Wednesday, August 14, 2013

நேர்மையின் இமயம்! பகுதி 1

தோழர் ஜீவா நேர்மையின் இமயம்!



ஜீவா பிறந்த நாள் விழாவில் #வைகோ
பொது உடைமை இயக்கத் தலைவர் தோழர் ப.ஜீவானந்தம் அவர்களின் 103ஆம் பிறந்த நாள் விழா 21.8.2009 அன்று நாகர்கோவில் பூதப்பாண்டியில் நடை பெற் றது. தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்,அனைத்திந்திய இளைஞர் பெரு மன்றம், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பூதப்பாண்டிக் கிளை ஆகியவற்றின் சார் பில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு எழுத்தாளர் பொன்னீலன் தலைமை வகித்தார். கழகப் பொதுச் செயலாளர் வைகோ சிறப்புரையாற்றினார். அவரது உரை...

‘ஜீவாவின் பிறந்த நாள் விழா பூதப்பாண்டியில் நடைபெற இருக்கிறது; அதில் உரையாற்றுவதற்கு அழைக்கிறார்கள் கலை இலக்கியப் பெருமன்றத்தார்’ என்று என்னுடைய அருமைத்தம்பி பொறியாளர் இலக்குமணன் அவர்கள் தொலைபேசியில் தெரிவித்த மறுநிமிடத்தில், ‘கட்டாயம் நான் வருகிறேன்,



ஜீவாவைப் பற்றி உரையாற்ற ஆவலோடு இருக்கிறேன்.எந்த நாளில் நிகழ்ச்சி? என்று கேட்டேன். ‘ஆகஸ்ட் திங்கள் 22 ஆம் நாள் இசைவு அளிப்பதற்கு வசதிப் படுமா? என்று கலை இலக்கியப் பெருமன்றத்தார் வேண்டுகோள் விடுக்கின் றனர்’ என்று இலக்குமணன் கூறினார்.

‘22 ஆம் தேதி தலைநகர் சென்னையில் நான் ஏற்கனவே இசைவு அளித்த நிகழ்ச்சிகள் எனக்கு இருக்கின்றன. ஆகவே, 22 ஆம் தேதி எனக்கு வர இயலா தே? 21 ஆம் தேதி அவர்கள் விழாவை நடத்திக் கொள்ள வாய்ப்பு இருக்கிறதா? என்று கேட்டேன்.

அடுத்த ஓரிரு நிமிடத்தில் திரும்பவும் தொலைபேசியில் அழைத்தார். ‘பழம் நழுவிப் பாலில் விழுந்தது என்பார்களே, அதைப்போல, சர்க்கரைப் பந்தலில் தேன்மாரி என்பதைப்போல, ஜீவா பிறந்த நாளே ஆகஸ்ட் திங்கள் 21 ஆம் தேதிதான். ஆகவே, அந்தநாளில் நீங்கள் வருவது எங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி என்று அவர்கள் ஏற்றுக்கொண்டு இருக்கிறார்கள்’ என்று குறிப் பிட்டார்.

103 ஆண்டுகளுக்கு முன்னால், இந்தப் பூதப்பாண்டியில் பட்டம் பிள்ளைக்கும்
உமையம்மைக்கும் பிறந்த ஒரு பெருமகனுக்கு விழா எடுக்கின்றோம். தென் னாட் டில், குறிப்பாக நாஞ்சில் நாட்டில், பெயர்கள் அனைத்தும் அழகிய தமிழ்ப் பெயர்கள்தாம்.அதங்கோட்டு ஆசானும், தொல்காப்பியனும் உலவிய மண்
அல்லவா? ‘பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்து குமரிக் கோடும் கொடுங் கடல் கொள்ள’ என்று பரந்து விரிந்து கிடந்த தமிழகம், கடலுக்குள் அமிழ்ந்து போனதே, அந்த லெமூரியக் கண்டத்தின் மிச்சம் சொச்சமான பகுதிதானே இந்தக் குமரி மாவட்டம். ஆகவேதான், இங்கே ஒவ்வொரு பெயரிலும் தமிழ்
மணக்கிறது.

