Sunday, August 18, 2013

புலித்தடம் தேடி விழா பகுதி -2

ஒருவனைக் கொன்ற நைஜீரியா நீக்கம்;

ஒரு இலட்சம் பேரைக் கொன்றவனுக்குத் தலைமைப்பதவி

இப்படி ஒன்றல்ல, இரண்டல்ல; எத்தனையெத்தனை கொடுமைகள்?

களத்தில் இருந்த ஒரு விடுதலைப் போராளி சொல்லுகிறார்: மே 18. கடைசிக் கட்டம். அப்பொழுது இசைப் பிரியாவைப் பார்த்தேன். என்னுடைய மணிப் பொறி பழுது அடைந்து விட்டது. இசைப்பிரியாவிடம் கேட்டேன். ‘நான் தேடி எடுத்துக் கொடுக்கிறேன் அண்ணா’ என்று சொன்னாள். மறுநாள் போய்க் கேட் டேன். ‘கிடைக்கல அண்ணா’ என்று சொன்னாள். அவலைப் பிரட்டி எனக்குக் கொடுத்தாள். ‘நிலைமை ரொம்ப மோசமாயிட்டிருக்கே; சனம் செத்துக்கிட்டே இருக்கே; நாம இங்கேயிருந்து போயிரலாமே?’ என்கிற போது, ‘அவர் வரட்டும் நான் அதைப் பற்றி யோசிக்கிறேன்’ என்று சொன்னாள்.
அவளது கணவர் ஸ்ரீ ராம். ஒரு போராளி. அவரும் மடிந்தார். ஏற்கனவே மூன்று மாதங்களுக்கு முன்பு, அகல் என்ற தங்கள் குல விளக்கை, மூன்று மாதக்
குழந்தையையும் அவள் இழந்து விட்டாள். அதன்பிறகு, சேனல் 4  தொலைக் காட்சியில்தான் சிதைக்கப் பட்ட அவளது உடலைப் பார்த்தேன்; கடைசியாக அவள் உட்கார்ந்து இருந்த கோலம் தான் இப்போதும் என் கண்ணுக்குள் நிற் கின்றது என்கிறார்.அது இந்த நூலில் பதிவு ஆகி இருக்கின்றது. எத்தனைக்
கொடுமைகள்?



கொலைகாரன் கொண்டாடும் வெற்றித் திருவிழா

போர்முனையில் இறந்தவர்களுடைய உடல்கள் முறையாக அடக்கம் செய் யப்பட வேண்டும் என ஜெனீவா விதிகள் வலியுறுத்துகின்றன. ஆனால், ஈழத் தில் எதுவுமே நடக்கவில்லை.ஆனால், ஈழத்தமிழர்களின் உடல்கள் புதைக்கப் பட்ட இடங்களில், மகிந்த ராஜபக்சே வெற்றித்தூண்களை நிறுவுகிறான். கொண்டாட்டம் நடத்துகிறான். எங்கே? தமிழர்களின் இழவுச் சத்தம் கேட்ட இடத்தில், அவர்கள் இரத்தம் தேங்கிய நிலத்தில்.

இலட்சியத்துக்காகத் தங்களை ஒப்படைத்துக் கொண்ட வீர இளைஞர்கள், இள நங்கைகள், வாழ்க்கையில் எந்தச் சுகத்தையும் காணாமல் போராடி மடிந்தார் கள்.அவர்களின் புதைகுழிகளுக்கு மேலே கொலைகாரன் வெற்றித் திருவிழா
கொண்டாடுகிறான். மாவீரர் துயிலகங்களை உடைத்தது மட்டும் அல்ல, அந்த இடங்களில் எல்லாம் திருவிழா நடத்துகிறான்.

2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம்,யாழ் பல்கலைக்கழகத்தில் ஐந்து தமிழ் மாண வர்கள் படுகொலை செய்யப் பட்டது குறித்து இந்த நூலில் பதிவு செய்து இருக் கிறார். ஈழத்தில் நடந்த கொடுமைகளை எல்லாம், 2004,2005, 2006 ஆகிய மூன்று ஆண்டு களிலும்,இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்குக்கு நான் எடுத்து
உரைத்து இருக்கிறேன். கடிதங்களில் பதிவு செய்து இருக்கின்றேன்.

