நாடாளுமன்றத்தின் மாண்பை உச்சநீதிமன்றமா சீர்குலைத்தது?
உச்சநீதிமன்றம் ஜூலை 10 ஆம் தேதி வழங்கிய ஒரு தீர்ப்பு இந்திய அரசியல்
அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அரசியல் தலைவர்கள் சிலர் இந்தத் தீர்ப்பை,நாடாளுமன்றத்துடன் உச்சநீதிமன்றம் மோதுவதாக இருக்கின்றது என விமர்சனம் செய்துள்ளனர். நீதித் துறையின் வரலாற்றில் மிக முக்கிய மான தீர்ப்பாகக் கருதப்படும் இந்த வழக்கை கேரளாவைச் சேர்ந்த லில்லி தாமஸ் என்ற 85 வயது மூத்த பெண் வழக்கறிஞரும், லோக் பிரகாரி என்ற அமைப்பும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
“இந்திய அரசியல் குற்றமயமாகி வருவது மட்டுமின்றி நாடாளு மன்றத்திலும் சட்டமன்றங்களிலும் குற்றப்பின்னணி உள்ளவர்களின் எண்ணிக்கை அதிக ரித்துக் கொண்டே வருகிறது. இதைத் தடுப்பதற்காக மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 8 இன் உட்பிரிவு 4 ஐ ரத்து செய்ய வேண்டும்” இதுதான் 2005
ஆம் ஆண்டில் வழக்கறிஞர் லில்லிதாமஸ், லோக் பிரகாரி என்ற அமைப்பின் பொதுச்செயலாளர் எஸ்.என்.சுக்லா இருவரும் தொடுத்த பொதுநல வழக்கின் சாரம்சமாகும்.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 8 இன் உட்பிரிவு 4, சட்டமன்ற, நாடா ளுமன்ற உறுப்பினர்கள் ஏதாவது ஒரு வழக்கில் தண்டனை பெற்றால் அவர் கள் மேல் முறையீடு செய்து இறுதியாக தண்டனை பெறும்வரை பதவியில் நீடித்திருக்க வழி செய்கிறது. இதைத்தான் அரசியல் சட்டத்திற்கு முரணானது என்று கூறி உச்சநீதிமன்றம் இரத்து செய்திருக்கின்றது.உச்சநீதிமன்ற நீதிபதி கள் ஏ.கே.பட்நாயக், எஸ்.ஜே. முகோபாத்தியா அடங்கிய அமர்வு. பெரும் பாலும் அனைத்து அரசியல் கட்சிகளும் இந்தத் தீர்ப்பை நிராகரிப்பதுடன், இத் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று கூறுகின்றனர்.
தீர்ப்பின் எதிரொலி
உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியும், இந்திய பிரஸ் கவுன்சில் தலைவரு மான மார்க்கண்டேய கட்ஜூ,இந்தத் தீர்ப்பு குறித்து கருத்து கூறுகையில், “இந்தத் தீர்ப்பு சரியான தல்ல; மேல்முறையீடு என்ற ஒன்று சட்டத்தில் உள்ள வரை கீழ்நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் ஒருவரது, சட்டரீதியான அடிப் படை உரிமை களைப் பறிக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, குற்ற வழக்குகளில் கீழ்நீதிமன்றங்களில்
தண்டனை பெறும் எம்.எல்.ஏ.,எம்.பிக்கள் உடனடியாக தங்களது சட்டமன்ற, நாடாளுமன்றப் பதவிகளை இழப்பார்கள். இதுவரை அவர்கள் மேல்முறையீடு செய்து,இடைக்கால தடைபெற மூன்று மாத கால அவகாசம் இருந்தது. இனி மேல் இந்தச் சலுகை இந்தியாவின் சட்டமன்ற, நாடாளு மன்ற உறுப்பினர் களுக்கு இருக்காது.அவர்கள் தண்டனை பெற்றால் தீர்ப்பு வழங்கப்பட்ட நாளி லேயே தங்களது பதவிகளை இழக்க வேண்டியதுதான்.
