இந்திய அரசியலில் மாற்றம் வேண்டும் , ஈரோட்டில் #வைகோ ஆவேசம் !
#மதிமுக பொதுச்செயலளர் வைகோ பங்கு எடுத்த மாற்று அரசியலுக்கான இளையதலைமுறையின் கருத்துக்களம் இன்று காலை 10மணிக்கு சக்தி திருமண மண்டபத்தில் ஈரோட்டில் தொடங்கி மாலை 5 மணிக்கு தலைவர் வைகோ அரை ஆற்றினார் 1000 இளைஞர்களின்கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர்கள் அ.கணேஷமூர்த்தி,குகன் மில் செந்தில், R.T.மாரியப்பன், N. செல்வராகவன், T.C.C சேரன், அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி, கொள்கை விளக்கு அணி செயலாளர் அழகுசுந்தரம், மாநில இளைஞர் அணி செயலாளர் ஈஸ்வரன், மாநில மாணவர் அணி செயலாளர் தி.மு.ராஜேந்திரன், இணையதள ஒருங்கிணைப்பாளர் மின்னல் முகமது அலி, முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கிருஷ்ணன், அரசியல் ஆய்வு மைய உறுப்பினர் செந்தில் அதிபன், திருச்சி டாக்டர் ரொஹையா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நிறைவாக வைகோ பேசிய உரையின் சுருக்கம் ...
நிறைவாக வைகோ பேசிய உரையின் சுருக்கம் ...
உரையாற்ற என்னை அழைத்த போது கரிகால் சோழன் புத்தகத்தை அளித்தீர் கள். அது பொருத்தம்தான். என்னை கரிகால் சோழனாக சித்தரித்து அல்ல, உங்களுக்கு பொருத்தமாக அந்த நூல் அமைந்துள்ளது. ஆயிரம் ஆண்டு களுக்கு முன்பு நம் நீதியை நிலைநாட்டிய வரலாறு நமக்குள்ளது.
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அரசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற்றாகும் என்ற சிலப்பதிகாரம் நீதியை நிலைநாட்டிய நூலாகும். அப்படி நீதியை நிலை நாட்டிய மற்றொரு வழக்கு ஒருவன் பெயர் மாணிக்கம், மற்றொருவன் பெயர் முத்து. முத்துவின் நிலத்தை மாணிக்கம் வாங்கினான். அவன் உழுகின்றபோது அந்த நிலத்தில் விலை உயர்ந்த புதையல் இருந்தது. (கதை) . இளையவன் இவன் என்று எண்ணி விடாதே. ஆகவே, இளையவர் களாம் இணையதள நண் பர்கள் சேர்ந்து முன்னெடுக்கும் மாற்றத்தை எவரும் எளிதில் நகைத்துவிட முடியாது.
மாற்றம் தான் மாற்று அரசியல். அனைத்துத் துறைகளிலும் மாற்றம் வளர வேண்டும். இருபது ஆண்டுகளுக்கு முன்பே திராவிட முன்னேற்றக் கழகத் திலிருந்து நான் தூக்கி எறியப்பட்டபோது திராவிட இயக்கத்தில், அரசியலில் மாற்றம் வரவேண்டும் என்பதற்காகவே மறுமலர்ச்சி திமுக என இயக்கத் திற்கு பெயர் சூட்டினோம்.

மறுமலர்ச்சி அவ்வளவு எளிதில் கிடைத்து விடாது. ஏன்? எதற்கு? என்று கேள் வி கேட்கும் ஞானத்தை கற்றுத் தந்த அறிவாசான் பெரியார் பிறந்த மண் ணில் கருத்துக் களம் நடைபெறுகிறது. கைதட்டல்கள் எழவில்லை என்ன சகோதரி ரொஹையா பேசினார். பின்னர் செவிப்பறை கிழியும் வகையில் நீங்கள் கை தட்டினீர்கள். கைதட்டல்கள் அதிகம் கிடைத்தால் அது சில நேரம் ஆபத்தாகி விடும்.
திருச்சியிலே நடந்த திமுக மாநில மாநாட்டில் உலகை உலுக்கிய புரட்சிகள் என்னும் தலைப்பில் நான் பேசிய பேச்சுக்கு எழுந்த கையொலிகள் ஏராளம். எமது கருத்துக்களை எடுத்துச் செல்ல இளம் தலைமுறையினர் வந்து விட்டீர் கள். ஆகவேதான் நானும், அவைத் தலைவரும் உங்களை பேசவைத்துவிட்டு கீழ் அமர்ந்து கேட்டோம்.

சரி மறுமலர்ச்சி திமுகவின் நிலைப்பாடு என்ன? என்ற பெரும் கருத்து நிலவும் நேரத்தில் இந்தக் கருத்துக் களம் நடந்து கொண்டிருக்கிறது. மிகுந்த கட்டுப் பாடு களுடன் நீங்கள் மிகவும் நேர்த்தியாக உரையாற்றி இருக்கிறீர்கள்.
மறுமலர்ச்சி திமுகவிற்கு இது முக்கியமான காலகட்டம். இப்போது உடனடி யாக இந்திய அரசியலில் மாற்றம் உருவாக வேண்டும். ஈழத் தமிழர்களுக்கு துரோகம் செய்த காங்கிரஸ் தூக்கி எறியப்பட வேண்டும்.
கடந்த கால அரசியல் நிகழ்வுகளை நீங்கள் சீர்தூக்கிப் பார்த்தால், எந்தக் கட்டத் திலும் மதிமுக அதன் இலட்சியங்களை யாருக்காகவும் விட்டுக் கொடுத்த தில்லை. திருச்சியிலே நடந்த மதிமுக முதல் மாநில மாநாட்டிலே தமிழீழம் தான் நமது இலக்கு என்று தீர்மானம் போட்டவர்கள் நாம். கடந்த ஆண்டு கரூரில் அண்ணா பிறந்த நாள் விழா மாநாடு நடந்த பின்பு, 17-ந் தேதி தந்தை பெரியார் பிறந்த நாளில் 1500 தோழர்களுடன் நாம் சாஞ்சிக்குப் போனோம்.
விரிவான உரையை அடுத்த அடுத்த பதிவுகளில் பார்ப்போம் ...
No comments:
Post a Comment