அதைத்தான் தம்பி திருமுருகன் காந்தி அவர்கள், பன்னாட்டு அரங்குக்குக்
கொண்டு செல்வதற்கு, மறுமலர்ச்சி தி.மு.கழகம் ஆவணங்களை முறையாகப் பதிவு செய்து இருக்கின்றது; ஈழத்தமிழர் விடுதலைக்கு ஒரு சரியான ஆயுத மாக இந்த இயக்கம் திகழுகிறது என்று இங்கே நெஞ்சாரப் பாராட்டிச் சொன் னார்.

இலட்சியத்துக்காக வாழ்க்கை

எங்கள் சக்திக்கு ஏற்ற வகையில் நாங்கள் போராடி இருக்கின்றோம். சிங்கள வர்களுக்கு உதவாதீர்கள்; ஈழத்தமிழர்களின் பேரழிவுக்குத் துணைபோகாதீர் கள்; ஒருபோதும் உங்களை எங்கள் தமிழ் இனம் மன்னிக்காது என்று டாக்டர்
மன்மோகன் சிங் அவர்களிடம் எத்தனையோ முறை கூறி இருக்கின்றேன். அந்த நாள்களில், அந்த மூன்று ஆண்டுகளில், மறுமலர்ச்சி தி.மு.கழகத்தைத் தவிர, வேறு எவரேனும் இந்தப் பிரச்சினை குறித்துப் பேசியது உண்டா?

இங்கே நிறைய மாணவர்கள், இளைஞர்கள் வந்து இருக்கின்றார்கள். அன்றை ய காலகட்டத்தில் வந்த ஏடுகளைப் புரட்டிப் பாருங்கள்.உங்களைப் பயன் படுத்தி ஒரு நாற்காலியைப் பிடித்து விட வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஒருபோதும் கிடையாது. மனித வாழ்க்கை என்பது ஒரு இலட்சியத்துக்காக வாழ்வதாக இருக்க வேண்டும். மகத்தான உயிர்த் தியாகங்களைச் செய்தார் களே, அவர்கள் அளவுக்குத் தியாகம் செய்ய முடியாவிட்டாலும், அதற்காகத்
தன்னலம் இன்றிப் போராடுவதாக இருக்க வேண்டும்.

கடைசிக் கட்டப் போர் குறித்து இன்னொரு போராளி சொல்லுகிறார்:

நந்திக்கடல் பகுதிக்குப்போனேன்.ஜீன்ஸ் பேண்ட் போட்டு இருந்தால் போராளி என்று தெரிந்து கொள்வார்கள் என்று கருதி, ஒரு சாரத்தைக் கட்டிக்கொண்டு
போனேன். நந்திக்கடல் வாவி நெடுகிலும் பிணங்கள் மிதந்து கொண்டு இருந் தன. அழுகையும் கூக்குரலுமாக இருந்தது. செத்துக் கொண்டு இருந்தவர் களு டைய குரல்கள் கேட்டுக் கொண்டு இருந்தன.

அப்படிப்பட்டவர்களை, சிங்கள இராணுவத்துக்காரன் சுட்டுக் கொன்று, உடுப்பு களைக் கழற்றி, அம்மணமான உடல்களைத் தூக்கி எறிந்து கொண்டு இருந் தான். அதையெல்லாம் பார்த்துக் கொண்டே போனோம்.தண்ணீர் தண்ணீர் என்று பலர் கதறிக் கொண்டு இருந்தார்கள். அப்போது ஒரு சிறிய படகில் தண் ணீர் கொண்டு வந்து ஊற்றினான். அதையாவது பருகலாம் என்று முண்டியடித் துக் கொண்டு போன நெரிசலில் சிக்கிப் பலர் செத்தார்கள் என்கிறார்.

இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும்?

பட்டினி போட்டே கொன்றான்.மருந்து இல்லாமல் சாகடித்தான்.தாகத்துக்குத் தண்ணீர் தராமல் கொன்றான். ஒரு புகைப்படம் கூண்டில் நிறுத்துகிறது அதி பர்களை.இனப்படுகொலை என்பதற்கு இதைவிட வேறு என்ன ஆதாரங்கள்
வேண்டும்?

எட்டுத் தமிழ் இளைஞர் களை அம்மணமாக்கி, உச்சந் தலையில் சுட்டுக் கொன் றார்களே, காணொளி யாக வந்து விட்டதே? இதை விட வேறு என்ன வேண் டும்? இதை வைத்துக் கொண்டு, கொடியவன் ராஜபக்சே கூட்டத்தைக் குற்றக்
கூண்டிலே நிறுத்தி, அவர்களைத் தண்டிக்க வேண்டும்.அதற்காக நாம் போராட வேண்டும். இலட்சக் கணக்கான மாணவர்கள் பொங்கி எழுந்து வீதிக்கு வந்து போராடியும்,இன்னமும் நமக்கு நீதி கிடைக்க வில்லை.

