மாணவர் படையே.....
தமிழின மீட்புக்கு கடமையாற்ற வாரீர்!
கலந்துரையாடல் கூட்டத்தில் தி.மு.இராஜேந்திரன் வேண்டுகோள்!
#மதிமுக,மாநில, மாவட்ட மாணவர் அணியின் ஆலோசனைக் கூட்டம் 17.08.2013 அன்று தாயகத்தில் நடைபெற்றது.அக்கூட்டத்தில் மாணவர் அணிச் செயலாளர் தி.மு. இராசேந்தின் ஆற்றிய உரையில் இருந்து...
மாநில துணைச்செயலாளர்களிடத்தில்,மாவட்ட அமைப்பாளர்களிடத்தில் தீர் மானங்கள் தரப்பட்டுள்ளன.என்றைக்கு நமக்கு ஒரு பெயரும், மதிப்பும் வரும் என்றால், எந்தப் பொறுப்பில் இருந்தாலும், கட்சிக்காக கடமையாற்றினால் நமது பெயர் வெளியே வரும்.
மற்ற கட்சிகளுக்கும் நமது கட்சிக்கும் என்ன வேறுபாடு என்றால், மற்ற கட்சி களில் பல அதிகார மய்யங்களைக் கடந்து, பல அதிகார மய்யங்களை சரிகட்டி, பல அதிகார மய்யங்களுக்கு நல்ல பிள்ளையாக நடந்து, அதற்குப் பிறகு தான் அந்தத் தலைமையை தூரத்தில் இருந்து பார்க்கக்கூடிய ஒரு வாய்ப்பு கிடைக் கும். ஆனால், அந்த சம்பிரதாயங்கள் எதுவும் இல்லாமல், எங்கோ ஒரு குக்கி ராமத்தின் மூலையில் வேலை பார்த்துக்கொண்டிருந்தாலும், கட்சியினுடைய தலைவரின் இதயத்தில் இடம் பெறலாம் என்று சொல்லக்கூடிய நிலை தமிழ் நாட்டில் மறுமலர்ச்சி தி.மு.க.வில் மட்டுமே இருக்கிறது என்பதுதான் அடிப் படை யிலே இருக்கின்ற பெருமை.
எந்த ஊரில், எந்த மூலையில், எந்த இடத்தில் நீங்கள் கட்சிக்காக, இயக்கத் திற் காக பணியாற்றினாலும் தலைவர் வைகோ அவர்களின் கவனத்தில் இருந்து ஒருபோதும் நீங்கள் தப்ப முடியாது. அவர்கள் உரிய நேரத்தில் உரிய முறை யில் உங்களுடைய உழைப்பை, உங்களுடைய பணியை அங்கீகரிப்பார் என் பதை நாம் பார்த்து வந்திருக்கின்றோம்.
ஆகவே தலைவர் வைகோ அவர்களிடம் தங்களின் உழைப்பின் மூலம் நல்ல தோர் பெயரை பெறக்கூடிய வாய்ப்பு இங்கே நமக்கு வாய்க்கப் பெற்றிருக் கிறதுஇந்த 23 தீர்மானங்களில் 7 தீர்மானங்கள் தான் மாணவர் அணியினுடைய நேரடி செயல் திட்டங்களுக்காக நாம் வைத்து இருக்கின்றோம். 23 தீர்மானங் களை ஏன் முன் வைத்தோம் என்றால், மறுமலர்ச்சி தி.மு.க. மாணவர் அணி யினர் சமூகத்தைப் பற்றி கவலைப் படுகிறார்கள். தாய் நாட்டைப் பற்றி கவலைப்படுகிறார்கள். தமிழினத்தின் மேன்மை குறித்து சிந்திக்கிறார்கள். தமிழ் நாட்டுக்கு திட்டங்கள் வர வேண்டும் என்பது குறித்தான அக்கறை மற்ற எவர்களையும்விட அவர்களுக்கு கூடுதலாக இருக்கிறது என்பதனை உலகத் திற்கு தெரிவிப்பதற்காகத்தான் நாம் 23 தீர்மானங்களை வகுத்து இருக்கிறோம்.
