Wednesday, August 7, 2013

துணை நிற்போம்! தோள்கொடுப்போம்! -பகுதி 2

கூடங்குளம் அணுமின் நிலையம்  முறையான ஆய்வுகளை மேற்கொள்ள வில்லை!

நிலஇயல் நீரியல் விஞ்ஞானிகளின் அறிக்கைகள் புறந்தள்ளப்பட்டன!


அணு ஆய்வுத் திட்டங்களில் இந்தியாவை முன்னிலைப்படுத்த வேண்டும் என்று இந்திராகாந்தி அவர்களுக்கு உள்ளூர ஒரு ஆசை இருந்தது. 1980 ஆம் ஆண்டு அணு ஆய்வு விஞ்ஞானிகளை அழைத்து, ஓர் அணு நீர்மூழ்கியை உரு வாக்க வேண்டும் என்று கட்டளையிட்டார்.ஐந்து ஆண்டுகளாகியும் அவரது திட்டம் நிறைவேறவில்லை.

உடனே இந்திராகாந்தி ருசியாவின் உதவியை நாடினார். ருசிய அரசு அணு நீர் மூழ்கிக்கான தொழில் நுட்பங்களை இந்தியாவுக்கு வழங்கிடச் சம்மதித்தது.
அதே நேரத்தில் ஒரு நிபந்தனையும் முன் வைத்தது.
இந்தியா-ருசியாவிடம் இருந்து 8 அணுஉலைகளை வாங்க வேண்டும் என்பது தான் அந்த நிபந்தனை. அதனை ஏற்றுக்கொண்ட இந்திராகாந்தி எதிர் பாராத விதமாக 1984 இல் சுட்டுக்கொல்லப்பட்டார். அவருக்குப் பின்னர் ஆட்சியில் அமர்ந்த ராஜீவ்காந்தி அணுஉலைக்கான ஒப்பந்தங்களில் நவம்பர் 20, 1988 அன்று கையெழுத் திட்டார்.

1986 ஏப்ரல் 26 அன்று செர்னோபிலில் வெடித்துப் பேரழிவு உண்டாக்கிய அதே
வகை அணுஉலைகளைப் பெயர் மாற்றம் செய்து ருசியா இந்தியாவுக்குத் தந்து
விட்டது. வி.வி.இ.ஆர்.1000 என்று அந்த அணுஉலைக்குப் பெயர். முதலில்
கேரளாவில் அமைத்திட முடிவு செய்தது.அங்கு அனைத்துக் கட்சிகளும் சேர்ந் து எதிர்ப்புத் தெரிவித்ததால், எதிலும் சுரணைகெட்டுக் கிடக்கும் தமிழ் நாட்டின் தென்கோடியில் அமைந்துள்ள கூடங்குளத்திற்கு இடம் மாற்றினார் கள்.

ருசியாவின் பொறியியல் நிபுணர்களுக்கு கூடங்குளத்தில் அணு உலை அமைப்பதில் விருப்பமில்லை. இந்த வி.வி.இ.ஆர்.1000 அணுஉலைகள் இது வரை கடற்கரையில் அமைக்கப்பட்ட தில்லை. அதற்கு உரிய அனுபவமும்
அவர்களுக்கு இல்லை என்பதைத் தெளிவாக எடுத்தியம்பினர். ருசிய-இந்திய விஞ்ஞானிகள் மத்தியில் உடன்பாடு இல்லாத நிலையில்,கட்டுமானப் பணி கள் தாமதம் ஆகின.

இதற்கிடையில் ஒரு மோசமான நிகழ்வு நடந்துவிட்டது. ஜூன் 2011 இல் அதன்
தலைமை வடிவமைப்பாளரான செர்கி ஃரைசோவும்,அவருடன் முக்கிய பொறி யாளர்கள் மூவரும் ருசியாவில் நிகழ்ந்த விமான விபத்தில் உயிர் இழந்தனர்.

