Wednesday, August 14, 2013

வெற்றிக்கு நுழைவாயில்

வெற்றிக்கு நுழைவாயில் அமைக்கும் விருதுநகர் மாநாட்டில் இலட்சக் கணக்கில் திரளுவீர்!

தூத்துக்குடி நிதி அளிப்பு விழாவில் #வைகோ அழைப்பு

தூத்துக்குடி மாவட்ட மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில், கழக வளர்ச்சி நிதி-தேர்தல் நிதி வழங்கும் நிகழ்ச்சி 1.8.2013 அன்று தூத்துக்குடியில், துணைப் பொதுச்செய லாளர் நசரேத்துரை தலைமையில் நடைபெற்றது. நிதியினைப் பெற்றுக் கொண்டு கழகப் பொதுச்செயலாளர் வைகோ உரை ஆற்றினார்.அவரது உரை யில் இருந்து....

தூத்துக்குடி மாவட்டம், பெரும் நிதியை வழங்கி இருக்கின்றது. எத்தனையோ சோதனைகளுக்கு நடுவிலும், நமது மாவட்டச் செயலாளர், செயல் மாமணி, ஆருயிர் இளவல் ஜோயல் அவர்கள் சாதித்துக் காட்டி இருக்கின்றார். உவரி யில் தொடங்கி, நான்மாடக் கூடல் வரையிலும், மதுவின் கோரப்பிடியில்
இருந்து தமிழகத்தை விடுவிப்பதற்கு நாம் மேற்கொண்ட நடைபயணப் பிரச்சா ரத்தை, ஆறு நாள்கள் வெற்றிகரமாக நடத்திக் காட்டினார்.
எனக்கும்,என்னோடு வந்த 1200 தோழர்களுக்கும்,ஆறு நாள்களிலும், 18 வேளை அறுசுவை விருந்து அளித்து திக்குமுக்காடச் செய்தார். நல்ல உணவு படைப் பது ஜோயலுக்கு இயல்பு. நமது இல்லங்களில் நடைபெறுகின்ற விழாக்களில் எப்படி சிறப்பாக உணவு ஏற்பாடு செய்கின்றோமோ,அதைப்போலவே, அந்தப் 18 வேளைகளிலும் சுவைத்த விருந்தை, நானும், என் தோழர்களும் என்றைக் கும் மறக்கவே முடியாது.

அத்துடன், ஒவ்வொரு நாளும் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்து, வழிநெடு கிலும் கொடிகளைக் கட்டி வரவேற்று, விளம்பரங்கள் செய்து, தட்டார் மடம், திருச்செந்தூர்,தூத்துக்குடி, எப்போதும் வென்றான், கோவில்பட்டி என அனைத்து இடங்களிலும் பிரமாண்டமான பொதுக்கூட்டங்களையும் நடத்திக்
காட்டினீர்கள். எவ்வளவு சிரமமான வேலை?



உடன்குடியில், ஜோயல் அவர்களுடைய தந்தை அன்பாக வரவேற்று, இளநீர் சீவிக் கொடுத்து, அவர்களுடைய நிறுவனத்தில் என்னை உட்கார வைத்து, பக்கத்தில் அமர்ந்து படமும் எடுத்துக் கொண்டார். அப்போது நான் அவரிடம் சொன்னேன்: உங்கள் மகன், மறுமலர்ச்சி தி.மு.கழகத்துக்கு மிகப்பெரிய சொத்து. எனக்கு ஒரு பலமான துணையாக இருக்கின்றார்.ஒரு பெரிய படை பலத்தோடு பாடு படுகிறார். அவருக்கு ஒளிமயமான எதிர்காலம் பொதுவாழ் வில் காத்துக் கொண்டு இருக்கின்றது என்றேன்.

அப்போது அவர் சொன்னார்: நான் அவனை உங்களிடம் ஒப்படைத்து விட் டேன். நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என்றார். சட்டக் கல்லூரி மாணவனாக இருந்த காலத்தில் இருந்து என்னோடு இயங்கி வருகின்றார். அந்தத் தந்தைக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப் பட்டதால், ஜோயல் மனம் உடைந்து போனார்.