இந்திய அரசியல் முழுதும் ஊழல் மயமாகிவிட்டது. கிரிமினல் குற்றவாளி களின் ஆதிக்கம் அரசியல் கட்சிகளிலும் ஜனநாயக மன்றங்களான சட்டமன்ற, நாடாளுமன்றத்திலும் அதிகரித்துக் கொண்டே போகிறது.கோடி கோடியாக பணத்தைக் கொட்டி வாக்காளர்களை விலைக்கு வாங்கி வெற்றி பெறுகிறார் கள். அரசியல் அதிகாரத்தைப் பெற்றவுடன் கொள்ளை அடிக்கிறார்கள். இதற்கு
துணைபோகிற அரசியல் சட்டத்தின் பிரிவுகள் நீக்கப்படுவது என்பது அரசிய லை தூய்மைப்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், நடைமுறை யில் இதை அரசியல் கட்சிகள் எப்படிப் பார்க்கின்றன?
குற்றவாளிகளை இனி ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று கூறுவ தற்கு பதிலாக உச்சநீதிமன்றம் நாடாளுமன்றத்தின் மீது ஆதிக்கம் செலுத்து கிறது. மக்கள் பிரதிநிதிகள் உரிமைகள் பறிபோகிறது.ஆட்சியாளர்கள் நினைத் தால் தங்களுக்கு வேண்டாதவர்கள் மீது வழக்கு தொடுத்து, தண்டனை பெறச்
செய்து பதவிகளைப் பறிக்கவும், தேர்தலில் போட்டியிடாமல் தடுக்கவும்
முடியும். எனவே உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்க முடியாது என்று ஒரே
குரலில் முழங்குகிறார்கள்.
மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு,உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை செல்லாத தாக்குவதற்கு அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான முயற்சிகளில் இறங்கி உள்ளது. எம்.பி.,எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக அளிக்கப்பட்ட இந்தத் தீர்ப்பை விரைவில் நடைமுறைப்படுத்திட தேர்தல்
ஆணையமும் தீவிரம் காட்டி வருகிறது. இதையும் முறியடிக்க வேண்டும் என்று மத்திய அரசு திட்டம் தீட்டி வருகிறது. இவை அனைத்தும் நாடாளு மன் றத்தின் உரிமையை நிலை நாட்டவும், உச்சநீதிமன்றம் நாடாளுமன்றத்தின் அதிகாரத்தில் தலையிடாமல் இருக்கவும் தேவையாக இருக்கிறது என்று மத்திய அரசு கருதுகிறது. நாடாளுமன்றத்தின் மீது உச்சநீதி மன்றம் ஆதிக்கம்
செலுத்துகிறது என்று கூறுகிறார்களே,நாடாளு மன்றத்தின் மதிப்பை, பெரு மையை, மாண்பை சீர்குலைப்பது உண்மையில் யார்? என்பதைப் பார்க்க வேண்டும்.
நாடாளுமன்றமா? உச்சநீதிமன்றமா?
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவுகளை உச்சநீதிமன்றம் ரத்து செய்த விவகாரமோ, உச்சநீதிமன்றம் அவ்வப்போது அதிகார வர்க்கத்தின் தவறு களுக்கு சாட்டை அடி கொடுப் பதனாலோ நாடாளுமன்றத்தின் மேன்மை கெட் டுவிட்டதாக கூறுவது எவ்வளவு அபத்தமானது; மோசடி யானது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். சட்டம் இயற்றும் ஜனநாயகத்தின் மிக உயர்ந்த
மன்றமான நாடாளுமன்றத்தின் புனிதத்தை மரபை கெடுத்து மதிப்பை குலைத் தது காங்கிரஸ் கட்சியின் ஆட்சியாளர்களே தவிர, உச்சநீதி மன்றம் அல்ல.
கடந்த ஆண்டு ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு சில தினங்களே இருந்தபோது, கட்டண உயர்வினை ரயில்வேதுறை அமைச்சர் பவன்குமார் பன்சால் அறிவித்தார்.நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங் கும் முன்பாக,அமைச்சர் நாடாளுமன்றத்தை மதிக்காமல் அறிவிப்புகளை செய்வது தான் நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு அழகா?
