Sunday, August 18, 2013

திருச்சியில் திரண்ட உணர்வாளர்கள்!

தமிழ் இனப்படுகொலையாளன் ராஜபக்சேவுக்குத் துணைநின்ற
பிரதமர் மன்மோகன் சிங்குக்கு திருச்சியில் கருப்புக்கொடி!
#வைகோ தலைமையில் திரண்ட இன உணர்வாளர்கள்!

மலைக்கோட்டை மாநகராம் திருச்சியில் பாய்ந்தோடும் காவிரி ஆற்றின் பெருமையைப் பாடாத கவிஞர்கள் இல்லை.சோழநாடு சோறுடைத்து என்னும் பெருமைக்கு தாயாக நின்று சோழ வளநாட்டைக் காத்து வருகின்றவள், வான் பொய்ப்பினும் தான் பொய்யா காவிரி அன்னை.

இந்தக் காவிரி ஆற்றில் ஒரு துளி நீரும் இல்லாது வறண்டு பாலையாய் காட்சி
தந்ததைக் கண்ணால் பார்க்க இயலாமல் தவித்து வந்தோம். பெருக்கெடுத்து
வரும் காவிரியை வழிமறித்து இரண்டாம் நூற்றாண்டுகளிலேயே கல்லணை யை எழுப்பி, வேளாண் பெருங்குடி மக்களைக் காத்தவன் கரிகாலன்.
அந்தக் கல்லணையிலும்,முக்கொம்பிலும் மூழ்கிக் குளிப்பதற்குக் கூட நீரின்றி மணற்பரப்பாய் காட்சி தந்தது. முந்தைய ஆண்டுகளில் நடந்த ஆடி பதினெட்டு வைபவங்களுக்காக ஆற்றினூடே ஆழ்துளையிட்டு,அதன் மூலம் வெளிப்பட்ட சொற்ப நீரைக் கொண்டு குற்றாலத்திற்குச் சென்று குழாய் அடியில் குளித்த தைப் போல என்ற அண்ணாவின் மணிவாசகத்திற்கு இலக்கணமாக ஆட வரும், பெண்டிரும் குளித்தனர்.

ஆனால், இவ்வாண்டு ஈழத் தமிழர் களைக் கொன்றழிப்பதற்கு இராணுவ உதவி களையும், மறைமுகமாக நின்று போரை இயக்கிய துரோகத்திற்குத் துணை போனவரும், காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தி, கொலை பாத கன் ராஜபக்சேவை தலைவராக்க முயன்றிடும் இந்தியாவின்பிரதமர், இத்தாலி பெண்மணி சோனியாவின் ஏவலாளி டாக்டர் மன்மோகன்சிங் பாரத மிகுமின்
நிறுவனத்தை திருமயத்தில் தொடங்கி வைக்க 2 ஆம் தேதி திருச்சி விமான
நிலையத்திற்கு வருகின்றார் என்ற அறிவிப்பு வந்ததும், மறுமலர்ச்சி திமுக
உள்ளிட்ட தோழமைக் கட்சிகளின் தோழர்களோடு திருச்சிக்கு வரும் பிரதம ருக்கு கருப்புக் கொடி காட்டி முற்றுகையிட வருகின்றோம் என்று தலைவர் வைகோ அறிவித்தார்.

கானல் நீரை மட்டுமே பார்த்து வந்த திருச்சி மக்களுக்கு, தலைவர் போராட்டம் அறிவித்த அந்நாளில் திகைப்பை ஏற்படுத்தும் வகையில் காவிரியில் நீர் பெருக்கெடுத்து வரத் தொடங்கியது. ஆடி பதினெட்டுக்கு முதல் நாள் தலைவர் வைகோவும்,ஈராயிரத்திற்கும் அதிகமான தொண்டர்களும் மத்திய சிறைச் சாலை அருகே திரண்டபோது காவிரி பெருக்கெடுத்து சாலையில் வந்ததோ
என்று சொல்லத்தக்க விதத்தில் ஆர்ப்பரித்து வந்தனர்.

