07.10.2008 அன்று பகத்சிங் நூற்றாண்டு விழாவில் #வைகோ வின் உரை
கனவாகிப்போன கச்சத்தீவு நூலை நான் வெளியிட வேண்டும் என்று ஆரு யிர்ச் சகோதரர் கே.எஸ்.ஆர். கேட்டமாத்திரத்தில் அக்டோபர் 7 ஆம் தேதி ஏற் பாடு செய்யுங்கள் என்று சொன்னேன். எந்தப் பெயரை உச்சரித்தால் கோடிக் கணக்கான வாலிபர்களின் நாடி நரம்புகளில் மின்சாரத்தைப் பாய்ச்சுகின்ற மந்திரச் சொல்லாக அந்தப் பெயர் இருந்ததோ, அந்தப் பெயருக்கு உரியவனான பகத்சிங் நூற்றாண்டு நிறைவு விழாவை நடத்த வேண்டும் என்ற ஆர்வத்தின் காரணமாக, இந்த அக்டோபர் 7 ஆம் தேதியை நாங்கள் தேர்ந்து எடுத்தோம்.
இந்த அக்டோபர் 7 கடந்த ஆண்டில் நூற்றாண்டு விழா தொடக்கம் நடத்தப் படும் என்று தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டு, நிகழ்ச்சி நடைபெறுகிற இடம், மண்டபம், நேரம், கலந்து கொள்பவர்களின் பட்டியல் என எல்லாம் அறி விக்கப்பட்டு, ஏடுகளில் செய்தி வந்து, மகானுபாவர் கலந்து கொள்கிற நிகழ்ச் சிக்கு ஏற்றவாறு மண்டபத்தில் கூட்டம் வரவில்லை என்று, அந்தக் கூட்டம் கடைசி நேரத்தில் இரத்து செய்யப்பட்டது.
தமிழ்நாட்டில் வீரத்தை, மானத்தை, தியாகத்தை மதிக்கின்ற கூட்டம்தான் தமிழர்களின் கூட்டம் என்பதை நாங்கள் நிலைநாட்டுவதற்காகத்தான், மறு மலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இந்த விழாவை ஏற்பாடு செய்து இருக்கிறோம்.
பாஞ்சாலத்தில் இருந்த பகத்சிங்குக்குத் தமிழகத்தில் விழா. அவன் பொது
உடைமை இயக்க வீரன். நாத்திகன். அகில இந்தியாவும் போற்றுகின்ற ஒரு தியாகத் திருவிளக்கு. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு என்ன அவ்வளவு அக்கறை வந்துவிட்டது என்று எதிலும் குதர்க்கம் காண்கின்ற சில மேதாவிகள் இதைப்பற்றி விமர்சிக்க துணிவார்களானால் அவர்களுக்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன். தூக்கில் இடப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு, பகத்சிங்கை அதே சிறையில் இருந்த ஒரு சுதந்திர போராட்ட வீரன் மிகுந்த சிரமப்பட்டு அவன் கொட்டடியில் போய்ச் சந்திப்பதற்கு அங்கே இருக்கக் கூடிய சில அதிகாரிகளின் துணையோடு பல நாள்கள் முயற்சித்து, பகத் சிங்கை கொட்டடியில் சந்தித்துப் பேசினார்.

பாபா ரண்வீர் சிங் என்கின்ற அந்த சீக்கிய சுதந்திரப் போராட்ட வீரன், பகத் சிங் மீது கொண்டு இருந்த அளவற்ற பாசத்தின் காரணமாக,‘நீ மரண தண்டனை பெற்று, தூக்குத் தண்டனைக்குச் செல்லப் போகிறாய்; வாழ்நாளெல்லாம் நீ ஆண்டவனை வழிபடாமல் நாத்திகம் பேசி வந்தாய்; எனவே, இந்தக் கடைசி நேரத்திலாவது நீ கிரந்தங்களைப் படிக்க வேண்டும், நீ இறைவனை நெருங்க வேண்டும், கடவுளை ஏற்றுக் கொள்ள வேண்டும்’ என்று வாதாடினார்.
இருவருக்கும் இடையில் நீண்டநேரம் விவாதம் நடைபெற்றது. அந்தக் கருத் தை பகத்சிங் ஏற்றுக் கொள்ளவில்லை.
ஆத்திரப்பட்டு தன் கருத்தை ஏற்கவில்லை இவன், கடைசிநேரத்தில்கூடக் கட வுளை நாடவில்லை என்பதால், புகழ் போதை உன் கண்ணை மறைக்கிறது, அதனால் ஏற்பட்ட திமிர் உனக்கு அகந்தையைத் தந்து இருக்கிறது, கடவுளுக் கும் உனக்கும் இடையில் அந்த அகந்தையும் திமிரும் கருந்திரையாக இருக் கிறது’ என்று சொல்லிவிட்டு, அந்தக் கொட்டடியைவிட்டு ரண்வீர் சிங் பாபா வெளியே போய்விட்டார்.
இதன் காரணமாகத்தான் “Why I became an atheist" நான் ஏன் நாத்திகன் ஆனேன்?என்று பகத் சிங் எழுதுகிறார். அதே சொற்களின் தாக்கம்தான், நீங்கள் படித்தீர் களானால் தெரியும். போதையினாலோ புகழ் போதையினாலோ அகந்தை யி னாலோ அல்ல என்று ரண்வீர் சிங் பாபா எழுப்பிய கேள்விக்குப் பதில். அவர் உள்ளத்தில் மிகச்சிறந்த சிந்தனையாளன் பகத்சிங். தீர்க்கமான சிந்தனையா ளன். ஆகவேதான் நான் ஏன் நாத்திகன் என்று ஆங்கிலத்தில் எழுதினான். ஆங் கிலம், இந்தி, உருது, பஞ்சாபி நான்கு மொழிகளிலும் தேர்ச்சி பெற்றவன் பகத் சிங்.
தொடரும் ..........
No comments:
Post a Comment