Sunday, August 11, 2013

இஸ்லாம் மார்க்கத்தில் மது ஒழிப்பு!

“திராட்சை மதுவின் ஒவ்வொரு துளியிலும் பிசாசு குடி இருக்கின்றது”
-குர் ஆன்

நபிகள் நாயகம் அவர்கள் மது விசயத்தில்,

மதுவைப் பிழிபவன்; மதுவைத் தயாரிப்பவன்; மதுவைக் குடிப்பவன்;மதுவைக் குடிக்கக் கொடுப்பவன்; மதுவை எடுத்துச் செல்பவன்; மது யாருக்கு எடுத்துச் செல்லப்படுகிறதோ அவன்;மதுவை விற்பவன்;மதுவை வாங்குபவன்;மதுவை அன்பளிப்பு செய்பவன்; மதுவின் மூலம் வருவாயை சாப்பிடுபவன் ஆகிய பத்து நபர்களையும் சபித்தார். - நூல் : திர்மிதீ

மதுவை விட்டுவிடுங்கள். நிச்சயமாக அனைத்துத்தீங்குகளுக்கும் திறவுகோல் ஆகும் என்று நபிகள் நாயகம் கூறினார். - நூல்: ஹாகிம்.

இஸ்லாம் மார்க்கத்தில் மது

இஸ்லாம் மார்க்கத்தில் மதுவைப் பற்றி பல்வேறு செய்திகள் குறிப்பிடப்பட்டு உள்ளது. போதையூட்டும் பொருளுக்கு கமர் என்று பெயர். இது கமாரா என்ற
வேர்ச்சொல்லில் இருந்து உருவானது.

மனதை, அறிவை திரையிட்டு மறைக்கும் செயல் என்பதே இதன் பொருள். திருக்குரானின் மூன்று வசனங்கள் மதுபானம் அருந்துதல் பற்றிக் குறிப்பிடு
கின்றன.

அத்தியாயம்1, அல்பகறா 2, வசனம் 219

மது,சூதாட்டம் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள்.அவை இரண்டிலும் பெருங்கேடு இருக்கிறது. அவற்றின் பயன்கள் சிறிது. பாவம் அதிகம்.

அத்தியாயம்2, அந்நிஸா 4, வசனம் 43

நீங்கள் போதையோடு இருக்கும் நிலையில் தொழுகையை நெருங்காதீர்கள். நீங் கள் என்ன கூறுகின்றீர்கள் என்பதை அறிகின்றபோதுதான் தொழ வேண்டும்.

அத்தியாயம் 3, அல்மாயிதா 5, வசனம் 90,91

மது, சூதாட்டம், பலி பீடங்கள்,குறிபார்க்கும் அம்புகள் ஆகியவை அருவருக்கத் தக்க சைத்தானின் செயல்கள் ஆகும். அவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.

திருக்குர் ஆனுக்கு அடுத்த நிலையில், நபிமுகமதுவின் சொல், செயல், அனு மதியை,வாய்மொழி வரலாறுகளின் வழியாக பதிவு செய்து ஹதீஸ்கள் என்ற பெயரில் பேணப்பட்டு வருகிறது. இவ்வாறு பேணப்படும் ஹதீஸ்கள் புகாரி, முஸ்லிம், அபுதாவூது திருநிதி, இப்னுமாஜா, நசாஈ போன்ற அறிஞர்களின் பெயராலேயே அழைக்கப்படுகிறது. இமாம் அல்புகாரியின் காலம் கி.மு. 810 முதல் கி.மு. 870 ஆகும்.புகாரி ஹதீஸில் 7275 வாய்மொழி வரலாறுகள் இஸ் நாத் முறையில் தொகுக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளன.

இஸ்லாத்தில் ஒரு பிரிவான ஷியா முஸ்லிம்கள் இமாம் அலியை மையப் படுத்தி அவர் வழியைப் பின்பற்றுகின்றனர். இதற்கான காலகட்டம் முகமது நபிகள் மறைவுக்குப்பின் 300 ஆண்டு களுக்கு பிறகானதாகும்.

மதுவுக்கு எதிராக புகாரி ஹதிஸில் அதிகப்படியான வார்த்தைகள் பதிவாகி உள்ளது. பொதுவாக “அறிவைத் தடுமாறச் செய்கிற எல்லா பானங்களுமே மது” என்று கருதப்படுகிறது.

மது ஊற வைப்பதற்கென்று சுரைக்காய் குடுக்கை,தார்பூசிய பாத்திரம், மண் சாடி, மரசாடி போன்ற பொருட்கள் பயன்படுத்தப்பட்டன. மதுவின் வாடை வீசும் என்பதற்காக இப்பாத்திரங்களைக் கூட பயன் படுத்தத் தடை விதிக்கப் பட்டு இருந்தது. ஹதீஸ்களைப் பொறுத்தவரை போதை தரும் மதுபானங்கள்
விலக்கப்பட்டு உள்ளது.