உணவுப் பாதுகாப்பு மசோதா 2011,டிசம்பரில் மக்களவையில் தாக்கல் செய்யப் பட்டது. பின்னர் நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பிவைக் கப் பட்டது. விலாஸ் முட்டம்வர் தலைமையிலான உணவு, நுகர்வோர் விவ காரம் மற்றும் பொது விநியோகம் தொடர்பான நாடாளு மன்ற நிலைக்குழு, உணவுப் பாதுகாப்பு மசோதா குறித்து பரிசீலித்து, மக்களவைத் தலைவர் மீரா குமாரிடம் 2013, ஜனவரி 17 இல் அறிக்கை அளித்தது. மேலும், இந்த மசோதா
மாநில அரசுகளுக்கு அனுப்பப்பட்டு கருத்தறியப்பட்டது. 2013, பிப்ரவரியில் மாநில உணவுத்துறை அமைச்சர்கள் மாநாட்டில் விவாதிக்கப் பட்டு, மத்திய அமைச்சரவையின் ஒப்புதலும் பெறப்பட்டது. பின்னர் மே 2 ஆம் தேதி மீண்டும் உணவுப் பாதுகாப்பு மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மசோதா மீது 81 திருத்தங்கள் கொண்டுவரப் பட்டதாக மத்திய உணவுத் துறை அமைச்சர் கே.வி.தாமஸ் கூறி இருக்கிறார். பலமாநில முதல்வர்கள் தேசிய உணவுப் பாதுகாப்பு மசோதாவில் உள்ள அம்சங்களை கடுமையாக எதிர்க் கின்றனர். மத்திய வேளாண்துறை அமைச்சர் சரத்பவாரும் சில திருத்
தங்களை முன்மொழிந்து இருக்கின்றார்.இடது சாரிகளும் இந்த மசோதாவிற்கு திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
தேசிய உணவுப் பாதுகாப்பு மசோதா மீதான விமர்சனங்களும் திருத் தங்களும் வந்துள்ள நிலையில், மத்திய அரசு என்ன செய்திருக்க வேண்டும்? நாடாளு மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதா மீது விரிவான விவாதங் களை நடத்தி, திருத்தங்கள் முன்மொழியப்பட்டால் அதனையும் பரிசீலனை செய்து,நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற்று, சட்டம் ஆக்கி இருக்க
வேண்டும்.
ஆனால், காங்கிரஸ் அரசு என்ன செய்தது? ஜூலை 5 ஆம் தேதி குடியரசுத் தலைவர் மூலம் உணவுப் பாதுகாப்பு மசோதாவை அவசர சட்டமாக பிரகட னம் செய்தது.இதுதான் நாடாளுமன்றத்தை மதிக்கின்ற இலட்சணமா? இப் போது விமர்சனங்கள் எழுந்தவுடன் மீண்டும் மழைக்கால கூட்டத்தொடரில்
உணவுப் பாதுகாப்பு மசோதாவை தாக்கல் செய்யப் போவதாக மத்திய அரசு கூறுகிறது.
நாடாளுமன்ற மரபுகளை கேலிக் கூத்தாக்கிவிட்டு, நாடாளுமன்றத்தை விட சோனியாதான் மேலானவர்; அவர் கொண்டுவர வலியுறுத்துவதால் உணவுப் பாதுகாப்பு மசோதா அவசர சட்டமாகிறது என்றால், இதைவிட நாடாளுமன்றத் திற்கு அவமரியாதை வேறு என்ன இருக்க முடியும்? உச்சநீதிமன்றம் நாடாளு மன்றத்தின் அதிகாரத்தில் தலையிடுகிறது என்று கூறுகிற தகுதி ஆட்சியாளர் களுக்கு கிஞ்சிற்றும் கிடையாது.
நாடாளுமன்றம் இயங்குகிறதா?
அரசியல் சாசனத்தின் பாதுகாவல் அரணாகத் திகழும் நாடாளுமன்றம் முறை யாக இயங்குகிறதா? 2004 இல் மன்மோகன்சிங் தலைமையில் ஐக்கிய முற் போக்குக் கூட்டணி அரசு பொறுப் பேற்றது. ஒன்பதரை ஆண்டுகளாக இந்த ஆட்சிதான் நாடாளுமன்றத்தை முற்றிலும் செயல் இழக்கச் செய்திருக்கிறது. நாடாளுமன்றம் கூச்சலும் குழப்பமுமாக இருந்ததால் தொடர்ச்சியாக ஒத்தி வைக்கப்பட வேண்டிய நிலைமை ஏற்பட்டது. காங்கிரஸ் கூட்டணி அரசின் மக்கள் விரோதக் கொள்கைகள்,இமாலய ஊழல்கள் இவையெல்லாம் நாடாளு
மன்றம் செயற்படுவதைத் தடுத்து இருக்கிறது.