‘பூதப்பாண்டி’ என்ற பெயர் எப்படி வந்தது? என்று, ‘ஊரும் பெயரும்’ எழுதிய
சொல்லின் செல்வர் ரா.பி.சேதுப்பிள்ளை விளக்குகிறபோது, ‘பூதப்பாண்டியன்
என்கின்ற மன்னனின் பெயரே, அந்த ஊருக்கும் பெயராக ஆயிற்று’ என்று
குறிப்பிடுகிறார். ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன். அவனது அருமைத்திரு மகன் பசும்பொன் பாண்டியன்.அவனது பெயரால் அழகிய பாண்டியபுரம் என்ற ஊர் அமைந்தாலும், பூதப்பாண்டியன் என்கின்ற தந்தையின் பெயரால் இந்த ஊரை நிறுவினான் என்று வரலாறு சொல்கிறது.

புராணத்துக் கதைகள் வேறு ஒன்றைச் சொல்கின்றன. அது செவிவழி கர்ண பரம்பரையாக வருகின்ற கதை. ஏனென்றால், இந்தக் கதைகள் சில வேளை களில் பகுத்தறிவுக்கு எட்டாததாக இருந்தாலும்கூட, அவையும் மக்களின் கலை இலக்கியங்களில் இடம்பெற்று விடுகின்றன.அந்தவகையில், ஒல்லை யூர் தங்த பூதப்பாண்டியன் என்கிற மன்னன், பூதப்படைகளை எல்லாம் திரட் டிக் கொண்டு, இந்த மலையாள தேசத்துப் பெருமக்களோடு போர் புரிவதற்குச் சென்றான்.

கேரளத்தை, மலையாளத்தை உருவாக்கியவன் பரசுராமன். மழு ஏந்திய பரசு ராமன். ஜனகனின் சபையில், தசரதன் மைந்தன் கையில் வில்லைத் தூக்கிய மாத்திரத்தில், ‘எடுத்தது கண்டனர், இற்றது கேட்டனர்’, நாணிலே கணையைப் பூட்டி வில்லை எடுத்த மாத்திரத்திலேயே ஒடிந்து விழுந்தது; ‘அண்ணலும்
நோக்கினார் அவளும் நோக்கினாள் இருவரும் மாறி மாறிப் புக்கு இதயம் எய்தி னார்’ என்றெல்லாம் கம்பன் வர்ணித்ததைப் போல, ஜனகன் மகள் சீதையை, தசரதன் மைந்தன் ராமன் திருமணம் செய்துகொண்டு அயோத்தியை நோக்கி வருகிற பொழுது, சத்திரிய குலத்து மன்னர்களை எல்லாம் வெட்டிவீழ்த்திக்
கொண்டு இருக்கிற மழு ஏந்திய பரசுராமன், ‘சொத்தை வில்லை வளைத்த தாகப் பெருமை பேசுகிற ராமா, என் வில்லுக்குப் பதில் சொல்’ என்று எதிர்த்த தாகவும், தோல்வியுற்றுக் கர்வ பங்கம் அடைந்ததாகவும் கூட கம்பனின் காவியத்தில் சொல்லப்படுவது உண்டு.

அந்த மழு ஏந்திய பரசுராமன், தான் உருவாக்கிய நாட்டில், பூதங்களின் துணை யோடு பூதப்பாண்டிய மன்னன் பெருமாக்கள்மீது படை எடுத்தா வருகிறான்?
என்று எதிர்த்துப் போர்புரிந்து, பூதகணங்களை விரட்டி அடித்து, ஒரு எல்லை யுள் கொண்டுவந்து நிறுத்திய தாகவும், அப்படி நிறுத்தப்பட்ட இடம்தான் ‘பூதப் பாண்டி’ என்று பெயர்பெற்றதாகவும், தலபுராணக் கதை சொல்லிக் கொண்டு இருக்கிறது. இங்கே பூதலிங்க சுவாமிக்குக் கோவில் இருக்கிறது. அது பழமை யான கோவில்.

