மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் குரல், நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும்!
திருச்செங்கோட்டில் கழக வளர்ச்சி நிதி - தேர்தல் நிதி அளிப்புக் கூட்டத்தில் #வைகோ
நாமக்கல் மாவட்டக் கழகம் சார்பில், 12.8.2013 அன்று திருச்செங்கோட்டில், நிதி அளிப்புக் கூட்டம் நடைபெற்றது.நிதியினைப்பெற்றுக் கொண்டு கழகப் பொதுச் செயலாளர் வைகோ ஆற்றிய உரையில் இருந்து....
சிலப்பதிகாரத்தைத் தந்த இளங்கோ அடிகளால் போற்றப்பட்ட, காவிரிப்பூம்
பட்டினத்துக் கண்ணகிப் பெருந்தேவி,குன்றக் குரவர்கள் சந்திக்க, விண்ணுக் குச் செல்வதற்கு விடை கொடுத்து அனுப்பிய இடம் என்று, தமிழகத்தின் வர லாறும், இலக்கியங்களும் போற்றுகின்ற, ‘திருச்செங்குன்றம்’ என அழைக்கப் படும்,திருச்செங்கோடு திருநகரில், நாமக்கல் மாவட்டக் கழகத்தின் சார்பில் தேர்தல் நிதி, கழக வளர்ச்சி நிதி வழங்குகின்ற இனிய நிகழ்வில் உங்களைச் சந்திப்பதில் பெருமகிழ்வு அடைகிறேன்.
சில நேரங்களில் எதிர்பார்ப்பது நடப்பது இல்லை. சில நேரங்களில் எதிர்பாரா தது நடக்கிறது. எதிர்பார்த்த காரியம் நடைபெறுகிறபோது, நான் கவலைப் படு வது இல்லை. எதிர்பாராத திகைப்பு ஏற்படுகின்றபோது, அது நம்முடைய
போராட்டக் களத்தில், பாலைவனத்தில் பயணிக்கின்றவனுக்கு ஒரு பசுஞ் சோலையும், பேரீச்சை மரங்களும், சுனைநீர் ஊற்றுகளும் கண்ணில்பட,
களைப்பு நீங்கி பயணத்தைத் தொடர்ந்திட உதவிடுவதைப் போல, சிலநேரங் களில் அந்த எதிர்பாராத சம்பவங்கள் நடைபெறுகின்றன. இன்று அதுபோல ஒரு சம்பவம். ஆம்; நான் இவ்வளவு நிதியை எதிர்பார்க்கவில்லை.
நான் திராவிட முன்னேற்றக் கழகத்தில் பணி ஆற்றிய காலங்களில், பிரிக்கப்
படாத சேலம் மாவட்டத்தில், என்னை நெஞ்சார நேசித்தவர்களுள் ஒருவர்,
உயிரான சகோதரர் டி.என். குருசாமி அவர்கள். என்னோடு பயணித்தால் அரசி யலில், பெரிய பதவி நாற்காலிகளில் உட்காரலாம் என்ற எந்த உத்தரவாதமும்
இல்லாத சூழலில், என்னோடு பயணித்து வந்தவர். அந்த நாள் நிகழ்வுகள் என்
நினைவுக்கு வருகின்றன.
இந்த நிகழ்ச்சிக்கான தேதியை உறுதி செய்கின்ற வேளையில், நிதி திரட்டு
வதில் சற்றுச் சிரமம் இருக்கின்றது; நீங்கள் எதிர்பார்க்கின்ற அளவுக்கு நிதி
கொடுக்க முடியாது; இங்கே வேறு சில அமைப்புகளில் ஏற்பட்ட தேர்தல்கள்;
அதில் ஈடுபட வேண்டிய சூழல்கள்; இன்னும் பல காரணங்களைச் சொல்லி,
கடந்த முறை போல, நாங்கள் நிதி கொடுப்பது இயலாது என்று சொன்னபோது, நீங்கள் எவ்வளவு நிதி கொடுத்தாலும், தலைமைக் கழகம் அதை மகிழ்ச்சி யோடு ஏற்றுக் கொள்ளும் என்று சொன்னேன்.