அந்த 23 தீர்மானங்களில் 7 தீர்மானங்கள் மறுமலர்ச்சி தி.மு.க. நேரடியாக களப் பணியாற்ற வேண்டிய தீர்மானங்கள் என்பதை நீங்கள் முதலில் கவனமாகப்
படித்துவிட்டு, அதன்படி செயல்பட வேண்டும் என்பதுதான் நமது வேண்டு
கோளாகும்.
முதல் தீர்மானத்தை மணவைத் தமிழ் மாணிக்கம் அவர்கள் உணர்ச்சிகரமான
குரலில் வாசித்ததைப் போல பேச்சுப் போட்டி. எந்த இடத்திலுமே தன்னுடைய பெயரை முன்னிலைப் படுத்தாத, அரசியல் அதிசயமாக விளங்கக்கூடிய தலை வர், மாணவர் அணி பேச்சுப் போட்டிக்கு “நாடாளுமன்றத்தில் வைகோ” என்ற
தலைப்பை ஒத்துக்கொண்டதை மிகவும் பெருமையாகக் கருதுகிறோம்.
வடவர் ஆதிக்கத்தினுடைய தலை நகராக இன்றைக்கும் விளங்கக்கூடிய, நம் முடைய பகைவரின் தலைநகராக விளங்கக்கூடிய அந்த டெல்லியிலே ஒற்றை மனிதராக 25 ஆண்டு காலம் தமிழனுக்குப் போராடிய நம் தலைவர்
வைகோ அவர்களைக் குறித்து தமிழ்நாட்டில் இருக்கின்ற 50 இலட்சம் கல்லூரி மாணவர்களிடத்தில், நாடாளுமன்றத்தில் எப்படிப் பணியாற்றினார் என்ற செய்தியை கொண்டு சேர்ப்பதற்கான இந்தப் பேச்சுப் போட்டியை வடிவமைத்த போது மறுக்காமல் இதை ஒப்புக்கொண்டது, எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி.
தலைவர் வைகோ அவர்களே, சுதந்திர இந்தியாவில் உங்களைப் போல் பணி யாற்றிய ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தமிழ்நாட்டில் இல்லை என்பதால் தான் உங்களை நாங்கள் முன்னிலைப்படுத்துகிறோம். வெற்று ஆரவாரத்திற் காக, புகழ்ச்சிக்காக,உங்களைப் பற்றி முகஸ்துதி செய்ய வேண்டும் என்பதற் கான தலைப்பு அல்ல.வருங்கால தமிழகத்தை முன்னெடுத்துச் செல்லக்கூடிய வர்கள் 18 வயதில் இருந்து 25 வயது இருக்கக்கூடிய ஒன்றரைக்கோடி இளம்
தமிழர்கள்தான். அதில் 50 இலட்சம் பேர் மாணவர்களாக இருக்கின்றார்கள்.
அந்த மாணவர்கள் படிக்கின்ற கல்லூரி களின் சுற்றுச் சுவருக்குள் வைகோ
நாடாளுமன்றத்தில் போராடியது தெரிய வேண்டும். அந்த உணர்வு இளம் இரத் தத்துக்குள் பதிய வேண்டும் என்பதற்காகத்தான். மிகுந்த பொருட் செலவில், மாவட்ட மாணவர் அணி,மண்டலப் பொறுப்பாளர்களாக பொறுப் பேற்கப் போகின்ற மாநில துணைச் செயலாளர்கள் அத்துனை பேரின் ஒத்துழைப் புப் போடு, அந்தந்த மாவட்டக் கழகச் செயலாளர்களின் சீரிய துணையோடு இந்த நிகழ்ச்சியை நாங்கள் வடிவமைத்திருக்கின்றோம்.
பேச்சுப்போட்டிக்கு 7 இலட்ச ரூபாய் பரிசு என்று அறிவித்து நடத்துகின்ற ஒரே மாணவர் இயக்கம் தமிழ்நாட்டு அரசியலில் நம்முடைய மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாணவர் அணி மட்டும்தான். மாநிலப் போட்டிகளில் பங் கேற்கின்ற ஒரு மாணவன் பத்து நிமிடம்தான் பேசப் போகிறான்.அந்தப்
போட்டியில், பார்வையாளராக இருப்பதற்கு தலைவர் ஒப்புக்கொண்டு இருக் கிறார். பத்து நிமிடம் தலைவரின் நாடாளுமன்றப் பணியைப் பற்றி பேசுகிறவ ருக்கு ஒரு இலட்சம் பரிசு என்பது தமிழ்நாட்டு அரசியலில் எவரும் அறிவிக் காதது.
