Tuesday, August 27, 2013

போராட்டம் நிச்சயம் வெல்லும்!

அணுமின் உலைக்கு எதிரான #வைகோ வின் போராட்டம் நிச்சயம் வெல்லும்!

கூடங்குளத்தில் தமிழக அரசின் இசைவுடன் மத்திய அரசு ரஷ்ய நாட்டு உதவி யுடன் நிறுவியுள்ள அணு உலையை அகற்றக்கோரி அணு உலைக் கெதிரான மக்கள் போராட்டம் 700 நாட்களையும் தாண்டி தொடர் போராட்டமாக தமிழகத் தில் நடைபெற்று வருவது சரித்திரத்தில் இடம்பெற விருக்கும் நிகழ்வாகும். அணுசக்தி எதிர்ப்பு மக்கள் இயக்கதினரும், பொதுமக்களும், மீனவ சமுதாயத் தினரும்,விவசாயப் பெருங்குடி மக்களும் ஒன்றிணைந்து இடிந்தகரையில் இந்த அறப்போராட்டத்தினை இடைவிடாமல் தொடர்ந்து நடத்திக் கொண்டு
உள்ளார்கள்.

இந்த அணு உலைக்கான ஒப்பந்தத்தை,மறைந்த இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி
அவர்கள் ரஷ்யாவுடன் மேற்கொண்ட போதே, மாநிலங்களவை உறுப்பினராய்
இருந்த வைகோ அவர்கள், தமிழகத்தில் அணு உலை கூடாது என்று தனது
கடுமையான எதிர்ப்பினை அவையில் பதிவு செய்துள்ளார்.

ரஷ்யாவின் உதவியோடு கூடங்குளத்தில் நிறுவப்பட்டு விரைவில் முழுமை யாக இயங்கும் என அறிவிக்கப் பட்டு வரும் அணுமின் நிலையம், திடீரென தமிழகத்திற்குள் வந்துவிட வில்லை. ஆந்திர மாநிலத்தில் நாகார்ஜூன சாக ரிலும், கர்நாடக மாநிலத்தில் கைக்காவிலும், கேரளத்தில் பூதகான் கெட்டு என்ற இடத்திலும் தொடங்குவதற்கு உத்தேசிக்கப்பட்டு இருந்த இந்த அணு உலை, அந்தந்த மாநில மக்களின் கடும் கோபத்தால் எழுந்த எதிர்ப்பின் விளை வாக கைவிடப் பட்டது.

1992 ஆம் ஆண்டில் தென் மாநில முதல்வர்கள் மாநாடு நடை பெற்ற போது,
ஏனைய மாநில முதல்வர்கள் தமிழகத்தில் இந்த அணு உலையை தமிழக அரசு அமைக்க வேண்டு மென்றும் உற்பத்தியாகும் மின்சாரத்தை அண்டை தென் மாநிலங்கள் பகிர்ந்து கொள்வது என்றும், இதற்கான ஆரம்ப கட்ட நிதியுத வினை ஆந்திர, கர்நாடக,கேரள மாநிலங்கள் தமிழகத்திற்கு வழங்குவது என் றும் திட்டமிட்டு வஞ்சக எண்ணத்துடன் மேற்கொள்ளப்பட்ட முடிவை சிறிதும் சிந்திக்க முன்வராத தமிழகம் ஒப்புக்கொண்டதன் விளைவாக கூடங்குளத்தில் அணுமின் உலையை நிறுவிடும் சூழல் தமிழக அரசுக்கு ஏற்பட்டது.

கூடங்குளம் அணுமின் உலை, மக்களின் உயிர்களுக்கு உலைவைக்கும் திட் டம் என்பதை உணராத தமிழக அரசு, ஏனைய மாநிலங்களைப் போன்று எதிர்ப் பினை மத்திய அரசுக்கு தெரிவிக்க முன்வராமல் மத்திய அரசின் வற்புறுத்
தலுக்கு இணங்கி, கூடங்குளத்தில் அணுமின் உலை அமைப்பதற்கு தேவை யான இடத்தையும், உள் கட்டமைப்பிற்கு தேவையான மின்சாரத்தையும், சாலை வசதிகளையும் இன்னும் பிற உதவிகளையும் தமிழகத்தை மாறி மாறி ஆட்சி புரிந்து வருகின்ற தி.மு.க - அ.தி.மு.க அரசுகள் செய்து கொடுத்து, மக்கள் உயிருக்கு உலைவைத்து விட்ட காரணிகளாக முதல் இடத்தில் இந்நாள் வரை இருந்து வந்து கொண்டு உள்ளனர்.

