Saturday, August 10, 2013

மாற்று சக்தி மறுமலர்ச்சி தி.மு.க.

திருவள்ளூர் மாவட்டக் கழகத்தின் நிதி அளிப்பு நிகழ்ச்சி 19.07.2013 அன்று
சென்னை தாயகத்திலும் நடைபெற்றது.நிகழ்ச்சியில் கழகப் பொதுச்செயலா ளர் வைகோ அவர்கள் ஆற்றிய உரையில் இருந்து....

தமிழகம் முழுவதும் கழகக் கண்மணிகள் நிதி திரட்டுவதற்கான பெரும் ஊக்கத் தையும்,உந்துதலையும் வழங்கியது காஞ்சி மாவட்டம்.மிகக் குறைந்த கால அவகாசமே இருந்தபோதிலும்,நீங்கள் ஜூன் மாதத்திலேயே தொடங்கி வைத் தால், அதை மற்றவர்களும் பின்பற்ற வாய்ப்பாக இருக்குமே என்று மாவட்டச் செயலாளர் ஆருயிர் இளவல் பாலவாக்கம் சோமு அவர்களிடம் கேட்டுக் கொண்டேன். சுடர்விடும் இரு விழிகளான, எனது ஆருயிர் இளவல், கழகத்தின்
துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா அவர்களும், காஞ்சி மாவட்டக் கழகச் செயலாளர்,ஆருயிர் இளவல் பாலவாக்கம் சோமு அவர்களும், தலை மைக் கழகம் எண்ணுவதைச் செயல் முடித்துக் காட்டும் ஆற்றலோடு, 1 கோடி யே 5 இலட்சம் ரூபாய் நிதியை வழங்கி, இன்ப அதிர்ச்சியை வழங்கினார்கள். வானத்து மழைத்துளிகளுக்கு நடுவில், தாம்பரம் பொதுக்கூட்டத்தில், அமுதத்
துளிகளாக அந்தத் தொகையை வழங்கினார்கள்.
கேட்காமலேயே தருபவர்கள் நீங்கள்

பேரறிஞர் அண்ணா அவர்கள் மீது கொண்டு இருக்கின்ற எல்லையற்ற பாசம், மரியாதை காரணமாக, நாங்கள் காஞ்சியை விஞ்ச விரும்ப வில்லை என்று, மாவட்டச் செயலாளர் அவர்கள் கூறினார். திருவள்ளூர் மாவட்டத்தில், முதல்
கட்டமாக 61 இலட்சம் ரூபாயை அள்ளித் தந்து இருக்கின்றீர்கள். அடுத்து, 15 இலட்சம் தர இருக்கின்றீர்கள். 76 இலட்சம் ரூபாய் தருகின்றீர்கள் என்றால், இயக்கம் தொடங்கிய நாள் முதல், இதுவரை தந்த நிதிகளில் இதுதான் பெருந் தொகை. பல வேளைகளில் நான் கேட்காமலேயே நீங்கள் அள்ளிக் கொடுத்து
இருக்கின்றீர்கள். இந்தத் தாயகத்தில் மின்தடை காரணமாக அவ்வப்பொழுது ஏற்படுகின்ற இடையூறுகளை உணர்ந்து, பெரும்பொருட்செலவில் ஒரு தடை யற்ற மின் சாதனத்தை வாங்குவதற்காக, உங்களில் பலர் தங்கள் சொந்தப்
பணத்தைத் தந்து உதவியதையும் நான் இங்கே நன்றியோடு எண்ணிப் பார்க் கின்றேன். இன்னமும் கூட, நான் நினைத்த அளவுக்குக் கொடுக்க முடியவில் லையே என்று, நம்முடைய டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன் அவர்கள் கருதுகிறார். இல்லை;இதுவே மிகப்பெரிய தொகைதான்.