எதற்காக அதைச் செய்தோம் என்றால்,நம்மிடம் பணம் இல்லை என்று அனை வருக்கும் தெரியும். நாடு குறித்து கவலைப்படுகின்ற பல நண்பர்கள் உதவி யுடன் அந்தப் பணியை நாம் செய்து முடிப்போம். தமிழருக்காக நாடாளுமன்றத் தில் வைகோ எப்படி மோதினார், எப்படி எதிரிகளை துவம்சம் செய்தார், எதிரி களின் வாதங்களை எப்படி தவிடுபொடியாக்கினார் என்பது மாணவர்களுக்குத் தெரியவேண்டும். அதை வைத்துதான் அவர்கள் உணர்வு கொள்ள முடியும். உத்வேகம் அடைய முடியும். எதிர்காலத்தில் தமிழின மீட்புக்கு கடமையாற்ற முடியும்.அதனால்தான் இந்த அதிகபட்ச பரிசுத் தொகையை அறிவித்து நடத்து கின்றோம்.
நமது தலைவர் அவர்கள் திராவிட இயக்கத்தில் மாநில மாணவர் அணியில்
இணைச் செயலாளராக இருந்து, இந்த மாபெரும் இயக்கத்தின் தலைவராக
உயர்ந்திருக்கின்ற சிறப்பு நமக்கு இருக்கிறது.
தமிழ்நாட்டு அரசியலில் முப்பதாண்டு காலமாக எவரும் வெல்ல முடியாத
வகையில் உணர்ச்சி பொங்க உரையாற்றி அனைவரையும் தன் வசம் ஈர்த்து வருகின்ற, எவராலும் வெற்றி கொள்ள முடியாத பேச்சாளராக நம் தலைவர் திகழ்கிறார் என்பது கூடுதல் சிறப்பாகும். உணர்ச்சியின் உச்சத்தில் நின்று பேசி னாலும் தமது பேச்சில் ஒரு வார்த்தைகூட நாடாளுமன்ற மரபுக்கு முரணாக பேசாத ஒரே தலைவர்.
ஆகவே, இந்தப் பேச்சுப் போட்டியில் மாவட்ட மாணவர் அணியினரின் பங்கு
மிக மிக முக்கியமானது. முப்பத்தாறு மாவட்ட அமைப்பாளர்களில் 33 பேர்
வந்திருக்கின்றீர்கள். இதில் நீங்கள் தான் மிகவும் கவனம் செலுத்த வேண்டிய
முதல் நிலையில் இருக்கக்கூடிய முக்கியப் பொறுப்பாளர்கள்.மாவட்டக்கழகச் செயலாளர்கள் அனைவருக்கும் தலைவர் வைகோஅவர்களின் கையெழுத்து டன் இந்தத் தீர்மான நகல் இரண்டொரு நாளில் சென்று சேர்ந்துவிடும்.
போட்டி ஏற்பாடுகள் செய்வதற்கு உங்களுக்கு காலம் அதிகம் இருக்கிறது.உங் கள் மாவட்டத்தில் இருக்கின்ற அத்துனை கல்லூரி முதல்வர்களையும் நேரில் சந்தித்து, உங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள கடித மாதிரியில் உள்ளது போல் நீங்களும் -மாவட்டச் செயலாளரும் கையொப்பமிட்டு அவர்களிடம் கொடுங் கள். சில முதல்வர்கள் இதில் அரசியல் ரீதியிலான பார்வை இருக்குமோ என நினைத்து ஒதுங்கினால், அந்தக் கல்லூரி வாசலில் யாருக்கும் இடையூறு இல்லாத இடத்தில் உங்கள் அலைபேசி எண்ணுடன் சிறிய பதாகை, அல்லது
சுவரொட்டி தயார் செய்து அமையுங்கள்.அப்படிச் செய்தீர்களானால், அந்தக்
கல்லூரி மாணவப் பேச்சாளர்கள் உங்களைத் தொடர்புகொள்ள வாய்ப்பு
இருக்கும்.