நாடாளுமன்றத்தின் செயற்பாடுகள் குறித்து,நாடாளுமன்றச் செயலகம் மூலம் கிடைக்கப்பெற்ற விபரங்கள் அம்பலப்படுத்துகின்றன. கடந்த 14 ஆவது மக்கள வையில் 1736 மணி, 55 நிமிடங்கள் நாடாளுமன்றம் செயற்பட்டு இருக்கின்றது. ஆனால், 15 ஆவது மக்களவை முடியும் தருவாயில் இருக்கிறபோது, அதன் 12
ஆவது கூட்டத்தொடர் வரை, மொத்தம் 1157 மணி நேரம் மட்டுமே செயற்பட்டு இருக்கிறது.மக்களவையின் முதல் கூட்டம் 1952 இல் கூடியபோது, 5 ஆண்டு காலத்தில் 677 முறை கூடி இருக்கிறது. 3784 மணி நேரம் மொத்தம் 14 கூட்டத்
தொடர்கள் நடந்து இருக்கின்றன.

மாநிலங்களவையின் செயற்பாடும் இப்படித் தான் இருக்கின்றது.வரலாற்றில் முதல் முறையாக மாநிலங்களவையில் பட்ஜெட் விவாதம் நடைபெறாமல் திருப்பி அனுப்பப்பட்டு இருக்கின்றது.
நாடாளுமன்றம் ஒப்புதல் இன்றி
மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு, நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறா மல், பல முக்கிய திட்டங்களை செயற்படுத்தி வருகிறது. நாடாளு மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாக்கள் உரிய விவாதங்கள் இன்றி, சட்டமாக்கப் படாமலே திட்டங்கள் நடைமுறைக்கு வந்து விட்டன. இதற்கு பல உதாரணங் கள் இருக்கின்றன.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு,இந்திய மக்களுக்கு ஒருங்கிணைந்த
அடையாள அட்டை (Unique Identification - UID) (ஆதார்) வழங்கு வதற்கான திட்டத் தை 2009 இல் கொண்டுவந்தது. இதற்காக திட்டக் குழுவும், நந்தன் நில்கேணி,
இன்போசிஸ் முன்னாள் தலைமை நிர்வாகியும் இணைந்து ஆதார் அட்டை வழங்குவதற்கு திட்டத்தை வடிவமைத்தார்கள். பின்னர் நாடாளு மன்றத்தில் இதற்கான மசோதா ஒன்று (National Identification Authority of India Bill - NIA Bill) தாக்கல்
செய்யப்பட்டு, நாடாளுமன்ற நிலைக் குழுவின் பரிசீலனைக்கும் அனுப்பி
வைக்கப்பட்டது.
குடிமக்களுக்கு வழங்கப்படுகின்ற அடையாள அட்டைதான் இனி அனைத்து பயன்பாட்டிற்கும் நடைமுறையில் இருக்கும்.பொதுவினியோக முறையில் உணவுப் பொருட்கள் வழங்குவது, அரசின் நலத்திட்ட பயன்கள் பெறுவது, அரசு வழங்கும் மானியத் தொகையை பயனாளி களுக்கு நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்துவது, மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்ப்பது போன்ற ஒருங்கிணைந்த பயன் பாட்டிற்கு குடிஉரிமை அடையாள அட்டைதான் மக்களுக்கு சான்றாக இருக்கும்.
இதில் உள்ள பல நடைமுறைச் சிக்கல்களைச் சுட்டிக் காட்டியும் இதற்கான மசோதாவில் பல திருத்தங்கள் தேவை என்றும் பா.ஜ.க தலைவரும் நாடாளு மன்ற உறுப்பினருமான யஷ்வந்த் சின்கா தலைமையிலான நிதித்துறைக் கான நாடாளுமன்ற நிலைக்குழு ஆதார் அடையாள அட்டை மசோதாவை
முற்றிலும் நிராகரித்து 2011, டிசம்பரில் அறிக்கை அளித்தது.