பத்து இலட்சத்துக்கு மேல் நிதி கொடுப்பவர் களுக்கு, தன்னுடையை சொந்தச் செலவில் தங்க மோதிரம் அளிப்பதாக, மாவட்டக் கழகத்தின் பொருளாளர் அட்கோ மணி அவர்கள் அறிவித்தார்கள். அதன்படி, பூவிருந்தவல்லி சங்க ருக்கு கணையாழியை அளிப்பதாக அறிவித்த போது, சங்கர் முகத்திலும் பெரு மகிழ்ச்சி இல்லை.என்னோடு பத்துப் பேர் சேர்ந்து வேலை செய்தார்களே,
கந்தனை அழையுங்கள், அவர்கள் எல்லோரையும் அழையுங்கள் என்று மேடைக்கு அழைத்தாரே, இதுதான் இந்த இயக்கத்தில் நிலவுகின்ற பாச உணர்வு. (பலத்த கைதட்டல்).அதுதான், இந்த இயக்கத்தைப் பாதுகாத்து வரு கின்றது. இந்த நிதியைத் திரட்டுவதற்காக இரவு பகலாக நீங்கள் பட்டு இருக் கின்ற பாடுகளை நான் அறிவேன். அவைத்தலைவர் பாபு அவர்கள் அதை இங்கே குறிப்பிட்டார்கள். மிகுந்த முயற்சி எடுத்து, மக்களைச் சந்தித்து இருக் கின்றீர்கள். இது நிதி திரட்டுகின்ற பணி மட்டும் அல்ல; வேண்டுகோள் கடிதத் தை அச்சிட்டுக் கொடுத்து இருக்கின்றீர்கள்; மறுமலர்ச்சி திராவிட முன் னேற் றக் கழகத்தை, மக்களிடம் கொண்டு போய்ச் சேர்த்து இருக்கின்றீர்கள்.

இந்த முறைதான், நிதி கேட்டு நான் ஏடுகளில் விளம்பரம் கொடுத்தேன். கார ணம் என்ன தெரியுமா? உங்களுடைய சிரமங்களைக் குறைப்பதற்காகத்தான். நீங்கள் போய்க் கேட்கின்றபோது, ஆமாம்; உங்கள் பொதுச் செயலாளரும் கேட்டு இருக்கின்றாரே என்று கூறி இருக்கின்றீர்கள். நிதி கேட்கின்ற கூச்ச உணர்வு உங்களுக்குச் சற்றும் இருக்கக்கூடாது என்பதற்காகத்தான், நான் நிதி கேட்டு விளம்பரம் கொடுத்தேன். அதை ஏராளமானோர் வரவேற்றுக் கடிதம் எழுதி இருக்கின்றீர்கள். நிதியும் தருகின்றார்கள். ஆனால், நாம் யாகசம் கேட்ப தாக ஒரு நாளேடு கொச்சைப்படுத்தி எழுதியது.அதிகாரத்தைப் பயன்படுத்திக் கோடிகோடியாகக் கொள்ளை அடிக்கின்றவர்கள் உலவுகின்ற இடத்தில், மக் களுக்காகப் போராடுகின்ற இயக்கம், மக்களிடம் போய் நிதி கேட்கிறது.

விடுதலைப் போராட்டத்துக்காக காங்கிரஸ் பேரியக்கம் மக்களிடம் நிதி திரட் டியதே? கையெழுத்துப் போடுவதற்கே காந்தியார் பணம் கேட்டாரே? அதையும் கொச்சைப்படுத்துவீர்களா? அறிவாசான் தந்தை பெரியார் தம்மோடு படம்
எடுத்துக் கொள்வதற்கு, கையெழுத்துப்போடுவதற்கு, வீட்டுக்கு வந்து விருந்து
சாப்பிடுவதற்குப் பணம் கேட்டாரே? எதற்கு? தனக்காகவா? வங்கத்துச் சிங்கம் நேதாஜி, பர்மியக் களங்களில் நிதியைத் தாருங்கள் என்று கேட்டபோது, தாங் கள் அணிந்து இருந்த தங்க நகைகளைக் கூடத் தாய்மார்கள் கழற்றிக் கொடுத் தார்களே?

திருநின்றவூர் தோழர்கள், நாங்கள் உண்டியல் ஏந்தி நகரத்து வீதிகள்தோறும் மக்களிடம் நிதி திரட்டினோம் என்று சொன்னார்கள். பேரறிஞர் அண்ணா காலத்தில், ஏன் நான் பொதுக்கூட்டம் பேசத் தொடங்கிய அறுபதுகளில், எல் லாக் கூட்டங்களிலும் உண்டியல் ஏந்தித்தான் நிதி திரட்டுவார்கள். கழுத்திலே போடுகின்ற கைத்தறி ஆடைகளை கையிலே விரித்துப் பிடித்துக் கொண்டு
ஏந்தி வருவார்கள். கூட்டம் முடிவதற்கு முன்பாக அந்தத் தொகையை எண்ணி, இவ்வளவு பணம் சேர்ந்தது என்று மேடையில் அறிவிப்பார்கள். அப்படித்தான் கட்சி வளர்ந்தது. எதுவும் பகிரங்கமாக, வெளிப்படையாகவே நடந்தது. பொது
உடைமை இயக்கங்கள் உண்டியல் ஏந்தித்தான் பொதுக்கூட்டங்களை நடத்தி னார்கள்.அதேபோன்ற வெளிப்படைத் தன்மையோடு இன்றைக்கு மறுமலர்ச்சி தி.மு.கழகம் இயங்கிக்கொண்டு இருக்கின்றது. (பலத்த கைதட்டல்).

