Thursday, August 29, 2013

ஜனநாயக இயக்கம் மதிமுக

அண்ணா விரும்பிய ஜனநாயக இயக்கம் நமது இயக்கம்...!

போர்க்களம் செல்லுகின்ற மன்னவனுக்கு எவருக்கும் அஞ்சாத தீரமும், திண வெடுத்த தோள்களும், விரிந்த மார்பை பாதுகாக்கும் கவசமும், வலக்கையில் எதிரிகளை விளாசும் வாள் வலிவும், இடக்கையில் கேடயமும், சிரசில் மகுடம் தரித்து, பொன்னாலான அணியும், மாணிக்கம், முத்தாலான மாலைகளும் அலங்கரிக்க, மன்னவன் செருக்களம் போவதற்குரிய அணிகலன்கள் சூடப் பெற்று களம் புகுவதுதான் மாவீரர்களுக்கு அழகு என்று நம் சங்கப் பாடல்கள் புகழ்ந்து உரைக்கின்றன. அந்த வகையில் நாடாளுமன்றத் தேர்தல் என்னும்
களத்துக்குச் செல்லும் நம் வைகோ என்னும் மன்னவனுக்கு ஈடற்ற இளைஞர் அணியும், மாண்புக்குரிய மாணவர் அணியும்,உறுதிமிக்க தொண்டர் அணியும், வாழ்த்துரைக்கும் மகளிர் அணியும், பாட்டுத் திறத்தாலே மன்னவன் புகழ் பாடும் இலக்கிய அணியுமென அனைத்து அணிகளும் நம் தலைவரை வரிசங் கம் ஊதி வரவேற்று தேர்தல் போருக்கு ஆயத்தப்படுத்து கின்ற பணிகள் நடந்து கொண்டே இருக்கின்றன.
இரு திங்களுக்கு முன்பு தலைநகர் சென்னை மாநகரில் எழிலார்ந்த நம் தாய கத்தில் வினை முடிக்கும் வித்தகர் இளைஞர் அணிச் செயலாளர் பொறியாளர் ஈஸ்வரன் தலைமையில் நடந்த இளைஞரணி கலந்துரையாடல் கூட்டத்தில் முத்திரைப் பதிக்கும் இருபது தீர்மானங்களை பொதுச்செயலாளர் முன்னிலை யில் நிறைவேற்றி அவ்வணி செயலாற்றி வருகின்றது. மாநிலம் முழுவதும் இயக்கம் பற்றிப் படர்வதற்கு ஒரு லட்சம் இளைஞர்களை சேர்ப்பது என்று தீர்மானித்து நான்கு மாவட்டங் களுக்கு ஒரு மண்டலப் பொறுப்பாளரை நிய மித்து வீறு கொண்ட இளைஞர்களை இணைப்பதில் இளைஞரணி முந்தி நிற் கின்றது.

இளைஞர் அணியைத் தொடர்ந்து திராவிட இயக்கத்தின் நாற்றங்கால் எனப்
போற்றப்படுகின்ற மாணவர் அணியும் இம்மாதம் 17 ஆம் தேதி தாயகத்தில்
மாவட்டச் செயலாளர் கூட்டம் நடத்தப் படுகின்ற குளிரூட்டப்பட்ட அரங்கில்
அணியின் செயலாளர் மதிநுட்பமும், வினை திட்பமும் ஒருங்கே அமையப்
பெற்ற சகோதரர் தி.மு.இராசேந்திரன் தலைமையில் நம் தலைவர் வைகோ
முன்னிலையில் 33 மாவட்ட அமைப்பாளர்களும், 10 மாநில துணைச் செயலா ளர்களும் மனதில் தோன்றிய எண்ணங்களை, இயக்க வளர்ச்சி தொடர்பாக இதயத்தில் தேங்கியிருந்த கருத்துக்களை குற்றால அருவியென எடுத்துச் சொன்ன விதத்தையும் நம் தலைவர் அருகிருந்து பார்த்து, பார்த்து ரசித்துக் கொண்டே இருந்தார்.

