பிட்டுக்கு மண் சுமந்த இறைவன்
இரவு நேரத்தில் அந்தக் குதிரைகள் மீண்டும் நரிகளாக மாறித் தளைகளை அறுத்துக் கொண்டு அனைத்தையும் கடித்துப் போட்டுவிட்டு ஓடுகின்றன. ஆத்திரம் அடைந்த மன்னன் வாதவூரரைச் சிறையில் பூட்டுகிறான். சிறையில் கொடுமைகள் நடக்கின்றன. இறைவன் மேலும் திருவிளையாடல் செய் கிறான். வைகையில் தண்ணீர் பெருக்கு எடுக்கிறது. காலங்கெட்ட காலத்தில் வைகையில் தண்ணீரா? கரை உடைத்துப் பாய்கிறதே வெள்ளம் என்று கவலைப்பட்ட மன்னன் கரையை அடைப்பதற்கு வீட்டுக்கு ஒவ்வொருவராக வந்து பணியாற்றக் கட்டளை இடுகின்றான்.
அப்போதுதான் பிட்டு வாணியச்சியான வந்திக்கு - செந்தமிழ்ச்செல்விக்கு - அந்தக் கிழவிக்குக் கரையை அடைப்பதற்கு வீட்டில் பிள்ளை ஒருவரும் இல்லை யாதலால் இறைவன் சிறுபிள்ளையாக மண்வெட்டி யுடனும், கூடை யுடனும் ஓடிச்சென்று, ‘நான் கரையை அடைக்கிறேன். என்ன கொடுப்பாய்?’ என்று கேட்டான். அதற்கு வந்தி, ‘என்னிடம் ஒன்றும் இல்லை. உதிர்ந்த பிட்டு மட்டும்தான் இருக்கிறது’ என்று சொல்ல, பிட்டை வாங்கிக் கொண்டு, இவன் கரையையும் அடைக்காமல் தண்ணீரில் குதிப்பதும், நீந்துவதும், விளையாடு வதுமாக இருக்க, சேவகன் அதைக்கண்டு பிரம்பால் அடிக்க, அவன் முதுகில் விழுந்த அடி, அனைவரின் முதுகிலும் விழுந்தது, மன்னர் முதுகிலும் விழுந்தது.
வானத்தில் இருந்து எழுந்த ஒலி ‘சிறையில் இருக்கக்கூடிய வாதவூர் அடி களை விடுவித்திடுக’ எனக் கூற, அதன்பிறகு மன்னன் வேதனையுற்று விடு விக்க, வெளியே வந்த வாதவூர் அடிகள் ஆலவாய்ச் சொக்கர் இடத்தில் அருள் பெற்றுப் புறப்படுகிறார். ‘போய் வா ஒவ்வொரு இடமாக பல்வேறு ஆலயங் களுக்குச் சென்று, உத்திரகோசமங்கையில் - காளையார் கோவிலில் சென்று, திருமுதுகுன்றத்தில், திருக்கழுக் குன்றத்தில் எல்லா இடங்களையும் தரிசித்து விட்டுக் கடைசியில் திருச்சிற்றம்பலத்துக்கு வந்து சேர்வாய்’ என அருள் வாக்கு சொன்னபடி சிற்றம்பலத்துக்குப் போனார். அங்கே திருவாசகத்தைப் பாடினார்.
இதுதான் திருவாசகம் தோன்றுவதற்கான அடிநாதம். ‘நமசிவாய வாழ்க’ என்றுதான் முதலில் தொடங்குகிறது. ஆனால், நம்முடைய இளையராஜா அவர்கள் அதை முதலில் வைக்கவில்லை. முதலில் யாத்திரைப் பத்து வைக்கிறார். யாத்திரைப் பத்து என்றால் என்ன? பயணம் புறப்படுவோம் இந்த மண்ணுலகைவிட்டு, இச்சைகளை விட்டு றுந ளவயசவ வாந தடிரசநேல என்று சொல்லுகிறவர்கள்.
‘பூவார் சென்னி மன்னனெம் புயங்கப் பெருமான் சிறியோமை ஓவா துள்ளங் கலந்துணர்வாய் உருக்கும் வெள்ளக் கருணையினால் ஆ ஆ என்னப் பட்டன் பாய் ஆட்பட் டீர்வந் தொருப்படுமின் போவோம் காலம் வந்ததுகாண் பொய் விட்டுடையான் சுழல்புகவே'.