ஒருபுறம் ஊடகங்களில் கருநாடகத்தில் கனமழைப் பொழிவின் காரணமாக
காவிரியில் பெருக்கெடுத்து வரும் நீரின் அளவு கூடிக் கொண்டே இருக்கின் றது.காவிரியில் ஆடிப்பெருக்கின் போது பெரும் வெள்ளம் வர வாய்ப்பு இருக் கின்றது, ஆகவே, கரையோர மக்கள் வேறு பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லவும் என அறிவிப்பு வந்து கொண்டே இருந்தது.

இன்னொரு புறம் திருச்சியில் 144 தடை ஆணை பிறப்பிக்கப்பட்டபோதும்
வைகோவும், ஆயிரக்கணக்கான தொண்டர்களும் கருப்புக் கொடிகளுடன்
திருச்சி விமான நிலையத்திற்கு வரும் பிரதமரை முற்றுகையிட வந்து கொண் டிருப்பதாகவும் மாறி, மாறி செய்திகள் வந்தன. காவிரியும் - கறுப்புத் துண்டுக் காரரும் இனஎதிரிகளை விரட்டுவதற்கு வேக, வேகமாக திருச்சிக்கு ஒரே நேரத்தில் முந்தி வந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

திட்டமிட்டபடி கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடக்கும், வந்திருக்கும் தோழர்கள் கருப்புக் கொடிகளை மட்டுமே முன்வரிசையில் நின்று பிடிக்கலாம், கருப்புக் கொடி முன்னே வரட்டும், கட்சிக் கொடிகளை பின்னே கொண்டு செல்லவும் என்று உரத்தக் குரலில் தலைவர் வைகோ உத்தரவிட,அதுவரை காவல் துறை யினரால் கட்டுப்படுத்த இயலாத மொத்தக் கூட்டமும் நூல் பிடித்ததைப் போல
நேர்த்தியாக நின்றது.இப்போராட்டத்தை துல்லியமாக திட்டமிட்டு தன் பட்டறி வினால் முறைப்படுத்தி வியூகம் அமைத்தவர் அண்ணன் மலர்மன்னன் ஆவார்.

தலைவர் வைகோ அவர்களும், தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் வேல் முருகன், தமிழ்த் தேச பொது வுடைமைக் கட்சித் தலைவர் பெ.மணியரசன், தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கோவை இராமகிருஷ்ணன், இயக் குநர் புகழேந்தி தங்கராஜ், திராவிட விடுதலைக் கழகத்தின் மாவட்ட நிர்வாகி கள், கழகத்தின் அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி, துணைப் பொதுச்செய லாளர்கள் மல்லை சத்யா, துரை.பாலகிருஷ்ணன், ஆட்சிமன்றக் குழுச் செய லாளர் அ.கணேசமூர்த்தி எம்.பி., மாநகர் மாவட்டச் செயலாளர் அ.மலர் மன் னன், புறநகர் மாவட்டப் பொறுப்பாளர் டி.டி.சி.சேரன்உள்ளிட்டவர்கள் வேனில் நிற்க,தலைவர் வைகோ ஒலி வாங்கியின் முன்பு நின்று கடல் அலைகள் தோற்கும் அளவிற்கும், விண் அதிரும் வகையிலும் ஆர்ப்பாட்ட முழக்க மிட்டார்.

கிட்டத்தட்ட பிரதமர் விமான நிலையத்தில் இறங்கி திருமயம் செல்லும் வரை ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக தலைவர் வைகோவும், தொண்டர்களும் பெருமுழக்க மிட்டதைப் பார்த்து காவல் துறையினரே மெய்சிலிர்த்துப் போ னார்கள். பின்னர், நம் தலைவரிடம் வந்து காவல் துறை உயர் அதிகாரிகள் தங்களையும்,தோழர்களையும் கைது செய்கிறோம், ஒத்துழைப்பு தருமாறு வேண்டினார்கள்.