கடந்த முறை 25 இலட்சம் நிதி வழங்கி இருந்தீர்கள். மாவட்டச் செயலாளர் கூறியதுபோல,நிதி திரட்டுவதில் உள்ள சிரமங்களை உணர்ந்தவன் என்பதால்,
இம்முறை அதிகபட்சமாக 20 இலட்சம் ரூபாய் நிதியை எதிர்பார்த்துத்தான் நான் இங்கே வந்தேன். இன்று இந்த நிகழ்ச்சிக் காகப் புறப்படுகின்ற வேளை யில், 25 கொடுத்து விடுவோம் என்றார். ஆனால் இங்கே, 35 இலட்சம் ரூபாய் நிதியை நீங்கள் தருகிறீர்கள் என்கிறபோது நான் நெகிழ்ந்து போகிறேன். தலை மைக் கழகத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின் றேன்.
இது பெரிய தொகை, அளப்பரிய தொகை.அரசியல் பொதுவாழ்வில் நாம் கடை பிடித்து வருகின்ற நேர்மைக்கும், சத்தியத்துக்கும், உண்மைக்கும், மக்கள் தந்து உள்ள அங்கீகாரமாகவே இதை நான் கருதுகிறேன். (கைதட்டல்). இதற்காக நீங் கள் எவ்வளவு சிரமப்பட்டு இருப்பீர்கள் என்பதை நான் உணருகிறேன். இதற் கான முயற்சி களில், இரவுபகலாக ஈடுபட்ட அனை வருக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.
குழந்தைவேலன், சுந்தரம் போன்றோரும், என்னோடு, என் உரையின் பால் ஈர்க்கப்பட்ட தம்பி முத்துமணி போன்ற இளைஞர்கள், அந்த நாள்களில், பிரிக் கப்படாத சேலம் மாவட்டத்தில் நான் கலந்துகொண்ட நிகழ்ச்சிகளில் எல்லாம் பங்கு ஏற்றார்கள்.இங்கே ரங்கசாமி பேசும்போது, ஒன்றிரண்டு நிகழ்வுகளைப் பற்றிக் குறிப்பிட்டார். நான் சுயமரியாதையை உயர்வாகக் கருதுகிறவன்; தன் மானத்தை விட்டுக் கொடுக்காமல் போராடுபவன். கண்ணியத்துக்காகத் தான் வாழ்கின்றோம்.
பொடா நீதிமன்றத்தில், நாங்கள் குற்றவாளிகளாக உட்கார வைக்கப்பட்டு
இருந்தோம். ஒரு சில அமர்வுகளுக்குப் பிறகு திடீரென ஒருநாள், நீதிபதி தலை மை எழுத்தரை அழைத்து ஏதோ சொல்ல, அவர் எங்களைப் பார்த்து, ‘நீங்கள் எழுந்து நில்லுங்கள்’ என்றார்.அன்று இருபது நிமிடங்கள் நின்று இருந்தோம். அடுத்த வாய்தாவில் நாங்கள் நின்று கொண்டு இருந்தோம்.அப்போது நீதிபதி எங்களை அமரச் சொன்னார். அப்போது நான் சொன்னேன்.மாட்சிமை தங்கிய நீதிபதி அவர்களே, கடந்த முறை எங்களை ஏன் நிற்கச் சொன்னீர்கள்? இன்று ஏன் அமரச் சொல்கிறீர்கள்? என்று கேட்டேன். நீங்கள் சொல்வது போல நிற்ப தற்கும்,சொன்னால் உட்காருவதற்குமான ஆள் வைகோ அல்ல என்றேன்.
இது தொடர்பாக, கஜேந்திர கட்கர் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த போது நடந்த ஒரு வழக்கில் அவர் தெரிவித்த கருத்தை, இந்த நீதி மன்றத்தில் பதிவு செய்கிறேன். கொலைக் குற்றம் சாட்டப் பட்டவர்களாக
இருந்தாலும், குற்றக் கூண்டில் நிறுத்தப்படு கின்ற பிரதி வாதிகள் எவராக
இருந்தாலும், நீதிமன்றத்துக்கு உள்ளே அவர்கள் அமர்வதற்கு வாய்ப்புக் கொடுக்க வேண்டும்; நீதிபதி உள்ளே நுழைகையில் மற்றவர்களைப் போல
மரியாதை நிமித்தமாக அவர்கள் எழுந்து நிற்க வேண்டும் என்று கூறி இருக் கிறார் என்றேன்.
