பெருந்தலைவர் காமராசரை காங்கிரசு கட்சி மறந்து பல ஆண்டுகள் ஆகிவிட் டது. அந்தக் கட்சியின் நூற்றாண்டு விழா மலரிலேயே பட்டாபி சீத்தாராமய்யா படத்தை காமராசர் படமாக வெளியிடும் அளவுக்கு மறதி நோய் அவர்களுக்கு முற்றிப்போய்விட்டது.அகில இந்திய அரசியலையே ஆட்டிப் படைத்த அந்தத் தலைவரின் நூற்றாண்டு விழாவைக்கூட அவர்கள் நாடு முழுக்க சிறப்போடு கொண்டாட வில்லை. ஆனால், கடந்த மாதம் 15 ஆம் நாளில் அவரது பிறந்த நாளை நாடு முழுக்க அவரது உருவப்படங்கள் கொண்ட சுவரொட்டிகளை ஒட்டி தேசிய திலகங்கள் விழா எடுத்து நம்மை வியப்பில் ஆழ்த்தின!
கட்டுரையாளர் :- ஆ.வந்தியத்தேவன்
வெளியீடு :- சங்கொலி
வேறொன்று மில்லை, நாடாளுமன்றத் தேர்தல் வருகிறதல்லவா? வாக்கு வேட்டைக்கு “காமராசர் முகமூடி” தேவை அல்லவா? எனவேதான் இந்த திடீர் கூத்து!
காமராசர் ஆட்சி அமைத்தே தீருவோம்; வாசன் அணி, இளங்கோவன் அணி,
ப.சிதம்பரம் அணி,தங்கபாலு அணி,ஞானதேசிகன் அணி என ஒவ்வொரு அணி யினரும் தனித்தனியே மேடை போட்டு கச்சேரி நடத்த காரியத்தில் இறங்கி விட்டார்கள். இந்தப் பிள்ளை களின் தீராத விளையாட்டுகளை எல்லாம் அவர் களின் அகில இந்தியத் தலைமை கண்டுகொள்ளவே இல்லை! எப்படியாவது கோமாளிக் கூத்து நடத்தி,கட்சி இருக்கிறதை இவர்கள் நினைவு படுத்தட்டும்; தேர்தலின்போது நாம் ஆணையிட்டால், தலைமைக்கு அடிபணிகிறோம் என தெண்டனிட்டு வணங்கி ஏவல் செய்யப் போகிறவர்கள் தான் இந்தக் கும்பல் என்பது அவர்களுக்குத் தெரிந்தது தானே! எனவே டில்லி தலைமை ஏய்த்துப்
பிழைக்கும் தங்கள் தொழிலிலேயே முழு வீச்சில் கவனம் செலுத்தி வருகிறார் கள்.

தலைநகர் டில்லியில் ஆட்சி செய்யும் காங்கிரசு கட்சியின் முதல்வர் அம்மை யார் ஷீலா தீட்சித், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் மக்கள் ஊழல் நடவடிக் கைகளை எல்லாம் பொருட் படுத்தவே மாட்டார்கள் என்று நம்பிக்கையுடன் பேசுகிறார். 100 கோடி ரூபாய் இருந்தால் போதும், நாடாளு மன்ற மாநிலங்கள் அவையின் உறுப்பினராகி விடலாம் என்று காங்கிரசின் தற்போதைய விலை
நிலவரத்தை அந்தக் கட்சியின் அரியானா மாநிலத்தின் உறுப்பினரான பிரேந் திர சிங் பகிரங்கமாக அறிவிக்கிறார்.