நில ஆய்வு, கட்டுமானப்பணி, உற்பத்தி,பின்விளைவு இத்தனையும் முன்ன தாகவே ஆய்ந்து அறிந்து தெரிந்து வைத்திருந்த வைகோ அவர்கள், அணு
உலையின் பாதிப்புகள் மக்களையும் விலங்குகளையும், கால்நடைகளையும்,
பயிர் வளங்களையும் கடுமையாக காலா காலத்திற்கும் பாதிக்கும் என்பதால்,
கூடங்குளத்தில் அணுமின் உலையை அறவே அமைக்கக் கூடாது என்று தன்
எதிர்ப்பினை அன்றே பதிவு செய்தார்.

இருந்தபோதிலும், மாநில அரசு வைகோவின் கருத்தை ஏற்க மறுத்து, கூடங் குளம் அணுமின் உலை அமைவதற்கு பிள்ளையார் சுழி போட்டது. மக்கள் தலைவர் வைகோ அவர்கள் தொடர்ந்து தன் கருத்தில் இருந்து நழுவிடாமல் இன்று வரை உறுதியுடன் போராடிக் கொண்டு உள்ளார்கள். வைகோவின் கருத்து நியாயமானது என்பதை ஏற்றுக் கொண்ட விஞ்ஞானிகளும், அணு உலை எதிர்ப்பாளர்களும், பொதுமக்களும் கூடங்குளத்தில் அணுமின் உலை
செயல்படக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஆந்திரம், கர்நாடகம், கேரளம் ஆகிய மூன்று மாநிலங்களும் மக்கள் எதிர்ப் புக் கு அடிபணிந்து கைவிட்டதை உணர்ந்த தமிழகம்,மக்களை பாதிப்பிற்கு ஆளாக் கும் அணுமின் உலைத் திட்டத்தை ஏற்று செயல்படுத்த ஒப்புக் கொண்டது மா பெரும் தவறாகும். இந்த தவறை செய்த அரசுகள் மக்களால் மாறி மாறி ஆட்சி பீடத்தில் அமர்த்தப்பட்டு வரும் தி.மு.க - அ.தி.மு.க அரசுகள் என்பதை மக்கள் உணர்ந்து சிந்திக்க முன்வர வேண்டும். மக்களின் உயிரை துச்சமெனக் கருதி யதன் விளைவாகவே துணிந்து இச்செயலை தமிழக அரசு மேற்கொன் டது.

புகுஷிமா அணுமின் உலை விபத்திற்குப் பின், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, சீனா
ஆகிய நாடுகள் ஒட்டுமொத்தமாக அணுமின் திட்டங்களைக் கைவிட்டு விட் டன. ஜெர்மனி படிப்படியாக தன் நாட்டில் உள்ள அணுமின் உலைகளுக்கு மூடு விழாவினை நடத்தி வருகின்றது.துருக்கி, சிரியா, ஜோர்டான், போலந்து, எகிப்து, இஸ்ரேல், நைஜீரியா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபுக் குடியரசுகள்
ஆகிய நாடுகள் அணுமின் திட்டங்களின் பக்கமே தலைவைத்துப் படுக்க வில்லை.

உலகிலேயே மிகப்பெரிய அணுசக்தி நிறுவனமான, ‘அரீவா ஆஃப் பிரான்ஸ்’
புகுஷிமா விபத்தின் விளைவாக, பல்லாயிரம் கோடி டாலர்கள் முதலீடுகள்
கொண்ட, ஐரோப்பிய அதிசக்தி அணுமின் உலைத்திட்டம், நீதிமன்ற வழக்கால் முடக்கப்பட்டுவிட்டது.இத்தனை விசயங்களையும் அறிந்த தமிழகஅரசு கூடங் குளம் அணுமின் உலை திட்டத்தின் ஆபத்துகளை சிறிதும் உணராமல்,அதனை ஏற்று செயல்பட உறுதுணையாக இருந்தது ஏன் என்பது தமிழக மக்களுக்கு புரியாத புதிராகவே உள்ளது.