அதற்கு நீதிபதி, அமெரிக்க நீதிமன்றத்தை மேற்கோள் காட்டி எதையோ சொன் னார். அதற்குள் நான் செல்ல விரும்பவில்லை.எதற்காக நிற்கச் சொன்னீர்கள்? என்று கேட்டேன்.அதற்கு அவர் பதில் சொல்லவில்லை. இப்போது நீங்கள் உட் காரச் சொல்லு கிறீர்கள்.இனி உட்காருவதும், உட்காராததும் எங்கள் உரிமை, எங்கள் விருப்பம். அதை நீங்கள் கட்டாயப் படுத்த முடியாது என்றேன். அதன் பிறகு, அந்த நீதிமன்றத்துக்கு வந்த அத்தனை நாள்களிலும், ஓராண்டு காலம்,
ஒவ்வொரு மாதமும் இரண்டு நாள்களில், காலை முதல் மாலை வரையிலும்
நாங்கள் நின்றுகொண்டே தான் இருந்தோம். (கைதட்டல்).எங்களுக்குள் பேசிக் கொள்வதும் கிடையாது.
கடைசியாக, 13 மாதங்கள் கழித்து ஒருநாள் நீதிபதி ஒரு வார்த்தை சொன்னார். அதைக் கேட்டு எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. உடனே நாங்கள் அமர்ந் தோம். செய்தியாளர் களை அழைத்து, தயவுசெய்து, நீதிபதி அவர்கள் இங்கே வருத்தப்பட்டுச் சொன்னதை நீங்கள் செய்தியாக ஆக்கி விடாதீர்கள்; அது பெரிய செய்தியாக ஆகி விடும் என்றேன். அந்தச் செய்தியாளர்களும், என் உணர்வைப் புரிந்து கொண்டார்கள். எழுதவில்லை.
நாங்கள் சிறையில் இருந்து வெளியே வந்தபிறகு, திடீரென ஒருநாள் எதிர்பா ராத விதமாக அவர் உயிர் இழந்த போது, முதல் ஆளாக அவரது இல்லத்துக்குச் சென்று மாலை வைத்து அஞ்சலி செலுத்தினேன்.
அதே நீதிபதி அவர்கள், வழக்கு விசாரணையின்போது ஒருநாள், நீங்கள் விடு தலைப்புலிகளை நேற்றும் ஆதரித்தேன்;இன்றும் ஆதரிக்கின்றேன்; நாளையும் ஆதரிக்கின்றேன் என்று பொதுக்கூட்டத்தில் பேசியதாகக் குற்றச்சாட்டு. உங்க ளுடைய விளக்கம் என்ன? என்று கேட்டார். நான் சொன்னேன்: நீதிபதி அவர் களே, நான் நேற்றும் விடுதலைப்புலிகளை ஆதரித்தேன் என்று சொன்ன போது, அவர் குறுக்கிட்டு, ஒரு நிமிடம் பொறுங்கள்; நன்கு யோசித்துச் சொல் லுங்கள்; என்றார். ஒருவேளை, அது ஏழாண்டுச் சிறைத்தண்டனைக்கு வழி வகுத்துவிடுமோ எனக் கருதி அவர் அப்படிச் சொன்னார். அப்போதும் நான்
சொன்னேன்: நான் ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகுதான் சொல்லு கிறேன்.
நான் விடுதலைப்புலிகளை நேற்றும் ஆதரித்தேன்; இன்றும் ஆதரிக் கின்றேன்; நாளையும் ஆதரிப்பேன் என்று திருமங்கலத்தில் பேசினேன். இன்றைக்கும் அதில் உறுதியாக இருக்கிறேன்’ என்று சொன்னேன்.அரசுத் தரப்பு வழக்கறிஞர் என்னிடம் சொன்னார்: எங்களுக்கு வேலையே இல்லை. நீங்கள்தான் அனைத் துக் குற்றச்சாட்டுகளையும் ஒப்புக் கொள்கின்றீர்களே? என்றார்.