இதனைத் தொடர்ந்து அனைவரையும் அமைதியாக வாகனங்களில் ஏற்றி
அனுப்பிவிட்டு, இறுதியாக தலைவரும்,ஒரு சில தோழர்களுடன் வாகனத்தில்
ஏறி காவல் துறையினர் ஏற்பாடு செய்த மண்டபத்திற்கு வந்தனர். இந்த மண் டபம் போதவில்லை, ஆகவே வேறு ஒரு மண்டபத்தில் நீங்கள் தலைவர்
களோடு தங்கிட ஏற்பாடு செய்கின்றோம் என்று நம் தலைவரிடம் காவல் துறையினர் சொல்ல,வேண்டியதில்லை நாங்கள் அனைவரும் ஒரே இடத்தில்
இருந்து விடுகிறோம், உங்களுக்கு எந்தப் பிரச்னையும் வராது சமாளித்துக்
கொள்கிறோம் என்றார். அதன்பின்பு,தமிழ்நாடு மாணவர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த 41 மாணவர்கள் மாநில அமைப்பாளர் பாரிமைந்தன் தலைமையில் விமான நிலைய வாயிலுக்குள்ளேயே நுழைந்து கருப்புக் கொடி காட்டி கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் நாங்கள் வைகோவுடன்தான் இருப் போம் என்று சொல்ல, காவல் துறையினர் இடநெருக்கடியை காரணம் காட்டி
மாணவர்களை வேறு இடத்திற்கு கொண்டு செல்ல முற்பட்டனர்.

இதை கவனித்துவிட்ட தலைவர் வைகோ தாம் தங்கியிருந்த மண்டபத்தின் வாசலுக்கு வந்து மாணவர்களை வரவேற்று, அவர் தம் தீரத்தை பாராட்டினார். மேலும், காவல் துறை அதிகாரிகளிடம் ஒரே நோக்கத்திற்காக வேறு, வேறு வடிவங்களில் போராடிய மாணவர்களையும் அவர்களது விருப்பத்தின்படி இங்கேயே தங்க அனுமதியுங்கள் என்றார். காவல் துறையினரும் சம்மதிக்க பெருத்த ஆரவாரத்துடன் தலைவரை புடை சூழ்ந்து மாணவர்கள் அனைவரும்
மண்டபத்திற்குள் நுழைந்தனர்.

ஐநூறு பேர் அமரக்கூடிய மண்டபத்தில் இரண்டாயிரம் பேர் நின்றும்,அமர்ந்தும்
இருந்தனர். தலைவர் வைகோவே நிகழ்ச்சித் தொகுப்பாளராகி அனைவரையும் அமைதி காக்குமாறு வேண்டினார். மாணவர்கள் அனைவரும் மேடைக்குப் பக்கத்தில் தரையில் அமர்ந்தனர். முதலில் மாநகர் மாவட்டச்செயலாளர் அ.மலர்மன்னன் அனைவரையும் வரவேற்றுப் பேசும் போது, உடல்நிலை சரி யில்லாத சூழ்நிலையிலும், நான் இந்தப் போராட்டத்திற்கான பணிகளை ஆற் றியதாக பொதுச்செயலாளர் குறிப்பிட்டார்.ஒரு இலட்சியத்திற்காக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த வாய்ப்பை அவர் எனக்கு வழங்கி உள்ளதாகவே நினைத்து பெருமைப் படுகிறேன் என்றார்.

இந்த அரங்கம் கலகலப்பாக இருப்பதற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் பொதுச் செயலாளரும், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமான காவேரி
பேசவேண்டும் என்று விளித்து நம் தலைவர் வைகோ அழைத்தார்.

