சங்கொலி தலையங்கம்
இருக்கும் என்று பல ஆய்வுகள் எச்சரிக்கை மணி அடித்துள்ளன. தமிழ்நாட்டில்
மழையின் மூலம் கிடைக்கும் நீர் குறைந்து வருவது மட்டுமின்றி, நிலத்தடி நீரும் வெகுவாக குறைந்த வண்ணம் இருக்கின்றது. தமிழகத்தில் ஆண்டு தோறும் மழை சராசரியாக 925 மி.மீ. பொழிகிறது. தென்மேற்கு பருவ மழை 307.60 மி.மீ. வடகிழக்குப் பருவ மழை 438.70 மில்லி மீட்டர் பொழிகிறது.
குளிர்காலத்தில் பொழியும் மழை நீரின் அளவு 42.20 மில்லி மீட்டர்; கோடை
காலத்தில் 136. 50 மில்லி மீட்டராக மொத்தம் 925 மில்லி மீட்டர் மழைநீரை
தமிழகம் பெறுகிறது. இதில் மேற்குத் தொடர்ச்சி மலை தடுத்து விடுவதால்,
தமிழ்நாட்டிற்கு தென் மேற்கு பருவக் காற்றால் பொழியும் பருவ மழையின் பயன் கிடைப்பது இல்லை. வடகிழக்குப் பருவக் காற்று அக்டோபர் முதல் டிசம்பர் வரை வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்களை உருவாக்கிப் பொழியும் மழை, கனமழையாக கொட்டிவிடுகிறது.
தென்மேற்கு பருவ மழையின் பயன் கேரள மாநிலத்திற்கும், கர்நாடக மாநிலத் திற்கும்தான் போகிறது. தமிழ்நாட்டில் நீர் பற்றாக்குறை காலங்களில் காவிரி யில் தண்ணீர் திறந்துவிட முடியாது என்று அடாவடிப் போக்கை கடைப்பிடிக் கும் கர்நாடகம், தென்மேற்கு பருவ மழை பொழியும்போது அணைகள் நிரம்பி வழிந்தால் உபரி நீரை காவிரியில் திருப்பி விடுகிறது. இவ்வாறு இந்த ஜூன்
மாதம் தொடங்கி பெய்த மழை நீர் தமிழகத்திற்கு மேட்டூர் அணைக்கு வந்து
சேர்ந்தது.
காவிரியில் தண்ணீர் வரத்து அதிகரித்ததால், மேட்டூர் அணை முழுக் கொள்ள ளவை எட்டியது. இதனால், ஜூன் மாதம் 12 ஆம் தேதி திறக்க வேண்டிய மேட் டூர் அணை காலதாமதமாக திறக்கப்பட்டாலும் காவிரி வெள்ள நீர் கரை புரண்டு ஓடியது. காவிரிப் பாசன மாவட்டங்களில் இந்த ஆண்டு சம்பா சாகு படிக்கு தேவையான நீர் கிடைத்துள்ளது என்று விவசாயிகள் மகிழ்ச்சி அடைந் தனர்.மேட்டூர் அணை தண்ணீர் திறக்கப்பட்டவுடன் கல்லணை வந்த காவிரி நீர் அங்கிருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய் மூலம் பாசனத் திற்குச் செல்கிறது.
இந்த ஆண்டு கிடைத்த பெருமளவு தென்மேற்கு பருவமழை நீர், கொள்ளிடம்
ஆற்றின் வழியாக வங்காள விரிகுடா கடலில் வீணாகப் போய் கலந்து விட் டது. தற்போது மேட்டூர் அணையின் நீர் வரத்து குறைந்துவிட்டது. வெளி யேற் றப் பட்ட நீரும் பாசனத்திற்கு பயன்படுத்த முடியாமல் வீணடிக்கப்பட்டுள்ளது.
இதனால், இதை நம்பி சம்பா பயிர் நடவு பணிகளைத் தொடங்கிய தஞ்சை மண் டல விவசாயிகள் மீண்டும் தண்ணீர் இல்லாமல், ஆறுகள், வாய்க்கால்கள்
வறண்டுபோனதைப் பார்த்து மிரண்டு கிடக்கின்றனர். அதிகப்படியான உபரி நீர்
வரத்து இருந்தும் பயனின்றி கொள்ளிடம் ஆற்றின் வழியாக கடலில் சேர்ந்து விட்டது.