காங்கிரசிலிருந்து விலகி, காங்கிரசு ஜனநாயகப் பேரவை நடத்திக் கொண்டி ருந்த செட்டி நாட்டுப் பெருமான் ப.சிதம்பரம் காங்கிரசில் உறுப்பின ராகாமல், கட்சியைக் கலைக்காமல், இணைக்காமல் தேர்தலில் நின்று வென்று, அமைச் சரவையில் சேர்ந்த பின்னர் காங்கிரசில் இணைந்த சரித்திரம் படைத்தாரே, அவர் நம் நாட்டு மக்களுக்கு விடுக்கும் உபதேசம் என்ன தெரியுமா? தங்கத்தின் மீது மோகம் கொள்ளாதீர்கள். விலை குறைந்தாலும் இன்னும் ஒரு ஆண்டுக்கு நகைக்கடை பக்கம் போகாதீர்கள். தங்கத்தில் முதலீடு செய்யாதீர்கள் என்று பொருளாதார மேதை பாடம் நடத்துகிறார். அட்சய திருதியில் குன்றிமணி அளவாவது நகை வாங்குங்கள், கோடீசுவரனாகலாம்; கூரையைப் பிய்த்துக் கொண்டு செல்வம் குவியும் என்ற நகைக்கடை விளம்பரத்தை நம்பி, முதலீடு செய்ய நினைக்கும் இந்த நாட்டு நடுத்தர வர்க்கத்தினர், சிதம்பரம் பேச்சைக்
கேட்டுத் திகைத்து நிற்கிறார்கள்.
அன்னியச் செலவாணியாம்! அயல்நாட்டுக் கடனாம்! நிதி அமைச்சர் ப.சிதம் பரம் நீட்டி முழங்குகிறார். 2014 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதிக்குள் இந்த நாடு திருப்பிச் செலுத்த வேண்டியிருக்கும் வெளிநாட்டுக் கடன் 172 பில்லியன் டாலர். அதாவது 10 இலட்சத்து 32 ஆயிரம் கோடி ரூபாய்.இதைத் திரும்பக் கொடுக்கும்போது அன்னியச் செலவாணியில் நாடு வைத்துள்ள 60 விழுக்காட் டுத் தொகை நாட்டை விட்டு வெளியேறிவிடுமாம்.இப்போதே டாலருக்கு நிக ரான ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியில் வீழ்ந்துவிட்டது. உள் நாட்டு உற்பத்தி மந்த நிலையில் உள்ளது. பங்குச் சந்தையில் ஏற்கனவே 1,55,000 கோடி ரூபாயை இழந்து விட்டோம்!
மத்திய ரிசர்வ் வங்கியின் தலைவர்-கேம்பிரிட்ஜ், ஆக்ஸ்போர்டு பல்கலைக்
கழகங்களின் பேராசிரியர் சிறந்த பொருளாதார அறிஞர் என்கின்ற பெருமை களின் சிகரமான தலைமை அமைச்சர் மன்மோகன் சிங், “அரசியல்ல இதெல் லாம் சகஜம்பா” என்று கவுண்டமணி பேசுவதுபோல, கவலைப் படும் நிலை யில் நம் பொருளாதாரம் இல்லை. எல்லாம் இரண்டு ஆண்டுகளில் சரியாகி விடும் என்று ஆருடம் பேசுகிறார்.
இராணுவத் தளவாடங்களில் 26 சதவீதம், தொலை தொடர்புத் துறையில் 100
சதவீதம், எண்ணெய் சுத்திகரிப்புத் துறையில் 49 சதவீதம், விமானப்போக்கு வரத்தில் 49 சதவீதம், கூரியர் சேவையில் 100 சதவீதம், தேயிலை தோட்டத் தில் 49 சதவீதம், சில்லறை வணிகத்தில் 100 சதவீதம், காப்பீட்டுத் துறையில் 49 சதவீதம், மின்சார சந்தையில் 49 சதவீதம் என நாட்டின் அனைத்துத் துறை களையும் அயல் நாட்டு முதலாளிகளுக்கு கூறுபோட்டு விற்பனை செய்யும் வேலையை சோனியாவின் காங்கிரசு அரசு கச்சிதமாக முடித்துவிட்டது. வெள்ளையனே வெளியேறு எனப் போராடியவர்களின் பெயரைச் சொல்பவர் கள், வெள்ளையன் மட்டுமல்ல, கனதனவான்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பரவாயில்லை,வாருங்கள் என சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுக்கிறது.