ஆதார் அடையாள அட்டை வழங்கு வதற்கான மசோதா, இன்னும் நாடாளு மன்றத்தின் ஒப்புதலைப் பெறவில்லை. ஆனால், அவசர அவசரமாக ஆதார் அடையாள அட்டை வழங்கும் பணிகள் முடுக்கிவிடப் பட்டது மட்டுமின்றி, பிரதமர் மன்மோகன் சிங்கும், சோனியாவும் ஹரியானாவில் விழா நடத்தி, ஆதார் அட்டை வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்து விட்டனர்.இதுதான் காங்கிரஸ் அரசு, நாடாளுமன்றத்திற்கு கொடுத்திருக்கக் கூடிய மிகப்பெரிய மரியாதை.
ஒய்வூதிய மசோதா
மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய ஒய்வூதிய மசோதா இன்னும் நாடாளு
மன்றத்தில் தாக்கல் செய்யப்படவே இல்லை. ஆனால், மத்திய, மாநில அரசு
ஊழியர்களிடம் பல கோடிக்கணக்கான ரூபாய் சம்பளத்தில் இந்தப் புதிய
ஓய்வூதிய திட்டத்திற்காகப் பிடித்தம் செய்யப்படுகிறது. நாடாளுமன்றத்தின்
விவாதம் நடத்தப்பெற்றால் இந்தப் புதிய ஓய்வூதிய மசோதா கடும் எதிர்ப்புக்கு உள்ளாகும். மத்திய - மாநில ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்படுகின்ற ஓய்வூ தியத் தொகையை, பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கு அந்நிய நிறுவ னங்களுக்கு அனுமதி வழங்கிட ஓய்வூதிய மசோதா வழி செய்கிறது.இது கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கும்போது, நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறாமல் புதிய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது நாடாளு மன்றத்தை அவமதிக்கும் செயல் ஆகாதா? நாடாளுமன்றத்தைக்
கிள்ளுக்கீரையாக நினைக்கும் மத்திய ஆட்சியாளர்கள், உச்சநீதிமன்றத்தைக்
குறை கூறுவதில் துளி கூட நியாயம் இல்லை.
நிதி மசோதா
மத்திய நிதித்துறை அமைச்சர் பொறுப்பில் இருந்த பிரணாப் முகர்ஜி 2012-13 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நாடாளு மன்றத்தில் தாக்கல் செய்து, நாடாளு மன்றத்தின் ஒப்புதலையும் பெற்றார்.அந்த பட்ஜெட்டில் முன் தேதியிட்டு வரி வசூலிப்பதற்கான திட்டம் இடம் பெற்றிருந்தது. நாடாளுமன் றத்தின் இரு அவைகளிலும் விவாதம் நடை பெற்று பட்ஜெட் நிறைவேற்றப்
பட்டது.
பிரணாப்முகர்ஜி குடியரசுத் தலைவர் ஆனதும் மத்திய நிதித்துறை அமைச்ச ராக ப.சிதம்பரம் பொறுப் பேற்றார். அவர் பதவி ஏற்றவுடனே செய்த முதல் வேலை பிரணாப் முகர்ஜியின் பட்ஜெட்டில் முன் தேதியிட்டு வரி வசூலிப்ப தற்கான திட்டத்தை மறு ஆய்வு செய்வதற்கு, பார்த்தசாரதி ஷோமி தலைமை யில் ஒரு நபர் குழு ஒன்றை நியமித்தார்.இந்தக் குழுவின் பரிந்துரை ஒரு வாரத் தில் பெறப்பட்டது. முன் தேதியிட்டு வரி வசூலிப்பதை மூன்று ஆண்டுகளுக்கு நிறுத்தி வைப்பது என்ற முடிவை நிதித்துறை அமைச்சகம் எடுத்திருக்கிறது.
நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற்ற பட்ஜெட்டில் தன்னிச்சையாக மறு ஆய்வு செய்வதற்கு ப.சிதம்பரத் திற்கு யார் அதிகாரம் கொடுத்தது? நாடாளு மன்றத்தை விட ப.சிதம்பரம் அதிகாரம் செலுத்துவதற்கு காங்கிரஸ் கட்சி அவருக்கு அனுமதி வழங்கி உள்ளது.நாடாளுமன்றத்தின் உரிமையைப் பற்றிப் பேசுகின்ற தகுதி இவர்கள் எவருக்காவது உண்டா?