காவேரி: “பல்வேறு போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபடும் அண்ணன் வைகோ அவர்களோடு நாங்களும் ஈடுபட்டு கைதானது மிகுந்த மகிழ்வைத் தருகிறது. இதுபோல நாம் அமைதி வழி போராட்டங்களிலேயே ஈடுபடமாட் டோம். நம்மை காங்கிரஸ் கட்சியும், ராஜபக்சே கூட்டமும் சீண்டுமேயானால் ஆயுதம் தூக்கவும் தயங்க மாட்டோம்” என்றார்.ஆவேசமாகவும், அதே நேரத் தில் காங்கிரஸ் கட்சியினரை கலகலப்பாகவும் விமர்சித்துப் பேசிய அவரு டைய பேச்சுக்கு அதிர்வலைகள் எழுந்தன.

உலகத் தமிழர் பேரமைப்பின் பொதுச் செயலாளர் முருகேசன்: “தமிழர்கள் சூடு, சொரணை அற்றவர்கள் என்று எவரும் கருதிவிடக் கூடாது. மானமறவர் படை இன்று தமிழகத்திற்கு வந்த பிரதமரை எதிர்த்து கறுப்புக் கொடிகளுடன்
கைதாகி இருக்கிறார்கள். துரோகம் செய்த கூட்டம் தொடர்ந்து இங்கு வருமா யின், அவர்களை துரத்தும் நமது கூட்டமும் கருப்புக் கொடிகளுடன் களத்திற்கு வரும்” என்றார்.

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப் பாளர் திருமுருகன் காந்தியும், திராவிடர்
விடுதலை இயக்கத்தின் மாவட்ட அமைப்பாளர் இரவியும் உணர்வுப்பொங்கப் பேசிட,

தமிழ்த்தேச பொதுவுடைமைக் கட்சியின் நிறுவனர் பெ.மணியரசன்: “ஆயிரம்
சோதனைகள் வந்தாலும், அண்ணன் வைகோ அவர்களையோ, அவரது இயக் கத்தவர்களையோ ஒன்றும் செய்துவிட முடியாது. மிகுந்த கட்டுப் பாடான இயக்கமாக அது நிமிர்ந்துள்ளது.இனத் தற்காப்பு உணர்ச்சி நம்மிடம் இருக் கிறதா? கட்சி சண்டை தனியாக இருக்கட்டும், நம் இனத்திற்கு ஆபத்து என் றால் ஒன்றாக இருந்து போராட முன்வருவோம். கல்லானாலும் கணவன்,
புல்லானாலும் புருசன் என்பார்கள், இப்போது கல்லானாலும் கட்சி, புல்லா னாலும் தலைவர் என்ற மனோபாவம் வளர்ந்துள்ளது. வைகோ தேர்தல் ஆதா யங்களுக்கு அப்பாற்பட்டு உழைத்து வருகின்றவர். அவர் ஏற்பாடு செய்கின்ற அனைத்துப் போராட்டங் களும் வெற்றி பெற்றுள்ளது, அதைப் போலவே தமிழ் இனத்தையும், தமிழ் ஈழத்தைப் பெற்றுத்தரும் போராட்டங் களிலும் அவர் வெற்றி பெறுவார்” என்றார் மணியரசன்.

இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் பங்கேற்றுள்ள தமிழ்நாடு மாணவர்கள்
கூட்டமைப்பைச் சேர்ந்த அனைத்துக் கல்லூரி மாணவர்கள் பேசுவார்கள் என
தலைவர் அறிவித்தார்.

முதலாவதாக திருச்சி சட்டக்கல்லூரி மாணவர் ராஜ்குமார்: “இரும்புப் பெண்மணி இந்திராவையே எதிர்த்து நாடாளுமன்றத்தில் களமாடியவர் வைகோ, என்னைப் போன்ற இளைஞர்கள் ஈழ வரலாற்றை உங்களிடம் இருந்துதான் கற்றுக் கொண்டோம்.விமான நிலையத்தின் வாசலுக்கே சென்று நாங்கள் கருப்புக் கொடி காட்டினோம். வெறும் 50 மாணவர்களுக்கே பயந்து வான் வழியே பிரதமர் பயணிக்கின்றார். இந்தப் போராட்டத்தை முதலில் வைகோ அறிவித்தார். ஆகவே, அவரோடு சேர்ந்து போராடுவோம் என்று வந்தோம்.ஆனால், பெரிய தலைவர் வைகோ, எங்களை வாசலில் வந்து வர வேற்றார்.அவரோடு என்றைக்கும் நாங்கள்தொடர்ந்து பயணிப்போம்” என்றார்.