நாடாளுமன்றத்தில் வைகோ என்னும் அண்ணன் செந்திலதிபன் தொகுத்து
வெளியிட்ட தலைவர் வைகோவின் நாடாளுமன்ற ஆவணப் புத்தகத்தின்
தலைப்பையே மாணவர் பேச்சுப் போட்டிக்கும் தலைப்பாக்கி, மாவட்டங்களில் வெற்றி பெறும் மாணவர்க்கு முதல் பரிசு ரூ.5000, இரண்டாம் பரிசு ரூ3000, மூன்றாம் பரிசு ரூ1000 எனவும்,மண்டல அளவில் வெற்றி பெறும் மாணவர்க்கு முதல் பரிசு ரூ.6000, இரண்டாம் பரிசு ரூ.4000, மூன்றாம் பரிசு ரூ.2000 எனவும், மாநில அளவில் முதல் பரிசு பெறும் மாணவர்க்கு ரூ.1 லட்சம்,இரண்டாம் பரிசு ரூ.50 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.25 ஆயிரம் என மொத்தம் 7 லட்சம் வழங்கப் படும் என்ற முத்திரை தீர்மானத்துடன், இயக்கத்தில் கல்லூரி மாணவர்கள் இரண்டு லட்சம் பேரை மாணவர் அணி சார்பில் புதிய உறுப்பினர்களாக சேர்ப் பது என்ற 23 தீர்மானங்கள் அனைவரின் கரவொலி ஒப்புதலுடன் நிறைவேற் றப்பட்டது.

முன்னதாக வருகை தந்திருந்த மாணவர் அணி மாநில, மாவட்ட அமைப்பாளர் கள், துணை அமைப்பாளர்களை அறிமுகம் செய்து கொள்ளும் நிகழ்விற்கு தலை வர் வைகோ அனுமதித்தார். அனைத்து நிர்வாகிகளும் பொதுச்செயலா ளர் வைகோ உள்ளிட்ட அவைக்கு வணக்கம் என்று முகமம் கூறினார்கள். அதில்,கல்லூரி மாணவரும், மாவட்ட துணை அமைப்பாளருமான ஒருவர் வருங்கால முதலமைச்சருக்கு வணக்கம் என்ற போது அரங்கமே அதிர்ந்தது. நம் தலைவர் வைகோவும் புதுமுகமான அந்தத் தம்பியின் திடுமென்ற சொல்
கேட்டு சிலாகித்துப் போனார்.

கலந்துரையாடல் கூட்டத்தில் உரை ஆற்றியோர் பேச்சு விபரம்:

மாயன் (வடசென்னை மாவட்ட அமைப்பாளர்): நிகழ்ச்சிக்கு வந்தவர்களை வரவேற்கின்ற அதே வேளையில் மாவட்டச் செயலாளர்கள் விவாதிக்கும்
அரங்கத்தில் மாணவர் அணி நிகழ்ச்சிக்கு அனுமதித்த தலைவர் வைகோ அவர்
களுக்கு நன்றி. மாநிலச் செயலாளரும், நம் தலைவர் வைகோ இடும் கட்டளை
களை நிறைவேற்றி நம் இயக்கத்தை வசந்த வாசலுக்கு அழைத்துச் செல்லும்
பணிகளில் வடசென்னை மாவட்ட மாணவர் அணி ஈடுபடும்.

தி.மு.இராசேந்திரன் (தலைமை உரை): தலைவர் வைகோ அவர்கள் பணி
ஆற்றிய உன்னதமான அணி மாணவர் அணி. இந்த அணி நடத்தும் அதி பிர மாண்டமான பேச்சுப் போட்டி தலைப்புக்கு தலைவர் பெயரை பயன் படுத்த அனுமதித்ததற்கு நன்றி. 

நிறைவேற்றப்பட்ட இருபத்தி மூன்று தீர்மானங்களில் இயக்க வளர்ச்சி தொடர் பான தீர்மானங்களை மாணவர் அணி நிச்சயம் செயலாற்றி வெற்றி
பெறும். மாநில மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள்
சிறப்பாக பணியாற்ற வேண்டும், பணியாற்ற இயலாதவர்களை மாவட்டச்
செயலாளர்களின் ஒப்புதலோடு வேறு துடிப்பு மிக்க மாணவ நிர்வாகிகளை
மாற்றி அமைக்க நடவடிக்கை மேற்  கொள்ளப்படும். இளைஞர் அணி முன்
மொழிந்ததை வழி மொழிகின்ற விதமாக அனைத்து மாவட்டங்களை உள்ளடக் கிய பகுதிகளில் மொத்தம் இரண்டு இலட்சம் மாணவர்களை இயக்கத்தில் சேர்ப்போம். அதில் வெற்றி பெறுவோம்.