ஒரு கல்லூரியில் இருந்து பத்து பேர் பங்கேற்க வருகிறோம் என்று வந்தால்
அந்த பத்துப்பேரையும் ஏற்க முடியாது.அவர்களில் முதலில் தொலைபேசியில்
அழைத்த இருவரைத் தேர்வு செய்யுங்கள். தேனி மாவட்டத்தில்கூட முப்பத் தைந்து கல்லூரிகள் இருக்கின்றன. அங்கிருந்து 70 பேர் வரவேண்டும்.
கழகத்தில் நிர்வாக அடிப்படையில் புதுச்சேரியையும் சேர்த்து மொத்தம் 41
மாவட்டங்கள் இருக்கின்றன. அந்த அடிப்படையில் மொத்தம் 2500 மாணவர் கள் பேச்சுப் போட்டியில் பங்கேற்பார்கள். இந்த 2500 மாணவப் பேச்சாளர்களை யும் ஜனவரி 5 ஆம் தேதி,மாநிலப் போட்டி பரிசளிப்பின் போது தலைவர் சந்தித்து உரையாற்றுகிறார்.
தமிழ்நாட்டு அரசியலில் அனைத்து மாணவப் பேச்சாளர்களையும் ஒரு தலை வர் நேரடியாகச் சந்தித்து கருத்து மழை பொழிகிற நிகழ்ச்சி ஜனவரி 5 இல் திருச்சி மாநகரில் நடக்கிறது. இந்தக் கூட்டத்தில் பேச்சுப்போட்டியில் பங் கேற்ற அனைத்து மாணவர்களையும் அழைக்க இருக்கிறோம். அதனால்,
மாவட்டத்திலுள்ள கல்லூரிகளுக்கு நீங்கள் நேரடியாகச் செல்லுங்கள்.
பேச்சுப் போட்டி நடக்கும் இடத்தை தேர்வு செய்யும்போது, முதலில் மாவட்டச் செயலாளர்களோடு கலந்து பேசி ஏற்பாடு செய்யுங்கள். மாவட்டம் தோறும் கட்சி சாராத சிறந்த மூன்று நடுவர்களை தேர்ந்தெடுத்து போட்டியை நடத்த வேண்டும்.சிறு குறையும் இல்லாமல் வந்திருக்கின்ற மாணவர்கள் அனை வரை யும் உபசரிக்க வேண்டும்.
பேச்சுப் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசு
ரூ.5,000, இரண்டாவது பரிசு ரூ.3,000,மூன்றாவது பரிசு ரூ.1,000 என மாவட்டக் கழகத்தின் ஒத்துழைப்போடு மாவட்ட மாணவர் அணி வழங்க வேண்டும்.
நீங்களே ஒரு கடிதம் தயாரித்து, மண்டலப்போட்டி நடத்தும் மாநிலத் துணைச் செயலாளர்களுக்கு போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவப் பேச்சா ளர்களுடைய புகைப்படத்துடன் கூடிய முகவரி பட்டியலை அனுப்பவேண்டும். ஒவ்வொரு மாணவரிடமும் பின் ஊட்டு அறிக்கையினைப் (feedback report) பெற்று மாநிலச் செயலாளருக்கு அனுப்ப வேண்டும்.
இதன் மூலம் எல்லா கல்லூரிகளிலும் கட்சியைப் பற்றியும், தலைவரைப் பற்றியும் எடுத்துச் சொல்லக்கூடிய வாய்ப்பு கிடைக்கிறது. உங்களுக்கும் அந் தக் கல்லூரி முதல்வர்களிடமும், மாணவர்களிடமும் நட்பு கிடைக்கிறது. கல் லூரி முதல்வர் தகவல் பலகையில் வெளியிடுகிறபோது, இப்படியெல்லாம்
பேச்சுப்போட்டி நடக்கிறதா? என்று மாணவர்கள் தெரிந்துகொள்வார்கள்.