மறுமலர்ச்சி தி.மு.க.வின் பொதுச் செயலாளரான மக்கள் தலைவர் வைகோ
அவர்கள், தென் தமிழ்நாட்டிற்கு பேரழிவினை ஏற்படுத்தும் அபாயகரமான திட் டம் கூடங்குளம் அணுமின் உலை என்பதையும் மத்திய அரசின் வஞ்சக ஏமாற்று வேலை என்பதையும் எடுத்து உரைத்து, கூடங்குளத்தில் நிறுவப்
பட்டுள்ள அணுமின் உலை அகற்றப்பட வேண்டும் என்ற உணர்வுடன் தமிழக
மெங்கும் மக்களிடம் தன் எண்ணத்தை வெளிப்படுத்தி வருவதுடன், போராடி
வரும் மக்களுக்கு தன் இயக்கத்தின் முழு ஆதரவையும் வழங்கி, தானும்
மக்களுடன் இணைந்து போராடி வந்துள்ளார்கள்.

நாட்டின் நலன் கருதியும், வருங்கால சந்ததிகளின் நல்வாழ்விற்காகவும், மேலை நாடுகளே இத்தகைய அணுமின் நிலையங்களை மூடி வந்து கொண் டுள்ள நிலையில், வளர்ந்து வரும் நம் நாடு இதுபோன்ற ஆபத்தான திட்டங் களைக் கொண்டுவர முனைவது தேவை அற்றது என்பதை பல்வேறு கூட்டங் களில் தான் பங்கு பெற்று ஆற்றுகின்ற உரையின் வாயிலாக எடுத்துரைத்து மக்கள் மனதில் பதிவு செய்துள்ளதன் மூலமாக அணுமின் உலை மிகவும் ஆபத்தானது என்பதை உணர்ந்து கொண்ட மக்கள், வைகோவின் கருத்தினை முழுமையாக ஏற்று அவரது குரலுக்கு செவிசாய்த்து போராடிக் கொண்டு உள் ளார்கள்.

இந்திய நாட்டின் ஊழல் அரசியல் வாதிகள் மேற்கொண்டுவரும் பல்வேறு வித மான ஊழல்களின் வாயிலாக பல இலட்சம் கோடி ரூபாய்கள் நாட்டிற்கு இழப்பு ஏற்பட்டு வரும் நிலையில் கூடங்குளம் அணுமின் உலைக்காக செலவி டப்பட்டுள்ளதாக கூறப்படும் 13,000 கோடி ரூபாய் என்பது ஒன்றும் பெரிய தொகை அல்ல என்பதும், இந்த அணுமின் உலையால் ஒரு உயிர் பறிபோனா லும் , இழந்த உயிரை மத்திய- மாநில அரசுகளால் மீட்டுத்தர இயலுமா? என் பதும் மக்கள் தலைவர் வைகோ அவர்களின் ஆணித்தரமான கேள்வியாகும்.

மின்சக்தி பற்றாக்குறையை சரிகட்ட அணுமின் சக்தி தான் தீர்வு எனும் முடி வை தமிழக அரசு குறிப்பாக தி.மு.க -அ.தி.மு.க அரசுகள் மேற்கொண்ட போதே, இது மக்கள் ஒவ்வொருவரின் தலைக்கு மேல் தொங்கும் கத்தி போன்று ஆபத் தானது. எனவே அணுமின் திட்டத்தினை நாம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளக் கூடாது.

அனல் மின் நிலையம், நீர் மின் நிலையம், காற்றாலை மின்சாரம் ஆகியன ஏற் கனவே நடைமுறையில் இருந்து வரும் வழிமுறைகளுடன், இன்றும் விஞ் ஞானப் பூர்வமாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி எனும் பல்வேறு வழிகளை கண்ட றிய ஊக்குவித்து அதில் பயணப்படுவதே தமிழக மக்களின் உயிருக்கும் -உடைமைக்கும் - புவிக்கும், உரிய பாதுகாப்பான வழியாகும் என்பதை அரசு
உணராமல் ஆபத்துகள் மிகுந்த அணுமின் உலை திட்டத்திற்கு ஆதரவளித்து மக்களுக்கு எதிராகவே மத்திய,மாநில அரசுகள் செயல்பட்டு உள்ளன என்பதை உணர முடிகின்றது.