ஈரோடு சத்யா: மாணவர் அணி இடுகின்ற கட்டளைகளை நிச்சயம் எமது மாவட்டம் முன்னின்று செயலாற்றும். பொதுச் செயலாளரின் மது ஒழிப்புக்
கொள்கையில் ஈரோடு மாவட்ட மாணவர் அணி முழுமையாக பிரச்சாரம் மேற் கொண்டு வருகின்றது.

10, 12-ம் வகுப்பில் அதிக மதிப் பெண்கள் பெற்ற மாணவர்களை பாராட்டி மரி யாதை செலுத்தியுள்ளோம்.நிச்சயம் மாற்று அரசியலை முன்னெடுப்போம், வெற்றி பெறுவோம்.

திருவாரூர் ராமச்சந்திரன்: அறிவிக்கப் பட்டுள்ள பேச்சுப் போட்டியை எமது
மாவட்டத்தில் சிறப்பாக நடத்துவோம். பள்ளி இறுதி யாண்டு மாணவர்கள்
மற்றும் கல்லூரி மாணவர்களை இயக்கத்தில் இணைத்து நம் தலைவரின்
கரத்தை வலுப்படுத்துவோம். தலைவர் வைகோ இம்முறை நாடாளுமன்றத் திற்குச் செல்ல அனைத்து நிலைகளிலும் நின்று கடுமையாக உழைப்போம்.

கோவை மாநகர் திலக்பாபு: பொதுச் செயலாளர் பங்கேற்ற மூன்று நடை
பயணங்களிலும் எமது மாவட்ட மாணவர் அணி நிர்வாகிகள் பங்கேற்று உள்ள னர். கல்லூரிகளிலேயே புதிய வாக்காளர்களை இணைக்க வேண்டும் என்று நாம் நிறைவேற்றிய தீர்மானம் பாராட்டுதலுக்குரியது. எமது மாவட்டத்தில் பேச்சுப் போட்டியை சிறப்பாக நடத்துவோம்.

காஞ்சி ஜெய்சங்கர்: அண்ணா பிறந்த காஞ்சி மாவட்ட மாணவர் அணி சார் பில் இரண்டு இலட்சம் மாணவர்களை சேர்க்கும் முயற்சிக்கு அதிகளவில்
மாணவர்களை இணைப்போம். பொதுச் செயலாளர் உரையாற்றிய இலக்கிய
பேச்சு குறுவட்டுகளை அனைத்து மாணவர்களுக்கும் கொண்டு சேர்ப்போம். நமது இயக்கம் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் குறிப்பிட்ட வெற்றியைப் பெற கடுமையாகஉழைப்போம்.

கோவை புறநகர் இள.கோபாலகிருஷ்ணன்:மாணவர் அணி நடத்தும் பேச் சுப் போட்டி மூலம் மாணவர் சமுதாயத்தில் நம் இயக்கம் தொடர்பான நன் மதிப்பு பெருகும். நிச்சயம் நம் தலைவர் மீது நல்லெண்ணம் மலரும்.

திருவள்ளூர் சந்தோஷ்: மாணவர் அணி எடுக்கும் அனைத்து நடவடிக்கை
களுக்கும் திருவள்ளூர் மாவட்ட மாணவர் அணி துணை நிற்கும். மாணவர் களுக்கான பேச்சுப் போட்டி வரவேற்கத்தக்கது. இந்தப் போட்டியில் மாநில அளவில் அறிவிக்கப்பட்டுள்ள முதல் பரிசு ரூ.1 லட்சத்தை எமது மாவட்டமே வழங்கும். அதற்கு பொதுச் செயலாளர் அனுமதிக்க வேண்டும்.