இந்தத் தென்னாட்டில், தாமிரபரணி ஆற்றங்கரை மக்களும்கூட பூதத்தான் என்று பெயர் வைக்கிறார்கள்.இன்றும்கூட திருநெல்வேலியில் ‘பூதத் தான் முக்கு’என்று அழைக்கப்படுகிற இடம் ஒன்று இருக்கிறது.இங்கே, பூதலிங்க சுவாமிக்குக் கோவில் இருக்கிறது.அந்தக் கோவிலுக்கு அருகில் இருக்கிற செண்பக மரம், 800 ஆண்டுகள் வரலாற்றுச் சிறப்பு உடையது என்பதும், இந்த பூதப்பாண்டி ஊருக்கு இருக்கின்ற ஒரு பெருமை.

ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியன், பகை மன்னர்களைச் செருக்களத்தில் சந்திக்கச் செல்கிறபோது சூளுரைக் கிறான். சூளுரைப்பது, சபதம் ஏற்பது என் பது தமிழ் நாட்டில் தொன்றுதொட்டு இருந்து வருகின்ற வழக்கம். தலையாலங் கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் சூளுரைத்தான். சிறுவன் என்று தன்னை எள்ளி நகையாடிய பகை மன்னர்களை 

சிறுசொல் சொல்லிய சினங்கெழு வேந்தரை
அருஞ்சமம் சிதையத் தாக்கி
ஒருங்ககப்படேன் ஆகில்
மாங்குடி மருதன் தலைவனாக
புலவர் பாடாது வரைக என் நிலவரை...........
‘புலவர்கள் என் நாட்டை விட்டு வெளியேறட்டும்’ என்று சபதம் ஏற்றானே, அதைப்போல இந்தப் பூதப் பாண்டியனும் ஒரு சபதம் ஏற்கிறான்.அவன் சொல் கிறான்: தமிழர்களின் சிந்தனை எப்படி இருந்தது என்பதை, தமிழர்களின் மான மரபு, நாகரிகப் பண்பாடோடு வாழ்ந்த ஜீவாவின் பிறந்த நாள் விழாவில் பேசு வது என்னுடைய கடமை. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால், தமிழர்களின் சிந்தனை ஓட்டம் அப்படி இருந்தது.

‘யுத்தகளத்தில் பகைவர்களை வீழ்த்துவேன். அப்படி வீழ்த்தாவிடில், வெற்றி பெற்றுத் திரும்பாவிடில், பகை முகத்தில் வாகைக்கொடியை நான் உயர்த்தா விட்டால்,வெற்றி பெறாவிட்டால் என் பெருந்தேவி, என் உயிரனைய மனைவி என்னைப் பிரியட்டும்’ என்கிறான். 

தமிழர்கள் நட்பைப் பெரிதாகப் போற்றினார்கள்.கோப்பெருஞ்சோழன்- பிசிராந் தையார் நட்பைப்பற்றி,பொன்னீலன் போன்ற தமிழ் அறிஞர்கள் அறிந்து இருப் பார்கள். ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் சொல்கிறார். நான் யுத்த களத்தில் வெற்றிபெறா விட்டால், என் நண்பர்களை நான் இழப்பேன்.

மாவனும் ஆந்தையும்,
அந்துவந் சாத்தனும்
ஆதனழிசியும் இயக்கனும்

ஆகிய என் நண்பர்களின் கண்களில் இருந்து மின்னல் வெட்டுகின்ற அந்தச் சிரிப்பை நான் இழப்பேனாக’என்கிறார்.

அறமன்றத்தில், நீதிமன்றத்தில் அறநெறி தவறாது நீதியை நிலைநாட்டியவர் கள் தமிழர்கள். அதனால்தான் மனுநீதிச்சோழன் கதையைக் காவியம் பேசு கிறது.

பூதப்பாண்டியன் சொல்கிறான்: நீதிமன்றத்தில் கொடியவர்களைக் கொண்டு வந்து அமரவைத்து,முறைகளைப் பாழாக்கி, ஒரு கொடுங்கோல் முறைக்கு
ஆளாகட்டும் நான். நான் தோற்றுப்போனால், என் மனைவியை இழப்பேனாக; நண்பர்களை இழப்பேனாக; என் நாட்டின் நீதிமன்றம் கெட்டுப் போவதாக; அறம் அல்லாதவர்களைக் கொண்டுவந்து பதவியில் அமர்த்துவேனாக; எல் லாவற்றையும்விட,

‘மண்பதை காக்கும் தென்புலம் காவல்’ என்று சொன் னானே அந்த தென்னவன் குலத்தில் நான் இனி பிறக்காமல், வன்புலம் காவல் செய்யும் கொடிய குடியில்
நான் பிறப்பேனாக’ என்று கூறியதாக புறநானூறு சொல்கிறது.