இது யாத்திரைப் பத்து. அதற்கு அடுத்து சிவபுராணத்தைப் பாடுகிறார். எடுத்த எடுப்பில் ‘நமசிவாய வாழ்க’ என்று வைக்காமல்
....... நின் பெருஞ்சீர்
‘பொல்லா வினையேன்
புகழுமாறு ஒன்றறியேன்’
‘உன்னைப் புகழக்கூடிய அறிவு ஆற்றல்எனக்கு இல்லையே’ என்று மாணிக்க வாசகர் பாடுகிற பாடலை வைத்து இருக்கிறார். இவர் மாணிக்கவாசகர் ஆகி விடுகிறார். ஏறக்குறைய நான் 20 முறை இந்த இசைப் படைப்பைக் கேட்டேன். அதைக் கேட்கும்போதுதான் ஏன் இந்தப் பாடலை வைத்தார்?- என்று எண்ணினேன்.
இந்தப் ‘பொல்லா வினையேன்’ என்ற பாடலைப் பாடும்போது, அமெரிக்கா நாட்டிலும், இங்கிலாந்து நாட்டிலும் இசைக்கருவிகளை இசைக்கக்கூடிய ஹாலிவுட் திரைப்படங்களுக்கு இசை அமைத்து வெற்றி கண்ட - விருது பெற்ற மாமேதை எழுதிய ஆங்கில வரிகளுக்கு இசைக்கருவிகளை இசைக் கிறார்களே, அந்தப் பாடல்களைத்தான் கேட்டீர்கள். பொல்லா வினையேன் என்று சொல்கிறபோது, I am just a man imperfect lowly.. அடுத்தவரிகள் How can I reach for something Holy... - பாடலும் மிக அருமையான பாடல். அந்த உன்னதமான இடத்தை நான் எப்படி அடைய முடியும்? இந்தப் பாடலை வைத்துவிட்டு, அதன் பிறகுதான்
‘நமசிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க
இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள்வாழ்க
ஆகமம் ஆகி நின்றண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவனடி வாழ்க’
எனும் சிவப்புராண வரிகளை வைத்து இருக்கிறார் இளையராஜா இந்தப் பாடலை இரண்டாவது பாடலாக வைத்து இருக்கிறார். அடுத்தப் பாடலும் மிக அருமையான பாடல்.
மாணிக்கவாசகர் மதுரையில் போய்க் கொண்டு இருக்கிறார். ஆங்காங்கு பெண் கள் மர நிழல்களில், வீடுகளில், முற்றங்களில், ஊஞ்சல்களில், அமர்ந்த வாறும், நின்றவாறும் பாடிக் கொண்டு இருக்கிறார்கள். இளம் சிறுவர்கள் ஆங் காங்கு ஒடித் திரிகிறார்கள். கிளிகள் கொஞ்சுகின்றன. சோலையில் குயில்கள் கூவுகின்றன. இதைப்பார்க்கின்ற வேளையில், அங்கே தும்பிகள், வண்டுகள் ரீங்காரம் செய்து பாடிக் கொண்டு பறக்கின்றன. அது அரச வண்டு. அந்த வண்டினைப் பார்த்துச் சொல்கிறார். ‘ஏன் இப்படிப் பாடித் திரிகிறீர்கள்? இறைவ னின் காலடியில் போய்ப் பாடுங்கள்’ என்று சொல்வதற்காக
‘தினைத்தனை உள்ளதோர் பூவினில்தேன் உண்ணாதே
நினைத்தொறும், காண்டொறும் பேசுந்தொறும் எப்போதும்
அனைத்தெலும்பும் உள்நெக ஆனந்தத்தேன் சொரியும்
குனிப்புடையானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ’
எனப் பாடுகிறார். இதுதான் அவர் அமைத்து இருக்கின்ற பாடல். அதற்கு அடுத்து எங்கே வருகிறார்? “பிடித்தப் பத்து”ப் பாடலை எடுத்தாள்கிறார் இளையராஜா
இதோ அந்தப் பாடல்:
“அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
அன்பினில் விளைந்தஆ ரமுதே
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே சிவபெரு மானே
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே.”
ஆக, பிடித்தப் பத்தில் இந்தப் பாடலைச் சொன்னார்.

No comments:
Post a Comment