அப்போது தலைவர் வைகோ, சந்தோஷ் தொடர்பாக குறிப்பிடும்போது இவர்
சங்கரன்கோவில் இடைத் தேர்தல் நிதியாக அப்போது நடந்த பொதுக் குழுவில் ரூ.1 லட்சம் வழங்கினார்.நாடாளுமன்றத் தேர்தல் நிதியாக இரண்டு லட்சம் வழங்கியிருக்கின்றார்.இப்போது பேச்சுப் போட்டிக்கான முதல் பரிசு ஒரு லட் சம் வழங்குவதாக அறிவித்துள்ளார். அவருடைய கொடை உள்ளத்திற்கு பாராட்டுக்கள் என்றார்.

மதுரை புறநகர் ராஜேந்திரன்: மதுரை புறநகர் மாவட்டத்தில் மாணவர் அணி யை பலப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளோம். கல்லூரிகளில் தலைவர் பேசிய குறுவட்டுகளை வழங்கி வருகின்றோம். மாநிலத்தில் பேச்சுப் போட்டிக் கான முதல் பரிசை வழங்க எமக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும்.

நெல்லை புறநகர் சிவானந்தம்: தலைவர் வைகோ பிறந்த நெல்லை மாவட் டத்தில் இருந்து ஏராளமான மாணவர்களை விருதுநகர் மாநாட்டிற்குஅழைத்து
வருவோம். எமது மாவட்டத்தில் மாணவர் பேச்சுப் போட்டியை சிறப்பாக நடத் துவோம்.

நெல்லை மாநகர் விஜயகுமார் பாக்கியம்ஒருமுறை இலங்கையில் இருந் து வந்த பேராசிரியர் ஒருவர் பல்கலைக் கழக மாநாட்டில் பங்கேற்கும்போது,
இலங்கையில் மனித உரிமையையும்,பெண்களை மதிப்பதிலும் சிறப்பாக இருக்கின்றோம் என்று பேசியதாக வந்த செய்தியை அறிந்து, உடனடியாக அந்தப் பேராசிரியரையும், இலங்கைப் பிரதிநிதி களையும் திரும்பப் போகச் சொல்லுமாறு மாணவர் அணி சார்பில் போராட்டம் நடத்தினோம். அவர்களை திருப்பி அனுப்புவதில் வெற்றியும் பெற்றோம்.மேலும், நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த பதிவாளரை எம்மிடம் வருத்தம் தெரிவிக்குமாறு செய்தோம். வைகோ
ஒருவரல்ல, நாமும் அவரது முகமாகவே இருந்து நமது இனத்தைக் காக்கும்
முயற்சிகளில் ஈடுபடுவோம்.

புதுக்கோட்டை லோகநாதன்: தலைவர் வைகோ முல்லைப் பெரியாறு பிரச் சனையில் இறங்கிப் போராடியதற்குப் பின்பே அந்த அணை பாதுகாக்கப் பட் டுள் ளது. தென்மாவட்ட மக்கள் பயனடைந்து வருகின்றனர்.அதுபோல வானம் பார்த்த பூமியாகத் திகழும் புதுக்கோட்டையையும் காக்க தலைவர் போராட முன் வரவேண்டும்.காவிரியில் இருந்து கொள்ளிடம் வழியாக கடலில் வீணா கும் நீரை புதுக்கோட்டை,சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்கள் பயனடை யும் வகையில் திருப்பிவிட வேண்டும். தலைவர் வைகோ என் பெயரை உச்ச ரித்தாலே போதும், நான் இந்த பிறவியில் கிடைத்த பயனைப் பெற்று விடு வேன். மாணவர் அணி முடிவுகளை செயல்படுத்துவோம்.

சிவகாசி முருகேசன்: விருதுநகர் தொகுதியில் தலைவர் வெற்றி பெற்று
நாடாளுமன்றம் செல்ல வேண்டும். செப்டம்பர் 15-ல் நடைபெறும் விருதுநகர் மாநாட்டிற்கு ஆயிரக்கணக் கான மாணவர்களை சீருடையுடன் பங்கேற்கச் செய்வோம். மாணவர் பேச்சுப் போட்டியை சிறப்பாக நடத்துவோம்.