நாடாளுமன்றக் குழுக்களுக்கு நேர்ந்த கதி
மக்களாட்சி மன்றமான நாடாளுமன்றம் தான் சட்டங்களை உருவாக்குகிறது.
சட்டத்தின் பாதுகாவல் அரணாக விளங்குகிறது. நாட்டை ஆட்சி செய்கின்ற அதிகாரம் அரசியல் சாசனத்தின்படி நாடாளு மன்றத்திற்குத்தான் கொடுக்கப் பட்டு இருக்கின்றது. நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டு அமைக்கப் படுகின்ற எந்தக் குழுக்களாக இருந்தாலும் அவற்றிற்கு, நாடாளுமன்றத்திற் குள்ள உரிமையும் அதிகாரமும் உள்ளடங்கி இருப்பதாகவே பொருள்.
நாடாளுமன்ற நிலைக்குழுக்கள் ஆனாலும்,நாடாளுமன்ற கூட்டு விசாரணைக் குழுக்கள் ஆனாலும் அவற்றை கேலிக்கூத்தாக்கி, ஜனநாயகத்தை குழி தோண் டிப் புதைத்ததில், காங்கிரஸ் கட்சிக்குத் தான் அதிகம் பங்கு உண்டு. நாடாளு
மன்ற நிலைக்குழுக்கள் அளிக்கும் பரிந்துரைகளை மாற்றும் அதிகாரம் நாடா ளுமன்றத்திற்குத்தான் இருக்கின்றது. நிதித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு ((Parliamentary Standing Committee on Finance) நேரடி வரி விதிப்பு முறை
(Direct Tax Code) பற்றிய பரிந்துரை களை அளித்தது. ஆனால், மத்திய நிதித்துறை அமைச்சகம் நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைகளை ஆராய நிபுணர்குழு ஒன்றை அமைத்தது.இந்த நடைமுறை அரசியல் சாசன நெறிமுறைகளை மட்டுமல்ல,நாடாளுமன்றத்தையே உதாசீனப் படுத்தும் நடவடிக்கை ஆகும்.
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்துவிட்டு, வரிவிதிப்பு முறைகளில்
மாற்றம் கொண்டுவருவதை மத்திய நிதித்துறை அமைச்சர் சர்வ சாதாரண மாக செய்து வருகிறார்.நிர்வாக அமைப்பான நிதித்துறை அமைச்சகம், நாடா ளுமன்றத்தின் அதிகாரத்தை எப்படி கபளிகரம் செய்து கொள்ள முடியும்? ரயில் வே பட்ஜெட் நிறைவேற்றப்பட்டதற்கு பின்னர், ரயில் கட்டணங்களை மாற்றி
அமைத்துக் கொள்ள ஒழுங்குமுறை ஆணையம் (Regulatory authority) அமைக்கப் படும் என்று அறிவிப்பது நாடாளுமன்றத்தை அவமானப் படுத்தும் நடவடிக்கை அல்லவா? மத்திய அரசு, பொருட்கள் மற்றும் சேவை வரி சம்மந்தமாக அரசி யல் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர ஒரு வரைவு மசோதாவை தயாரித்து
இருக்கின்றது. இந்த மசோதாவில் வரிவிதிப்பு கொள்கையை முடிவு செய்யும் அதிகாரம் அரசின் குழுவுக்கு (GST Council) வழங்கப்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
வரி விதிப்பு கொள்கையை தீர்மானிக்க இனி நாடாளுமன்றத்திற்கு எந்த அதி காரமும் இருக்காது. நாடாளுமன்றம் என்பது பட்ஜெட் நிறைவேற்றுவதற்கான ஒரு இடம் என்று மாற்றப் பட்டு, நாடாளுமன்றத்தின் அதிகாரங்களை அரசின் நிர்வாகக் குழுக்களுக்கு வழங்குவது, நாடாளு மன்ற ஜனநாயகத்திற்கு எந்த
வகையிலும் பெருமை சேர்க்காது.