கடந்த பத்து ஆண்டுகளில் இவ்வாறு கடலில் சென்று வீணான காவிரி நீர் பற் றிய புள்ளிவிவரங்களை திருப்பிப் பார்த்தால், தமிழ்நாட்டில் இதுகுறித்து அக் கறை கொண்ட அரசு பொறுப்பில் இருந்திருக்கின்றதா என்ற கோபாம் வரு கிறது. 2005 ஆம் ஆண்டில் 70.96 டி.எம்.சி.; 2006 இல் 42.85 டி.எம்.சி.; 2007 இல் 64.41
டி.எம்.சி.; 2008 இல் 78.15 டி.எம்.சி.; 2009 இல் 65.42 டி.எம்.சி. தண்ணீர் கொள்ளிடம் ஆற்றின் முகத்துவாரத்திலிருந்து கடலில் சென்று வீணாகிவிட்டது
கடந்த ஆகஸ்டு 5 மற்றும் 6 தேதிகளில் மட்டும் 6 டி.எம்சி.நீர் பயனற்று கடலில்
கரைந்தது. மேட்டூர் அணையிலிருந்து ஆகஸ்டு 5 ஆம் தேதி, இரவு முதல் வினாடிக்கு 1.06 இலட்சம் கன அடி நீர் முக்கொம்புக்கு வந்தது. இதிலிருந்து காவிரி ஆற்றில் 32 ஆயிரம் கன கடி நீரும்; கொள்ளிடம் ஆற்றில் 75 ஆயிரம் கன அடி நீரும் திறந்துவிடப்பட்டுள்ளது. கொள்ளிடம் ஆற்றில், வீராணம் ஏரிக்கு நீர் செல்லும் துணை வாய்க்கால் உட்பட 19 துணை வாய்க்கால்கள் உள்ளன.
இந்த வாய்க்கால்களுக்கு மொத்தமாக வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடி நீர் சென் றது. ஆகஸ்டு 6 ஆம் தேதி இரவு மட்டும் வினாடிக்கு 71 ஆயிரம் கன அடி நீர் கடலில் வீணாகக் கலந்துவிட்டது. வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி நீர் வெளி யேறினால் 24 மணி நேரத்தில் 1 டி.எம்.சி. தண்ணீர் வெளியேறும். இந்த வகை யில் 6 டி.எம்.சி. அளவுக்கு தண்ணீர் ஒரே நாளில் கடலில் விழுந்து விட்டது.
இப்போது மழைநீர் வடிந்துவிட்டதால், கொள்ளிடம் ஆறு வறண்டுவிட்டது. ஏன் இந்த நிலைமை? கொள்ளிடம் ஆற்றில் தண்ணீரைத் தேக்கி வைப்பதற் கான தடுப்பணைகள் இல்லாததே இதற்குக் காரணம்.
ஒரு டி.எம்.சி. காவிரி தண்ணீருக்காக உச்ச நீதிமன்றம் வரை சென்று, சட்டப் போராட்டம் நடத்தி மட்டும் என்ன பயன்?

காவிரியில் வந்த நீரைத் தேக்கி வைப்பதற்கு ஏற்ற முறையில் மேட்டூர் அணை பராமரிக்கப்படுகிறதா? ஆண்டுதோறும் மேட்டூர் அணையில் நீரைத் தேக்கி வைக்கும் கொள்ளளவு குறைந்து கொண்டே வருகிறது. தமிழ்நாட்டை மாறி மாறி ஆட்சி செய்து வரும் தி.மு.க. -அ.தி.மு.க. அரசுகள் இதுபற்றி கவ லைப்படவே இல்லையே?
கடந்த 74 ஆண்டுகளில் மேட்டூர் அணையில் நீர் கொள்ளளவு 29.6 சதவீதம்
குறைந்துவிட்டது. முழு கொள்ளளவு 93 ஆயிரம் மில்லியன் கன அடி. ஆனால்,
தற்போது 66 ஆயிரம் மில்லியன் கன அடி நீரை மட்டுமே தேக்கி வைக்க முடி யும்.அந்த அளவுக்கு மேட்டூர் அணை ஆழப்படுத்தப்படாமல், தூர்மண்டிக் கிடக் கின்றது. தென்மேற்கு பருவ மழை மூலம் வந்த உபரி நீர் சேகரிக்கப்பட்டு இருந்தாலே காவிரிப் பாசன மாவட்டங்களில் சம்பா அறுவடை வரை போது மானதாக இருந்திருக்கும்.
மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீராவது கொள்ளிடம் ஆற்றில்
தேக்கப்பட்டு இருக்கிறதா? என்றால், அதுவும் இல்லை. கொள்ளிடம் ஆற்றில் 7 இடங்களில் கதவணைகள் அமைக்க திட்டம் போட்டு பல ஆண்டுகள் ஆகி யும் நடைமுறைக்கு வராமல் கிடப்பில் கிடக்கிறது.
இதுபோலவே, மேட்டூர் அணை நிரம்பியபின் காவிரியிலிருந்து கடலில் கலக் கும் உபரி நீரை சேலம் மாவட்டத்தின் வறட்சியான பகுதிகளுக்குத் திருப்பி விட்டால், பல ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இதற்காகவே 1100 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்ட திட்டமும் கிடப்பில் கிடக்கின்றது.
ஒவ்வொரு பருவ மழையின்போதும், காவிரியிலிருந்து கடலில் வீணாகக் கலக்கும் நூற்றுக்கணக்கான டி.எம்.சி. மழைநீரை முறையாக சேமிப்பதற்கு கடந்த ஆண்டு காவிரி தொழில்நுட்பக் குழுவின் தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் தனிக்குழுவை தமிழக அரசு அமைத்தது. இக்குழு காவிரி ஆற் றில் தடுப்பணைகள் அமைப்பது, புதிய கதவணைகள் கட்டுவது என பல பரிந் துரைகளை அரசுக்கு அனுப்பியது.
மேலும், காவிரி கரையில் உள்ள ஆக்கிரமிப்புகள் பற்றிய முழுமையான தக வல்களையும், இதனால் ஏற்படும் பிரச்சினைகளையும் இக்குழு ஆய்வு செய்து
விரிவாக அறிக்கையில் சுட்டிக்காட்டியது. இக்குழுவின் அறிக்கை தமிழ்நாடு
அரசுக்கு அளிக்கப்பட்டு 6 மாதங்கள் ஆகியும் இன்னும் செயல்வடிவம் பெற வில்லை.
சங்க காலத்திலிருந்தே நீர் மேலாண்மையில் சிறப்புற்று விளங்கியது தமிழி
னம் என்பதற்கு வரலாற்று ஆதாரங்கள் உள்ளன. உலகில் முகிழ்த்த நதிக்கரை
நாகரிகங்களில் மிகவும் தொன்மையானது தமிழர் நாகரிகம். நீரை அணைகட்டி
சேமித்து வைத்து வாய்க்கால் வெட்டி முறை வைத்து வேளாண்மைக்கு பாசனம் செய்த பழமையான சிறப்பு நமக்கே இருக்கிறது. நீர் நிலை மற்றும் தண்ணீரைச் சேமித்து வைக்கும் கட்டுமானங்கள் வகை வகையாக பிரிக்கப் பட்டு, அவற்றிற்கு பல பெயர்கள் வழங்கப்பட்டு வந்ததை இலக்கியத்தில் உரிச் சொல் நிகண்டு குறிப்பிடுகிறது.
இலஞ்சி, கயம், கேணி, கோட்டகம், ஏரி
மலங்கள், மடு, ஓடை, வாவி, சலந்தரம்
வட்டம், தடாகம், நளினி, பொய்கை
குட்டம், கிடங்கு, குளம்
இத்தனைப் பெயர்களில் அமைந்திருந்த நீர்நிலைகள் மூலம் தண்ணீர் சேமிக் கப்பட்டு, வேளாண்மை செழித்தது. அதோடன்றி, மழைநீரைச் சேமித்து வைப்ப தற்கு ஏற்ற நீர் நிலைகளை அமைப்பது மன்னனின் தலையாயக் கடமை என புறநானூற்றுப் பாடல் ஒன்று சுட்டிக்காட்டுகிறது.
“நிலன் நெளி மருங்கின் நீர்நிலை பெருக
தட்டோரம்ம இவன் தட்டோரே
தள்ளாதோர் இவண் தள்ளாதோரே” (புறம் 18)
இப்பாடலைப் பாண்டிய நெடுஞ்செழியனிடம் குடபுலவியனார் என்னும் புலவர்
பாடியதாக புறநானூறு கூறுகிறது. ‘நிலம் எங்கெங்கு பள்ளமாக இருக்கிறதோ,
அங்கெல்லாம் நீர் நிலைகள் அமையும்படி கரை அமைத்த மன்னர்களே இவ்வு லகில் தம் பெயரை நிறுத்திக் கொள்வார்கள்’ என்று இப்படாலுக்கு பொருள்.
