Sunday, August 18, 2013

ஜனநாயகம் வென்றது!

சங்கொலி தலையங்கம் 

நீலத்திரைகடல் ஓரத்திலே நின்று நித்தம் தவம் செய்யும் குமரி எல்லையிலி ருந்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், தமிழ்நாட்டு அரசியல் களத் தில் வெற்றிக் கணக்கை தொடங்கி இருக்கின்றது. ஆம்! ஆளும் கட்சியினரின் அதிகார பலம், பண பலம், படை பலம் அனைத்தையும் புறங்கண்டு கன்னியா குமரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றிக் கனியைப் பறித்துள்ளது. கழகத்தின் சொத்துப் பாதுகாப்புக்குழு உறுப்பினரும், குருந்தன்கோடு ஒன்றியக் கழகச் செயலாளருமான வழக்கறிஞர் சம்பத் சந்திரா அவர்கள் ஆகஸ்டு 8 ஆம் தேதி, குமரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவராக பதவி ஏற்றார்.
தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு சங்கத் தேர்தல்களில் ஆளும் கட்சியினரின்
முறைகேடுகளும், ஜனநாயகக் கேடான செயல்களும் தான் அ.தி.மு.க.வினரை
பதவியில் உட்கார வைத்தது. அ.தி.மு.க.வைத் தவிர வேறு எந்தக் கட்சியும்
முக்கியப் பொறுப்புக்கு வந்துவிடக்கூடாது. அதை அனுமதிக்கவும் கூடாது
என்று ஆட்சியாளர்கள் அதிகாரிகளுக்கு உத்தரவு போட்டிருந்தனர். இதன்
விளைவாக திரும்பிய பக்கமெல்லாம் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள்தான்
கூட்டுறவு அமைப்புகளை முழுமையாக ஆக்கிரமித்தனர்.

கூட்டுறவு சங்கத் தேர்தல்களில் மிக முக்கியமான தேர்தலாகக் கருதப்படுவது
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மற்றும்
தலைவர், துணைத் தலைவர் தேர்தலாகும். சென்னை முதல் குமரி வரை இதி லும் ஆளும் கட்சியினரே பதவியைக் கைப்பற்றி விடலாம் என்றுதான் திட்ட மிட்டனர். ஆனால், கன்னியாகுமரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் த லைவர் தேர்தல், ஆளும் கட்சியினரின் அராஜகத்துக்கு சவுக்கடி கொடுத்து விட்டது.

இத்தேர்தலில், தொடக்கத்திலிருந்தே ஆளும் கட்சியினர் முறையாகத் தேர் தலை நடத்தவிடாமல் அதிகாரிகளை மிரட்டி வந்தனர். கடந்த ஜூலை 2ஆம் தேதி குமரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் நிர்வாகக் குழுவிற்கு 21 இயக்குநர்களைத் தேர்வு செய்திட, காலை 10 மணி முதல் வேட்பு மனுக்கள்
வழங்கப்படும் எனவும், மாலை 4 மணிக்குள் வேட்பு மனு தாக்கல் செய்ய
வேண்டும் எனவும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

கழகத் தோழர்களும் நமது அணியை ஆதரிக்கும் மற்ற இயக்கத் தோழர்களும்
2.7.2013 அன்று காலை 8 மணி அளவில் சம்பத் சந்திரா அவர்கள் தலைமையில் மனுத்தாக்கல் செய்வதற்கு வங்கி அலுவலகத்திற்குச் சென்றனர். அங்கே ஆளும் கட்சியினர் 200 பேர் நின்றுகொண்டு அ.தி.மு.க. உறுப்பினர் களைத் தவிர வேறு எவரது மனுவையும் வாங்கிவிடக் கூடாது என்று வங்கியில் மனுத் தாக்கல் செய்யும் அறையை ஆக்கிரமித்து நின்றுகொண்டனர்.அதிகாரி கள் மற்றும் காவல்துறை உதவியுடன், கழகத் தோழர்கள் மற்றும் நமது ஆதர வாளர்களின் மனுக்களை வாங்கிட அனுமதிப்பதில்லை என்று ஆளும் கட்சி யினர் சதித்திட்டம் தீட்டி இருந்தனர். மேலும், அ.தி.மு.க. உறுப்பினர்களுக்கு முதல் நாளே வேட்பு மனு விநியோகம் செய்துவிட்டனர்.