என்னுடைய அன்புச் சகோதரர்களே,
நான் என்னை ஒரு பெரிய தலைவனாகக் கருதிக் கொள்வது இல்லை. மனித குல வரலாற்றில் மாபெரும் திருப்பங்களை ஏற்படுத்திய தலைவர்களைப் பற்றி நான் படித்து இருக்கின்றேன். அவர்கள் அளவுக்கு நான் உயர முடியாது; ஆனால் அவர்கள் போட்டு வைத்து இருக்கின்ற பாதையில் நடக்கக்கூடிய தகுதியைப் பெற்று இருக்கின்றேன்.
1963 ஆம் ஆண்டு, தென்னாப் பிரிக்காவில் ரிவோனியா வழக்கு விசாரணை நடைபெற்றது. இன்று மரண வாயிலில் நின்று கொண்டு இருக்கின்றாரே மாபெரும் தலைவர் நெல்சன் மண்டேலா அவரது வழக்கு.அதுகுறித்த புத்தகத் தை அண்மையில் தான் நான் படித்தேன். ஒரு வழக்கறிஞர் அந்த வழக்கு குறித்து முழுமையாக எழுதி இருக்கின்றார். அரசுத் தரப்பு குற்றச் சாட்டுகளைத் தொடுத்த போதெல்லாம், நெல்சன் மண்டேலா ஆம்; நாங்கள் இப்படிச் சொன் னோம்; இதைச் செய்தோம் என்று ஒப்புக் கொண்டு பேசினார். அவரோடு மற்ற வர்களும் அப்படியே சொன்னார்கள்.
இந்த வழக்கை இனி எப்படி நடத்துவது என்று நாங்கள் துடித்துப் போய்விட் டோம் என்று அவர் எழுதி இருக்கின்றார்.
என்ன தண்டனை?
அதுபோல,ஒரு இலட்சியத்தை முன்னெடுப்பதற்காகக் குரல் கொடுத்து விட்டு, பிறகு தண்டனை வரும் என்று அஞ்சி, நான் அப்படிப் பேசவில்லை என்று கூறி னால்,அது அந்தக் கொள்கைக்கு மட்டும் செய்கின்ற துரோகம் அல்ல; மக்களை ஏமாற்றுகின்ற மோசடி என்று கருதியதால்தான், நான் எடுத்த கருத்திலே உறுதியாக இருந்தேன். அந்த பொடா வழக்கு இன்னமும் முடியவில்லை.

அந்த வழக்கைத் திரும்பப் பெற முடியாது என்று பொடா நீதிமன்றம் சொன்ன தன் பேரில், உச்சநீதிமன்றத்தில் ஒரு தடை ஆணை பெற்று, அது நிலுவையில்
உள்ளது. இந்த ஆண்டிலோ, அடுத்த மாதத்திலோ, எப்போது வேண்டு மானா லும் விசாரணைக்கு வரலாம்.இதற்கு மேலும், முந்தைய ஆட்சியில் என் மீது இரண்டு தேசத்துரோக வழக்குகள் போடப்பட்டு இருக்கின்றன.
ஈழத்தமிழருக்கு இந்திய அரசு இழைத்த துரோகங்களைப் பட்டியல் இட்டு, குற் றம் சாட்டுகிறேன் என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டதற்காக என் மீது
வழக்கு. இந்த அரசிலும் அந்த வழக்கு தொடர்கிறது. இந்த வழக்குகள் எல்லாம்
விசாரணைக்கு வருகின்ற நாளை நான் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டு
இருக்கின்றேன். அவர்கள் என் மீது என்ன குற்றம் சாட்டி இருக்கின்றார்களோ,
அதை நான் மறுத்துப் பேசப் போவது இல்லை.
அதனால் எனக்கு ஒரு தண்டனை என்றால்,அதை நான் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்வேன். 1999 நாடாளுமன்றத் தேர்தலில், இந்தத் திருச்செங்கோடு தொகுதி யில் கழகம் போட்டியிட்டது. இலட்சக் கணக்கான மக்களைச் சந்தித்து, எங்கள்
வேட்பாளரை ஆதரித்துப் பிரச்சாரம் செய்தேன். குறைந்த வாக்குகள் வித்தியா சத்திலே அவர் வெற்றி பெற்றார். அமைச்சரவையில் சேரக் கூடாது என்று முன்பே முடிவு எடுத்து அறிவித்து இருந்தோம். அரசியலில் அதிகாரப் பதவி களுக்கு வருவதில் தவறு கிடையாது. அந்தப் பதவியைநேர்மையாகப் பயன் படுத்தி மக்களுக்குத் தொண்டு ஆற்ற வேண்டும்.