பண்டைத் தமிழரின் பெருமை எவ்வாறு அனைத்துத் துறைகளிலும் சீரழிக்கப் பட்டதோ, அதைப்போலவே தமிழக நதிகள், ஏரிகள், குளங்கள் எல்லாம் திட்ட மிட்டு அழிக்கப்பட்டுவிட்டன. தமிழகத்தின் நீராதாரங்களான இவைகள் அழிந்த தற்கு கருணாநிதி-ஜெயலலிதா ஆட்சிகளின் அவலம்தான் காரணம். தமிழ் நாட்டில் பதிவேடுகளில் உள்ளவாறு ஏரிகளின் எண்ணிக்கை 39,202 ஆகும்.
இவற்றில் 40 ஹெக்டேருக்கு மேல் ஆயக்கட்டு கொண்ட சுமார் 9,000 ஏரிகள்
பொதுப்பணித்துறையின் பொறுப்பிலும, 40 ஹெக்டேருக்குக் கீழ் ஆயக்கட்டு
கொண்ட 30 ஆயிரம் ஏரிகள் ஊராட்சி ஒன்றியங்களின் பொறுப்பிலும் உள்ளன.
ஆனால், பொதுப்பணித்துறை ஆகட்டும், உள்ளாட்சி அமைப்புகள் ஆகட்டும்
இந்த ஏரிகளையும், வாய்க்கால், குளங்களையும் முறையாகத் தூர் வாரி, பரா மரிப்பு செய்கின்றனவா என்றால் இல்லை. பெரும்பாலான ஏரிகள், குளம், குட்டைகள் ஆக்கிரமிக்கப்பட்டு, ஆளும் அரசியல் கட்சி கும்பல்களின் ‘ரியல் எஸ்டேட்’ தொழில் மூலதனமாக மாற்றப்பட்டுள்ளன. மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சித் திட்டம் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் செலவழிக்கப் படு கிறது. ஆனால், ஏரிகள், நீர் நிலைகள் மழைக்காலத்தில் வெள்ள நீரை தேக்கி வைக்கக்கூடிய நிலையில் இல்லை. ஏனெனில் அங்கிங்கெணாதபடி எங்கும் ஊழல், ஊழல், ஊழல். தமிழகத்தில் நூறு நாள் வேலைத் திட்டம் செயல்படும் இலட்சணத்தை மத்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அறிக்கை அம்பலப்படுத்தி இருக்கின்றது.
முதலாம் பராந்தக சோழன் (கி.பி.907-953) அமைத்த வீராணம் ஏரி என்று அழைக் கப்படும் ‘வீர நாராயணன் ஏரி’ நீர் கொள்ளளவு 41 மில்லியன் கன அடி ஆகும். ஆனால் தற்போது வெறும் 25 மில்லியன் கனஅடி நீர் மட்டுமே தேக்கி வைக்க முடியும். ஆயிரம் ஆண்டுகள் வீராணம் ஏரியின் கொள்ளவு குறையாமல், மன் னர்கள் காலத்தில் பராமரிக்கப்பட்டது. மக்களாட்சி காலத்தில் வீராணம் ஏரி யின் கதி இப்படி ஆகிவிட்டது. தமிழகம் முழுதும் உள்ள ஏரிகள், நீர் நிலை களுக்கும் இதுதான் நிலைமை.
தி.மு.க.-அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் ஆறுகள் வறண்டு போனால் கொண்டாட் டம் என்று இருந்ததற்குக் காரணம், அப்போதுதான் மணலை கொள்ளை அடித்து, கோடி கோடியாக குவிக்கலாம். காவிரி, தென்பெண்ணை, பாலாறு, வைகை, பொருநை, நதிகள் தண்ணீர் இன்றி காய்ந்து கிடந்தால் மணலைச் சுரண்டி வெளிமாநிலங்களுக்கு மட்டுமின்றி, மாலத் தீவு நாடு வரை அனுப்பி வைத்து இலட்சக்கணக்கான கோடி ரூபாய் விழுங்கலாம் என்பது இவர்களின்
‘தொலைநோக்குப் பார்வை.’
எத்தனை காலம்தான் இந்த அவலங்கள் தொடருவது? இந்த மண்ணையும்,
மக்களையும் காக்கும் கடமையும் அதற்காக களம் காண வேண்டிய பொறுப் பும் தமிழகத்தின் எதர்கால நலனுக்காக சிந்திக்கும் ஒவ்வொருவருக்கும் உண்டு.

No comments:
Post a Comment