அடுத்து மாணவர் போராட்டத்தை கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருச்சி யில் ஒருங்கிணைத்த தம்பி சத்தியகுமரன்: “தமிழ் இனத்திற்காக தொடர்ந்து போராடும் தலைவர் வைகோ,அரசியல் கலப்பில்லாமல் மாணவர்கள்போராட வேண்டும் என்று அவர் உருவாக்கிய உணர்வின் அடிப்படையிலேயே 22 நாள் கள் தொடர்ந்து நாங்கள் திருச்சியிலே போராடினோம்.

மாணவர் சமுதாயத்தை இவர் போன்ற தலைவர்களால் மட்டுமே வழிநடத்த
முடியும். வைகோ அவர்களை வெறும் அரசியல் தலைவராக நாம் பார்க்க வில்லை, அவர் நம் இனவிடுதலையையும் - ஈழ விடுதலையையும் பெற்றுத் தரும் போராளியாகவே பார்க்கின்றோம். காவல் துறையினர் எங்களை கைது செய்ய முற்பட்டபோது வைகோ அவர்களை எந்த மண்டபத்தில் வைத்திருக்
கிறீர்களோ, அங்கே கொண்டு செல்வதாக இருந்தால் கைதாவோம் என்றோம்.

ஆனால், எங்களின் வருகைக் காக வாசலில் நின்று காத்திருந்த தலைவர்
வைகோ, காவல் துறையினரிடம் பேசி அவருடன் தங்க வைத்ததை வாழ் நாளில் மறக்க மாட்டோம். இவர் காட்டும் வழியில் அடுத்தக்கட்ட போராட்டத் திற்கு ஆயத்தமாவோம்” என்றார்.

தந்தை பெரியார் கல்லூரி மாணவர் சுடலைமுத்து: “தமிழ் ஈழத்திற்காக முத லில் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியவர் அய்யா வைகோ ஒருவரே. அதைத்தான் தமிழக முதல்வரும் சட்டமன்றத்தில் நிறை வேற்றியுள்ளார். பிரதமர் மன்மோகன்சிங் அவர்களே வானூர்தி மூலம் வந்த நீங்கள் தரைமார்க்கமாக தமிழகத்திற்குள் வந்து பாருங்கள்,அப்போது தமிழக மாணவர்களின் எழுச்சி உங்களுக்குப் புரியும். தமிழ் ஈழம் என்பது தான் நமது இலக்கு, அதைத்தவிர வேறு வேலை நமக்கு இல்லை. அந்த இலக்கை அடை வதற்கு அய்யா வைகோ காட்டும் வழியில் பயணிப்போம். தியாகத் தலைவர் வைகோ சிந்திய வியர்வை -இலட்சியம் இவற்றை மாணவர்களாகிய நாம் சுமந்து செல்ல வேண்டும்.அப்போதுதான் ஈழ விடியல் நமக்குக் கிடைக்கும்.”

கோவை சட்டக்கல்லூரி மாணவர் சதாசிவம்: இந்நாள் மாணவர்களாகிய
எங்களுக்கு பேச வாய்ப்பு வழங்கிய முன்னாள் மாணவர் போராட்டத்தலைவர் வைகோ அவர்களுக்கு மாணவர் சமுதாயம் நன்றிக் கடன் பட்டுள்ளது. இனி மன்மோகன்சிங் பிரதமராக வரமுடியாது. ஏன்? காங்கிரஸ் கட்சியே ஆட்சி அதிகாரத்திற்கு வராது.ஈழப் போர் உச்சக்கட்டத்தில் நடந்த போது பாதிக்கப் பட்ட வீரர்களைப் பார்த்து மாவீரன் பிரபாகரன் நமக்காக அண்ணன் வைகோ இருக்கின்றார், அவர் உதவுவார் என்று குறிப்பிடுகின்ற அளவிற்கு ஈழ விடு தலை யை முன்னெடுக்கும் தலைவர் வைகோ.

