Friday, August 16, 2013

நாட்டின் வளர்ச்சியை நாடாத காங்கிரஸ்

நாட்டின் வளர்ச்சியை நாடாத காங்கிரஸ் ஆட்சி!

இந்திய வரலாற்றில் அதிகமான ஊழலைச் செய்து சாதனை படைத்த அரசு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாகும். 2ஜி,
ஆதர்ஷ், காமன் வெல்த் விளையாட்டுப் போட்டிகள், நிலக்கரி ஒதுக்கீடு,
ஹெலிகாப்டர் பேரம் என பல ஊழல்களைப் புரிந்து, மக்கள் பணம் கொள்ளை போவதற்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசே காரணமாகும்.

ஊழலில் வளர்ச்சியைக் கண்ட ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, நாட்டின்
பொருளாதார வளர்ச்சியில் அக்கறை காட்டவே இல்லை. நாட்டின் நிதிப்பற் றாக்குறை 4.89 இலட்சம் கோடி ரூபாயாக உள்ளது. பணவீக்கமோ ஏழு சதத் தைத் தொடுகின்றது. உணவுப் பொருட்களின் விலை உயர்வோ ஆறு சதம். ரூபாயின் டாலருக்கு நிகரான மதிப்பு 60 ரூபாயைத் தொடும் நிலையில் மதிப்பு இழந்துள்ளது என்கின்றது ஒரு செய்தி.


அன்னிய முதலீடு மூலம்தான் நாட்டின் சரிந்துவரும் பொருளாதார நிலை யைச் சரி செய்ய முடியும் என்ற தப்புக் கணக்கில் பல்வேறு துறைகளில்
அன்னிய நேரடி முதலீட்டிற்குக் கதவுகளைத் திறந்துவிட்டுள்ளது ஐக்கிய
முற்போக்குக் கூட்டணி அரசு. நாட்டின் நலனையும் பாது காப்பையும் வெளி நாட்டினருக்குத் தாரை வார்த்துவிட்டது.

2004 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, நாட் டின் வளர்ச்சியைப் பிரதிபலிக்கும் முக்கியமான வளர்ச்சிக் குறியீடுகளில் முன்னேற்றத்தை அடையவில்லை.

2004 ஆம் ஆண்டில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுபொறுப்பேற்றபோது, இந்தியா உலக நாடுகளின் ஊழல் பட்டியலில் 146 நாடுகளில் 90 ஆவது இடத் தில் இருந்தது. 2012 இல் 176 நாடுகளின் பட்டியலில் 94 ஆவது இடத்தில் செனி கல், மங்கோலியா, மால்டோவா நாடுகளின் வரிசையில்தான் இடம் பெற்றுள் ளது. உலக நாடுகளின் ஊழல் பட்டியலையும் விவரங் களையும் Transparency International  என்ற அமைப்பு வெளியிடுகிறது.

உலகப் பசிக்கொடுமைக் குறியீட்டில் (Global Hunger Index)  2004 இல் நம் நாடு 119 நாடுகளின் பட்டியலில் 96 ஆவது இடத்தில் இருந்தது. 2012 இல் 79 நாடுகளின் பட்டியலில் 65 ஆவது இடத்தில் ருவாண்டா, சூடான், பாகிஸ்தான் நாடுகளை விட பின் தங்கிய நிலையில்தான் இருந்தது. இதை உலக உணவுக் கொள்கை மற்றும் ஆய்வு நிறுவனம் (IFPRI - International Food Policy and Research Institute) தெரிவிக் கின்றது.

ஊட்டச் சத்து பற்றாக்குறையிலும் இளம் குழந்தைகள் இறப்பு விகிதத் திலும்
மோசமான நிலையில்தான் உள்ளது நம் நாடு. 2004 இல் 193 நாடுகளின் பட்டிய லில் 140 ஆம் இடத்தைப் பிடித்து 2013 இல் 195 நாடுகளின் பட்டியலில் 149 ஆம் இடத்தை அடைந்துள்ளது.மியான்மர், கானா, செனிகல் ஆகிய நாடுகள் நம் மைப் பின்னுக்குத் தள்ளியுள்ளன. இது ஐ.நா. சபை குழந்தைகள் நல அமைப்பு (UNICEF) அளிக்கும் விவரமாகும்.

நாட்டில் 43.5 சதம் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் எடை குறைவாக உள்ளன.
எத்தியோப்பியா, நேபாளம், வங்கதேசம் இந்த அம்சத்தில் முன்னேறியுள்ளன.
முதியோர் கல்வியறிவில் கென்யா, கிர்கிஸ்தான் கூட நம்மைவிட உயர்ந்த
நிலையில் உள்ளனவாம்.

