Thursday, August 8, 2013

வாக்குகளை உறுதி செய்யுங்கள்!

நமக்கு ஆதரவான வாக்குகளை உறுதி செய்யுங்கள்!
மருத்துவர் ரொகையா

மாற்று அரசியல் குறித்த கருத்துக்களம் நிகழ்ச்சிக்கு வருகை தந்து இருக்கின்ற
உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.மாற்று அரசியல் என்று பேசுவது எளிது.ஆனால், நேரடியாக நாம் களத்தில் இறங்கிப் பார்த்தால்தான், எவ்வளவு
கடினம் என்பது புரியும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற உள்ளாட் சித் தேர்தலில், திருச்சி மாநகராட்சி மேயர் பொறுப்புக்கு, கழகத்தின் சார்பில் நான் வேட்பாளராகப் போட்டியிட்டேன். மிகவும் நம்பிக்கையோடு இருந்தேன்.
ஒரு மாநகராட்சியின் பணிகள் என்ன? மக்கள் நல்வாழ்வுக்காக, நகரின் சுற்றுப் புறத்தைச் சுத்தமாக வைத்துக் கொள்வது ஒரு முதன்மையான பணி.நான் ஒரு மருத்துவர் என்பதால், மக்கள் நலனில் அக்கறை கொண்டவள் என்பதால், மக் கள் என்னைத் தேர்ந்து எடுப்பார்கள் என்று நான் கருதினேன்.


ஆனால், சுமார் 40,000 வாக்குகள் பெற்று, மூன்றாவது இடம்தான் கிடைத்தது. வேதனையாகத்தான் இருந்தது. அந்த வேளையில், தலைவர் அவர்கள் என் னோடு அலைபேசியில் பேசினார்கள்.

‘கூட்டணி இல்லாமல் உங்களைத்தேர்தலில் நிற்க வைத்து விட்டேனா? என்று கேட்டார். ‘இல்லை ஐயா. எனக்கு மகிழ்ச்சிதான். நம்முடைய பலம் என்ன என் பதைத் தெரிந்து கொள்ள இந்தத் தேர்தல் ஒரு வாய்ப்பாக அமைந்தது; அனைத் துத் தரப்பு மக்களையும் சந்திக்க முடிந்தது.

ஆளுங்கட்சி 2000, ஆண்ட கட்சி 1000 ரூபாய் கொடுத்தபோதிலும், 40,000 மக்கள் நமக்கு வாக்கு அளித்து இருக்கின்றார்கள். பணத்தை விரும்பாத மக்களின் வாக்குகள் நமக்குக் கிடைத்து இருக்கின்றன. இதை நான் பெருமையாகத்தான் கருதுகிறேன்’ என்றேன்.

‘இந்தத் தோல்வியை நீங்கள் இவ்வளவு எளிதாக எடுத்துக் கொள்வீர்கள் என்று
நான் எதிர்பார்க்க வில்லையம்மா’ என்றார்கள்.

என்னைப் பொறுத்தவரையில் அந்தத் தோல்வியை, தள்ளிப் போடப்பட்டு இருக்கின்ற வெற்றியாகத்தான் கருது கின்றேன். நமது இயக்கத்தைப் பொறுத் த வரையில், வெற்றி என்பது தொட்டு விடும் தொலைவில்தான் இருக்கின்றது. நாம் கடுமையாக முயற்சித்து உழைப்போமானால்,வெற்றிக் கனியைப் பறிக்க லாம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. இங்கே திரண்டு இருக்கின்ற நீங்களும் அந்த நம்பிக்கையைப் பெற வேண்டும்.

தோழர்களே, கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். எதற்காக மக்கள், நம்மை மூன் றாவது இடத்தில் வைத்தார்கள்? இங்கே எனக்கு முன்னால் பேசியவர்கள்,
தலைவர் முல்லைப் பெரியாறுக்காகப் போராடினார்; அமராவதி, பாலாறு,
காவிரிப் பிரச்சினைகளுக்காகப் போராடினார் என்று கூறினார்கள். அவர்,
போராடாத விஷயமே கிடையாது.அனைத்துத் தரப்பு மக்களுக்காகவும்  வைகோ குரல் கொடுக்கின்றார்.அப்படிப்பட்ட ஒரு மனிதரை, இந்தத் தமிழகத் தின் முதல் அமைச்சராக ஆக்காதது யாருடைய குற்றம்?