மடிந்தான் ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன். அதற்குப் பிறகு அவனுடைய மனைவி நெருப்பை வளர்த்து அதில் குதிக்கச் செல்கிறாள்.புலவர் பெருமக்கள், சான்றோர் பெருமக்கள், அமைச்சர்கள் அனைவரும் வந்து, ‘அரசி அரசன் இல் லாத நாடு இது. நீங்களும் தீக்குளித்து இறந்துவிட்டால், இந்த நாடு அனாதை ஆகிவிடும்.நீங்கள் தீக்குளிக்காதீர்கள்’ என்கிறார்கள்.

‘என் கணவன் இல்லாமல் நான் வாழ விரும்பவில்லை; இந்த நெருப்பில் குதிப் பேன் இந்த நெருப்பு எனக்குக் குளிர்ச்சிதரும் பொய்கையைப்’ போன்றது என் கிறாள்.

வள்ளிதழ் அவிழ்த்த தாமரை
நள்ளிறும் பொய்கையும் நீரும் ஓரற்றே

நெருப்பும் தண்ணீரும் எனக்கு ஒன்றுதான் என்கிறாள்.அப்படித்தானே, நெருப் பும் தண்ணீரும் ஒன்றுதானே என்று முத்துக்குமார் ஈழத்து மக்களுக்காகத் தீக் குளித் தான். ஈழத்தமிழர்களைக் காப்பதற்காகத் தீக்குளித்தான்.14 பேர் தீக்குளித் தார்கள்.

ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் இறந்ததைத் தாங்கிக் கொள்ளாமல், அவன் மனைவி நெருப்பை வளர்த்துச் சுற்றுகிறாள். ‘இப்பொழுது நெருப்பில் குதிப் பேன் தீயில் பாய்வேன்’ என்றாள்.

‘வேண்டாம் வேண்டாம்’ என்று அனைவரும் தடுக்கின்ற போது சொல்கிறாள்: ‘நல்ல குளிர்ச்சியான தண்ணீர் நிறைந்து இருக்கின்ற குளத்தில் தண்ணீரில்
மூழ்குவதைப் போலத்தான் இந்த நெருப்பில் நான் மூழ்குவது’ என்று அவள் குதித்து மறைந்தாள்.

இந்த வரலாற்றுச் சிறப்பைச் சொல்வதற்குக் காரணம், ‘பூதப்பாண்டி’ என்கின்ற பெயரை உச்சரிக்கிறபோது, இந்த மண்தான், தமிழுக்குத் தொண்டு செய்கின்ற, மனித குலத்துக்குத் தொண்டு செய்கிற ஒரு மாமனிதனை, மனிதநேய சிகரத் தைத் தந்தது, அந்த மாமனிதன் பெயர்தான் ஜீவானந்தம்.

பட்டம் பிள்ளைக்கும், உமையம்மைக்கும் பிறந்த மூன்று பிள்ளைகள் இறந்து போயின. தமிழ்நாட்டில் ஒரு வழக்கம். மூக்கைக் குத்தி மூக்குத்தி போடுகிற வழக்கம்.இது ஒரு சடங்கு. இவர்களுக்கு நான்காவது பிள்ளை. ஆகவே ‘மூக் காண்டி’ என்று பெயர் சூட்டினார்கள்.இவர்களுக்குக் குலதெய்வம், சொரிமுத் தம்மன். ஆக, குலதெய்வம் பெயரையும் சேர்த்து, ‘சொரிமுத்து’ என்றும் பெயர் வைத்தார்கள்.

சொரிமுத்து என்றும், மூக்காண்டி என்று பெயர் சூட்டப்பட்ட அந்த மாமனிதன் தான், சிறு வயதில் தமிழ் மேல் கொண்ட காதலால், ‘உயிர் அன்பன்’ என்றும்,
‘உயிர் இன்பன்’என்றும் பெயர்களைச் சூடிக்கொண்டார்.அவர்தான் பின்னர், ‘ஜீவானந்தம்’ ஆகிறார்.