நமக்கும் மதிப்பு மரியாதை கூடுகிறது.ஆக, கட்சிக்கு மட்டுமல்ல, நமது பொது வாழ்வுக்கும் அந்தத் தொடர்புகள் பயனுள்ளதாக இருக்கும். எனவே, மாவட்ட அமைப்பாளர்கள் மிகவும் கவனமுடன் இந்தக் கடமையைச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மாவட்ட அமைப்பாளர் களாகிய உங்களுக்குப் பணி செய்ய ஏதாவது இடையூறு இருக்கிறது என்றால், உங்கள் மண்டலச்செய லாளரிடம் தகவல் கூறி உதவிக்கு அழைத்துக்கொள்ளலாம். அதிலும் சிரமம் இருந்தால் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள் நான் உங்கள் மாவட்டத்துக்கு வந்து போட்டியை வெற்றிகரமாக நடத்திட உதவி செய்கிறேன்.
மாவட்டப் பேச்சுப்போட்டிக்கு 7 நிமிடம் என்றுதான் நிர்ணயித்துள்னோம்.அதிக மான மாணவர்கள் வந்து விட்டார்கள் என்ன செய்வது என்று யோசிக்காதீர் கள். இரண்டு நிமிடத்தைக் குறைத்து ஐந்து நிமிடங்கள் என்று போட்டியை நடத்துங்கள்.
ஒவ்வொரு மாவட்ட அமைப்பாளரும் திறம்பட செயலாற்றினால், ஒவ்வொரு
மாவட்டத்திலும் 70 மாணவர்கள் பேச்சுப் போட்டியில் பங்கேற்பார்கள். 70 பேரும் தங்கள் கல்லூரியிலும், குடும்பத்திலும் பேச்சுப் போட்டியைப் பற்றி எடுத்துக்கூறும் போது கழகத்தின் மதிப்பு மேலும் உயரும். தலைவரைப் பற்றி அவர்கள் தெரிந்துகொள்ள ஏதுவாக இருக்கும்.
ஒன்றிய-நகர, பகுதி, பேரூர் கழக அணி அமைப்பாளர்கள் நியமிப்பதற்கான
வேலைகளை நாம் செய்ய வேண்டும். அப்படி நியமிக்கும் நான்கு பேர்களில்
இரண்டு பேராவது இளம் தோழர் களாகவும், இரண்டு பேர் படிக்கின்ற மாணவர் களாகவும் இருக்கின்ற வகையில் தேர்ந்தெடுக்க வேண்டும்.
அப்படி இளம் தோழர்களாக இருக்கின்றவர்கள் உங்களுடைய பணிகளுக்கு உதவிகரமாக இருப்பார்கள். ஒரு நிகழ்ச்சி என்றால்,மாவட்டத்திற்கு 150, 200 பேர்கள் வருவதற்கு உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். இந்தப் பணி யினை செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு முன்பே செய்து முடித்திட வேண்டும். நம் முடைய செயல்பாடு தான் கட்சியினுடைய பெருமையை, சிறப்பை, வலி மை யை மற்றவர்களுக்கு பறை சாற்றுகின்ற சாதனம்.
இதுபோன்று அமைப்பை வலிமைப் படுத்தி, நம் செயல்பாட்டை விரிவு படுத்தி இரண்டு இலட்சம் உறுப்பினர் களை மாணவர் அணியில் சேர்க்க வேண்டும். இளைஞர் அணி 1 இலட்சம் என்று சொன்னார்கள், நாம் 2 இலட்சம் என்று பெயருக்கு அறிவிக்கவில்லை.இளைஞர் அணியும், மாணவர் அணியும் ஒரே மாதிரியான அமைப்புதான்.
இந்த இரண்டு இலட்சம் மாணவர்களை எப்படித் சேர்க்கப்போகிறோம் என் றால்,50 இலட்சம் மாணவர்கள் கல்லூரியில் படிக்கிறார்கள். அதில் இரண்டு இலட்சம் மாணவர்களையாவது நாம் சந்தித்து உறுப்பினராக சேர்க்க வேண் டும். ஜூனியர் விகடனில், ஈழத்தமிழர் பிச்சினையில் உறுதியுடன் இருக்கும்
அரசியல் கட்சி எது என்ற கேள்விக்கு 70 சதவீதம் மாணவர்கள் ஓட்டுப் போட் டார்கள். நாம் ஏன் ஐம்பது சதவீதம் மாணவர்களைச் சேர்ப்போம் என்று சொல் லவில்லை என்றால், மாணவர் களிடம் அரசியல் ஆர்வம் குன்றி இருக்கிறது. மாணவர்கள் நேரடி அரசியலை விரும்பவில்லை. தமிழ் உணர்வில் அவர்கள் கவனமாக இருக்கிறார்கள். ஆனால், களத்தில் வந்து போராடுகிற அரசியல் துறைக்கு வருவதற்கு அவர்கள் தயாராக இல்லை.