தோழர்களே, இன்னொரு பேரபாயம் நம்மைச் சுற்றி வளைக்கிறது. எல்லாம்
அழிந்து விடும் என்ற நிலையில் இன்றைக்கு நாம் சிக்கிக்கொண்டு இருக்கின் றோம். செய்த தியாகங்கள் அனைத்தும் வீணாகப் போவதா? அவன் காமன் வெல்த் மாநாட்டை அங்கே நடத்தி விட்டால், 54 நாடுகள் கொண்ட அந்த அமைப்புக்கு, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அந்தக் கொலைகாரனே தலை வன் ஆகி விடுவான்.

அதன்பிறகு, இத்தனை ஆண்டுகள் நாம் போராடியது அனைத்தும் வீணாகிப் போய்விடும் என்பது மட்டும் அல்ல, நீதிக்கான வெளிச்சம் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் இருண்டு போய் விடும். நிரந்தர இருளுக்கு உள்ளே நாம் சிக்கிக்
கொள்ளுவோம்.

நைஜீரியா நாட்டில் பழங்குடியினருக்காகப் போராடிய ஒருவனைத் தூக்கில் இட்டதால், காமன்வெல்த் அமைப்பில் இருந்து நைஜீரியா தற்காலிக நீக்கம் செய்யப் பட்டது.

பாகிஸ்தானில் ஜனநாயக ஆட்சியை அகற்றி, இராணுவத் தளபதி பர்வேஸ்
முஷாரப் ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டதற்காக, அந்த நாடு, காமன்வெல்த் அமைப்பில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டது.

தென் ஆப்பிரிக்காவில் நிறவெறி; 1961 இல் இன ஒதுக்கல் கொள்கையைக் கொண்டு வந்தது.காமன்வெல்த் அமைப்பில் சேர்க்க வில்லை, வெளி யேற் றினார்கள். அந்த அமைப்பில் எப்பொழுதுமே நிரந்தர மாக நீக்குவது என்பது கிடையாது.தற்காலிக நீக்கம்தான்.

நீதி இல்லையா?

இவையெல்லாவற்றையும் விடப் பல ஆயிரம் மடங்கு கொடூரப் படுகொலை
களைச் செய்தவன், அவனுடைய அரசு, காமன்வெல்த் அமைப்பில் இருந்து நீக்கப்பட வேண்டாமா?தமிழர்களின் புதைகுழிகள் மீதா காமன்வெல்த் மாநாடு? தமிழர்களின் சுடுகாட்டின் மீதா காமன்வெல்த் மாநாடு? முத்துக்குமார் கேட் கிறான், செங்கொடி கேட்கிறாள்; மடிந்து போன மாவீரர்கள் கேட்கிறார்கள். நீதி
இல்லையா இந்த உலகத்திலே?

கொழும்பிலே காமன்வெல்த் மாநாடு நடைபெற்று விடுமானால், இதுவரை
நடந்த பேரழிவுகளுக்கெல்லாம் அது முத்தாய்ப்பு வைத்து விடும்.

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் 
வைத்தூறு போலக் கெடும்

என்றார் வள்ளுவர்.

கொலைகாரனுக்கு மகுடம் சூட்டத் துடிக்கும் கூட்டுக்குற்றவாளி இந்தியா

அதன் பிறகு, எங்காவது நூலகங்களில்,கருவூலங்களில், இணையதளங்களில்
தான் நாம் போட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டும். இப்படியெல்லாம் நடந்தது
என்பதைப் பார்த்துக் கொள்ளலாம் அவ்வளவுதான். வேறு ஒன்றும் செய்ய
முடியாது. இந்த அழிவைத் தடுக்க வேண்டாமா நாம்?

