக மேற்கொள்ள வேண் டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

பசி, பட்டினியில் வாடிப் பரிதவிக்கும் ஈழத்தமிழ்  மக்களைக் காப்பாற்றிட உட னடியாக உணவுப் பொருள்களையும், மருந்துகளையும், இந்திய அரசு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும்,அவை நேரடியாக தமிழ் மக்களுக் கு கிடைக்கின்ற வகையில், செஞ்சிலுவைச் சங்கம் போன்ற அமைப்புகள் வழி யாக அனுப்ப வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

பயங்கரவாத சிங்கள சக்திகளான, ஜனதா விமுக்தி பெரமுன, சிகல உருமய
போன்ற கட்சிகள், சிங்கள இனவாத அரசின் ஆதரவோடு, இலங்கை உச்சநீதி மன்றத்தை அணுகி, தமிழர்களின் கோரிக்கையான வடக்கு, கிழக்குப் பகுதி களின் இணைப்புக்கு எதிராக ஒரு தீர்ப்பைப் பெற்று உள்ளார்கள்.

இது, இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படைக்கே எதிரானது ஆகும்.

சிங்கள இனவாத அரசு, தமிழர் பகுதிகளில் தொடர்ந்து விமானத் தாக்குதல்
நடத்தி, அப்பாவித் தமிழர்களைக் கொன்றுகுவித்து வருகிறது. இலங்கை வாழ்
தமிழர்களின் பாதுகாப்பு, அன்றாட அமைதியான வாழ் க்கை தொடர்பாக, தமிழ் நாட்டில் வாழும் தமிழர்களும், உலககெங்கும் வாழும் தமிழர்களும் பெரும் அச் சமும், கவலையையும் கொண்டு உள்ளார்கள்.

இத்தகைய சூழ் நிலையில், சிங்கள இனவாத அரசுக்கு இந்தியா எந்தவித ராணு வ உதவியும் அளிக்க வேண்டாம் என்றும், இலங்கை அரசு தமிழர்கள் மீது மேற் கொண்டு உள்ள ராணுவத் தாக்குதலை உடனடியாக நிறுத்தத் தேவையான நட வடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்றும் தங்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

தங்கள் அன்புள்ள,

வைகோ

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு வரலாமே.

No comments:

Post a Comment