நாமக்கல் அசோக்குமார்: நாமக்கல் மாவட்டத்தில் மாணவர் அணியை பலப் படுத்தி வருகின்றோம். அனைத்துக் கல்லூரிகளிலும் நமது அணியையும், இயக்கத்தையும் கொண்டு சேர்ப்போம். வருங்காலம் வைகோவின் காலம்
என்பதை நிலைப்படுத்துவோம்.

சேலம் தைரியசீலன்: மறுமலர்ச்சி திமுகவின் மீது நடுநிலையாளர்கள் மற் றும் மாணவர்களின் பார்வை படிந்துள்ளது. நிச்சயம் நாம் மாற்று சக்தியாக உருவெடுக்கும் காலம் நெருங்கி வருகின்றது. மாணவர் அணி தீர்மானங்களை முன்னெடுப்பதில் வெற்றி காண்போம்.

விழுப்புரம் பரிமேலழகர்: இயக்கம் வெற்றி பெறும் காலம் நெருங்கிக் கொண் டு இருக்கிறது. திராவிடப் பேரியக்க வரலாற்றில் மதிமுகவின் பங்கு வர லாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.அதிலும்,மாணவர் அணி சிறந்த தலைப்பில் பேச்சுப் போட்டி நடத்துவது பாராட்டுதலுக்குரியது. அதிக மாணவ உறுப்பினர் களை எமது மாவட்டத்தில் சேர்ப்போம்.

தேனி கமலக்கண்ணன்: தலைவர் வைகோ அறிவித்த மூன்று நடைப்பயணங் களிலும் முழுமையாக பங்கேற்று இருக்கின்றோம். எமது மாவட்டத்தில் பேச் சுப் போட்டியை சிறப்பாக நடத்துவோம். கல்லூரி மாணவர்களை அதிகளவில் இயக்கத்தில் சேர்ப்போம்.

திருச்சி புறநகர் வைகோ பழனிச்சாமிபூரண மதுவிலக்கு அதுவே நமது இலக்கு, புகையும் - மதுவும் நமக்குப் பகை என்ற தலைவர் வைகோவின் மணி வாசகத்தை எனது இருசக்கர வாகனத்தில் எழுதி வைத்துள்ளேன். தலைவர் மதுவிலக்குப் பிரச்சாரத்தை எடுத்ததும், அதுவரை என்னை வியாபித்திருந்த மது பழக்கத்திலிருந்து என்னை விடுவித்துக் கொண்டேன். என் வாகனத்தைப் பார்த்ததும் பெண்கள் மரியாதையாக அதே நேரத்தில் வைகோவின் வாசகத் தை கவனமாக பார்ப்பதும் என் போன்றவர்களுக்கு கெளரவத்தை அளிக்கிறது. கல்லூரி மாணவர்களை இணைக்கும் பணிகளிலும், கிராமங்கள் தோறும் படித் த இளைஞர்களை இயக்கத்தில் இணைக்கும் பணியிலும் தீவிர கவனம்
செலுத்துவோம்.

திருச்சி மாநகர் வழக்கறிஞர் கனகராஜ்:பொதுச்செயலாளர் வைகோ நீண்ட
நெடிய திராவிட இயக்க கொள்கை களுக்காகப் போராடி வருகின்றார். அவரு டைய இலட்சியங்கள் வெற்றி பெறும்.

பெரம்பலூர் மணிவண்ணன்:மாணவர்களுக்கு அரசியல் புரிதல் சற்றுக்குறை வாக உள்ளது. அரசியலில் ஈடுபடுவதன் மூலம் தமது எதிர்காலம் பாதித்து விடுமோ என்கிற மனோபாவம் வளர்ந்துள்ளது. குறிப்பாக பொறியியல் கல் லூரி மாணவர்களுக்கு அரசியல் முற்றிலும் அற்றுப் போயிருக்கிறது. அவர் களுக்கு ஒரு தெளிவான புரிதலை ஏற்படுத்தி பெருமளவு மாணவர்களை
நமது இயக்கத்தில் இணைப்போம்.

