Friday, August 9, 2013

சிலம்புச் செல்வரும் - மது ஒழிப்பும்!

தமிழக சுதந்திரப் போராட்ட காலத்தில், வரலாற்றில் முக்கிய பங்கு வகித்தவர் சிலம்புச் செல்வர் என்று அழைக்கப்பட்ட ம.பொ.சிவஞானம் அவர்கள். இராஜா ஜி, காமராசர் மற்றும் பல அரசியல் தலைவர்களோடு நெருக்கமான தொடர் பில் இருந்தவர்.நூற்றுக்கும் மேற்பட்ட இலக்கிய நூல்களை இயற்றியுள்ளார். வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு என்ற நூல் எழுதியதற்காக 1966 ஆம் ஆண்டு
சாகித்ய அகாடமி விருதுபெற்றவர்.

மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதும் பெற்றவர். மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப் பட்டபோது வடக்கு எல்லைப் போராட்டம், தெற்கு எல்லைப் போராட்டம், தட்சணப் பிரதேச எதிர்ப்பு போன்ற போராட்டங்களில் முக்கிய பங்கு வகித்த வர். மேலும் சென்னை மாகாணத்தை தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்வ தற்கான போராட்டம்,இலங்கையில் தமிழ் மொழி உரிமைப் போராட்டம் போன்ற போராட்டங்களிலும் முக்கிய பங்கு இவருக்கு உண்டு.



ம.பொ.சி. அவர்களின் பொதுவாழ்வில் மது ஒழிப்பிற்கான போராட்டம் மிக
முக்கிய போராட்டமாக கருதப் படுகிறது. மது ஒழிப்பைப் பற்றி “கிராமணி குலம்” என்ற பத்திரிகையில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வந்தார். மேலும், மது ஒழிப்பு தொடர்பாக “எனது போராட்டம்” என்ற தனது சுயசரிதை நூலில் பின்வருமாறு கூறுகிறார்.

நான் முதன் முதலாக சேலம் மாவட்டத்தில் சுற்றுலா பயணம் செய்தபோது
அந்த மாவட்டத்தில் முழு மதுவிலக்கு அமலில் இருந்தது.தமிழ்நாட்டிலேயே இந்த மாவட்டத்தில் தான் முதன் முதலாக முழு மதுவிலக்கு அமல்படுத்தப்
பட்டது. மதுவிலக்கு அமலுக்கு வந்து சரியாக ஓர் ஆண்டு நிறைவு பெற்று
இருந்த நேரத்தில் நான் அந்த மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டேன். குடிப்பழக்கத்தை நான் அடியோடு வெறுப்பவன். ஆதலால், மதுவிலக்கின் நற் பண்புகளை ஆராய்ந்து அறிவதில் கருத்து செலுத்தினேன். உண்மையிலேயே

சேலம் மாவட்டத்தில் மதுவிலக்கு வெற்றிகரமாக இருந்தது கண்டு மகிழ்ச்சி யடைந்தேன். தேர்தல் பிரச்சாரத்திற்குச் சென்ற கிராமங்களில் சாதாரண மக் களை அணுகி மதுவிலக்கு பற்றி அவர்கள் கருத்தறிய முயன்றேன். மக்களில் மிகப்பெரும் பாலோர் மதுவிலக்கிற்கு ஆதரவாகவே இருந்தனர். சேலம் மாவட்டத்தில் மதுவிலக்கு வெற்றிநடை போட்டது.

பிற்காலத்தில் மதுவிலக்குச் சட்டம் வெற்றிபெறவில்லை என்பது உண்மை தான். அதற்கு முதல் காரணம் அரசியல் கட்சிகளுக்கே மதுவிலக்கில் அழுத்த மான நம்பிக்கை இல்லாதது தான். அரசியல் கட்சிகளிடையே குடிப்பழக்கம் உள்ளவர்களை சேர்த்துக் கொள்ள இயலாதபடி மதுவிலக்கு கொள்கையை கொண்டிருந்த ஒரே கட்சி காங்கிரஸ்தான். அந்த கட்சியே மதுவிலக்கில் நம் பிக்கை இழந்து, மதுக்கடைகளை திறக்க ஆரம்பித்து விட்டது.

குடிப்பழக்கத்தின் கொடுமையை மதுவிலக்கின் நன்மையை விளக்கி மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்ய வில்லை. குடும்பக் கட்டுப்பாடு பிரச்சாரம் போல மதுவிலக்கிற்கு ஆதரவாகவும் பிரச்சாரம் நடத்த அரசு  திட்டமிட்டிருக்கு மானால், மதுவிலக்குச் சட்டம் வெற்றிநடை போட்டு இருக்கும். மதுவிலக்குச்
சட்டம் வெற்றிபெறாததோடு சாதாரண மக்கள் மதுவிலக்கை கொள்கை அள வில் கூட விரும்பாத நிலை ஏற்பட்டுவிட்டது. இப்போதும் கூட மனமிருந்தால் அரசு பிரச்சாரத்தை வலுப்படுத்தி மதுவிலக்கிற்கு வெற்றி தேடலாம்.

நான் சேலத்தில் சுற்றுப்பயணத்தில் இருந்தபோது தமிழ் மாகாண காங்கிரஸ் கமிட்டியின் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் இந்தி மொழி எதிர்ப்பு பற்றி யும், மதுவிலக்கின் வெற்றி பற்றியும் பேசினேன். மக்களிடையே மிகுந்த வர வேற்பு பெற்றது.

தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்களில் மதுவை ஒழிப்பதற்காக “கள் ஒழிந்த சேலத்தில் நான் கண்ட காட்சி” என்ற தலைப்பில் பல இடங்களில் பேசினேன்.
அதிகப்படியான வரவேற்பையும் பெற்றேன். மது ஒழிப்பு பற்றி மேடைகளில் பேசியது எனது பொதுவாழ்வில் திருப்பு முனையாக அமைந்தது என எழுதி யுள்ளார்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ
அவர்கள் மது ஒழிப்பிற்கான விழிப்புணர்வு நடைப்பயணத்தின் போது “தமிழக மகளிர் மதுவுக்கு எதிராகப் போராடத் தொடங்கி விட்டார்கள்” என்று கூறினார். பல இடங்களில் மதுவிற்கு எதிராக பெண்கள் போராட ஆரம்பித்து விட்டனர். மதுக்கடைகளை அப்புறப் படுத்தக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டு விட்டது.

தந்தை பெரியாருக்கு அடுத்து தமிழ் இனத்தின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திர மான வைகோ அவர்கள்  கூறியது முற்றிலும் உண்மையாகி விட்டது.

விழிப்புணர்வுப் பிரச்சாரத்தின் போது “முழு மது ஒழிந்த தமிழகத்தைக் காண் போம்” என்று வைகோ கூறினார் 

நன்றிகள் 

கட்டுரையாளர் :- உடுமலை ரவி

வெளியீடு :- சங்கொலி

No comments:

Post a Comment