அணுமின் உற்பத்தி என்பது வெற்று இடத்தில் நடக்கும் நிகழ்வன்று.இயற்கைச் சூழல்களால் அவை பாதிக்கப் படுவதற்கான வாய்ப்புகள் ஒவ்வொரு நொடியும் உள்ளது. புயல், பூகம்பம்,நெருப்பு, சுனாமி மற்றும் எரிமலை போன்ற அபாயங் கள் அதற்கு உள்ளன. ஆதலால், புதிதாக அணுஉலை ஒன்றை நிறுவும்போது, இயற்கையால் ஏற்பட வாய்ப்புள்ள அனைத்துவிதமான உச்சகட்ட அபாயங் களையும் கணக்கில் கொண்டே, அதன் பாதுகாப்புக் கட்டமைப்புகளை வடிவ மைப்பாளர்கள் தீர்மானிக்க வேண்டும்.



(Earth wind preparing power plants for nature’s fury, International Atomic Energy Agency Bulletin, 50(1) /
September 2008, P-5)

கூடங்குளத்தில் அணுஉலைகள் அமைவதற்கு எதிரான நிலஇயல் மற்றும்
கடலியல் காரணிகள் அதிகமாகவே உள்ளன.அணுஉலைகளைத் தாக்க வல்ல சுனாமி மற்றும் எரிமலை போன்ற அபாயங்கள் உள்ளன என்று கூறும் ஆய்வு அறிக்கைகள் குறித்து அணுமின் நிலைய நிர்வாகிகள் இதுவரை எவ்வித ஆய்வுகளோ, நடவடிக்கைகளோ மேற் கொள்ளவில்லை என்பதற்கான நேரடி
ஆதாரங்களை, மத்திய அரசின் வல்லுநர் குழுவின் முன் வைக்கப்பட்டிருக்கும் 77 பக்க நூலிலேயே தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய அரசும், தமிழக அரசும் பன்னாட்டு அணுசக்திக் கட்டுப்பாடு அறிக்கை களைக் காற்றில் பறக்க விட்டுவிட்டது. வரவிருக்கும் பேராபத்து களைப் பற்றிக் கவலைப்படவில்லை. இன்னும் சொல்லப்போனால், தமிழ் நாட்டில் உள்ள தலைவர்களில் வைகோ ஒருவரைத்தவிர வேறு எவரும் கவலைப்படு வதில்லை. அதற்கெல்லாம் பல காரணங்கள் இருக்கத்தான் செய்கிறது.

கூடங்குளத்தில் அமைந்துள்ள வி.வி.இ.ஆர். ருசிய உலைகளில் ஏராளமான பிரச்சினைகள் உள்ளன.அதன் கண்ட்ரோல் ராடு, அவசர கால மின்சார சேமிப் பு, பாதுகாப்பு அமைப்புகள் என்று பலகுறைபாடுகள் நீண்டு செல்கின்றன.

பல நாடுகளில் இருக்கும் இதே வி.வி.இ.ஆர். உலைகளில் கண்ட்ரோல் ராடு இயங்கு முறையில் பல பிரச்சினைகள் ஏற்பட்டதற்கான ஆதாரங்கள் இருக் கின்றன. இந்த அணுஉலையில் நிகழும் அணுப்பிளவை நிறுத்த அல்லது கட்டுப்படுத்த வேண்டுமெனில் இந்தக் கண்ட்ரோல் ராடுகளின் உதவியோடு தான் யுரேனியக் கம்பிகளைப் பிரித்து வைக்க வேண்டும்.

2006, மார்ச் 1 ஆம் தேதி பல்கேரியா சொஸ்லூடி எனும் அணுமின் நிலையத்தில் 4ஆவது உலையில் மின்சாரம் தடைபட்டதால், முக்கியமான சுழற்சிப் பம்புகள் வேலை செய்ய வில்லை. இதனால் கண்ட்ரோல் ராடு இயங்காததால், பெரும் விபத்து ஏற்பட்டது.

ஃபுகுஷிமா விபத்து நடந்தவுடன் ருசியாவில் உள்ள அணுஉலைகளின் நிலை யை ஆராய்ந்து அறிந்திட ருசிய சனாதிபதி திமித்ரி மெத்வ தேவ் ஒரு குழுவை அமைத்தார். அந்தக் குழு ஃபுகுஷிமா அளவு விபத்துகளைத் தாக்குப்பிடிக்கும் தன்மை எந்த ருசிய அணுஉலைக்கும் இல்லை என்று அறிக்கை சமர்ப்பித்தது.

அதுமட்டுமின்றி, ருசிய அணு உலைகளில் உள்ள மிகவும் ஆபத்தான 31 பிரச் சினைகளைப் பற்றியும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியது.இந்திய அரசுக்கு இது நன்றாகவேத் தெரியும்.தெரிந்துதான் பேராபத்துகளை தமிழர்கள் மீது திணித்துள்ளது.