‘விளையும் பயிர் முளையிலே தெரியும்’ என்பார்கள். சிறு வயதில் அவரது உணர்வைப் பாருங்கள். நாட்டின் விடுதலைக்காக, மக்களின் நல்வாழ்வுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட பிள்ளையாகவே இங்கே உலவினார்.

ஐந்தாவது படிவம் படிக்கிறார். தாய் உமையம்மை இறந்து விட்டார். கொள்ளி வைப்பதற்கு பிள்ளையை அழைத்து வருகிறார்கள். எந்தப் பிள்ளையை? ஐந் தாவது படிவம் படித்துக் கொண்டு இருக்கிற ஜீவானந்தத்தை. கொள்ளி வைப்ப தற்கு தண்ணீர்க்குடம் சுமந்து மூன்று முறை சுற்றிவந்து, சிதையில் அடுக்கப் பட்டு இருக்கின்ற விறகு இருக்கிறது அல்லவா, அதற்குமேல் வைக்கப்பட்டு
இருக்கின்ற அன்னையின் உடலுக்குக் கொள்ளி வைக்க வேண்டும். ஆனால், அந்தப்பிள்ளை கொள்ளி வைக்க மறுக்கிறான்.

ஏன்? ஒரு வழக்கம். கொள்ளி வைக்கின்ற பிள்ளைக்குப் புத்தாடை சூட்டுவது வழக்கம்.‘கதராடை கட்டினால் தான் நான் இந்தப் பணியில் ஈடுபடுவேன்’ என் கிறார். கதர் ஆடை பூதப்பாண்டியில் இல்லை-நாகர்கோவிலில் இல்லை - திரு நெல்வேலிக்கு ஆள் அனுப்பிப் பார்த்தார்கள், கதர் ஆடை வந்து சேரவில்லை. எனவே, கொள்ளி வைக்க மறுத்தான். சின்னஞ்சிறு பருவத்தில்,தாயை உயி ருக்கும் மேலாகப் பூசித்தவர் தான், நேசிப்பவர் தான். ஆயினும் அவர் பிறந்த நாட்டின் விடுதலைக்காகப் போராடிய அந்த உணர்ச்சிதான் அவரைத் தூண்டி யது.

எனவேதான், விடுதலைக்குப் போராடிய தொடக்கக் காலத்து காங்கிரஸ் இயக் கத்தில் அவர் பணியாற்றினார்.தெற்குச் சீமையில் இருந்து ஒரு பிரதிநிதி யாகத் தேர்ந்து எடுக்கப்பட்டார். வத்தலக்குண்டில் ஒரு மாநாடு. தலைவர்கள் வந்து இருக்கிறார்கள். ராஜாஜியும் வந்து இருக்கிறார். சின்னஞ்சிறு வாலிபர் ஜீவா, கனல் தெறிக்க அற்புதமாகப் பேசுகிறார். who is that Jeevanatham? யார் இந்த ஜீவானந்தம்? என்று ராஜாஜி கேட்கிறார்.

அதற்குப்பிறகு, அவர் காங்கிரஸ் இயக்கத்தில் தமிழ் நாட்டின் பிரதிநிதியாக திரிபுரா மாநாட்டுக்குச் செல்கிறார். காமராஜர், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், தோழர் ராமமூர்த்தி, அருமைத் தோழர் ஜீவானந்தம் எல்லோரும்
சேர்ந்து திரிபுரா செல்கிறார்கள். அங்கே தலைவர் தேர்தல்.பட்டாபி சீதாராமை யாவா? நேதாஜியா? என்ற கேள்வி வருகிறபோது,நேதாஜி பக்கத்தில் நின்றவர் கள் வரிசையில் இருந்தவர்தான் ஜீவானந்தம் அவர்கள்.

சேரன்மாதேவியில், வ.வே.சு. ஐயர் நடத்திய குரு குலத்தில், ஆசிரியராக ஜீவா னந்தம் பணி ஆற்றுகிறார்.அங்கிருந்துதான் காரைக்குடி சிராவயலுக்குப் போகிறார்.

தொடரும் ...........

No comments:

Post a Comment