Monday, August 12, 2013

தமிழக அரசுக்குப் புதிய வருவாய் ?

தமிழக அரசுக்குப் புதிய வருவாய் வழி;

சென்னை எழும்பூர் அரசு ஆவணக் காப்பக இயக்குநரின் அரிய யோசனை!

அனைத்து அரசு அலுவலகங்களிலும் பின்பற்றப்படுமா?

சென்னை எழும்பூர் தொடர்வண்டி நிலையத்துக்கு எதிரே அமைந்து உள்ள சிவப்புக் கட்டடம், தமிழ்நாடு அரசின் ஆவணக் காப்பகம் ஆகும்.

ஆங்கிலேயர்கள் காலத்தில், அரசு ஆவணங்களைப் பாதுகாப்பதற்காகக் கட் டப்பட்டது. இராபர்ட் கிளைவ் காலத்திய அரசு நடவடிக்கைகள் தொடங்கி, இன்று வரையிலான மிக முக்கியமான கடிதங்கள், ஆவணங்கள் அனைத்தும் இங்கு சேகரித்து வைக்கப்பட்டு உள்ளன.

இந்த வளாகத்தின் உள்பகுதியில் ஒரு சிறிய தேநீர்க்கடை உள்ளது. அதன் வரு வாயைப் பெருக்குவதற்கும், அதன் வழியாக, தமிழக அரசின் வருவாயைப் பெருக்குவதற்கும், ஒரு புதிய ஏற்பாட்டினை ஆவணக் காப்பக இயக்குநர் மேற்கொண்டு உள்ளார்.

என்ன அந்த ஏற்பாடு?

ஆவணக் காப்பக சுற்றுச்சுவரில், இரண்டடிக்கு இரண்டு அடி என்ற அளவில் ஒரு ஓட்டை போட்டு, அதன் வழியாக, எழும்பூர் தொடர்வண்டி நிலையத்துக்கு எதிரே உள்ள நடைமேடையில் செல்வோர், அந்தக் கடையின் தேநீரைப் பருக வும், இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற உணவுகளைச் சுவைப்பதற்குமான ஏற்பாடுகளைச் செய்து உள்ளார். சாப்பிட்டு விட்டு நடைமேடையிலேயே கைகளைக் கழுவிக் கொள்ளலாம்.போக்குவரத்துக் காவலர்களின் தொல்லை யும் இல்லை.

அந்த ஓட்டைக்குக் கதவு எதுவும் இல்லை. இரவு ஆனதும், ஒரு அட்டையை மட்டும்தான் வைத்து மறைக்கின்றார்கள். எனவே,நடைமேடையில் படுத்து உறங்குவோர், அதை கையால் அகற்றி விட்டு, உள்ளே சென்று படுத்து உறங்க வும் வசதியாக இருக்கின்றது.

இத்தகைய ஏற்பாடு, தமிழகத்தில் இதுவே முதன் முறை. பாராட்டத்தக்க இந்த நடவடிக்கையை, காலியாகக் கிடக்கின்ற அனைத்து அரசு அலுவலக வளாகங் களிலும் நடைமுறைப்படுத்துவதற்கு, தமிழக அரசு முன்வருமா?



செய்தி &படங்கள் உதவி சங்கொலி குழு 

No comments:

Post a Comment