1988 ஆம் ஆண்டு நவம்பர் இருபதாம் நாள் டில்லியில் வைத்து, கூடங்குளம்
திட்டத்தில் இந்தியாவும், அன்றைய சோவியத் ஒன்றியமும் கையெழுத் திட் டன. அதற்கு முன்பும் பின்பும் அந்த இடத்தில் உள்ள நிலம் அணு உலையைக் கட்டுவதற்குத் தேவையான ஒரே சீரான கடினமான பாறையைக் கொண்டிருக் கிறதா? என்பதற்கான ஆய்வுகளை இந்திய அணுமின் குழுமம் நடத்தியது. அந்த
ஆய்வு தெளிவான உண்மைகளை வெளியிடவில்லை. ஏதோ சில காரணங்
களுக்காக மறைக்கப்பட்டிருக்கலாம், ஆதாயத்திற்கு அடிபணியாத அதிகாரி கள் இந்தியாவில் அரிதாகும்.

2001 ஆம் ஆண்டில் அணுஉலையின் அடித்தளம் அமைப்பதற்காகக் குழி தோண்டியபோது, அந்தக் குழியின் தரையின் கீழே பல்வேறு இடங்களில்
உடைப்புகளும், இணைப்புகளும் (Fractures and joinds)  இருந்தன.அதன் ஊடாக கால்கேரியஸ் பொருள் ஒன்று ஊடுருவியிருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந் தார்கள்.

இந்தப் பொருளானது பிதுங்கு எரிமலைக் கால்சைட் ஆக இருப்பதற்கான வாய்ப்பே அதிகமாகும். ஓரிடத்தில் ட்ரக்கைட் எரிமலைப் பாறைகள் இருப்ப தாகக் கண்டறிந்தால் அந்த இடத்தின் நில மேல் ஓடு கிழிந்து இருப்பதாக (Rifting) எடுத்துக் கொள்ளவேண்டும். சிப்பி, சுண்ணாம்புக் கற்களுக்கு ஊடாக கார்ப் பனட் டைட்லாவா இந்தப் பகுதியில் புறத்தே வந்துள்ளது. எரிமலை நிகழ்வு களுக்கான சான்றுகளில் இதுவும் ஒன்றாகும்.

இரண்டு அணுஉலைகளுக்கும் இடையில் உள்ள தூரம் வெறும் 200 மீட்டர் ஆகும். இவற்றின் கீழ் உள்ள அடித்தளப் பாறைகள் மாறுபட்ட தன்மைகளைக் கொண்டிருக்கின்றன.முதல் அணு உலைக்குக் கீழ் உள்ள பாறைகள் நில அதிர்வு அலைகளை வினாடிக்கு 842 மீட்டர் வேகத்தில் கடத்துவதும், இரண்டா வது அணு உலைக்குக் கீழ் உள்ள பாறைகள் நில அதிர்வு அலைகள் வினாடிக்கு 1,300 மீட்டர் வேகத்தில் கடத்துவதைப் பற்றிய விவரங்களை இதுதொடர்பான
விஞ்ஞானிகள் விளக்கிக் கூறினார்கள்.இதற்குச் சரியான விடையை இந்திய
அணுசக்தித் துறை இதுவரை விளக்க வில்லை.

அணுக்கதிர் இயக்கத்தின் மிகச்சிறிய அளவுகள்கூட ஆபத்தானது என்பதனை
நவீன அறிவியல் ஆய்வுகள் அறிவிக்கின்றன. ஆனால்,மத்திய அரசைச் சார்ந் தவர்கள் “கூடங்குளம் அணு உலையால் ஆபத்து இல்லை, அஞ்ச வேண்டாம்” என்கிற அருள் வாக்குகளைத் தொடர்ந்து வழங்கி வருகின்றனர். இதில் எள்ள ளவுகூட உண்மை இல்லை என்பதற்கு ஒரே ஒரு உதாரணத்தை மட்டும் இங்கே பார்ப்போம்.

கூடங்குளம் அணுஉலையில் பணியாற்றுகின்ற சாதாரணத் தொழிலாளர் களைத்தவிர,மேல் அதிகாரிகள் எவரும் தமது வீட்டிலிருந்து உணவு கொண்டு வந்து உண்பதில்லை.அதற்குக் காரணம் என்ன?