அரியலூர் வழக்கறிஞர் கஜேந்திரன்:கல்லூரி மாணவர்களை நமது இயக்கத் தில் சேர்க்கும் பணிகளில் சிறப்பாக ஈடுபடுவோம். இயக்கப் பணிகள் தொடர் பாக துண்டு பிரசுரங்கள் அச்சடித்து பயணிகள் மற்றும் மாணவர் களிடம் அளிப் போம்.

தஞ்சை ராமபத்திரன்: மறுமலர்ச்சி தி.மு.க.நமது தலைவர் வைகோவின் அரிய செயல்பாடுகளால் நாட்டு மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மாணவர்
பெரும்படைய நமது இயக்கத்திற்குக் கொண்டு வருவோம், மாற்று அரசியலை
அவர்தம் மனங்களில் விதைப்போம்.

சிவகங்கை உல.ராம்நாத்: பல்வேறு போராட்டங்களில் நமது பொதுச் செய லாளர் வைகோ ஈடுபட்டு மக்களின் செல்வாக்கைப் பெற்றுள்ளார். அந்தத்
தலைவனை உரிய இடத்திற்குக் கொண்டு வருவதே நமது இலட்சிய மாகும்.

வேலூர் மேற்கு இமயவரம்பன்: நமது இயக்கம் வடவர் மாநிலமாம் சாஞ்சிக் கே சென்று ராஜபக்சேவை விரட்டியது. அந்தப் படைக்கு தலைவர் வைகோ
தலைமையேற்றுச் சென்று நமது வீரத்தை, தீரத்தை நிலைநாட்டி உள்ளார். தலைவர் வைகோவின் தலைமையை ஏற்பதை மாணவர்கள் பெருமையாகக் கருதுகின்றனர்.

திண்டுக்கல் மணிவண்ணன்: 12-ம் வகுப்புத் தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பிடித்த மாணவனை மாநில மாணவர் அணிச்செயலாளர் தி.மு.இராசேந்திரன், மாவட்டச் செயலாளர் செல்வராகவன் ஆகியோரை அழைத்துச் சென்று பாராட்டினோம். அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பெரிதும் மகிழ்ந்தனர். வைகோவின் இயக்கம் என்றாலே மதிப்பும், மரியாதையும் கிடைக்கிறது.

கரூர் பொம்முராஜ்: மாணவர் அணி இடும் கட்டளைகளை சிறப்பாக நிறை வேற்று கின்றோம். பேச்சுப் போட்டியை எமது மாவட்டத்தில் திறம்பட நடத்து வோம்.

கன்னியாகுமரி சாஜி: கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டியை கன்னியா குமரி மாவட்டத்திற்குள் நுழையக் கூடாது என்பதை வலியுறுத்தி மாணவர் அணி சார்பில் கறுப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தோம். மாணவர் அணி சார்பில் நடத்தும் பேச்சுப்போட்டியில் அனைத்துக் கல்லூரி மாணவர்களையும் ஈடுபடச்செய்வோம்.

கடலூர் பார்த்திபன்: கடலூர் மாவட்டத்தில் மறுமலர்ச்சி திமுகவை மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பல்வேறு நிலைகளிலும் உயர்த்திட முயன்று வரு கின்றோம். கல்லூரி மாணவர்களுக்கு அண்ணன் செந்திலதிபன் போன்றவர் களை வைத்து பயிற்சிப் பாசறைகளை சிறப்பாக நடத்துவோம்.

திருவண்ணாமலை தீனன்:திருவண்ணாமலை மாவட்டத்தில் மண்டலப் பொறுப்பாளர் பாசறை பாபுவுடன் இணைந்து மாணவர் அணிக்கு அதிக உறுப் பினர்களை சேர்ப்போம். பாசறைக் கூட்டத்தையும், பேச்சுப் போட்டியையும் திறம்பட நடத்துவோம்.

நீலகிரி சகாயதாஸ்: நமது தலைவர் வைகோ, வெலிங்டன் இராணுவ மையத் தில் இலங்கை வீரர்களுக்கு பயிற்சி கொடுப்பதை அனைத்துத் தலைவர்களும் கண்டித்தார்கள். ஆனால்,தலைவர் வைகோ வருகிறார் என்றவுடன் அவசர, அவசரமாக அவர்களை மத்திய அரசு நாடு கடத்தியது. இது நம் தலைவருக்குக் கிடைத்த வெற்றியாகும்.மாணவர் அணிக்கு அதிகளவில் மாணவர்களை சேர்ப்போம்.