குடிநீர், கழிப்பிடம், சுகாதாரம்,மருத்துவம் போன்ற அடிப்படை  வசதிகளுக்காக வோ, சாலைகள், பேருந்து வசதிகள் கோரியோ கூடங்குளம் மக்கள் தங்களின்
அன்றாட வாழ்க்கை நடைமுறைகளை கைவிட்டுவிட்டு போராட்டத்தை நடத் த வில்லை. மாறாக விலைமதிக்க இயலாத மனித உயிருக்கு உலை வைக்கக் காத்திருக்கும் அணுமின் உலையை அகற்ற வேண்டுமென்று அப்பகுதியில் வாழும் ஒட்டுமொத்த மக்களும் அறவழியில் பல்வேறு போராட்டங்களை கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து நடத்து கின்றனர்.

கோடிக்கணக்கான ரூபாய்களை செலவிட்டு, மனித சமுதாயத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தி, ஒவ்வொரு மனித உயிருக்கும் உலை வைக்கக்கூடிய அணுமின் உலை வாயிலாக அணுமின்சாரம் தயாரிக்க வேண்டுமா? என்பதுதான் கூடங் குளம் வாழ் மக்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்தத் தமிழகமும் கேட்கும் கேள்வி. கதிர்வீச்சுகளால் மக்களை படிப்படியாக பூண்டோடு அழித்துக் கொல்லும் பேரா பத்து நிறைந்த கூடங்குளம் அணுமின் உலை தமிழகத்திற்கு தேவை தானா? என்று மத்திய, மாநில அரசுகளின் முன்பாக மக்கள் தலைவர் வைகோ அவர் கள்  முன்வைக்கும் வினா ஆகும்.

கூடங்குளம் பகுதியில் உள்ள அணுமின் நிலையத்தில் இருந்து 500மீட்டர் தூரத் திற்குள் மீன்பிடி தொழில் செய்யக் கூடாது. 2 கி.மீ. சுற்றளவிற்குள் அணுமின் நிலைய கட்டடங்கள் தவிர வேறு கட்டடங்கள் ஏதும் இருந்திடக் கூடாது. 5 கி.மீ. சுற்றளவிற்குள் மக்கள் யாரும் வசிக்கக் கூடாது. 5 கி.மீ. முதல் 16 கி.மீ.க் குள் 10 ஆயிரம் மக்களுக்கு மேல் வசிக்கக்கூடாது என பல கட்டுப்பாடுகள்
விதிக்கப்பட்டுள்ளதன் வாயிலாக அணுமின் உலையின் பேராபத்தை மக்க ளால் நன்கு உணர முடிகின்றது.

மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் உவரியிலிருந்து கன்னியாகுமரி மாவட்டம் வரையிலும் சுமார் 80 கி.மீ.கடற்கரை பகுதியின் நெடுகிலும் வசிக்கும் 3 இலட் சத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் அணுமின் உலையின் வாயிலாக பாதிப்பிற்கு உள்ளாவார்கள்.கூடங்குளம் அணுமின் உலையிலிருந்து 30 கி.மீ சுற்றளவிற்கு 10 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் தாங்கள் வசித்து வரும் பகுதியைவிட்டு
முழுவதுமாக வெளியேறும் சூழல் நேரிடும். எனவே அணுமின் உலை செயல் படத் தொடங்கினால் தங்களின் வாழ்வாதாரம் அடியோடு அழிந்துவிடும் என் பதை கண்கூடாக உணர்ந்து மக்கள் அச்சம் கொண்டுள்ளதன் விளைவாகவே
அப்பகுதி வாழ் மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

உக்ரைனில் நிகழ்ந்த செர்னோபில் அணுமின் உலை வெடித்துச் சிதறிய விபத் தில் உடனடியாக இறந்தவர்களின் எண்ணிக்கை 10,000 பேர்களாவர் இதன் பின் தொடர்ந்து நீடித்து வரும் கதிர்வீச்சு தாக்கத்தின் விளைவாக கடந்த 20 ஆண்டு களில் மாண்டவர்களின் எண்ணிக்கை 9 இலட்சத்து 85 ஆயிரம் பேர் களாவர் என்று புள்ளி விபரம் தெரிவிக்கின்றது.

கூடங்குளம் அணுமின் உலையில்  பயன்படுத்தப்பெறும் யுரேனியம் -புருட் டோனியம் ஆகிய மூலப் பொருட்களின் கழிவு கொடிய நச்சு ஆகும். இந்த கொடிய கழிவுகளை 24 ஆயிரம் ஆண்டுகள் பத்திரமாக பாதுகாக்கப்பட வேண் டும் என்பது விதியாகும். சிறு பிழை நிகழ்ந்தாலும் அது பேராபத்தாகவே முடி யும்.

