ஐ.நா. வின் மனித உரிமை ஆணையர் திருமதி நவநீதம் பிள்ளை அவர்கள், ஈழத்தமிழர் படுகொலை குறித்த உண்மைகளைக் கண்டு அறிய, தமிழர் பகுதி களில் சுற்றுப் பயணம் செய்து, கொடுந்துயருக்கு ஆளானவர்களைச் சந்தித்த தைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், சிங்கள அமைச்சர் மெர்வின் சில்வா என்பவன், ‘நவநீதம் பிள்ளையை வேண்டுமானால் நான் திருமணம் செய்து கொள்கிறேன்; இலங்கையைச் சுற்றிக் காட்டுகிறேன்’ என்று கொச்சைப் படுத்தினான்.
இதனைக் கண்டித்து சில தினங்களுக்கு முன் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் அறிக்கை வெளியிட்டார்
இன்று,
ஐ.நா மனித உரிமை ஆணையர் நவநீதம்பிள்ளையை திருமணம் செய்து கொள்
கிறேன் என்ற அமைச்சரின் பேச்சுக்கு இலங்கை அரசு மன்னிப்பு கேட்டுள்ளது.
ஐ.நா மனித உரிமை ஆணையர் நவநீதம்பிள்ளையை வேண்டுமானால் நான் திருமணம் செய்து கொள்கிறேன், இலங்கையைச் சுற்றிக் காட்டுகிறேன் என்று சிங்கள அமைச்சர் மெர்வின் சில்வா, கொச்சைப்படுத்தி பேசினார்.
இவரது இந்த பேச்சின் வீடியோவை ஐ.நா அதிகாரிகள், நவநீதம்பிள்ளையிடம் ஒப்படைத்தனர். இதைத் தொடர்ந்து இலங்கை அரசிடம் தனது எதிர்ப்பை நவ நீதம்பிள்ளை தெரிவித்தார்.
இதையடுத்து, இலங்கை அரசு சார்பில் அமைச்சர் விமல் வீரசேன, நவநீதம் பிள்ளையிடம் வருத்தம் தெரிவித்ததோடு, மன்னிப்பும் கோரியுள்ளார்.
தாயை கூட தாரமாக பார்க்கும் இந்த தரம் கெட்ட நாய்களிடம் வேறு என்ன எதிர் பார்க்க முடியும்.
ReplyDeleteஇந்த பேச்செல்லாம் அவன் நாசமாக போவர்தர்க்கு அறிகுறி
ReplyDelete