மனித மேம்பாட்டுக் குறியீட்டுப் பட்டியலின்படி (UN Human Development Indicators Index) 2004 இல் இந்தியா 177 நாடுகள் அடங்கிய பட்டியலில் 127 ஆவது இடத்தில்
இருந்தது. 2012 இல் கானா மற்றும் BRIC  உறுப்பினர் நாடுகளுக்கும் பின்னால் 136 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. ஏன்? இலங்கை கூட நம்மை பின்னுக்குத் தள்ளிவிட்டு 92 ஆவது இடத்தில் உள்ளது. (BRIC -பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா)

அதுமட்டுமா? தொழில் புரிய உகந்த சூழல் நிலவும் நாடுகளின் பட்டியலில்
186 நாடுகளின் வரிசையில் இந்தியா 132 ஆவது இடத்தில்தான் உள்ளது.

நாட்டில் பணவீக்கமும் உணவுப் பொருட்கள் விலை உயர்வும் மக்களைப்
பாதிக்கும் நிலை, ராபர்ஸ் ஆர்பன் என்பவர், ஆடம்பரப் பொருட்களும் அத்தி யாவசிய பொருட் களும் ஒரே விலையில் விற்கப்படுவது, பணவீக்கம் உண் மையான ஜன நாயகத்தைக் கொண்டு வந்துள்ளதைக் காட்டுகின்றது
(Inflation is bringing us true democracy, for the first time in history, luxuries and necessities are selling
at the same price’) எனக் கூறியதை நினைவு படுத்துகிறது.

பதினோறாவது அய்ந்தாண்டுத் திட்டத்தில் (2007-2012) முக்கிய உள் கட்டமைப் புப் பணிகளிலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பெரும் பின்னடை வைத் தான் சந்தித்து உள்ளது.திட்டத்தின்படி 48,000 கி.மீ. நீள சாலைகள் அமைத்தி ருக் க வேண்டும். ஆனால், அமைக்கப் பட்டதோ 17,000 கி.மீ. சாலைகள் மட்டுமே.

அதே போன்று, 78,000 மெகாவாட் மின் உற்பத்திக்கான திட்டம் தீட்டியதில்
55,000 மெகாவாட் உற்பத்திக்கு மட்டுமே பணிகள் தொடங்கப்பட்டு இதிலும் 30,000 மெகாவாட்டுக்கான பணிகள் சலனமற்ற நிலையில் உள்ளனவாம்.

நாட்டின் முக்கியத் தொழிலான விவசாயத்தையும் விவசாயிகளையும் பாது காக்க உரிய திட்டங்களும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப் படாத காரணத் தால் நாடு முழுவதும் ஆண்டுதோறும் சராசரியாக 16,264 விவசாயிகள் தற் கொலை செய்து கொள்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது.விவசாயிகள், தாங்கள் செய்யும் தொழிலை உதறிவிட்டு கிராமங்களில் இருந்து நகரங்களை நோக்கி இடம் பெயர்ந்து வருகின்றனர்.

விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் உணவுப் பொருட்களை உரிய முறை யில் சேமித்துப் பாதுகாக்கப் போதிய இடவசதி செய்யத் தவறிய காரணத்தால் ரூ 66,000 கோடி மதிப்புள்ள உணவுப் பொருட் களை ஐக்கிய முற்போக்கு கூட் டணி அரசு வீணாக்கியுள்ளது.

நாட்டை, மாட்டிறைச்சி ஏற்றுமதியில் உலகிலேயே முதலிடம் வகிக்கச் செய் து, நாட்டிலுள்ள விவசாயத்திற்குப் பயன் படும் கால்நடைகளை கசாப்பாக்கி,
விவசாயத்தை நலிவடையச் செய்து விட்டது.

நூறு நாள் வேலை வாய்ப்புத் திட்டம் மூலம் விவசாயக் கூலித் தொழிலாளர்
களை விவசாயத் தொழிலையே மறக்கச் செய்து, சிறப்புப் பொருளாதார மண் டலங்கள் உருவாக்குதல் என்ற பெயரில் ரியல் எஸ்டேட் பூதத்தை அவிழ்த் து விட்டு விவசாய நிலப் பரப்பையும் குறைத்துவிட்டது.

தற்பொழுது மொத்தம் உள்ள மத்திய அரசின் 200 பல்வேறு நலத் திட்டங்களை எல்லாம் இணைத்து சரிபாதியான எண்ணிக்கையாகக் குறைக்கவும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை என்ற அமைப்பைக் கலைத்து விட்டு, அதன் பணிகளை மாவட்டப் பஞ்சாயத்து நிர்வாகத்துடன் இணைக்கவும் மத்திய அரசு முடிவு
செய்துள்ளதாக செய்திகள் வருகின்றன.தற்போதுள்ள அமைப்பிலேயே ஊழல்
மலிந்துள்ள நிலையில் செய்யவிருக்கும் மாற்றத்தின் விளைவுகள் எப்படி
இருக்குமோ?