அணுஉலையில் பணியாற்றுகின்ற மேல் மட்ட அலுவலர்களும் அதிகாரி களும் உண்பதற்கு 50 கிலோ மீட்டருக்கு அப்பாலிருந்து உணவு தயாரித்துக்
கொண்டு வரப்படுகிறது. பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட வேன் மூலம் தினந் தோறும் உணவு கொண்டுவரப்படுகிறதே ஏன்?

அணுக்கதிரால் ஆபத்து ஒன்றுமில்லைஎன்று வாய் கிழியச் சொல்கின்றவர் கள்,50 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து உணவு கொண்டுவரச் சொல்லி
உண்பது ஏன்? எந்த விஞ்ஞானியும் இதற்குப் பதில் சொல்லவில்லை.

1988 இல் நவம்பர் 21 அன்று கூடங்குளம் அணுஉலையை எதிர்த்து, அதனால் வரும் பேரழிவுகளைக் குறிப்பிட்டு, நாடாளுமன்றத்தில் வைகோ அவர்கள் கடுமையாக எதிர்த்துப் பேசினார். அன்றைய தினம் வைகோவைத் தவிர வேறு எவரும் வாயே திறக்கவில்லை. அதே சமயம் இந்தியாவுக்கு வருகை தந்த சோவியத் சனாதிபதி அவர்களுக்கு மும்பையிலும், டில்லியிலும் கறுப்புக் கொடி காட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

1989 இல் பேச்சிப்பாறையில் உள்ள நீரை அணுஉலைக்கு எடுக்கப்போவதாக
தகவல் பரவியதை ஒட்டி, நாகர்கோயிலிலும் அதன் சுற்று வட்டாரங் களிலும் 101 தொடர் கூட்டங்களை நடத்தி எதிர்ப்புத் தெரிவித்தனர்.பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர்க் குழாய் அமைக்க நாட்டப் பட்ட கற்களைப் பிடுங்கி எறியும் போராட்டம் 1990 இல் நடைபெற்றது.

பிரதமர் இந்திராகாந்தி, அணுஉலைக் கழிவுகளைக் குற்றாலம் மலையில்
புதைக்க வேண்டும் என்று ஏற்பாடு செய்தார். அப்போது மாண்புமிகு எம்.ஜி.ஆர். அவர்கள் இதை ஏற்க முடியாது என்று திட்டவட்டமாக அறிவித்தார். அணுக் கழிவுகளைக் குற்றாலம் மலையில் புதைத்திட எதிர்ப்புத் தெரிவித்த எம்.ஜி. ஆர். அவர்களின் பெயரால் இன்று ஆட்சி நடத்துபவர்கள் “அணுஉலையால்
ஆபத்து இல்லை” என்று அறிக்கை விடுகின்றார்கள். அவர்களை ஏதோ ஒரு
சக்தி அடக்கி வைத்திருக்கிறது.

ஆனால், எந்த சக்தியாலும் அடக்க முடியாத தலைவர் வைகோ அவர்கள்
மட்டுமே அணுஉலை ஆபத்தை எதிர்த்து தொடர்ந்து போராடிக் கொண்டிருக் கிறார். 16.7.2013 அன்று வைகோ விடுத்துள்ள கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு அறிக்கை -அணுசக்தியைவிட பலம் வாய்ந்த மக்கள் சக்தியின் வெப்பம் நிறைந் திருப்பதைப் படிக்கும்போதே நம்மால் உணர முடிகிறது. மக்கள் அவர் பக்கம் திரும்பிப் பார்க்கின்றனர்.

கூடங்குளம் அணுமின் உலை தொடர்பான செய்திகளைப் படிக்கும்போது,
அங்கே இட ஒதுக்கீடு எதுவும் இல்லை என்பது தெரிய வருகிறது. இந்த நிறுவ னங்களில் அதிகாரிகள், ஆய்வாளர்கள் மற்றும் பிற ஊழியர்கள் என்று பிரித் துப் பார்த்தால், அதற்குள் பதுங்கி இருக்கும் ஒரு உண்மை நம்மை அதிர்ச்சி யில் ஆழ்த்துகிறது.