கலீபாக்களின் காலத்தில் மது அருந்துவது சட்டப் படியான தண்டனைக்கு உரியதாக மாற்றப்பட்டு இருந்தது.

மது தடை செய்யப்பட்டது என்று தெரிந்தவுடன் “அபுதல்ஹா” வீட்டில் அங்கி ருந்த மக்களுக்கு மதுவை ஊற்றிக் கொடுத்துக் கொண்டிருந்த என்னிடம் அதைக் கவிழ்த்துக் கொட்டிவிடு என்று சொன்னார்கள். நானும் அவ்வாறே செய்தேன்.மக்களும் மதுவைக்கொட்ட அது மதினாவின் தெருக்களில் ஓடியது.

மது தடை செய்யப்பட்டுள்ள நாடுகள்

அரபு நாடுகளில் மதுபானத்திற்கு எதிராக உள்ளனர்.சவுதி அரேபியாவில் மது பான உற்பத்தி செய்தல்,இறக்குமதி செய்தல், குடித்தல் ஆகிய மூன்றும் கடு மையான தண்டனைக்கு உட்பட்டது. இந்தத் தடையை மீறும் பட்சத்தில் சிறை தண்டனை, சவுக்கடி வழங்கப்படுகிறது.

கத்தாரில் பொது இடங்களில் மது பானங்கள் அருந்துவது தன்டனைக்கு உரிய தாக உள்ளது. அரபு ஐக்கிய குடியரசிலும் மது தடை செய்யப்பட்டு உள்ளது. 1979 இல் நடைபெற்ற ஈரானிய புரட்சிக்குப் பிறகு மதுபான உற்பத்தி முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

தலிபான்கள் ஆட்சிக்குட்பட்ட பகுதியில்மதுபானம் அருந்துவது தடை செய்யப்
பட்டுள்ளது. லிபியா, சூடான் நாடுகளில் மதுபானம் அருந்தினால் கடும் தண்டனை வழங்கப்படுகிறது.

நபிகள் நாயகம் அவர்கள் நான்கு விசயங்களை தடை செய்தார். அவை,

மது வைத்திருந்த மண்சாடிகள்; சுரைக் குடுக்கைகள்;பேரீச்சை மரத்தின் அடி மரத்தை குடைந்து தயாரித்த மரபீப்பாய்கள்; தார் பூசப்பட்ட பாத்திரங்கள் இவற் றைப் பயன்படுத்தக் கூடாது என்று அபூ ஜம்ரா அறிவித்தார்.

கல்வி மக்களிடமிருந்து மறைந்து விடுவதும்,அறியாமை நிலைத்து விடுவ தும் மது அருந்தப்படுவதும்,வெளிப்படையாய் விபச்சாரம் நடப்பதும், மறுமை
நாளின் அடையாளங்களில் செலவாகும் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அனஸ் (ரலி) அறிவித்தார்.

459 ஆயிஷா (ரலி) அறிவித்தார்.

பகரா அத்தியாத்தில் வட்டி(விலக்கப்பட்டது என்பது) பற்றிய வசனங்கள் இறங் கியபோது நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலுக்குச் சென்று மக்களுக்கு அவ்வச னங்களை ஓதிக்காட்டினார்கள். மதுபானங்கள் விற்பதும் விலக்கப் பட்டது என அறிவித்தார்கள்.

நான்கு காரியங்களை விட்டு உங்களை தடுக்கிறேன்.அவையாவன,மதுபானங் கள் வைத்திருந்த சுரைக் குடுக்கை, வாய் குறுகலான சுட்ட மண் குடுவை, தார்
பூசப்பட்ட பாத்திரம், பேரீச்சமரத்தின் அடிப்பகுதியைக் குடைந்து செய்யப்பட்ட பாத்திரம் ஆகியவற்றை பயன்படுத்துவதை விட்டும் உங்களைத் தடுக்கிறேன்
என்று கூறினார்கள்.

(குறிப்பு: போதைப் பொருள்களுக்காகப் பயன்படுத்தப் பட்ட இப்பாத்திரங் களைப் பயன்படுத்தலாகாது என்ற தடை, பின்னர் நபி (ஸல்) அவர்களால் விலக்கிக் கொள்ளப்பட்டது.)

நன்றிகள் 

கட்டுரையாளர் :- உடுமலை ரவி

வெளியீடு :- சங்கொலி

No comments:

Post a Comment