நாடாளுமன்ற விசாரணைக்குழுக்கள்
காங்கிரஸ் கட்சிதான் நாடு விடுதலை பெற்றதற்குப் பின்னர் மிக நீண்ட காலம் மத்திய ஆட்சிப் பொறுப்பில் நீடிக்கிறது. காங்கிரஸ் ஆட்சியின்போது அம்பல மான இமாலய ஊழல்களால் கொந்தளிப்பு ஏற்பட்டபோது, அவற்றை விசார ணை செய்து உண்மையை வெளிக்கொணர நாடாளுமன்ற கூட்டு விசார ணைக் குழுக்கள் (Joint Parliamentary Committee) அமைக்கப்பட்டன. ஆனால், அந்த விசாரணைக் குழுக்களின் அறிக்கைகளை ஒரு பொருட்டாகக் கருதாமல், குப்பைத் தொட்டியில் வீசி எறிந்தது, காங்கிரஸ் கட்சியின் அரசாங்கம்.
1987 இல் ராஜீவ்காந்தி பிரதமர் பொறுப்பில் இருந்தபோது, சுவீடன் வானொலி இந்தியாவிற்கு போபர்ஃஸ் பீரங்கிகளை விற்பனை செய்ததில் இந்திய ஆட்சி யாளர்களுக்கு கையூட்டு தரப்பட்டுள்ளதாக செய்தி வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் கடும் அமளி ஏற்பட்டது.
போபர்ஃஸ் பீரங்கி பேரத்தில் 64 கோடி ரூபாய் லஞ்சம் பெறப்பட்டுள்ளதாக
ராஜீவ்காந்தி அரசு மீது குற்றச் சாட்டுகள் ஆதார பூர்வமாக முன் வைக்கப் பட்டன. போபர்ஸ் பீரங்கி ஊழலை விசாரிப்பதற்கு நாடாளு மன்றக் கூட்டுக் குழு ஒன்று அமைக்கப் பட்டது.
ஆனால், அந்தக் குழுவில் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் அதிக எண்ணிக்கை யில் இருந்ததாலும், குழுவின் தலைவர் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்தவராக இருந்த தாலும், முக்கிய குற்றவாளி களை அழைத்து விசாரணை நடத்த முன் வர வில்லை. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தனியாக அறிக்கை கொடுத்து போபர்ஸ் பீரங்கி ஊழலை அமபலப் படுத்தினர். ஆனால், காங்கிரஸ் அரசு,
இதை மூடி மறைப்பதிலேயே கவனமாக இருந்தது என்பதுதான் போபர்ஸ் கதை.
பங்குச்சந்தை ஊழல் மூலம் ரூ 3128 கோடி மக்களுக்கு நட்டம் ஏற்படுத்திய
ஹர்சத்மேத்தா ஊழலை விசாரிப் பதற்கு 1992 இல் நாடாளுமன்றக் கூட்டுக் குழு அமைக்கப்பட்டது. ஆனால், ஹர்சத் மேத்தாவின் ஊழலின் பல பரிணா மங்களை தோண்டி எடுத்து விசாரணை செய்வதற்கு காங்கிரஸ் கட்சி உறுப் பினர்கள் தடையாக இருந்தனர். இறுதியில் பங்குச்சந்தை ஊழலை விசாரித்த நாடாளுமன்ற விசாரணைக் குழுவின் அறிக்கை தூக்கி எறியப்பட்டது.
மன்மோகன்சிங் அரசின் மெகா ஊழல் தி.மு.க.வைச் சேர்ந்த ஆ.ராசா மத்திய
தகவல் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் பதவி வகித்தபோது நடந்தது. 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டின் மூலம் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு நட்டம் ஏற்பட்டது. அந்தத் தொகையை கூட்டணி ஆட்சி யாளர்கள் பங்கு போட்டுக் கொண்டு கொள்ளை அடித்தனர்.
மத்திய தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி அறிக்கையின் மூலம் இந்த ஊழல் அம்பலம் ஆனது.உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல் மூலம் மத்திய புலனாய்வுத்துறை (CBI) 2 ஜி அலைக்கற்றை ஊழலை விசாரணை செய்து வருகின்றது.வழக்கம் போலவே இந்த ஊழலை விசாரிப்பதற்கு காங்கிரஸ் எம்.பி., பி.சி. சாக்கோ தலைமையில் நாடாளுமன்றக் கூட்டு விசாரணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டது.இந்த விசாரணைக் குழுவின் முன்பு இதுவரை ஊழல்
அமைச்சராக இருந்த ஆ.ராசா ஆஜராகவே இல்லை.