இந்த காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கான ஏற்பாடு களைச் செய்வதே இந்திய அரசுதான். இன்றைக்குக் காமன் வெல்த் அமைப்பின் செயலாளர் யார் தெரியுமா? கமலேஷ் சர்மா. இந்திய நாட்டுக்காரன். நான் 2000 ஆம் ஆண்டில், ஐ.நா. மன்றத்தில் உரை ஆற்றச் செல்லுகிறபோது, ஒவ்வொரு
நாளும் காலை விவாதத்தில் அவனை நான் சந்திப்பேன். 2008 இல் அவன் காமன் வெல்த் செகரெட்டரி ஜெனரல் ஆனான். இரண்டு முறை பதவியில்
இருக்கலாம். 2012 இல் அவன் மீண்டும் தேர்ந்து எடுக்கப்பட்டு விட்டான்.

காமன்வெல்த் அமைப்புக்கு, ஐ.நா. பொதுச் சபையில் பார்வையாளர் தகுதி இருக்கின்றது. இந்த கமலேஷ் சர்மாவை வைத்துக் கொண்டுதான், இந்திய அரசு இந்த மாநாட்டை கொழும்பில் நடத்துவதற்கு ஏற்பாடுகளைச் செய்து வருகின்றது.இவர்களும் அந்தப் படுகொலையில் கூட்டுக் குற்றவாளிகள் அல்லவா,அதற்காகத் தான் இந்த வேலைகளைச் செய்கிறார்கள்.

எத்தியோப்பியாவில் கொடுமைகள் நடக்கின்றன என்றுசொல்லி, அங்கே
காமன்வெல்த் மாநாட்டை நடத்த விடாமல் இடத்தை மாற்றினார்களே? அது போல, இந்த மாநாடு, கொழும்பில் நடக்கக்கூடாது. அந்த அமைப்பில் இருந்து இலங்கையை இடை நீக்கம் செய்ய வேண்டும்.

சுதந்திரத் தமிழ் ஈழம்; பொது வாக்கெடுப்பு; அது ஒன்றே தீர்வு; 13 ஆம் சட்டத் திருத்தம் ஊரை ஏமாற்று கின்ற மோசடி; நயவஞ்சக நரித்தன வேலை.

எந்த இலக்குகளைத் துல்லியமாகத் தீர்மானித்து, இளந்தமிழர் கூட்டம், மாண வர்கள் வீதிக்கு வந்து போராடினார்களோ, அதைப்போல மீண்டும் போராட வேண்டிய களம் அமைந்து இருக்கின்றது.

வீரத்தம்பியைப் பாராட்டுகிறேன்

மகா தமிழ் பிரபாகரன் அஞ்சாது போய்விட்டு வந்து இருக்கின்றார்.ஆதாரங் களோடு புலித்தடம் தேடி என்ற இந்த நூலைத் தந்து இருக்கின்றார். அவர் ஒரு பொறியியல் பட்டதாரி. ஊடகத்துறையில் சிறந்து விளங்குகிறார். இலட்சியத் துக்காக இருக்கிறார். இப்படிப்பட்ட இளைஞர்கள், எழுத்துத்துறையில் ஊடகங் களில் இருக்கின்றபொழுது,எத்தனைத் துரோகங்களை எவர் செய்ய முனைந் தாலும், அவற்றை உடைத்து நொறுக்க முடியும் என்ற நம்பிக்கை நமக்கு இருக் கின்றது.

இந்த நூல், பல மொழிகளிலும் வரட்டும். மக்கள் மன்றத்துக்குச் செல்லட்டும். இந்த இலட்சிய இளைஞனை நான் மனதாரப் பாராட்டு கிறேன்; அவரது வீரத் தைப் பாராட்டு கிறேன். அந்தக் கொள்கை வீரனைப் பெற்ற தாய், இந்த நிகழ்ச் சிக்கு வந்ததற்காக, அவருக்குப் பாராட்டும், நன்றியும் தெரிவிக்கின் றேன்.
இழக்கப்போவது விலங்குகளை மட்டுமே; காணப் போவது பொன்னுலகம் என்ற நம்பிக்கையோடு போராடுவோம். இதைவிடக் கொடுமையான நிலை மைகளை எல்லாம் உடைத்து எறிந்துவிட்டுத் தான் விடுதலை இயக்கங்கள் வெற்றி பெற்று இருக்கின்றன.

சிந்திய இரத்தம் வீண் போகாது.உயிர்த்தியாகம் செய்த அவர்களது இலட்சியம் உயர்ந்தது. ஈழ விடுதலை நியாயமானது. காலம் தரப்போவது. தமிழ் ஈழம் மலரும். நன்றி!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இவ்வாறு உரை ஆற்றினார்.

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு வரலாமே.

No comments:

Post a Comment