இதெல்லாம் ஒருபுறம் கிடக்கட்டும்,வாக்களித்த மக்கள் எப்படி இருக்கிறார்கள் என்றால், நெஞ்சம் கொதிக்கிறது. இவ்வளவு கடனும், இவ்வளவு நிதி வருவா யும் ஏழை எளிய அடித்தட்டு மக்களை உயர்த்திவிட்டதா என்றால் இல்லவே இல்லை என்று நாம் சொல்லவில்லை; மாண்புமிகு அமைச்சரே நாடாளுமன் றத் தில் பேசுகிறார்.
“இந்தியத் திருநாட்டில், 15 வயது முதல் 49 வயது வரையிலான பெண்களில் 35
விழுக்காட்டினர் உடல் சத்தின்றி, பல வீனமாக வாடிக்கொண்டு இருக்கிறார் கள். 5 வயதுக்குள்ளான குழந்தைகளில் 43 விழுக்காட்டினர் சவலைப்பிள்ளை களாக வதங்கிக் கொண்டிருக்கின்றார்கள்” என்று 07.08.2013 அன்று நாடாளுமன் றத்தில் மகளிர் மற்றும் குழந்தைகள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கிருஷ்ண மூர்த்தி,தேசிய குடும்ப நல கள ஆய்வு-3 தந்த புள்ளிவிவரத்திலிருந்து சான்று கூறி பதில் தெரிவித்துள்ளார்.
உணவுப் பாதுகாப்புக்காக மந்திரத்தில் மாங்காய் விழச் செய்யப் போகிறோம் என வார்த்தை ஜாலம் காட்டுகிறதே காங்கிரசு அரசு. அந்தத் துறை அமைச்ச ரின் அறிக்கையில், விளைந்த 40 மில்லியன் டன் அளவு கோதுமையை சேமித்து வைக்க இடம் இல்லையாம். அதனால், அனுமதிக்கப்பட்ட அளவை விட, 2 மில்லியன் டன் கோதுமையை வெளி நாட்டின் தலையில் கட்ட ஏற்று மதி செய்ய அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வருகிறது. எஞ்சிய உணவுப்
பொருள் திறந்த வெளியில் கொட்டப் பட்டு பாழாகத்தான் போகிறது.
இந்த அவலங்களை எல்லாம் எடுத்துச் சொல்ல, அறிவார்ந்த முறையில் விவாதிக்க ஜனநாயக நெறி முறைகளுக் கேற்ப நாடாளுமன்றத்தில் உரிய
வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை என்பது ஜனநாயகப் படுகொலை அல்லவா? நம் நாட்டின் முதலாவது நாடாளுமன்றம் 677 நாட்கள் நடைபெற்றது. 14 அமர்வு கள் இடம் பெற்று, 3784 மணி நேரம் மக்களவை இயங்கியது. இப்போது 15 ஆவது நாடாளுமன்றம் செயல் பட்டுக்கொண்டிருக்கிறது. 12 அமர்வில் 1157 மணி நேரம்தான் மக்களவை இயங்கியதாம். நாடாளுமன்ற வரலாற்றிலேயே மிகக் குறைவான அளவு இயங்கிய மக்களவை என்கின்ற தகுதிக் குறைவை தற்போதைய ஆளும் காங்கிரசு அரசு பெற்றிருக்கிறது. இந்த இலட்சணத்தில் அண்மையில் அரசின் நிதி நிலை அறிக்கையை விவாதிக்காமலேயே ஒப்புதல் தந்து அனுப்பி வைத்திருக்கிறது டில்லி மாநிலங்கள் அவை.