எங்களை காவல் துறையினர் கைது செய்ய முனைந்தபோது அங்கே இருக்கும் எங்கள் மாமல்லன் வைகோவிடம் கொண்டு சேருங்கள் என்றோம். திருச்சி யில் நடந்த மாணவர் போராட்டத்தின்போது காங்கிரஸ் குண்டர்களால் எம் மாணவர்கள் தாக்குதலுக்குள்ளானார்கள். அவர்களைப் பார்ப்பதற்கு கூடங்கு ளத்தில் இருந்து நள்ளிரவு கார் மூலம் வந்து எமக்கு ஆறுதல் சொன்னார் தலைவர் வைகோ. அந்தத் தலைவருக்கு மாணவர் சமுதாயம் நன்றிக் கடன்
பட்டுள்ளது” என்றார்.

குளித்தலை மாணவர் சசிக்குமார் பேசும்போது தமிழர் நலன் காப்பதுதான் நம் குறிக்கோள். காமன்வெல்த் நாடுகளின் தலைவராக முயற்சிக்கும் ராஜபக்சே கூட்டத்தை அடியோடு விரட்டிட இளைய தலைமுறையினர் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்றார்.

கல்லூரி மாணவர் நவீன்: “திமுகவோ,அதிமுகவோ சாமானியர்கள் இருக் கும் கட்சியல்ல, மதிமுக மட்டும்தான் சாமானியர்கள் உள்ள கட்சியாகும்.
ஈழத்தில் இனக்கொலை நடந்தபோது நாடாளுமன்ற உறுப்பினராக வைகோ
இருந்திருந்தால் அந்தத் துயரம் நடந்திருக்காது. பிரபாகரன் பெற்றெடுத்த பிள்ளை பாலச்சந்திரன் மறைந்து இன்று பல பிரபாகரன்களை உருவாக்கி யுள்ளார். அந்தத் தீரத்தோடு நாம் ஈழ விடுதலையை முன்வைத்துப் போராடு வோம்” என்றார். 

தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பின் மாநில அமைப்பாளர் பாரிமைந்தன்: “தமி ழக மாணவர்களின் பார்வை இன்று உங்களின் மீது உள்ளது. அதற்கு எல்லா விதமான தகுதிகளும் உங்களுக்கு இருக்கின்றது. தமிழ் சமூகத்தின் பாதுகாப்பு அரணாக வைகோ திகழ்கின்றார். தமிழ் ஈழத்தை உருவாக்குவதற்கு இங்கு கூடியுள்ள தலைவர்கள் அறிவாயுதத்தை வழங்க வேண்டும். அந்த ஆயுதம் தான் எம்மையும், எம் சமூகத்தையும் கூர்மைப் படுத்தும்” என்றார்.

இனஎழுச்சி இயக்குநர் புகழேந்தி தங்கராசு: “காமன்வெல்த் தலைவராக ராஜ பக்சே வரக்கூடாது என எழுந்த தமிழகத்தின் முதல் குரல் அண்ணன் வைகோ வின் குரல்தான். எப்போதும் உணர்வோடும், உரிமையோடும் தமிழர்களுக்காக நாளும் உழைப்பவர் வைகோ. இங்கு தமிழர்கள் இளித்தவாயர்கள் என்ற நினைப் போடுதான் துரோகம் இழைத்தவர்கள் எல்லாம் வந்து போகின்றனர். அதை நாம் முறியடிப்போம் என்று உணர்வு பொங்கப் பேசினார்.

ஈரோடு நாடாளு மன்ற உறுப்பினர் அண்ணன் கணேசமூர்த்தி நாடாளுமன்றத் தில் குறிப்பிட்டதையே இங்கும் குறிப்பிட விரும்புகின்றேன், தொடர்ந்து தமிழ கத்திற்கும் - தமிழர்களுக்கும் துரோகம் செய்வது தொடருமானால் நூறாவது சுதந்திர தினவிழா கொண்டாட்டம் நடக்கும் போது இந்தியா என்னும் நாடு இருக்காது என எச்சரித்தார்.

துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா “தலைவர் வைகோ காட்டும்
வழியில் நின்று இனஎதிரிகளை துவம்சம் செய்வோம்” என்றார்.

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் கோவை இராமகிருஷ்ணன்:
“ஒரு பயிற்சி முகாமாகவே அண்ணன் வைகோ இந்த வாய்ப்பைப்பயன்படுத்தி
உள்ளார்கள். வைகோ வெலிங்டனுக்கு வருகிறார் என்றவுடன் சிங்கள 
இராணுவ வீரர்களுக்கு பயிற்சி கொடுப்பதை நிறுத்திவிட்டு திருப்பி அனுப்பி னார் கள். இன்று, நேற்றல்ல நாங்கள் முதன் முதலில் அடக்குமுறை சிறை வாசத்தை ஏற்றபோது, திமுகவிலிருந்த காலத்திலேயே கோவை வ.உ.சி
பூங்காவில் நின்று எங்களுக்காகப் பேசியவர் வைகோ.

முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர்.புலிகளுக்கு ரூ.5 கோடி வழங்கியதோடு, தன் னுடைய அரசு காரிலேயே மேதகு தலைவர் பிரபாகரனை மிகுந்த பாதுகாப் பு டன் அனுப்பி வைத்தார்.அவருக்குப் பின்பு தமிழ் ஈழ மக்களுக்கு ஆறுதலும், தேறுதலும் வழங்குபவர் வைகோ ஒருவரே” எனப் பேசினார்.

அனைத்துக்கும் முத்தாய்ப்பு வைத்ததைப் போல அன்றைய தினம் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் வேல்முருகன் பேச்சு அமைந்தது.

வேல்முருகன்: “மதிமுக தொடங்கி இருபது ஆண்டுகளில் இன்றும் மிகுந்த
கட்டுப்பாட்டுடனும், நேர்த்தியாகவும் அண்ணன் வைகோ கட்சி நடத்து கின் றார். சாதாரண தொண்டன் வந்தால் கூட எழுந்து நின்று வணக்கம் பாராட்டும் அவருடைய பண்பு நலன் பாராட்டுதலுக்குரியது. அதை என் போன்றவர்களால் கூட கடைபிடிக்க இயலவில்லை. அரசியல் பொது வாழ்வில் தடம் புரளாது நடக்கும் தலைவர் வைகோ ஒருவரே. தனிமனித ஒழுக்கத்தில், ஈழம் சார்ந்த பிரச்னை, இனப் பிரச்னை என எதுவானாலும் முந்திக் களப்பணியாற்றும் வைகோதான் மாற்று அரசியலுக்கு தலைமை தாங்கும் தகுதி படைத்தவர். நாங்கள் எப்போதும் அவர் பின்னால் இருந்து செயல் படுவோம். அவர் மாற்று அரசியல் அணிக்கு தலைமை தாங்க முன்வர வேண்டும். கொண்ட கொள்கை யில் எவர் ஒருவர் உறுதியாக இருக்கின்றாரோ அவரே நமக்கும், நம் நாட்டுக் கும் தலைமை ஏற்க வேண்டும்” என்ற தமது விருப்பத்தை வெளிப் படுத்தினார்.

சகோதரர் வேல்முருகனின் பேச்சுக்கு மிகுந்த கரவொலி எழுப்பி மொத்தக்
கூட்டமும் பாராட்டியது.