உத்தரப் பிரதேசத்தில் (சோனியாவின் ரேபரேலி தொகுதி உட்பட) பீகார்,ஒடிசா,
மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட், அசாம் போன்ற பல மாவட்டங்களில் கோடிக்
கணக்கான பணம் வேலை வாய்ப்புத் திட்டங்கள் என்ற பெயரில் கொள்ளை
அடிக்கப்பட்டு உள்ளதாகக் கூறப் படுகிறது. 2011 இல் உ.பி.யில் நூறு நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தில் ரூ 10,000 கோடி பலருடைய சட்டைப் பைகளுக் குள் சென்றுள்ளதாகவும், இத்திட்டத்திற்காக நான்கு ஆண்டு களில் பெறப்பட்ட ரூ 20,000 கோடியில் 40 சதம் மட்டுமே உரிய மக்களுக்குச் சென்றடைந்து உள்ள தாம்.

2006-12 க்குட்பட்ட ஆண்டுகளில் பீகாரில் 38 மாவட்டங்களுக்கான திட்டங் களில் 73 சத நிதியை ரூ 5,977 கோடியை அலுவலர்களே தங்களுக்கு ஒதுக்கிக் கொண்டனராம். இம்மாதிரியான திட்டங்களும் நிகழ்வுகளும் அரசியல் மேம் பாட்டிற்கான பெரும்பாலான திட்டங்கள் ஏன் தான் நகைப்புக்குரிய தாகின் றனவோ! (‘Why, Sir most schemes of political inprovement are very laughable things’) என்று
சாமுவேல் ஜான்சன் எனும் அறிஞர் குறிப்பிட்டது நினைவிற்கு வருகின்றது.

இந்த ஊழல் சம்பந்தமாக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக் கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் கே.எஸ்.இராதாகிருஷ் ணன் மற்றும் சுதந்தர் குமார் அடங்கிய பெஞ்ச் 2011 ஆகஸ்ட் மாதம் ‘நேர்மை யாக வரி செலுத்து பவர்களின் பணம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது’ என்று குறிப்பிட்டனர்.

நூறு நாள் வேலைத்திட்ட நிதியில் 88 சதம் நிதி ஒடிசா மாநிலத்தில் தவறாகப்
பயன்படுத்தப்பட்டுள்ளது என தேசிய ஊரக வளர்ச்சி நிறுவனம் தனது அறிக் கையில் சுட்டிக்காட்டி உள்ள தாகவும் செய்தியைக் காண்கிறோம்.

தனது மக்களுக்கு நியாயமான ஊதியம் கிடைக்கக்கூடிய வேலை வாய்ப்பு களை அளிக்க திட்டங்களை உருவாக்க வேண்டியது ஒரு அரசின் கடமையும்
குறிக்கோளுமாகும். ஆனால், அவசரமாகப் புகுத்தப்பட்டு உள்ள உணவுப் பாது காப்புத் திட்டம், நாட்டு மக்களின் வாக்குகளைப் பெறத் தயாரிக்கப்பட்டுள்ள திட்டம் என்றே அனைத்துத் தரப்பினரும் கருது கின்றனர்.

இந்திய வரலாற்றில் உணவுப் பாதுகாப்புத் திட்டம்தான் அரசின் மிகப்பெரிய சலுகைத் திட்டமாகும். 75 சத கிராமப்புற மக்களுக்கும் 50 சத நகர்ப்புற மக்க ளுக்கும் சலுகை விளையில் உணவுப்பொருள் வழங்கும் இத்திட்டத்தினால் ஆண்டு தோறும் ரூ 1.25 இலட்சம் கோடி செலவாகும்.

வளரும் நாடுகள், தங்களின் மக்கள் அவர்களது சொந்தக்காலில் நிற்க வேண் டும் எனக்கருதி திட்டங்கள் தயாரிக்கும் காலகட்டத்தில், இந்திய மக்களை அரசின் பணத்தைக் கொண்டு விலைக்கு வாங்கி மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட லாம் என்ற நோக்கத்தில்தான் இத்திட்டம்.

நம்மிடம் இருந்து எதையேனும் பறிக்காமல், அரசு நமக்கு எதையும் வழங்க இயலாது (‘Government can not give us anything, without depriving us of something else’) என ஹேஸலிட் எனும் அறிஞர் கூறியதை பெரும்பாலான மக்கள் புரிந்துள்ளனர்.

வரலாறு காணாத ஊழலைப் புரிந்தது மட்டுமன்றி ஐக்கிய முற்போக்கு கூட் டணி அரசு இலட்சக் கணக்கான ஈழத்தமிழர்களை ஈவு இரக்கமின்றி இலங்கை அரசு கொன்று குவிக்க உடந்தையாக இருந்து அனைத்து உதவிகளையும் செய் தது. 500க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கொல் லப் பட்டதையும் தமிழக மீனவர்கள் கடலில் துன்புறுத்தப்படுவதையும் கண்டிக் காமல், உறுதியான நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதும் காங் கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிஅரசுதான்.

நாட்டின் வளர்ச்சியில் அக்கறை காட்டாத காங்கிரஸ் கட்சியை நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தோற்கடிக்க மக்கள் முடிவெடுத்துவிட்டார் கள்.

நன்றிகள்

கட்டுரையாளர் :- ஆர்.ஞானதாஸ்

வெளியீடு :- சங்கொலி

No comments:

Post a Comment