ஆனாலும் கூட தமிழ் இனத்தைக் காக்கப் போராடுகிற கட்சிக்கு நாம் உதவ
வேண்டும் என்ற உந்துதல் காரணமாகத் தான் 70 சதவீதம் மாணவர்கள் ஓட்டுப்
போட்டுள்ளார்கள். இப்படிப்பட்ட மாணவர்களை, கட்சியில் சேர்க்க வேண்டும். ஒரு கல்லூரிக்கு 20 பேர் வீதம், வெறும் 4 சதவீதம் பேரைச் சேர்த்துவிட்டோம் என்றால், மிகப்பெரிய செய்தியாக வரும்.அதனால்தான் நமது இலக்கு இரண்டு இலட்சம் என்று நிர்ணயித்துள்ளோம்.
தந்தை பெரியார் சொன்னதைப் போல்,பொதுக்காரியங்கள் செய்வதற்கு கூச்சப் படக்கூடாது. மான, அவமானங் களைப் பற்றி கவலைப்படக்கூடாது. இந்த நாட்டுக்காகப் போராடுகிற தலைவருக்காக கையெழுத்திடுங்கள்; செத்துக் கொண்டிருக்கிற இனத்தைக் காப்பதற்காக கையெழுத்திடுங்கள்; ஒழுக்கமான தலைவருக்காக கையெழுத் திடுங்கள் என்று கேட்போம். இதை தைரியமாக கேட்கக்கூடிய உரிமையும்,பொறுப்பும் நமக்கு இருக்கிறது. ஆகவே, கூச்சப் படா மல், வெட்கப்படாமல், மரியாதை குறைவான வேலை என்று நினைக்கா மல் இதைவிட பொதுக் காரியத்துக்கு சிறந்த செயல் எதுவும் இல்லை என்று மனதில் திடமாக நினைத்துக்கொண்டு மாணவர் சேர்ப்புப் பணியில் ஈடுபடு வோம்.
மண்டலப் பொறுப்பாளர்களாக, மாநிலத் துணைச் செயலாளர்கள் 12 பேரையும்
பொதுச்செயலாளர் அவர்கள் ஒப்புதலோடு அறிவித்துள்ளோம்.மாநிலத் துணைச் செயலாளர்கள், மாவட்ட அமைப்பாளர்களுக்கு செயல் திட்டங்களை நிறைவேற்றுவதில் சிரமமாக இருந்தால் அதற்கு பக்க பலமாக இருப்பார்கள். மண்டலப் பொறுப்பாளர்களை, மாவட்ட அமைப்பாளர்கள் சரியாகப் பயன் படுத்தி கழகப் பணி செய்து வெற்றிபெற வேண்டும்.
முதன் முதலாக கரூர் மாநாட்டில் தான் கழகப் பொதுச்செயலாளர் அவர்கள்,
இளைஞர் அணி, மாணவர் அணியினர் சீருடையில் தனியாக அமர்வதற்கு
அனுமதி கொடுத்தார்கள். தொண்டர் அணிக்கு அந்த வாய்ப்பு இருந்தது.மகளிர் அணிக்கு அந்த வாய்ப்பு இருந்தது.
அடுத்ததாக மாணவர் அணியும், இளைஞர் அணியும் விருதுநகர் மாநாட்டில் பாதி இடத்தைப் பிடித்து இருந்தார்கள் என்று சொல்லத்தக்க வகையில் திரண் டெழுந்து அந்த மாநாட்டில் பங்கேற்க வேண்டும்.திராவிட இயக்கத்தில் அடுத்த நகர்வுக்கு நம்மை ஆயத்தப்படுத்துகின்ற மாநாடக விருதுநகர் மாநாட்டை அறி வித்து இருக்கிறார்கள்.