தலைவருடைய சாதனைகளைப் பற்றி நமக்கு எல்லாம் தெரியும். இந்தியா வுக்கே தெரியும், ஏன் உலகத்துக்கே தெரியும். எனவே, அதைப் பற்றி இங்கே நாம் பேசிக்கொண்டு இருக்க வேண்டியது இல்லை. வரப்போகின்ற நாடாளு மன்றத் தேர்தலை நாம் எப்படி எதிர்கொள்ளப் போகின்றோம்? மாற்று அரசி யலை எப்படி முன்னிறுத்துவது? தலைவரை எப்படி வெற்றி பெறச் செய்வது என ஒவ்வொரு விநாடியும் சிந்தித்துப் பணி ஆற்ற வேண்டும்.

என்து மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்று நலம் பெற்ற மேரிஅம்மாள் என்ற பெண் மணியை,தேர்தலின் போது சந்தித்தேன். அவர் மட்டும் அல்ல, அவரது குடும்பத்தில் உள்ள அனைவருக்குமே நான் தான் மருத்துவம் பார்க் கின்றேன். ‘அம்மா உங்களுக்குத்தான் எனது ஓட்டு; எனது குடும்பத்தாரையும் உங்களுக்கே போடச் செய்கிறேன் அம்மா’ என்றார். தேர்தல் முடிந்தது.

என்னைப் பார்க்க அந்த அம்மையார் அழுதுகொண்டே வந்தார்கள். ‘அம்மா
நீங்கள் தேர்தலில் தோற்றுப் போய் விட்டீர்களே என்று வருத்தப்பட்டார்கள்.
‘பரவாயில்லை அம்மா; நீங்கள் தேர்தலில் வாக்கு அளித்தீர்களா?’ என்று கேட் டேன். ‘இல்லை அம்மா; எங்கள் குடும்பத்தோடு, வேளாங்கண்ணி கோவிலுக் குப் போய்விட்டோம்; போவதற்கு முன்பு, என் தெருவில் எல்லோரிடமும் உங்களுக்கு ஓட்டுப்போட வேண்டும் என்று கேட்டுக்கொண்டு விட்டுத்தான் போனேன்.நீங்கள் வெற்றி பெற வேண்டும் என்று மாதாவையும் பிரார்த்தித்ம்’ என்றார்.

அந்தக் குடும்பத்தில் நமக்கு விழ வேண்டிய ஆறு வாக்குகளும் போய்விட்டது. அதேபோல, எங்கள் குடும்பத்துக்கு மிகவும் வேண்டிய மற்றொரு நண்பர், நான் கோவாவுக்குப் போய்விட்டேன் என்றார். அவர் மட்டும் போகவில்லை.

திருச்சியில் இருந்து 60 பேர்களை ஒருங்கிணைத்து, கோவாவுக்கு சுற்றுலா
அழைத்துச் சென்று இருக்கின்றார்.அதனால், உள்ளாட்சித் தேர்தலில் அவர்கள் வாக்கு அளிக்கவே இல்லை.அனைத்து வாக்கு களும் எனக்கு ஆதரவான வாக்குகள் தான். ஆனால், அவர்கள் சுற்றுலா சென்று விட்டார்கள்.

இப்படி நமக்கு வாக்கு அளிப்பவர்கள்,வாக்குச்சாவடிக்கு வருவதை நாம் உறுதி செய்ய வேண்டும். அடுத்த ஆண்டு நடைபெற இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திப்பதற்கு,இப்போதிருந்தே நாம் ஆயத்தமாகவேண்டும். நமது வாக்குகள் சரியாக விழுகின்றனவா? என்பதை நாம் உறுதிப்படுத்த வேண்டும். மக்களை நேரடியாகச் சந்தித்துக் கொண்டே இருங்கள். அவர்கள் வாக்கு அளிக்கும் வரை, அவர்களோடு தொடர்பு கொண்டே இருங்கள். மாற்றத்தை
ஏற்படுத்திக் காட்டுவோம்!

(“மாற்று அரசியல்: இளந்தலைமுறையின் கருத்துக்களம்” நிகழ்ச்சியில் ஆற்றிய உரை,திருப்பரங்குன்றம் - 28.07.2013)

No comments:

Post a Comment