கிருஷ்ணகிரி நவமணி: தமிழகத்தில் மிகவும் வறண்ட மாவட்டம் எமது மாவட்டம். ஆனாலும், தொடர்ந்து இயக்கப் பணிகளை சிறப்பாக செய்து வரு கின்றோம். மாணவர்களையும் பெரும் பங்கு இணைப்போம்.

திருப்பூர் கோவிந்தராஜ்: திருப்பூரில் மாணவர் அணிக்கு ஆயிரக் கணக்கில்
மாணவர்களை சேர்ப்போம். மாணவர் பேச்சுப் போட்டியையும் சிறப்பாக
நடத்துவோம்.

நாகை ஆசைத்தம்பி: எமது மாவட்டத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்புத் தேர்வில்
அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களை மாவட்டச் செயலாளர் மோகனுடன்
சென்று சந்தித்துப் பாராட்டினோம்.நாங்கள் வழங்கியது எளிய தொகை என்றா லும் மாணவர்களும் -பெற்றோரும் மகிழ்ந்தனர். மாணவர் அணிக்கென தனி யாக இணைய தளத்தை நிறுவ உள்ளோம். இணைய தள சேவையை பொதுச் செயலாளர் அனுமதியோடு விரைவில் தொடங்கு வோம்.

பாரிமைந்தன் (அமைப்பாளர், தமிழ்நாடு மாணவர்கள் கூட்டமைப்பு): ஒரு நல்ல தலைவர் வைகோவை மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளராக கொண்டுள்ளது. மாணவர்கள் மனங்கவர்ந்த தலைவராக வைகோ விளங்கு கின்றார். அதனால் தான், அவருடன் இணைந்து பணி ஆற்றியதைப் பெருமை யாகக் கருது கின்றோம். ஈழப்பிரச்சனை, பொது வாக்கெடுப்பு, காமன்வெல்த் மாநாடு என அனைத்தையும் வைகோவிடம் தான் எமது மாணவர் சமுதாயம் கற்றுக் கொண்டுள்ளது. மாற்று அரசியலின் ஒரே முகம் வைகோ ஒருவரே. அவரை தமிழ்நாட்டின் உயர்ந்த இடத்திற்கு நாம் அனைவரும் கொண்டு வரு வோம்.

கே.கே.முத்துக்குமார் (வடசென்னை மாவட்ட துணை அமைப்பாளர்): இளை ஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு முன் மாதிரியாக உள்ள தலைவர் வைகோ. அவருடன் கலந்து, அவரையே நினைந்து வாழ்ந்தாலும் - வீழ்ந்தாலும் அவர் திறம் போற்றி பயணிப்பதே சிறந்த பேறு. நிகழ்ச்சியில் உரையாற்றிய அனை வருக்கும், பங்கேற்று சிறப்பித்த மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப் பாளர்கள், மாநில துணைச் செயலாளர்கள் அனைவருக்கும் நன்றி.

நிகழ்வில் மாணவர் அணி மாநில துணைச் செயலாலர்கள் ராமநாதபுரம் ராஜா, சுமங்கலி செல்வராஜ், இராச.எழிலன், முகமது சாதிக், உமாபதி, பொடா கணே சன், பாசறை பாபு, நல்லியக் கோடன் ஆகியோர் பேசினார்கள்.

இதனைத் தொடர்ந்து கழக தொண்டர் அணிச் செயலாளர் ஆ.பாஸ்கரசேதுபதி,
கழகச் சொற்பொழிவாளர் வாகை முத்தழகன், மகளிரணிச் செயலாளர் குமரி விஜயகுமார், இளைஞர் அணிச் செயலாளர் பொறியாளர் ஈஸ்வரன், சட்டத் துறைச் செயலாளர் ஜி.தேவதாஸ், கொள்கை விளக்க அணிச் செயலாளர்
வழக்கறிஞர் க.அழகுசுந்தரம், கழக உயர்நிலைக்குழு உறுப்பினர் இமயம் ஜெப ராஜ், அரசியல் ஆய்வு மைய்யச் செயலாளர் மு.செந்திலதிபன், துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா ஆகியோர் மாணவர் அணியை ஊக்கப்
படுத்தி உரையாற்றினார்கள்.