நான் நாடாளுமன்ற உறுப்பினராக மக்களுக்குப் பணி ஆற்றி இருக்கின்றேன். சாதி, மதம், கட்சி என எந்தப் பாகுபாடும் காட்டாமல் அனைத்துத் தரப்பினருக் காகவும் பணி ஆற்றி இருக்கின்றேன்.இந்திய ஜனநாயகத்தைக் காக்க, நாடாளு
மன்றத்தில் போராடி இருக்கின்றேன். ஈழத்தமிழரின் விடியலுக்காகக் குரல்
கொடுத்து இருக்கின்றேன். தாய்த் தமிழகத்தின் நதிநீர் உரிமைகள் போன்ற
பிரச்சினைகளுக்காக நான் போராடி இருக்கின்றேன்.
அந்தக் காலகட்டத்தில் வாஜ்பாய் அவர்கள் என்னை அமைச்சராக்க வற்புறுத் திய போதிலும் மறுத்தவன் நான் என்பது நாட்டுக்கே தெரியும்.ஆனால், இந்தத் தொகுதியில் இருந்து வெற்றி பெற்றவர், தாம் அமைச்சராக விரும்புவதாகக் கூறினார்.நான் அதை எதிர்பார்க்கவில்லை.அதை,தவறு என்றும் கருதவில் லை.அதற்கு முன்பும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து, இப்போதும் வெற்றி பெற்றவர், தாம் அமைச்சராக விரும்புவதாகக் கூறுகிறார்.என்னோடு வந்தால் பதவிகள் கிடைக்காது, கற்களும் முட்களும் நிறைந்த பாதையில் நடக்க வேண்டும் என்று சொன்னேன்.
ஆனால், இன்று என் சகாக்கள் நல்ல பதவிகளில் இருந்து நாட்டுக்குப் பணி
ஆற்றட்டும் என்று கருதியதால், வாஜ்பாய் அவர்களைச் சந்தித்து வற்புறுத்திக் கேட்டுக் கொண்டேன்.நீண்ட போராட்டத்துக்கு பிறகு, அவர்கள் வகுத்து இருந்த விதிகளை எல்லாம் தளர்த்திக் கொண்டு, என் வேண்டுகோளை அவர் நிறைவேற்றிக் கொடுத்தார். எனக்கு வந்த வாய்ப்பை கட்சிக்குப் பயன் படுத்திக் கொண்டேன்.
நான் பதவிகளை விரும்பியவன் அல்ல.மாற்று அரசியல் வேண்டும் எதற் கா கக் கேட்கிறோம்? ஊழல் அற்ற அரசியல், தன்னலம் அற்ற அரசியல்,உண்மை யாகவே தமிழக நலன்களைக் காக்கப் போராடுவதற்கு, லஞ்சம், ஊழல், கொள் ளை என்ற பேச்சுக்கே இடம் இல்லாத பொது வாழ்வு மலர்வதற்கு, மாற்று அரசியலை முன்னெடுப்பதற்கான முழுத் தகுதியும் கொண்டு இருக்கின்ற இயக்கம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம். (பலத்த கைதட்டல்).
பெரியார் அண்ணா பெயரைச் சொல்லவும், கொள்கை இலட்சியங்களைப் பேசவும் தகுதி உள்ள இயக்கமாக நமது இயக்கம் இருக்கின்றது.வளைகுடா நாடுகளில் உள்ள தமிழர்களுக்குத் துன்பம் நேர்ந்த போதெல்லாம் அவர்களை மீட்டு வந்து இருக்கின்றோம்; உலகில் தமிழர்களுக்கு எங்கே துன்பம் நேர்ந் தாலும், அவர்களைப் பாதுகாப்பதற்காகக் குரல் கொடுத்து இருக்கின்றோம். அதனால் தான், எங்கள் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்று
விரும்புகிறேன்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இவ்வாறு உரை ஆற்றினார்.

No comments:
Post a Comment