இந்த நச்சுக்கழிவுகளை தேக்கி வைத்திருப் பதாலும், மறுசுழற்சி செய்தாலும் நிலத்தடி நீரும் - காற்றும் மாசுபடும். இதன் விளைவாக விளை நிலங்களும், பயிர்களும், கால் நடைகளும், உற்பத்தியாகும் அனைத்து உணவுப் பயிர்களும், தாவர வகைகளும் பாதிக்கப் படும். கதிர்வீச்சுக்கு ஆளான உணவை உட்கொள் ளும் எந்த உயிரினமும் பாதிப்பிற்கு உள்ளாகும். மேலும் அணு உலைகளை குளிர்விக்க கடல் தண்ணீரே பயன்படுத்தப்படும்.இந்தத் தன்ணீர் மீண்டும் அப் படியே கழிவுக்குழாய்கள் வழியாக கடலுக்குள் திருப்பி விடப்படும் போது கதிர் வீச்சு ஏற்பட்டு கடல் வாழ் உயிரினங்கள் மடியும். கடல் உணவான மீன்களை
உட்கொள்ளும் மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி மரணத்தை தழுவிட நேரும்.

எனவேதான் மக்களின் பயன் பாட்டிற்கான மின்சாரம் மக்களின் உயிரையே குடிக்கும் எனில் அத்தகைய மின்சாரம் மக்களுக்கு தேவையில்லை என்பது தான் அணு உலைக்கு எதிராக போராடி வரும் மக்கள் தலைவர் வைகோவின் நிலைப்பாடு ஆகும்.

கூடங்குளம் இடிந்தகரை பகுதியின் மக்கள் சில மாதங்களுக்கு முன்,தங்களின் எதிர்ப்பை வெளிக்காட்டுவதற்காக, கடற்கரை மணலில் தங்களை புதைத்துக் கொண்டு நடத்திய போராட்டத்தில், மக்கள் தலைவர் வைகோ அவர்களும் பங்குபெற்றார்கள்.‘உண்மையின் குரல்’ என்று பறைசாற்றிக் கொள்ளும் ‘தின மலர்’ நாளிதழ் இந்நிகழ்வினைப் படமெடுத்து, வைகோ அவர்கள் மணலில் புதைந்தார்கள் என்று அவரையும், இடிந்தகரை மக்களையும் கொச்சைப் படுத் தும் வகையில் செய்தி வெளியிட்டிருந்தது. “இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்” எனும் குறள் வரிகளுக்கேற்ப வைகோ அவர்கள் அச்செய்தியை சிறிதளவும் பொருட் படுத்தவுமில்லை. அதுகுறித்து
விமர்சிக்கவும் இல்லை.

வைகோவின் சிந்தனை இலட்சியம் எண்ணம் எல்லாம் கூடங்குளம் அணுமின் உலையை மக்கள் சக்தியின் எழுச்சியுடன் அகற்றியே தீர வேண்டும் என்பது தான். எனவே மக்களின் போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டும், தன் இயக்கத்தின் சார்பில் போராட்டத்தை அறிவித்தும் செயல்பட்டுக் கொண்டுள் ளார் வைகோ.

கூடங்குளம் அணுமின் உலை ஒரு விபத்தை சந்திக்க நேருமேயாயின் எட்டுத் திசைகளிலும் 140 கி.மீ தொலைவுவரையிலும் தாக்கம் ஏற்பட்டு அனைத்து உயிரினங்களும் வாழ முடியாத நிலை உருவாகும் என்பதன் விளைவாகவே அணு உலைக்கு எதிரான போராட்டத்தை வைகோ அவர்கள் ஆகஸ்டு 10 ஆம் நாள் சென்னையில் அவரது தலைமையில் நடத்தினார்.

தமிழக மக்கள் துயருறும் போதெல்லாம் முதல் ஆளாக களத்தில் நின்று மக்க ளுக்காக உண்மையாகக் குரல் கொடுத்துப் போராடும்,அரசியல் நேர்மையாளர் மக்கள் தலைவர் வைகோ அவர்களின் அணுமின் உலைக்கு எதிரான அற நெறிப் போராட்டம் மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் நிச்சயம் வெல்லும் என்பது திண்ணமாகும்.

மதுரை அ.ஜெயபாலன்

No comments:

Post a Comment