நிறைவாக தலைவர் வைகோ பேசும் போது கழகத்தின் மாணவர் அணி நிர் வாகிகள் சிறப்பான தீர்மானங்களை வடித்தெடுத்துள்ளீர்கள். அதிலும், முத் தாய்ப்பான மாணவர்கள் பங்கேற்கும் பேச்சுப் போட்டியை அறிவித்து இருக் கின்றீர்கள். பல மாவட்ட நிர்வாகிகள் இனஎதிரிகளை திருப்பி அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளீர்கள்.அவர்களை மனதாரப்பாராட்டுகின்றோம் எனப் பேசியவர், கழகத்தின் உயர்நிலைக்குழு உறுப்பினர் பெரியார் தாசன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததையும், துணைப் பொதுச்செயலா ளர் மல்லை சத்யாவுடன் சென்று பார்த்ததையும் நினைந்து, நினைந்து உருகி னார்.

அம்பேத்கரின் அத்துனை தொகுப்பு நூல்களையும் பழுதறக் கற்றவர் பெரியார்
தாசன். மனோதத்துவப் பேராசிரியராக பச்சையப்பன் கல்லூரியில் 30 ஆண்டு
களாக பணியாற்றியவர், புத்த மதக் கோட்பாடுகள், புத்தரின் தத்துவங்களைப் படித்து உயர்ந்தவர். மேலும்,2010-ம் ஆண்டு இ°லாம் மதத்தைத் தழுவி தன் பெயரை அப்துல்லா பெரியார்தாசனாக மாற்றிக் கொண்டவர் என்று தலைவர் வைகோ உருக்கமாகப் பேசினார். அப்போதே உணர்ந்து கொண்டோம் பெரியார் தாசன் ஓரிரு நாள்களில் உயிர் துறக்கும் சூழல் நெருங்கிக் கொண்டிருக்கும்
சூட்சமத்தை மறைத்து வைத்து பேசுகிறாரே என அறிந்தோம்.

ஆனாலும், மனதில் படர்ந்திருந்த சோகத்தை மறைத்து வைத்துக் கொண்டு மாணவர் அணியினரைப் பாராட்டினார். அவர் கணித்ததைப் போலவே பெரி யார் தாசனும் திங்கள் கிழமை உயிர் துறந்தார். வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம் வாடினேன் என்ற வள்ளலாருக்குப் பின்பு தமிழக அரசியலில் வாடி ய முகத்தைக் காணும்போதெல்லாம் வாடும் தலைவர் வைகோ ஒருவரே.

அண்ணாவின் தோட்டத்தில் ஜனநாயகப் பூக்கள் பற்றிப் படர்ந்ததை அனை வரும் அறிவார்கள். அதைப்போல தலைவர் வைகோவின் கூட்டத்தில் செல் வந்தர் -சொல்வேந்தர் - படித்தவர் - பாமரர் - ஏதுமற்றோர் என அனைத்துத்
தரப்பினரும் இருந்தபோதிலும், ஒருவர் மீது காட்டிய அன்பை, பாசத்தை அள வுக் குறையாது அனைவர் மீதும் செலுத்துகின்ற இளைய அண்ணா வைகோ
மட்டுமே. அவர் முற்றத்தில் பேசியதை,கருத்துச் சொல்லும் ஜனநாயகப் பண்பு
நலன் என எல்லாவிதமான உரிமை களையும் வழங்கிய தலைவர் வைகோ வின் பண்பு நலனை எண்ணி, எண்ணி மாணவர் அணியினர் உவகைப் பெற்ற னர். அற்றை நாளை..அந்தப் பொழுதை நினைந்து, மகிழ்ந்து கலைந்தனர்.

தொகுப்பு ..
மணவை தமிழ்மாணிக்கம்
மாணவர் அணித் துணைச் செயலாளர்

No comments:

Post a Comment