நேற்று (23.08.13 ) கடலூர் மாவட்ட தேர்தல் நிதி அளிப்பு கூட்டம் , நெய்வேலி மந்தாரக்குப்பத்தில் ம.தி.மு.க.தேர்தல் நிதி மற்றும் கட்சி வளர்ச்சி நிதி வழங்கும் கூட்டம் மாவட்ட செயலாளர் ராம லிங்கம் தலை மையில் நடந்தது. இதில் கலந்து கொண்ட #வைகோ, தமிழனத்திற்காக போரா டும் ஒரே இயக்கம் ம.தி.மு.க. என்று கூறினார்.
மாநில பொருளாளர் மாசிலாமணி, ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் குணசேகரன், வெளியீட்டு அணி செயலாளர் வந்தியதேவன், மாவட்ட அவை தலைவர் பெருமாள், பொருளாளர் வேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் பிச்சை வரவேற்றார்.
கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண் டார். அவரிடம் கடலூர் மாவட்டத்தின் சார்பில் ரூ.27 லட்சம் நிதி வழங்கப் பட்டது. அப்போது அவர் பேசியதாவது:-
தானே புயல் பாதித்த கடலூர் மாவட்டத்தில் ம.தி.மு.க. வினர் மிகுந்த பாடு பட்டு அளித்த இந்நிதி நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாகும். அதிகாரத்தை பயன்படுத்தியோ, தவறான முறையிலோ இப்பணம் வசூல் செய்யப்பட்டது அல்ல.
தமிழகத்தின் பிரச்சினைகள் தீர நாடாளுமன்றத்தில் ம.தி.மு.க. சார்பில் வைகோ குரல் கொடுக்க வேண்டும் என்கிற எண்ணத்தின் அடிப்படையில் பொதுமக்கள் இந்நிதியை அளித்துள்ளார்கள். கடந்த காலங்களில் தேர்தல் களத்தை சந்திக்க பணம் தேவையில்லை. ஆனால் தற்போது தேர்தல் செல வினம் அதிகரித்துள்ளதால் பணம் தேவைப்படுகிறது.
மிகப் பெரிய தலைவர்கள் கூட கொள்கையை பாதுகாக்க பொது மக்களிடம் இருந்து நிதி திரட்டியிருக்கிறார்கள். அந்த வகையில் ம.தி.மு.க. தமிழர்களின் நலன் காக்க பொதுமக்களிடம் இருந்து வெளிப்படையாக நிதி திரட்டுகிறது.
ஈழத் தமிழர்களுக்கு நேர்ந்த கொடுமையாயினும், காவிரி பிரச்சினை, முல்லை பெரியாறு பிரச்சினை, உலகில் எந்த நாட்டில் தமிழர்கள் தாக்கப்பட்டாலும், அவர்களை காத்து கண்ணீரை துடைக்கின்ற நாங்கள் பலமாக இருக்க வேண்டும்.
தமிழ் இனத்திற்கு பச்சை துரோகம் செய்தது, ஊழல் ஆட்சி, விலைவாசி உயர் வுக்கு காரணமான காங்கிரஸ் கட்சி தூக்கியெறியப்பட வேண்டும். வருகின்ற தேர்தலில் ம.தி.மு.க. போட்டியிடும், எவ்வாறு வெற்றிபெறுவோம் என்பதை விருதுநகரில் நடைபெற உள்ள மாநாட்டில் தெரிவிப்பேன்.
கொழும்பில் காமன்வெல்த் மாநாடு நடக்க கூடாது என்பது தான் ம.தி.மு.க. வின் கோரிக்கை. தமிழ் இனத்திற்காக போராடுகின்ற ஒரே இயக்கமான ம.தி. மு.க. கட்சியை கடந்த 20 ஆண்டுகளாக மனிதாபிமானத்தோடு நேர்மையாக நடத்தி வருகிறோம்.
தமிழ்நாட்டில் அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய கட்சிகளுக்கு மாற்று கட்சியாக ம.தி.மு.க. வரும். புதிய வாக்காளர்கள், இளைஞர்களிடையே ஏற்பட்டுள்ள நம்பிக்கையால் ம.தி.மு.க. எழுச்சி கண்டுள்ளது. ஆகையால் ஒளிமயமான எதிர்காலம் தொடங்கி உள்ளது.
இவ்வாறு வைகோ பேசினர்.

No comments:
Post a Comment