தமிழகத்திலேயே முதன்முதலாக, நன்கொடைச் சீட்டுகளை வாங்கு கின்ற நாளிலேயே ஐந்து இலட்சம் ரூபாயை நிதியாகத் தந்து தொடங்கி வைத்ததும் தம்பி ஜோயல்தான்.அவருடைய தந்தையார், தம்முடைய உழைப்பால் அந்தக் குடும்பத்தை முன்னேற்றிக் கொண்டு வந்தார்.

ஆனால், காய்ச்சல் என்று கூட அவர் ஒருநாளும் படுத்தது கிடையாது. இப் போது அவருக்கு உடல் நலம் என்கின்ற அதிர்ச்சியில் இருந்து தம்பி மீள முடியவில்லை. தந்தைக்கு மருத்துவமனையில் சிகிச்சை நடக்கின்றது.

நான் சொன்னேன்: ஜோயல் அவசரம் இல்லை. நீங்கள் எப்போது கொடுத்தா லும் சரி, எவ்வளவு கொடுத்தாலும் சரி, நான் வாங்கிக் கொள்கிறேன். இப்போது நீங்கள் தந்தைக்கு அருகில் இருந்து கவனித்துக் கொள்ளுங்கள் என்றேன்.
அவசரப்படுத்தவில்லை.

குடும்பப் பாசம் நிறைந்த இயக்கம் என்பது என்ன? நம்முடைய கவலை களைப் பகிர்ந்து கொள்வதுதானே? மகிழ்ச்சியில் பங்கு கொள்ள முடியா விட்டாலும் பரவாயில்லை, துன்பம் நேர்கையில் சேர்ந்து இருக்க வேண்டும். அதுதான் கட்சி.அப்படித்தான் இந்த இயக்கத்தை நடத்திக் கொண்டு இருக்கின்றோம். நீங் கள் நன்றாக இருக்க வேண்டும்; உங்கள் குடும்பத்தினர் மனமகிழ்ச்சி யோடு இருக்க வேண்டும் என்று கருதுபவன் நான். சுமைகளைத் தாங்கிப் பிடித்தால் தான், துன்பத்தில் இருந்து விடுபட முடியும்.

இத்தகைய நெருக்கடியில் இருந்தாலும் கூட, அவருடைய கடுமையான முயற்சியின் காரணமாகவும், அதற்கு உறுதுணையாக இருந்து பாடுபட்ட உங்களுடைய ஒத்துழைப்பும், திட்டமிட்ட பணியின் காரணமாகவும், எழுபது இலட்ச ரூபாயை நிதியாக அள்ளித் தந்து இருக்கின்றீர்கள்.(பலத்த கைதட்டல்).

உங்களுடைய முயற்சிகளை நான் பாராட்டுகிறேன். இந்த மாவட்டத்தில் நிலங்கள் வறண்டு கிடக்கின்ற வேளையில், வறட்சி கோரத் தாண்டவம் ஆடு கின்ற வேளையில், மக்கள் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்ற நேரத்தி லும் கூட, நம்மைப் பார்த்து முகம் சுழிக்காமல், தங்களால் இயன்ற நிதியைத் தந்த நல்ல உள்ளங்களுக்கும் நான் நன்றி தெரிவிக்கின்றேன்.

தமிழகத்துக்கு மாற்று அரசியல் தேவை. அதுகுறித்து விவாதிப் பதற்காக, மூன்று நாள்களுக்கு முன்பு 28 ஆம் தேதி, திருப்பரங்குன்றத்தில் 1000 இளைஞர் கள் திரண்டார்கள்.தமிழக அரசியலில் மாற்று சக்தி மறுமலர்ச்சி தி.மு.கழகம் தான் என்று அவர்கள் பிரகடனம் செய்து இருக்கின்றார்கள். மக்கள் நம்பிக்கை யை நாம் பெற்று இருக்கின்றோம். அது உரிய காலத்தில் வெளிப்படும்.

தோழர்களே, இருபது ஆண்டுகளாக இடைவிடாமல் இயங்கிக் கொண்டு இருக் கின்ற உங்களுடைய தூய பணிகள்தாம் அதற்குக் காரணம். நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்க இருக்கின்றோம். எத்தனை இடங்கள்? எந்த அணி? தூத்துக் குடியில் ம.தி.மு.க. போட்டி யிடுமா? என்றெல்லாம் கேட்கின்றார்கள். ஆம்; ம.தி.மு.க. போட்டியிடுகின்ற தொகுதிகளுள் ஒன்றாக தூத்துக்குடியும் இருக்க லாம். (பலத்த ஆரவாரம்).அதை, கழகத்தின் ஆட்சிமன்றக்குழு முடிவு செய்யும்.