அறிஞர்களும் பொருளியல் மேதைகளும், கல்வியாளர்களும் தேர்தலில் நின்று போட்டியிட்டு வெற்றி பெறுவது சிரமம் என்பதால்தான் மாநிலங்கள்
அவையே உருவாக்கப்பட்டது. (அங்கு சினிமா நடிகைகளும், கிரிக்கெட் விளை யாட்டுக்காரர்களும் நியமிக்கப் படுவதே ஓர் தலைகுனிவு!) இப்படிப் பட்ட அவையில், நிதிநிலை அறிக்கை மட்டுமல்ல, பலமுக்கியமான சட்ட முன்
வரைவுகள்கூட விவாதமின்றி ஏற்றுக் கொள்ளப்படுகிறது என்பதுதான் காங் கிரசின் புதிய ஜனநாயக நடைமுறை! மகளிர் இட ஒதுக்கீட்டுமசோதா போன்ற பல சட்ட முன் வரைவுகள் தினத்தந்தியின் சிந்தபாத் கதையைப்போல் ஆண் டுக் கணக்கில் கிடப்பில் போடப்பட்டு இழுத்துக் கொண்டே உயிர் வாழ்ந்து கொண்டு இருக்கிறதே! அவற்றை நிறைவேற்றி சமத்துவமும், சமவாய்ப்பும்
அனைவருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற அக்கறை ஆளும் காங் கிரசு அரசுக்கு அறவே இல்லை!
நாள்தோறும் பெட்ரோல்-டீசல் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. அத னைக் கட்டுப்படுத்தும் உரிமையை விலை நிர்ணய அதிகாரத்தை பெட்ரோலிய நிறுவனங்களிடமே ஒப்படைத்துவிட்டது மத்திய அரசு! இதனால் பாதிக்கப் படும் ஏழை எளிய நடுத்தர வர்க்கத்தினரின் வலியைப் பற்றி மன்மோகன் அரசு கவலைப்படவே இல்லை. இதனைப்போலவே இரயில் கட்டணங்களையும் ஒழுங்குமுறை அதிகாரக்குழுவினரிடம் ஒப்படைத்து விட நடுவண் அரசு திட்டமிட்டுக் கொண்டிருக்கிறது. மேலும், வரி விகிதங்களையும் முடிவு செய் யும் பொறுப்பினை பொருள் மற்றும் சேவை வரி கவுன்சிலிடமே விட்டு விட லாமா? என்றும் காங்கிரஸ் அரசு யோசித்து வருகிறது. இப்படிப்பட்ட நடவ டிக்கை களால் வாக்களித்த மக்கள் எந்த அளவுக்கு பாதிக்கப்படுவார்கள் என் பதைப் பற்றிய எண்ணம் எள்ளளவும் அவர்களிடம் இல்லை. வட்டியும் முதலு மாக கொடுத்து வாக்குகளை விலைக்கு வாங்கி கொள்ளையடிக்க மீண்டும் கோட்டைக்கு வந்துவிடலாம் என்ற தவறான கணக்கில் காங்கிரசு கட்சி
மிதந்துகொண்டிருக்கிறது.
ஆனால், ஏமாளிகள் அல்ல வாக்காளர்கள் என்பதை நாளைய தேர்தல் நிரூ பிக்க இருக்கிறது. நாட்டு மக்களை அனலில் இட்ட புழுக்களாய் வாட்டி வதைத் து, மக்களாட்சி பண்புகளை சீர்குலைத்து, பன்னாட்டு கொள்ளைக் கும்பலின் கூட்டாளியாய் திகழும் காங்கிரசு கட்சிக்கு மட்டுமல்ல,அவர்களோடு கை கோர்த்து தேர்தலில் வலம் வரும் துரோகிகளுக்கும் இமாலய தோல்வியை தண்டனையாகத் தந்திட,நாட்டு மக்கள் காத்துக்கிடக்கிறார்கள் என்பது தான் இன்றைய நிலை! நாளைய நாட்குறிப்பு!! நடக்க உள்ள நல்ல தீர்ப்பு!!!

நன்றிகள்
கட்டுரையாளர் :- ஆ.வந்தியத்தேவன்
No comments:
Post a Comment