இதனை அறிந்த நமது தோழர்கள், தேர்தல் நடத்தும் அலுவலரிடமும், காவல் துறை அதிகாரிகளிடமும், வாக்கு அளிக்கும் அடையாள அட்டை வைத்துள்ள வர்களை மட்டுமே வரிசையில் நின்று மனுவாங்கிட அனுமதிக்க வேண்டும் அல்லது இரு அணிகள் போட்டியிருந்தால், தலா 21 வேட்பு மனுக்கள் வழங்கிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதனால் ஏற்பட்ட நெருக்கடியில் அதிகாரிகள் மதியம் 2 மணி வரை கழகத் தோழர்களுக்கும், ஆதரவாளர் களுக் கும் மனுக்கள் வழங்காமல் இழுத்தடித்தனர். மாலை 4 மணிக்குள் பூர்த்திசெய் யப்பட்ட வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய வேண்டும் என்பதால், பதற்றத் து டன் இருந்த கழகத் தோழர்களும், நமது அணியை ஆதரித்தவர்களுமாக 700 பேர் உடனடியாக சாலை மறியல் செய்து அறப்போராட்டத்தில் இறங்கினர்.

கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ஜான் ஜேக்கப் நமது அணிக்கு ஆதரவாக
அதிகாரிகளிடம் பேசிப் பார்த்தார். ஆனாலும், சரியான பதில் இல்லை. சாலை
மறியல் அறப்போரில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். இதனால், மாலை 3.15 மணிக்கு துணை ஆட்சியர் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண் டிய நிலை உருவானது.

நமது அணிக்கு வேட்பு மனுக்கள் அளிக்கப்பட்டதும், உடனடியாக பூர்த்தி செய் து மாலை 4 மணிக்குள் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுக்கள் பரிசீலனை முடிந்து அனைத்து மனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக மாலை 5.45 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதுவே கழகத் திற்கும் தோழமை அணியினருக்கும் கிடைத்த முதல் வெற்றியாக அமைந்தது.

குமரி மாவட்ட மத்திய கூட்டுறவு நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கான தேர்த லில் போட்டியிடவே ஆளும் கட்சியினரின் இத்தகைய அராஜக நடவடிக்கை களை சந்திக்க வேண்டி இருந்ததால், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மற்றும் தலைவர் தேர்தலை நேர்மையாக நடத்த உத்தரவிட வேண்டும் என்று சென் னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் கழகத்தின் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கில் தீர்ப்பளித்த மதுரை உயர்நீதிமன்றம், 08.7.2013 அன்று நடைபெற இருக்கும் குமரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தேர்தலை நியாயமாக நடத்த வேண்டும். அடையாள அட்டை இல்லாதவர்கள் எவரும் தேர்தல் நடை பெற உள்ள வளாகத்திற்குள் செல்ல அனுமதிக்கக் கூடாது.தேர்தலுக்கு காவல் துறை முழு கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். தகுந்த பாதுகாப்பு ஏற்பாடு களை செய்திட வேண்டும். தேர்தல் முடிந்த மறுநாள்,நீதிமன்றத்திற்கு மாவட் ட காவல்துறை கண்காணிப்பாளர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.

உயர்நீதிமன்றம் உத்தரவிட்டபடி, காவல்துறை கண்காணிப்பின் கீழ் ஜூலை
8 ஆம் தேதி நிர்வாகக்குழு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க தேர்தல் நடத்தப் பட்டது. ஜூலை 10 ஆம் தேதி, வாக்கு எண்ணிக்கை நடந்தது.முடிவில் கழகத் தின் சார்பில் மூவரும் கழக ஆதரவாளர் ஒருவரும் வெற்றி பெற்றனர். நமது அணிக்கு ஆதரவான தோழமைக் கட்சியினர் மற்றும் ஆதரவாளர்கள் 11 பேர் வெற்றி பெற்றனர். ஆக மொத்தம் 21 நிர்வாகக் குழு உறுப்பினர்களில் கழக அணியின் சார்பில் 15 பேரும், அ.தி.மு.க. சார்பில், 6 பேரும் வெற்றி பெற்றனர். இது கழகத்திற்கு கிடைத்த இரண்டாவது வெற்றி ஆகும்.

குமரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தேர்தல்
முடிந்ததும், அடுத்து வங்கியின் தலைவர், துணைத் தலைவர்கள் பொறுப்பு களுக்கு தேர்தல் நடத்திட வேண்டும். கழகத்திற்கு ஆதரவாக 15 வாக்குகளும், அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக 6 வாக்குகள் மட்டுமே இருந்ததால், கழக அணி வெற்றி வாய்ப்பு உறுதியானது.

ஆனால், 6 வாக்குகளை மட்டுமே வைத்திருந்த ஆளும் கட்சியினர், நிர்வாகக்
குழு உறுப்பினர்களை விலைக்கு வாங்கிட இலட்சக்கணக்கில் வாரி இறைக்க வும் தயாராக இருந்தனர். ஆனால், நமது அணி நிர்வாகக் குழு உறுப்பினர்கள் அனைவரும் ஆளும் கட்சியை வீழ்த்துவதில் உறுதியாக நின்றதால், ஆளும் கட்சியினர் அதிர்ச்சியுற்றனர்.

குமரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர், துணைத் தலைவர்கள்
பொறுப்பிற்கான தேர்தல் ஜூலை 15 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப் பட்டது. ஆனால், ஜூலை 15 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு கழகத்தின் சார்பில் தலைவர் பொறுப்புக்கு போட்டியிடும் சம்பத் சந்திரா, வங்கி அறைக்குள் சென்று காத்திருந்தார். தேர்தல் நடத்தும் அதிகாரி காலை 10.35 மணிக்கு வந்து சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி, தேர்தலை நடத்திட முடியாது என்றும், தேர்தலை ஒத்தி வைப்பதாகவும் அறிவிக்கையை ஒட்டிவிட்டு வெளியேறி னார். இதனால் கோபமுற்ற நமது நிர்வாகிகளும், தோழமைக் கட்சிகளின் நிர்வாகிகளும், தொண்டர்களும் ஆளும் கட்சியினரின் அடாவடியை எதிர்த்து போராட்டத்தில் இறங்கினர்.

பின்னர், நமது அணியைச் சேர்ந்த 15 நிர்வாகக்குழு உறுப்பினர்களும் தேர்தல்
அதிகாரி அறைக்குச் சென்று வங்கி அதிகாரிகள் முன்னிலையில், குமரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவராக திரு. சம்பத் சந்திரா மற்றும் துணைத் தலைவராக உதயகுமார் ஆகிய இருவரையும் தேர்ந்தெடுத்தனர். ஆனால்,தேர்தல் அதிகாரி இந்தத் தேர்தலை அங்கீகரித்து கையொப்பமிட
மறுத்துவிட்டார்.

இந்நிலையில், மீண்டும் மதுரை உயர்நீதிமன்றத்தில் உடனடியாக மனுத் தாக் கல் செய்யப்பட்டது. உயர்நீதிமன்றமும்,ஜூலை 25 அன்று தலைவர் தேர்தலை நடத்த வேண்டும். அதற்கு காவல்துறை முழு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன்படி 25.07.2013 அன்று காலை 10 மணிக்கு நமது அணியின் சார்பில், தலைவர், துணைத் தலைவருக்கான வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. அ.தி.மு.க.வினரும் மனு தாக்கல் செய்தனர்.

வேட்பு மனுக்களை பரிசீலனை செய்து, தலைவர், துணைத் தலைவர் வேட்பா ளர்களை இறுதி செய்து, வங்கி தேர்தல் அதிகாரி அறிவிக்க முற்பட்டபோது, அ.தி.மு.க.வின் தலைவர் வேட்பாளர் பள்ளவிளை ராஜேஷ் மற்றும் அவருடன் வந்த ஆளும் கட்சியினர் அதிகாரியின் கையில் இருந்த வேட்புமனுக்களை பிடுங்கி கிழித்து எறிந்தனர். ஆளும் கட்சியினர் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்பதே அவர்களின் நிர்பந்தம்.