நாம் முறையாக நிதி திரட்டு கின்றோம். துல்லியமாகக் கணக்கு வைத்து இருக் கின்றோம். வருமான வரித்துறையில் தாக்கல் செய்ய இருக்கின்றோம். என வே, திரட்டப் பட்ட நிதிக்கான கணக்கு வழக்கு களைத் தலைமைக் கழகத்தில்
முறையாகச் சேர்ப்பிக்க வேண்டும் என, உங்களை மட்டும் அல்ல,தமிழகத்தின் அனைத்து மாவட்டக் கழகத் தோழர்களையும் அன்போடு கேட்டுக் கொள் கின்றேன்.

நீங்கள் ஏன் அதிகம் கொடுக்க வில்லை? என்று கேட்க மாட்டேன். எவ்வளவு திரட்டினீர்களோ,அதற்கான கணக்கை மட்டும் முறையாகக் கொடுத்து விடுங் கள்.பொதுவாக காசு ஓலைகளை வாங்குவது இல்லை என்றாலும், முழுமை யாகத் தவிர்க்க முடிய வில்லை. உறுதியாகத் தருகிறோம் என்ற நம்பிக்கை யை ஊட்டியதால் பெற்றுக் கொண்டு இருக்கின்றோம்.

எனவே, ஒரு வார காலத்துக்குள் நிதி வரவு செலவுக் கணக்குகளை முடித்துத் தாருங்கள். தாமதம் வேண்டாம். உங்கள் மாவட்டச் செயலாளர் உங்களைக் கடிந்து கேட்க மாட்டார். அதற்காக நீங்கள் மெத்தனமாக இருந்துவிடக் கூடாது.

இதற்கு முன்பு நிதி கொடுத்த பல மாவட்டங்களில், முழுமையாகக் கணக்குக் கொடுத்து விட்டார்கள்; மீதம் உள்ள நன்கொடைச் சீட்டு களையும் கொடுத்து விட்டார்கள்.அதேபோல, நீங்களும் செய்து கொடுக்க வேண்டும் என அன் போடு கேட்டுக் கொள்கின்றேன்.

ஸ்டெர்லைட் முற்றுகைப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்த உடனேயே பல்லாயிரக்கணக்கில் திரண்டு வந்து கலந்து கொண்டீர்கள். ஆகவே, நீங்கள்
போராட்டக்காரர் களாக இருக்கின்றீர்கள். நாம் நிதி திரட்டு கின்ற முறை யி லேயே, நமது கட்சியின் மதிப்பு நூறு மடங்கு உயர்ந்து இருக்கின்றது. மக்கள்
நம்பிக்கையை வலுப்படுத்துகின்ற வகையில், நமது கட்சியின் கட்டுமானத் தைப் பலப்படுத்துகின்ற வேலை ஏராளம் இருக்கின்றது.

“முன்னேறிச் செல்; அதிகாரத்தைக் கைப்பற்று” என கரூர் மாநாட்டில் பிரகட னம் செய்தோம். அழைக்கின்றது விருதுநகர் மாநாடு. உங்களுக்குப் பக்கத்து மாவட்டம் தான். தியாகச் சுடர் காமராசரைத் தந்த திருநகராம் விருதுநகரில்
பெருந்திரளாகக் கூடுவோம்.இலட்சக்கணக்கில் திரளுவோம்.

கரூரில் தொடங்கியது போல, காலை ஒன்பது மணிக்குச் சரியாக மாநாடு
தொடங்கும். சுவர் எழுத்துகளைத் தீட்டுவதில் உங்களை யாரும் விஞ்ச முடி யாது. அது ஜோயலுக்கு உரிய அசாத்தியக் கலை. மாநாட்டு விளம்பரத்தோடு, பம்பரம் சின்னத்தையும் சேர்த்தே வரையுங்கள்.

எதிர்கால வெற்றிக்கு நுழைவாயில் அமைக்கின்ற வகையில் விருதுநகர் மாநாடு அமையும். கடமை ஆற்றுங்கள்; வெற்றி பெற்றுக் காட்டுவோம்!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இவ்வாறு உரை ஆற்றினார்.

No comments:

Post a Comment