தென்தமிழ்நாட்டில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் அடர்த்தியாக ஓங்கி வளர்ந்திருக்கிற பகுதியில் இந்த மாநாடு நடப்பது நமக்கு கூடுதல் சிறப் பாக இருக்கிறது.அந்த மாநாட்டிற்கு வரும் மாணவர் அணியைச்சேர்ந்த அனை வரும் தத்தமது செலவில் வாகனங்களை ஏற்பாடு செய்தோ,மாவட்ட, ஒன்றி யம் ஏற்பாடு செய்த வாகனங்களிலோ சீருடையில் வந்தீர்களானால் இன்னும் சிறப்பு.
அப்போதுதான், ஊடகங்களின் பார்வை நம் இயக்கத்தின் மீது திரும்பும்.அடுத்து
ஜனவரி 2014 இல் தொடங்கி 11 மண்டலங்களிலும் பயிற்சிப் பாசறை களை முற்றிலும் மாணவர்களுக்காக நடத்துகிறோம். மாணவர்கள் தலைமை தாங்கு கின்ற இயல்பை வளர்த்துக் கொள்வதற்கும், இன உணர்வை ஊட்டுவ தற்கும் மாவட்டம் தோறும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் தலைவர் வைகோ அவர்கள் பங்கேற்கும் பாசறை 2014 ஜனவரியில்தொடங்குகிறது.
நாம் அனைவரும் சங்கொலி தவறாமல் படிக்க வேண்டும். நான் கல்லூரியில்
படிக்கின்றபோது, கோட்டு சூட்போட்டு கம்பீரமாக இருக்கின்ற படத்தோடு
இரண்டாவது பக்கத்தில், டெல்லியில் வைகோ மோதல் - காங்கிரஸ் திணறல்
என்று தினகரனில் செய்தி வரும். அதைப் படித்தவுடன் மேனி நமக்குச் சிலிர்க் கும்.அப்படித்தான் நம்மில் பலர் கிளர்ந்து எழுந்தோம். உங்கள் உரைகளைக்
கேட்டுத்தான் நான் கட்சிக்கு வந்தேன் என்று தலைவருக்கு இன்றைக்கு வரை
கடிதம் எழுதுகின்ற தோழர்கள் உண்டு.நான் ஆறாம் வகுப்பு படிக்கின்ற போது
எங்கள் ஊருக்கு வந்த உங்கள் உரையைக் கேட்டு உங்கள் மீது நான் அளவற்ற காதல் கொண்டேன் என்று 30 வயது வாலிபன் தலைவருக்கு கடிதம் எழுது கிறான்.
அந்தத் தலைவருடைய எண்ணங்களை வெளிப்படுத்துகிற ஒரே ஏடுசங்கொலி தான். தலைவர் எங்கே இருக்கிறார், ரமலான் நோன்பில் என்ன பேசினார், நாமக்கல் மாவட்டத்தில் நிதி எவ்வளவு தந்தார்கள், புதுச்சேரியில் யார் வீட்டுத் திருமணம் என்பன போன்ற செய்திகளை சங்கொலியைப் படித்தால் தெரிந்து கொள்ள முடியும்.எனவே,சந்தாதாரர் ஆகாத மாநிலத் துணைச் செயலாளர்கள், மாவட்ட அமைப்பாளர்கள், மாவட்ட துணை அமைப் பாளர்கள் இன்றே சந்தா செலுத்தி சந்தாதாரராக ஆகி விடுங்கள்.அதற்கடுத்து, ஒன்றி-நகர மாணவர்
அணி அமைப்பாளர்கள், துணை அமைப் பாளர்களையும் சங்கொலி சந்தாதா ரராக சேர்ந்துவிடுங்கள். தலைவரை சந்திக் காமலேயே தலைவரோடு பேசு கின்ற வாய்ப்பு சங்கொலி படிப்பதன் மூலமாகவே கிடைக்கும்.
மாநில மாணவர் அணிச் செயலாளர் தி.மு.இராசேந்திரன் இவ்வாறு உரை யாற்றினார்.
No comments:
Post a Comment