காங்கிரஸ் ஆட்சியாளர்களைக் காப்பாற்றுவதற்கும், ஊழலை மூடி மறைக்க வும் நாடாளுமன்றக் கூட்டு விசாரணைக்குழுத் தலைவர் பி.சி.சாக்கோ முயற் சிக்கின்றார். பிரதமர் மன்மோகன்சிங் தாம் விசாரணைக்குழு முன்பு ஆஜராகி சாட்சியம் அளிக்கத் தயார் என்று கூறியும் கூட, நாடாளு மன்ற விசாரணைக் குழு தலைவர் அதனை ஏற்கவில்லை.நாடாளுமன்ற விசாரணைக்குழு என்பது வெறும் சடங்காக ஆகிவிட்டது
நிலக்கரி ஊழலின் மூலம் ஒரு லட்சத்து 86 ஆயிரம் கோடி கொள்ளை அடிக்கப்
பட்டுள்ளது. நிலக்கரித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு (திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் முகர்ஜி தலைமையில் அமைக்கப்பட்டது) நிலக் கரி மற்றும் இரும்பு சுரங்கங்களின் ஒதுக்கீடு செய்ததில் நடந்த முறைகேடு களை வெளிகொணர்ந்தது.
ஆனால், மத்திய அரசு இந்த ஊழலை மூடி மறைக்க சிபிஐயும் பயன்படுத்த
முனைந்த போது, உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. வழக்கம்
போலவே நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கை தூக்கி வீசப்பட்டது.
நாடாளுமன்றத்தை ஒரு பொருட்டாகக் கருதாமல், நாடாளு மன்ற மரபுகளை சீர்குலைத்து,அரசியல் அமைப்புச் சட்டத்தின் ஆணிவேரையே வெட்டி வீழ்த் திக் கொண்டிருப்பவர்கள்தான், உச்சநீதி மன்றம் நாடாளுமன்றத்தின் மேன் மையைக் குலைப்பதாகக் கூப்பாடு போடுகிறார்கள்.
நாடாளுமன்றத்தின் இன்றைய நிலை
இன்றைய 15 ஆவது மக்களவையில் 306 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோடீஸ்வரர்களாக இருக்கின்றனர்.கடந்த 14 ஆவது மக்களவையில் இருந்த கோடீஸ்வர எம்.பி.க்களில் இப்போது 100 சதவீதம் அதிகரித்து இருக்கின்றது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் சராசரி சொத்து மதிப்பு 5.8 கோடி ரூபாய்.
தற்போதுள்ள 18 தி.மு.க.எம்.பி.க்களில் 17 பேர் மகா கோடீஸ் வரர்கள். இந்தப் புள்ளி விபரங்கள் எதைக் காட்டுகின்றன்? நாட்டின் மக்கள் தொகையில் 77 சதவீதம் பேர் ஒரு நாளைக்கு ரூ 20 மட்டுமே வருமானம் ஈட்டக் கூடிய நாட் டில், மக்களை ஆட்சி செய்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோடீஸ்வரர்
களாக, பிரபுக்களாக இருப்பது ஜனநாயகத்திற்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய அச்சுறுத்தல் ஆகும்.ஆபத்தாகும்.
ஏழை, எளிய பாட்டாளிகளின் பிரதிநிதியாக ஒரு சாதாரண மனிதன் சட்ட மன் றத்திலும் நாடாளு மன்றத்திலும் நுழையவே முடியாது என்ற நிலைமை உரு வாகி உள்ளது ஜனநாயகத்தை சாய்த்து விடும். இந்தப் பின்னணியில் தான் குற்றச்சாட்டு களுக்கு உள்ளான கிரிமினல் பேர் வழிகள், தண்டனை பெற்ற வர்கள் பதவி இழக்க வேண்டும்; தேர்தலில் போட்டியிடத்தகுதி இல்லை என்று
உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பைப் பார்க்க வேண்டும்.
நாடாளுமன்றம், அரசியல் சாசன வரம்புகளை மீறாமல் நெறிமுறைகள் ஆட்சி யாளர்களால் பாதுகாக்கப் படுமானால், உச்சநீதி மன்றம் தலையிடுவதற்கு வாய்ப்பே இருக்காது

நன்றிகள்
கட்டுரையாளர் :- ஈழ வாளேந்தி
வெளியீடு :- சங்கொலி
No comments:
Post a Comment