தந்திரம் நிறைந்த ஒரு தனிக் கும்பல்,அணு ஆய்வு நிறுவனங்களை ஆக்கிர
மித்துக் கொண்டிருப்பதை அறியலாம்.மக்களின் வரிப்பணத்தை உடம்பு
நோகாமல் தின்று கொழுக்கும் கூட்டம் அது. இந்த ஆய்வு நிறுவனங்களில்
வேலை செய்பவர்களில் 75 விழுக்காடு அவர்களே ஆவர். அவர்களில் அணு
உலையின் பொறுப்புகளில் எவருமே இல்லை. அணுஆய்வு நிறுவனங்களில்
மட்டுமே அவர்கள் இருக்கின்றனர்.

கதிர்வீச்சு மண்ணாங்கட்டி எதுவும் அவாளின் கால் தூசியைக்கூடத் தீண்ட
முடியாது. அவாளின் சமத்து இந்தச் சுரணைகெட்ட தமிழனுக்குச் சுட்டுப் போட் டாலும் கூட வரமாட்டாது.இன்னும் ஆயிரம் பெரியார்கள் வர வேண்டும். ஆனால், கருணாநிதி போன்ற தன்னலப் பேர்வழிகளைத் தாங்கிப் பிடிக்காத பெரியாரின் இயக்கமாக இருக்க வேண்டும்.

கூடங்குளம் அமைவிடத்தின் நில இயல் வரலாறு

ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த புவி இயல் ஆய்வாளரான டாக்டர் ஹெல்மூட் ப்ருக்னர் 1987 ஆம் ஆண்டின் இறுதியில் கூடங்குளம் வந்து ஆய்வு  மேற் கொண்டார். பல்வேறு கால கட்டங்களில் நில இயல் கடல் மட்டம் எவ்வாறு உயர்ந்து தாழ்ந்தது என ஆராய்பவர் இவர். இன்று ஜெர்மன் நாட்டின் மார்பர்க் பல்கலைக் கழகத்தின் புவி இயல் துறைத் தலைவராக உள்ளார்.

கூடங்குளம் அணுமின் நிலையத்திற்குத் தொலைவில் வடமேற்கில் உள்ள
இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் சுண்ணாம்புக் குவாரியில் இவர் ஆய்வு
மேற்கொண்டார்.

சுமார் 2 கோடி ஆண்டுகட்கு முன்பு (Early Miocene)  இந்தப் பகுதியைக் கடல் ஆக்கி ரமித்தது என்றும், அதன் பிறகு வந்த ஒன்றரைக் கோடி ஆண்டில் (Late Miocene) இது கடலில் இருந்து மெதுவாக மேல் எழும்பியது என்றும், இவரது ஆய்வுகள் கணித்தன.

கடலுள் இருந்த காலத்தில் எற்பட்ட படிவங்களின் பிற்காலத்திய வெளிப் பாடே கூடங்குள சுண்ணாம்புப் பாறைகள் என்று குறிப்பிட்ட இவர், எரிமலை - பூகம்பம் - சுனாமி போன்ற அபாயங்கள் இதற்குள் அடக்கம் என்பதையும் குறிப் பிட்டுள்ளார். இவரது ஆய்வுகள் 1988, 1989 ஆம் ஆண்டுகளில் வெளி யாயின.

ப்ருக்னரின் ஆய்வினைத் தொடர்ந்து நில இயல் துறையைச் சார்ந்த பல அறி ஞர்களும் ஆய்வு நடத்தினர். அனைவரது ஆய்வுகளும் கூடங்குளம் அமை விடம் அணுமின்உலை கட்டு மானத்திற்கு உகந்த இடமல்ல என்பதனை உறுதிப்படுத்தும் விதத்திலேயே அமைந்திருந்தன.