உயர்நீதிமன்றம் இதில் தலையிட்டுள்ளதால், வங்கி தேர்தல் அதிகாரிகள் முறை யாக தேர்தலை நடத்த முயன்றனர். இதனால், ஆத்திரமுற்ற ஆளும்
கட்சியினர் காலித்தனத்தில் இறங்கினர். உடனடியாக கழகத் தொண்டர்களும்,
நமது அணியை ஆதரித்த கட்சிகளின் நிர்வாகிகளும், பொதுமக்களும் சாலை
மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் அதிகாரியான திரு. நடுக்காட்டு
ராஜா அவர்கள் நடந்த நிகழ்வுகளை காவல்துறை அதிகாரிகளிடம் புகாராக
எழுத்து மூலம் கொடுத்தார்.

மக்கள் கொந்தளிப்பைப் பார்த்த காவல்துறை, அ.தி.மு.க. வேட்பாளர் பள்ள விளை ராஜேஷை கைது செய்து காவலில் வைத்தனர். உடனடியாக மறுநாள் அனைத்துக்கட்சி நிர்வாகிகள் கூட்டம் கூடி, ஆளும் கட்சியினரின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று தீர்மானித்தனர்.

ஜூலை 29 ஆம் தேதி, குமரி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு
பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.கழகத் தின் சார்பில் மாவட்டச் செயலாளர் தில்லை செல்வம், நமது வேட்பாளர்
சம்பத் சந்திரா உள்ளிட்ட கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் பங்கேற்றனர்.
தோழமைக் கட்சியினரும், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சித்
தலைவர்கள் கட்சி பேதமின்றி ஆளும் கட்சியினரை எதிர்த்து நடந்த கண்டன
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

இந்த நிலையில், மீண்டும் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப் பட்டது. உண்மை நிலைகளை அறிந்த நீதிமன்றம், அ.தி.மு.க. வேட்பாளர் பள்ள விளை ராஜேஷை கைது செய்ய உத்தரவிட்டதுடன், மீண்டும் ஆகஸ்டு 8 ஆம் தேதி, தலைவர், துணைத் தலைவர் தேர்தலை முறைப்படி தகுந்த கண் காணிப் புடன் நடத்த வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தியது.

உயர்நீதிமன்றத்தின் உத்தரவுடன் 08.08.2013 அன்று தலைவர்,துணைத்தலைவர் தேர்தல் நடைபெற்றது. இதில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், வேட்பு மனு தாக்கல் செய்த திரு. சம்பத் சந்திரா அவர்கள்,குமரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவராக வெற்றி பெற்றார். நமது அணியின் சார்பில், துணைத் தலைவராக திரு. உதயகுமார் தேர்ந்தெடுக்கப் பட்டார். கழக அணிக்கு 15 வாக்குகளும், அ.தி.மு.க.வுக்கு 6 வாக்குகளும் கிடைத்தன.

தொடக்கத்திலிருந்தே கழகத்திற்கு ஆதரவாக இருந்த 15 நிர்வாகக் குழு உறுப் பினர்களையும் எப்படியும் வளைத்துவிட முடியும் என்று காய் நகர்த்திய அ.தி. மு.க.வினர், அவமானகரமாக தோற்றுப் போனார்கள். அடாவடித்தனமான
முறையில் நடந்துகொண்டு, அதிகாரத் திமிரில் ஆட்டம்போட்ட ஆளும் கட்சி
கும்பலுக்கு, குமரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தேர்தல் மூலம் சரி யான பாடம் புகட்டப்பட்டுள்ளது.

பல தடைகளைத் தாண்டி வெற்றியை ஈட்டியுள்ள திரு. சம்பத் சந்திரா அவர் களுக்கு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொண்ட கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், “நீதி வென்றுள்ளது; அராஜகத்திற்கு கிடைத்த சவுக்கடி; ஆளும் கட்சியினரின் அடாவடித்தனத்திற்கு எதிராக குமரி மாவட்ட மக்கள் இந்த வெற்றியைக் கொடுத்திருக்கின்றனர். அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி” என்று கூறி இருக்கின்றார்.

தற்போது, குமரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தேர்தலில் ஜனநாயகம்
வென்றது. இந்த வெற்றி தமிழ்நாடு முழுவதும் எதிரொலிக்கும் காலம் விரை வில் வந்தே தீரும்.

No comments:

Post a Comment