விளம்பரத்துக்கு நன்றி

அந்த ஏடு எழுதியதைப் பார்த்து நான் கவலைப் படவில்லை. நான் தாங்காத பாணங்களா? என் மீது வீசப்படாத ஈட்டிகளா? இந்த இயக்கத்தின் மீது தொடுக் கப்படாத தாக்குதல்களா? அனைத்தையும் தாங்கி, உரம் ஏறிய உள்ளத்தோடு நாம் நடந்து கொண்டு இருக்கின்றோம். ‘விஷத்தை விதைத் தாலும் நீங்கள் தந்த விளம்பரத்துக்கு நன்றி’ என்று தம்பி மணிவேந்தன் பொருத்தமாக ஒரு கவிதை எழுதி இருந்தார்.

உலகப் புகழ் பெற்ற கருத்துப்படங்களை வரைகிறவர், மின் அஞ்சலில் எனக்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறார். ‘ஆனந்த விகடன்’ ஏட்டில் உங்கள் நேர்காணல் செவ்வியைப் படித்தேன்.அண்மைக் காலத்தில், எந்த ஒரு அரசியல் தலை வரும், இவ்வளவு நேர்மையாக,வெளிப்படையாக, உண்மையாக கருத்து களைச் சொன்னதே கிடையாது என்று எழுதிஇருக்கின்றார்.அவர் எனக்குப் பழக்கம் இல்லை; நான் நேரில் பார்த்ததும் இல்லை. அவர் அப்படி எழுதி இருந் தது மனதுக்கு இதமாக இருந்தது. அதைப்போல,எண்பதுகளில் பத்திரிகைத் துறையில் நுழைந்து,இப்போது அமெரிக்காவில் இருந்து கொண்டு தொடர்ந்து அறிவியல் கட்டுரைகளைத் தீட்டிக் கொண்டு இருக்கின்ற அண்டன் பிரகாஷ் என்பவர்,நேற்று முன்தினம் வந்த ஆனந்த விகடன் ஏட்டில்,‘அறிவிழி’ என்ற தலைப்பில் எழுதி இருப்பதைப் படியுங்கள்.

மாற்று சக்தி மறுமலர்ச்சி தி.மு.க.

ஆகவே தோழர்களே, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், திறந்த புத்த கமாக இருக்கின்றது. புற்றுநோயை விடக் கொடுமையாகப் புரையோடிப் போயிருக்கின்ற ஊழலை, அரசியலில் இருந்து, பொதுவாழ்வில் இருந்து கெல்லி எறிவதற்கான போராட்டத்தை நாம் நடத்திக்கொண்டு இருக்கின் றோம். அதனால், மக்கள் மன்றத்தில் கம்பீரமாகத் தலைநிமிர்ந்து நடக்கின் றோம். திராவிட முன்னேற்றக் கழகம்,அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு மாற்றாக ஒரு அரசியலை முன்னெடுக்கின்ற இயக்கம் என்ற முழுத் தகுதியோடு நமது இயக்கத்தை நடத்துகின்றோம்.நாம் சந்திக்க வேண்டிய களங்கள் அதிகம் இருக்கின்றன.

இடைப்பட்ட நாள்களில் உங்களைச் சந்தித்த போது, விருதுநகர் மாநாட்டுச் செய்தியை மக்களிடம் கொண்டு போய்ச் சேருங்கள் என்று கேட்டுக் கொண் டேன். அந்தச் செய்தியை,தெருக்களில், சுவர்களில், வாகனங்கள் பயணிக்
கின்ற சாலைகளில், பளிச்சென்று கண்ணில் படுகின்ற வகையில் வண்ண வண்ண எழுத்து களில் எழுதுங்கள். ஏற்கனவே விளம்பரங்களைத் தீட்டி இருக்கின்ற தோழர்களின் கரங்களைப் பற்றி என் கண்களில் ஒற்றிக் கொள் கின்றேன்.திருவள்ளூர் மாவட்டத்தில் சிறப்பாக எழுதி இருப்பதைப் பார்க் கிறேன், பாராட்டுகிறேன்!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இவ்வாறு உரை ஆற்றினார்.

No comments:

Post a Comment