அழுத்த, அழுத்தத்தான் கரித்துண்டும் வைரமாகும். அதுபோல பல்வேறு துன்ப
துயரங்களை அனுபவித்த பின்புதான் நமக்கு போதிய அங்கீகாரம் அரசியலில்
கிடைத்துள்ளது. நான் போராட்டத்தை அறிவித்துவிட்டு வேல்முருகன் உள் ளிட்ட அனைத்துத் தலைவர் களுக்கும் தொலைபேசியில் தெரிவித்தேன். அனை வரும் நம்மை மதித்து பங்கேற்றுள்ளார்கள். அதிலும்,சகோதரர் வேல் முருகன் என்னை முதலில் சந்தித்த போதே என் ஒலி நாடாவை விரும்பிக் கேட்பவர் என்றும், நம் மீது நன்மதிப்பு கொண்டவர் என்பதையும் உணர்ந்து கொண்டேன்.அவருடைய வாழ்த்துக்கும், எதிர் பார்ப்புக்கும் தகுந்தாற்போல கடமை ஆற்றுவோம்.

இடையிடையே நான் பேசிய காரணத்தால் நிறைவாக கழகத்தின் அவைத்
தலைவர் திருப்பூர் துரைசாமி உரையாற்றுவார் எனக்கூறினார்.தலைவர் வைகோ.

அவைத்தலைவர் திருப்பூராரின் அனுபவப் பூர்வமான உரையும் முடிந்தது. அன்றைய கைது நடவடிக்கையும் தகர்ந்தது. மாலை 4 மணிவாக்கிலேயே விடுதலை என காவல்துறையினர் தலைவர் வைகோவிடம் சொன்ன போதும்,
தொடர்ந்து அரங்கக் கூட்டம் சிறப்பாகவே நடந்தது. எவரும் மண்டபத்தை விட்டு வெளியேற வேண்டும் என்றும் நினைக்கவில்லை.

அறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் குறிப்பிடும்போது, திராவிட முன் னேற்றக் கழகம் ஒரு மாலை நேரக் கல்லூரி என்பார். அந்த திராவிட முன் னேற்றக் கழகம் தலைவர் வைகோவின் தலைமையில்தான் இயங்குகிறது என்று சொல்லத்தக்க வகையில் சிறப்புப் பயிலரங்கமாக அந்நாள் நிகழ்வு நடந்து முடிந்தது..


இளைஞர் அணிச் செயலாளர் பொறியாளர் ஈஸ்வரன், மாணவர் அணிச்
செயலாளர் தி.மு.இராசேந்திரன், புலவர் முருகேசன், மருத்துவர் ரொஹையா என உரையாற்றுகின்றவர்கள் பலர் இருந்தும் மாணவத் தம்பிகளுக்கு வாய்ப்பு
வழங்கப்பட்டது. அதிலும் ஒரு சில மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட
வில்லை என்று நம் தலைவர் வைகோ பெருமிதம் கொள்ளும் விதமாக தீரர் கள் கூட்டமாம் திருச்சியில் நடந்த கறுப்புக் கொடி போராட்டம் அனைவரது
கண்ணையும், கருத்தையும் கவர்ந்தது.

ஆற்று மணலைக் கூட காவிரியில் காண இயலாமல் வரும் தலைமுறை ஏமாந்து போகுமே என்றிருந்தபோது, கணக்கற்ற பெரும் வெள்ளம் பெருக் கெடுத்து நடந்தாய் வாழி காவேரி என்ற புலவர் தம் வாக்கு பொய்யாகவில்லை என்பதை நிரூபித்திருக்கின்ற வேளையில் நம் அறப்போராட்டம் பெருந்திர ளாக நடந்து முடிந்துள்ளது. காவிரிக் கனவு கானல் நீராகப் போய்விடவில்லை என்பதைப் போல நம் ஒவ்வொருவரின் கண்களும் மிக விரைவாக மாற்று அரசியலைக் காணும். அந்த மாற்றம் நிகழும்போது நம் மனதில் மகுடம் தரித்துள்ள தலைவர் வைகோவின் தோள்கள் அரசியல்அதிகார மாலையை நிச்சயம் சூடும்.

நன்றிகள்

கட்டுரையாளர் :- மணவை தமிழ்மாணிக்கம்

வெளியீடு :- சங்கொலி

No comments:

Post a Comment