தென் தனுஷ்கோடி கடலுள் மூழ்கியது ஏன் என்ற கேள்விக்கு விடையளிப் பதைப் போல் அவர்களின் ஆய்வு அறிக்கைகள் அமைந்திருந்தன. 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் நாளில் நிகழ்ந்த சுனாமி பேரழிவின்போது, அப்போது கடலுள் மூழ்கிப்போன தென் தனுஷ் கோடி நகரத்தின் அழிவுகளை அப்பகுதி மீனவ மக்கள் கண்டனர்.
தென் தனுஷ்கோடி என்பது கடலுள் உடைந்து விழுந்து மூழ்கி அழிந்துபோன
நகரம். தனுஷ்கோடி முற்றிலுமாக மனிதரற்ற இடமாக மாறிப்போனது. 1948-1949 ஆம் ஆண்டுகளில் அந்த நகரின் தென்பகுதி நிலம் திடீரென்று உடைப்புக்கு உள்ளானது. இந்த நில உடைப்பு தென் தனுஷ்கோடி முழுவதையும் கடல் விழுங்கியது. இது குறித்த தகவல்கள் 2007 ஆம் ஆண்டில் வெளியாயின. ஓர் அறிவியல் ஆய்வின் வழியாகத்தான் வெளிச்சத்திற்கு வந்தன.

கடலுள் தாழ்ந்துபோன தென் தனுஷ்கோடிக்கும், கூடங்குளம் அணுமின் நில யத்திற்கும் இடையில் உள்ள தூரம் வடகிழக்கில் 218 கிலோ மீட்டர் ஆகும்.
எனவே,அதைப்பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்? என்று சிலர் கேட்கக் கூடும். இக்கேள்வி அறிவியல் ரீதியான சரியான கேள்வியாக இருக்க முடி யாது. ஏனெனில் இவை இரண்டும் அமைந்திருப்பது மன்னார் வளைகுடாவின் கடலோரப்பகுதியில்தான் என்பதை நினைவிற் கொள்ள வேண்டும்.

தனுஷ்கோடிக் கடற்கரையில் 62 ஆண்டுகளுக்கு முன்பு அழிவை ஏற்படுத்திய சுனாமி, நில மேல் ஓட்டின் செங்குத்தான நகர்வு, மன்னார் வளைகுடாவின் ஒட்டுமொத்த கடல் கரையிலும் வரமாட்டாது என்று எப்படிச் சொல்ல முடி யும்? அறிஞர்கள் பலரின் ஆய்வு அறிக்கைகள்தாம் இத்தகைய வினாக்களை எழுப்புகின்றன.

2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்காவின் அணுசக்திக் கட்டுப் பாட்டு ஆணையம் (United States Nuclear Regulatory Commission) சுனாமி பேரிடரை எதிர் கொள்ள அணு உலைகளின் அமைவிடங்கள் எப்படிப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற அறிவியல் ஆவணத்தை வெளியிட்டது. அதில்
கூறப்பட்டுள்ள மிக மிக முக்கியமான கருத்தைக் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் அமைவிடத்தைத் தேர்ந்தெடுத்த அதிகாரிகள் குழு அறிந்திருக்க வில்லை என்பது இன்று வெளிச்சத்திற்கு வந்துவிட்டது.

அணுஉலை ஒன்றைக் கடலோரப் பகுதியில் நிறுவும்போது, கடலால் எத்த கைய ஆபத்துகள் வரும் என்பதை அமைவிடத்தைத் தேர்வு செய்யும் போதே தொலைநோக்குடன் கணக்கிட வேண்டும். இந்த அபாயங்களில் முக்கிய
மானது சுனாமியால் வரும் அபாயமாகும்.

சுனாமியால் வரும் ஆபத்தை கணக்கிட கடந்த பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்தப் பகுதியைத் தாக்கிய சுனாமிகள் (Paleotsunami) குறித்த தகவல்களை
முதலில் சேகரிக்க வேண்டும். அதன் பின்னர் அமைவிடத்தின் அருகிலும்
(near field tsunami) தொலைவிலும் (Farfield tsunami) சுனாமிகளை உருவாக்க வாய்ப்
பு ள்ள பூகம்ப மையங்களையும், எரிமலைகளையும், நிலச்சரிவுகளை ஏற்படுத் தக்கூடிய காரணிகளான சரிந்து சாயும் வண்டல் குவியல்கள் (Slumps) குறித்த தகவல் களையும் திரட்ட வேண்டும். இத்தகவல் களில் ஒன்றைக்கூட அறி வியல் அடிப்படையில் முறையாக கூடங்குளம் அணுமின் திட்ட நிர்வாகிகள்
திரட்டவில்லை.

தொடரும்.......


நன்றிகள்

கட்டுரையாளர் :- கவிஞர் தமிழ்மறவன்

வெளியீடு :- சங்கொலி

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு வரலாமே.

No comments:

Post a Comment